கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 31-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு(VI & VII Standard) ஆங்கிலப் பாடக் காணொளிகள்(English Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 31-08-2021 அன்று ஒளிபரப்பான ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடக் காணொளிகள்...



💥 VI Standard - UNIT 2 – TREES – EXCERCISE - https://youtu.be/0salz71yNTA



💥 VII Standard - UNIT 3 – A PRAYER TO TEACHER PART 2 - https://youtu.be/YRKLDhaG62E

கல்வி தொலைக்காட்சியில்(Kalvi TV) 31-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்(VIII Standard Videos)...



கல்வி தொலைக்காட்சியில்  31-08-2021 அன்று ஒளிபரப்பான எட்டாம் வகுப்பு காணொளிகள்...



💥  தமிழ் - இயல் 4- கவிதைப் பேழை - கல்வி அழகே அழகு - https://youtu.be/KRzspUZN0tU



 💥 ஆங்கிலம் - UNIT 2 – GRAMMAR – DEGREES OF COMPARISON - https://youtu.be/OuFq46PP8Uk



 💥 கணக்கு - அலகு 3 - இயற்கணிதம் - வரைபடத்தில் புள்ளிகளைக் குறித்தல் -  https://youtu.be/_a3eWhvtZV8



💥 அறிவியல் - அலகு 4 - வெப்பம் - வெப்ப ஆற்றலின் விளைவு - வெப்பப் பரிமாற்றம் - https://youtu.be/asSeSvg-mx8



💥 சமூக அறிவியல் - அலகு 1 - ஐரோப்பியர்களின் வருகை -

https://youtu.be/GUy0Nn4jVgc

மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்(CSE & DEE Joint Proceedings ) ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...



 கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்படுவதால் மாணவர்களின் சமூக, பொருளாதார நிலை, உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் அமைய வேண்டிய விதங்கள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...


>>> பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண்:34462/பிடி1/இ1/2021, நாள்: 31-08-2021...


இன்றைய (01-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 01, 2021




குடும்பத்தில் புதிய நபர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 01, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வீட்டில் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 



கிருத்திகை : சிந்தனைகள் உண்டாகும்.


ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 01, 2021



சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்களும், புத்துணர்ச்சியும் ஏற்படும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். வெளியுலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.


திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.


புனர்பூசம் : புதுவிதமான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 01, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள்.


பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 01, 2021



மனதில் தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியான தருணங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரம் : தாமதங்கள் குறையும்.


உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 01, 2021



வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : சாதகமான நாள்.


அஸ்தம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 01, 2021



பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மற்றும் அதற்கான உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : இழுபறிகள் குறையும்.


சுவாதி : உதவிகள் கிடைக்கும்.


விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 01, 2021



வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று நிதானத்துடன் முடிவெடுப்பது நல்லது. நண்பர்களுடன் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : நிதானம் வேண்டும்.


அனுஷம் : இழுபறியான நாள்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 01, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மூலம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூராடம் : ஆதரவான நாள்.


உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 01, 2021



நீண்ட நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். கால்நடைகளிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படிப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : தெளிவு கிடைக்கும்.


திருவோணம் : அனுகூலமான நாள்.


அவிட்டம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 01, 2021



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகள் கிடைக்கும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு பாசனம் தொடர்பான வசதிகள் மேம்படும். மூலிகை சார்ந்த வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சதயம் : வசதிகள் மேம்படும்.


பூரட்டாதி : லாபங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 01, 2021



மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வகையில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------


பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்(Schools Re-Opening - School Education Minister Annoucements)...



 >>> பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்...

பள்ளிகளுக்கு வர மாணவர்களை கட்டாயப்படுத்தவில்லை – உயர்நீதிமன்ற கிளையில் தமிழ்நாடு அரசு பதில்...


 தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை தொடர உத்தரவிடக்கோரி அப்துல் வகாப் என்பவர் தொடர்ந்த வழங்கி விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.




தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. முதலாவதாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும்.


இதுவரை இருந்தது போல் அல்லாமல் பள்ளிக்கூடங்களில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதன்படி பள்ளிக்கூடங்கள் ஷிப்டு முறையில் செயல்பட வேண்டும். வகுப்பறையில் பாதி அளவு மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.


சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்களுக்கு தினமும் உடல் வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும். பள்ளிக்கூடத்தில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பியதுமே அவர்களுடைய ஆடைகளை துவைக்க வேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது; மாணவர்கள் உளவியல்ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும்



பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்


மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தப் படமாட்டார்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல்.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - தமிழக அரசு.


மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...





 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் திறப்பு - மாலை 3:30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..


 மாணவர்கள் மாஸ்க் போடாமல் வந்தாலோ அல்லது கிழிந்து இருந்தாலோ பள்ளியில் மாஸ்க் தர ஏற்பாடு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி...


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும். 

* ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும். 

* 2 ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். 

*விளையாட்டு நேரம் கிடையாது காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை , வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் தொடக்கம் முதலே பாடம் நடத்தப்படாது. 

*மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பின்னரே பாடம் நடத்தப்படும் 

* பெற்றோர்கள் , மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை ; மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்.

பள்ளி செல்லும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.


* ஒரு முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். கூடுதல் முகக்கவசத்தை தேவைக்காக பைக்குள் வைத்து இருக்க வேண்டும்.


* முகக்கவசம் அணிவதுடன் கண்ணாடி கவசத்தையும் அணிந்து இருக்க வேண்டும். சாப்பிடும்போது மட்டுமே அவற்றை அகற்ற வேண்டும்.


* கைக்குட்டை அல்லது துடைக்கும் தாள் போன்றவற்றை வைத்து இருக்க வேண்டும்.


* சிறிய சானிடைசர் பாட்டில் ஒன்றையும் எடுத்து வர வேண்டும்.


* தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சொந்தமாக எடுத்து வர வேண்டும். மற்றவர்களுடன் பகிரக்கூடாது.


* பயன்படுத்திய முகக்கவசத்தை போடுவதற்கு தேவைப்பட்டால் தனி பை எடுத்து வரவேண்டும்.


* மாணவிகள் அதிகளவில் தலைமுடி வளர்த்து இருந்தால் அவை முகத்தில் படாதவாறு கட்டி இருக்க வேண்டும்.


முகத்தை தொடக்கூடாது


* பள்ளிகளில் இருக்கும்போது அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.


* ஒன்றாக அமர்ந்து எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ஒன்றாக சேர்ந்து விளையாடக்கூடாது.


* எந்த பொருட்களையும் பங்கிட்டுக் கொள்ளக்கூடாது.


*நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணிக்கு தொடங்கும் வகுப்புகளை மதியம் 3.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.


40-45 நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி மட்டுமே வழங்கப்படும். வகுப்பறையில் மேஜையின் ஒருமுனையில் ஒரு மாணவரும், மறுமுனையில் மற்றொரு மாணவரும் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும்; 


ஒவ்வொரு வகுப்பறையிலும் கிருமிநாசினி பாட்டில் வைத்திருக்க வேண்டும்


ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டும் செயல்படும். விளையாட்டு நேரம் கிடையாது


காலை 9.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...