கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"சூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - 110 எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு தலா ரூ.1லட்சம் பொற்கிழி” - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 988, நாள்: 30-10-2021...



 "சூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்; அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - 110 எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு தலா ரூ.1லட்சம் பொற்கிழி” - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 988, நாள்: 30-10-2021...





பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை அவரவர் பள்ளிகளிலேயே DPT & TD தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் - பொது சுகாதாரத் துறை வெளியீடு (Guidelines for school students to be vaccinated with DPT & TD in their schools from November 5 to December 31 - Public Health Department Release)...



>>> பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை அவரவர் பள்ளிகளிலேயே DPT & TD தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான வழிகாட்டுதல்கள் - பொது சுகாதாரத் துறை வெளியீடு (Guidelines for school students to be vaccinated with DPT & TD in their schools from November 5 to December 31 - Public Health Department Release)...

DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...



DEE - 01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் - ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் & மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 015767/கே2/2021, நாள்: 30-10-2021...


தமிழகத்தில் கோவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக மார்ச் 2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 9.12 ஆம் வகுப்புகளுக்கு 01.09.2021 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்சமயம் 1-8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. நீண்ட காலம் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் தடை பெறாமல் நடைபெற மாணவர்களுக்கு உரிய நேரத்தில் புத்தகங்கள் வழங்குதல் , கல்வி தொலைக்காட்சியின் மூலம் அனைத்து வகுப்புகளுக்குக் காணொலிப் பாடங்களை வழங்குதல் , வானொலி நிலையங்கள் வானொலிப் பாடங்களை ஒலிபரப்புதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. இவை தவிர . தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சிகளாக புலனம் ( Whats App ) மற்றும் வலையொலி ( Pod cast ) மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. 
ஆசிரிய - மாணவ நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் நிகழ்வு பள்ளிச்சூழலில் நிகழாத காரணத்தாலும் , இறுதி ஆண்டு தேர்வுகளின்றி மாணவர்கள் அடுத்த வகுப்பிற்குத் தேர்ச்சி வழங்கப்பட்டதாலும் மாணவர்களிடம் கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.



 எடுத்துக்காட்டாக : 2020 - 2021 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 2 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர்.

இதேபோல் 2020 2021 ஆம் கல்வி ஆண்டில் 2 ஆம் வகுப்பில் இருந்த மாணவர்கள் 3 ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பதற்கான திறன்களை முழுமையாகப் பெறாமல் 3 ஆம் வகுப்பிற்கு வருகை தரவுள்ளனர். 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 1 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் 5 மாதம் கழித்து முதல் முறையாகப் பள்ளிக்கு வருகை தரவுள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. 



மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் ( இணைப்பு -1 )



 மாணவர்கள் 17 மாத இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருகை தருவதால் முதல் 10-15 நாள்களுக்கு கதை , பாடல் , விளையாட்டு , வரைதல் , வண்ணம் தீட்டுதல் , அனுபவப் பகிர்வு , கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி மனமகிழ்ச்சி புத்தாக்கப் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தலாம். அதற்கு பின்னரே பயிற்சிக்கான செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் ( இணைப்பு - II ) 



மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 2-8ஆம் வகுப்புகள் வரை புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 

எடுத்துக்காட்டாக : 

8 ஆம் வகுப்பிற்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைப் பாடக் கருத்துகள் மற்றும் 7 ஆம் வகுப்பிற்கான முக்கியப் பாடக்கருத்துக்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. 



புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் கீழ்க்காணும் முறைகளில் செயல்படுத்த வேண்டும்.

 1 ) 1 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் முறையாக பள்ளிக்கு வருகை தரவுள்ளதால் மனமகிழ்ச்சி வழிகாட்டுதலைப் பின்பற்றி குழந்தைகளின் மனவெழுச்சியை ஆற்றுப்படுத்தும் வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் . இதனை முடித்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

2 ) 2-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்காள வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 - 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , பயிற்சிக் கட்டகங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் . புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் 45-50 நாள்களுக்கு நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும். மாணவர்களுடைய கற்றல் அடைவு நிலைக்கேற்றாற்போல் காலஅளவை நீட்டிப்பதையும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்துவதையும் ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம்.



3 ) 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதலைப் பின்பற்றி முதல் 10 · 15 நாள்களுக்குள் மனமகிழ்ச்சி செயல்பாடுகளை முடித்தபின் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால் , மாணவர்கள் வகுப்பிற்கேற்ற சுற்றல் அடைவு நிலையில் இருந்தால் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை மீள்பார்வைக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மீள்பார்வைக்கான காலஅளவை பயன்படுத்திக் பள்ளி அளவிலேயே மாணவர்கள் நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். அதன்பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுளது.



பள்ளி திறப்பதற்கு முன்பே இச்செய்திகள் அனைத்து ஆசிரியர்களை சென்றடைந்து அவர்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்துதல் வேண்டும். மேலும் , மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல் , புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் ஆகியவற்றின் மென் நகல்களை தொடக்கக்கல்வி இயக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

2021 - 2022ஆம் ஆண்டு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு - NTSE (National Talent Search Examination) தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...



 2021 - 2022ஆம் ஆண்டு - 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு - NTSE (National Talent Search Examination) தேர்வுக்கான அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு...


>>> அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி அறிவிக்கை...


6ஆம் வகுப்பு (VI Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...

 


6ஆம் வகுப்பு (VI Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...


>>> தமிழ் (13MB)...


>>> English (9MB)...


>>> கணக்கு (77MB)...


>>> அறிவியல் (11MB)...


>>> சமூக அறிவியல் (7MB)...

7ஆம் வகுப்பு (VII Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...

 


7ஆம் வகுப்பு (VII Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...


>>> தமிழ் (11MB)...


>>> English (8MB)...


>>> கணக்கு (18MB)...


>>> அறிவியல் (14MB)...


>>> சமூக அறிவியல் (18MB)...

8ஆம் வகுப்பு (VIII Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...

 


8ஆம் வகுப்பு (VIII Standard) - புத்தாக்க பயிற்சி கட்டகம் (Refresher Course Module) - அனைத்து பாடங்கள் (All Subjects)...


>>> தமிழ் (8MB)...


>>> English (8MB)...


>>> கணக்கு (12MB)...


>>> அறிவியல் (10MB)...


>>> சமூக அறிவியல் (11MB)..


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...