கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வீடுதேடி பள்ளிகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டம் (அக்டோபர் மாதம் முதல்) - Home Schools - New Project of Tamilnadu School Education Department (from October) ...

 


வீடுதேடி பள்ளிகள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டம் (அக்டோபர் மாதம் முதல்) - Home Schools - New Project of Tamilnadu School Education Department (from October)...


தமிழகத்தில் "வீடு தேடி பள்ளிகள்" என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தவிருக்கிறது.கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் உள்ள நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.



இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மழலையர் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை போக்க ஆசிரியர்கள், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை கையில் எடுத்துள்ளது.



அதன்படி,ஒவ்வொரு ஆசிரியரும், தங்களது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இருப்பிட பகுதிக்கு சென்று, அங்குள்ள மாணவர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.



இதற்காக,வீதி வகுப்பறை என்ற பெயரில், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை அக்டோபர் மாதத்திலிருந்து செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



அதன்படி,இத்திட்டத்தை முதற்கட்டமாக சென்னையிலிருந்து செயல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Update - Eye Screening கேள்விகள் தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன(PDF File)...

 


>>> New Update - Eye Screening கேள்விகள் தற்போது தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன(PDF File)...

போலி ஆணை - 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் "Dismiss" - CEO உத்தரவு...

 போலி ஆணை - 2 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் "Dismiss" - CEO உத்தரவு...

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சவுந்தர்ராஜன், வசந்தகுமார். இருவரும், கடந்த 2015ல் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக தஞ்சையில் பணியில் சேர்ந்தனர். தற்போது சவுந்தராஜன் தஞ்சை அருகே வாண்டையார் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகவும், வசந்தகுமார் பனையக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராகவும் பணியாற்றி வந்தனர். 



இந்நிலையில் இருவரின் பணிநியமன ஆணைகள் குறித்து சந்தேகத்தில் சில மாதங்களுக்கு முன் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டார். இதில், இருவரும் போலி நியமன ஆணைகளை வழங்கி சேர்ந்தது உறுதியானது. இதையடுத்து இருவரையும் டிஸ்மிஸ் செய்து அவர் நேற்று உத்தரவிட்டார்.


போலிசான்றிதழில்(Fake Certificate) ஆசிரியர் பணி: அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்ய உத்தரவு...

 போலிசான்றிதழில் ஆசிரியர் பணி: அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்களின் கல்வி சான்றுகளை ஆய்வு செய்ய உத்தரவு...



அக்டோபர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் உலக முதியோர் தின உறுதி மொழி எடுக்க அரசு முதன்மை செயலாளர் கடிதம் (உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது) - Letter from the Principal Secretary to Government to take the World Senior Citizens' Day Pledge in Schools and Colleges on October 1 (Pledge attached)...



 >>> அக்டோபர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் உலக முதியோர் தின உறுதி மொழி எடுக்க அரசு முதன்மை செயலாளர் கடிதம் (உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது) - Letter from the Principal Secretary to Government to take the World Senior Citizens' Day Pledge in Schools and Colleges on October 1 (Pledge attached)...

வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)...

 


வங்கிக் கணக்குகளில் ஆட்டோ டெபிட் செய்ய புதிய விதிமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்(New rules for auto debit in bank accounts come into effect from October 1st)...


வங்கிகளில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆட்டோ டெபிட் செய்யப்படுவதற்கான புதிய கட்டுப்பாடுகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஓடிடி, செல்போன் மற்றும் பிற பயன்பாட்டிற்கான கட்டணத்தை இங்கு பலர் மாதாந்திர முறையில் செலுத்தி வருகின்றனர். ஒருவேளை குறிப்பிட்ட தேதிக்கு மேல் இந்த பணத்தை செலுத்த தவறிவிட்டால், கார்டில் உள்ள பணம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஆட்டோ-டெபிட் செய்யப்படும்.



சில சமயங்களில், அவசர தேவைக்கு பணம் இருப்பு வைக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே, ஆட்டோ டெபிட் மூலம் தொகை எடுக்கப்பட்டிருக்கும். இந்த சூழலில் ஆட்டோ டெபிட் முறையில் இனி வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்படாது எனும் புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது.



அதன்படி ஒரு சேவை முடியப்போகிறது என்றால், 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலமாகவோ அல்லது இ-மெயில் மூலமாகவோ notification சென்றடையும். notification-ல் வாடிக்கையாளின் பெயர், கட்டண விவரம், எதற்கான தொகை என்பது போன்ற விவரங்கள் இருக்கும்.



இந்த notification-க்கு வாடிக்கையாளர் அனுமதி வழங்கும்பட்சத்திலேயே அந்த பணபரிவர்த்தனையை வங்கிகள் செயல்படுத்த முடியும். 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள பணபரிவர்த்தனைக்கு மட்டும், ஆர்.பி.ஐ-யால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



5 ஆயிரம் ரூபாய் மேல் பரிவர்த்தனை இருக்கும்பட்சத்தில், OTP எனும் One Time Password மூலம் வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டியிருக்கும்.



கடந்த மார்ச் மாதம் இந்த கட்டுப்பாடுகளை ஆர்.பி.ஐ விதித்த நிலையில், வங்கிகள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஆர்.பி.ஐ. ஆறு மாதம் கால அவகாசம் கொடுத்த நிலையில், தற்போது அக்டோபர் 1ம் தேதிமுதல் விதிமுறை அமலுக்கு வருகிறது.


இன்றைய (01-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 01, 2021



வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



அஸ்வினி : திறமைகள் வெளிப்படும்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 01, 2021



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வியாபார பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : தைரியம் மேம்படும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 01, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், அறிமுகமும் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். கண்பார்வை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.


திருவாதிரை : அனுபவம் மேம்படும்.


புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 01, 2021



குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். நண்பர்களுக்கிடையே எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூசம் : காலதாமதம் ஏற்படும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 01, 2021



உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களின் மூலம் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : நெருக்கடிகள் உண்டாகும்.


உத்திரம் : கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 01, 2021



மூத்த சகோதரர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த அனுபவமும், லாபமும் கிடைக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பொறுப்புகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 



உத்திரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


அஸ்தம் : லாபம் கிடைக்கும்.


சித்திரை : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 01, 2021



உத்தியோக பணிகளில் கௌரவ பொறுப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். நுட்பங்களை அறிந்து கொள்ளும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சுவாதி : லட்சியங்கள் பிறக்கும்.


விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 01, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உள்ளுணர்வு சிந்தனைகளின் மூலம் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். காரியங்கள் சித்தமாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



விசாகம் : ஆதரவான நாள்.


அனுஷம் : புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.


கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 01, 2021



வியாபார பணிகள் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் காலதாமதமாக கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் லாபம் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : காலதாமதம் உண்டாகும்.


உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 01, 2021



வாழ்க்கைத்துணைவர் வழியில் பொருளாதாரம் மேம்படும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைவில் நிறைவு பெறும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். முதலீடுகளின் மூலம் லாபங்கள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : பொருளாதாரம் மேம்படும்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 01, 2021



தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பயிற்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : ஆதரவான நாள்.


சதயம் : தடைகள் நீங்கும்.


பூரட்டாதி : சேமிப்புகள் மேம்படும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 01, 2021



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் நேரிடும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்து வேறுபாடுகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : கற்பனைகள் மேம்படும்.


ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...