கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (15-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 15, 2021



மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.  அனுபவம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி :  அனுகூலமான நாள். 


பரணி :  வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை :  முதலீடுகள் அதிகரிக்கும். 

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 15, 2021



வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மேன்மை உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் :  அடர் பச்சை



கிருத்திகை :  எண்ணங்கள் ஈடேறும். 


ரோகிணி :  உதவி கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 15, 2021



பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மிருகசீரிஷம் :  நம்பிக்கை அதிகரிக்கும். 


திருவாதிரை :  இன்னல்கள் குறையும்.


புனர்பூசம் :  சோர்வான நாள்.  

---------------------------------------





கடகம்

நவம்பர் 15, 2021



குழந்தைகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். சேவை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இழுபறிகள் குறையும். எதிர்பாராத சிறு வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் :  முன்னேற்றம் ஏற்படும். 


பூசம் :  இழுபறிகள் குறையும். 


ஆயில்யம் :  அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 15, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 



மகம் :  வாதங்களை தவிர்க்கவும். 


பூரம் :  குழப்பங்கள் நீங்கும்.


உத்திரம் :  புதுமையான நாள். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 15, 2021



வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். புதிய அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் :  செல்வாக்கு மேம்படும்.


அஸ்தம் :  பொறுப்புகள் அதிகரிக்கும். 


சித்திரை :  பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 15, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒத்துழைப்பு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை :  கருத்து வேறுபாடுகள் குறையும். 


சுவாதி :  ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் :  ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 15, 2021



குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் நன்மைகள் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்கள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



விசாகம் :  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


அனுஷம் :  நன்மையான நாள். 


கேட்டை :  வாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 15, 2021



மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் :  தெளிவு பிறக்கும்.


பூராடம் :  ஒத்துழைப்பு மேம்படும். 


உத்திராடம் :  ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 15, 2021



செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். மாற்றங்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் :  வெற்றி கிடைக்கும்.


திருவோணம் :  போட்டிகள் குறையும். 


அவிட்டம் :  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 15, 2021



உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். இழுபறியான பிரச்சனைகளுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுவித அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். வாதங்களை தவிர்க்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் :  ஏற்ற, இறக்கமான நாள். 


சதயம் :  பொறுப்புகள் குறையும்.


பூரட்டாதி :  மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 15, 2021



நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்கள் சாதகமான முடிவுகளை ஏற்படுத்தும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். தடுமாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



பூரட்டாதி :  மகிழ்ச்சியான நாள். 


உத்திரட்டாதி :  தனவரவுகள் கிடைக்கும். 


ரேவதி :  அனுபவங்கள் மேம்படும்.

---------------------------------------


ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது (நாளிதழ் செய்தி)...

 ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறது - இன்றைய தினமலர் சென்னை பதிப்பு...



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2021 - திங்கள் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 15.11.21

 திருக்குறள் :


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை. 


பொருள் - ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்


பழமொழி :

Little strokes fell great oaks



அடி மேல் அடியடித்தால்  அம்மியும் நகரும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 


2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.


பொன்மொழி :


தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள்.. நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.------கமலா ஹாரிஷ்



பொது அறிவு :


1. உலகின் மிக பெரிய நீர் வீழ்ச்சி எது? 


வெனிசூலாவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி. 


2. உலகின் மிகப்பெரிய அணைக்கட்டு எது? 


கனடாவில் உள்ள சின்குரூட் டெய்லிங்ஸ் அணைக்கட்டு


English words & meanings :


Little - not much அதிகம் என்னிடம் இ‌ல்லை , 


a little - some, என்னிடம் கொஞ்சம் உள்ளது


ஆரோக்ய வாழ்வு :


மூங்கில் அரிசி


மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது.


ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.


மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்,  நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும்.


நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.


கணினி யுகம் :


Alt + 0236 - ì. 


Alt + 0242 - ò


நவம்பர் 15


கிஜூபாய் பதேக்கா அவர்களின் பிறந்தநாள்... 


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை[1] அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை [2] நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.


நீதிக்கதை


தங்க மஞ்சள் குருவி!


விஜயநகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார். ஒருநாள் அரசர் அவரிடம், அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்... என்றார்.


மேலும், அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும் என்றார். அரசர் உடனே தெனாலியை அழைத்து, விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா... என்று உத்தரவிட்டார். அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால் சிரித்தவாறே, சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன் என்றார்.


மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு இருந்தது. அவர் அரசரிடம், என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை என்றார்.


தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது என்றார். அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது. அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது? என்று அனைவரும் வியப்படைந்தனர். அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர். விஜயவர்தனர் சொன்னார், தெனாலியின் சாதுர்யம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்... என்று புகழ்ந்தார்.


நீதி : அறிவுடையார் எல்லாம் உடையார்


இன்றைய செய்திகள்


15.11.21


* முதல்வர் சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டம் செல்ல உள்ளார்.


* சம்பா நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என்று வேளாண்மை, உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது.


* மேட்டூர் அணையின் 88 ஆண்டு கால வரலாற்றில் 41வது முறையாக நேற்றிரவு முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. இதனால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலம் வழியாக 24 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


* டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 12 பேருக்கு, கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.


* தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக வி.வி.எஸ்.லெட்சுமணன் நியமிக்கப்படவுள்ளதை பி.சி.சி.ஐ தலைவர் சவ்ரவ் கங்குலி உறுதி செய்துள்ளார்.



Today's Headlines


 * CM MK Stalin inspects rain-affected areas in Chennai and will visit Kanyakumari District also. 


* For the crop insurance of Samba Rice, tomorrow is the last day said the department of Agriculture and Farmer Welfare. 


* In the history of 88 years Mettur Dam water reaches its full capacity of 120 feet for the 41st time yesterday night. Due to this 24,000 cc surplus water is released through the hydropower stations and 16 eyes sluice gate. So flood Warning is given to 11 districts. 


* For 12 sports stars including Neeraj Sopra who won gold in Tokyo Olympics in Javelin throw President Ramnad Govind gave Kel Ratna Award. 


* VVS Lakshman becomes the Head of the National Cricket Academy. It is confirmed by BCCI head Sourav Ganguly

 

 Prepared by


Covai women ICT_போதிமரம்

கனமழை காரணமாக நாளை (15.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...



 சென்னையில் நிவாரண மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவம்பர் 15) விடுமுறை - சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாளை (நவம்பர்15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...


செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்காலிக அரசு நிவாரண முகாமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை...





"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021 வெளியீடு - இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பாபிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. நியமனம் (Creation of a new department called "Chief Minister's Address")...

 


"முதல்வரின் முகவரி" என்ற புதிய துறை உருவாக்கம் - அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021 வெளியீடு - இந்த துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பாபிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. நியமனம் (Creation of a new department called "Chief Minister's Address")...


>>> அரசாணை (நிலை) எண்: 944, நாள்: 03-11-2021...



முதல்வரின் குறைதீா்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ’முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.


இது தொடா்பாக தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பு(IIPGCMS), உங்கள் தொகுதியில் முதல்வா் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உருவாக்கப்படுகிறது.

முதல்வரின் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலாண்மை அமைப்பின் உதவி எண் மாநிலம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும்.


இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதியில் முதல்வா் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய (14-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 14, 2021



 உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதுமை பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அஸ்வினி : பொறுப்புகள் குறையும்.


பரணி : விழிப்புணர்வு வேண்டும். 


கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 14, 2021



வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : லாபகரமான நாள். 


ரோகிணி : திருப்தி உண்டாகும். 


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 14, 2021



செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணம் மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஒத்துழைப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


திருவாதிரை : பயணம் கைகூடும் 


புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------





கடகம்

நவம்பர் 14, 2021



செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : சோர்வு நீங்கும்.


பூசம் : பிரச்சனைகள் குறையும். 


ஆயில்யம் : ஒற்றுமை உண்டாகும். 

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 14, 2021



சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். முக்கியமான பணிகளை செய்து முடிப்பதில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 



மகம் : அலைச்சல்கள் ஏற்படும். 


பூரம் : கவனம் வேண்டும்.


உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.

---------------------------------------






கன்னி

நவம்பர் 14, 2021



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். சந்தோஷம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 14, 2021



கனிவான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உறவினர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வீர்கள். வியாபாரம் சம்பந்தமான உதவிகள் மனநிம்மதியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : இழுபறிகள் குறையும். 


சுவாதி : புரிதல் உண்டாகும்.


விசாகம் : நிம்மதியான நாள். 

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 14, 2021



வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த வாய்ப்புகள் சாதகமாகும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



விசாகம் : ஆதரவு கிடைக்கும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும். 

---------------------------------------





தனுசு

நவம்பர் 14, 2021



உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிந்தனைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



மூலம் : புரிதல் உண்டாகும்.


பூராடம் : அனுபவங்கள் மேம்படும்.


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மகரம்

நவம்பர் 14, 2021



குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எண்ணியவை நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


திருவோணம் : இழுபறிகள் குறையும். 


அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





கும்பம்

நவம்பர் 14, 2021



தம்பதியர்களுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கடன் சம்பந்தமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சமூகப் பணிகளில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அன்பு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சதயம் : முன்னேற்றமான நாள். 


பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 14, 2021



மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், கோபமும் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



பூரட்டாதி : குழப்பமான நாள். 


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும். 


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2021 - சனி - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.21

  திருக்குறள் :


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்


மு.வ விளக்க உரை:

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்


பழமொழி :

Don't count your chickens before they are hatched.



 மாளிகை வரும் முன்னே மனக்கோட்டை கட்டாதே.



இரண்டொழுக்க பண்புகள் :


1. உங்களை அழகாக்குவது

உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.



2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.


பொன்மொழி :


ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்------ அப்துல் கலாம்



பொது அறிவு :


1. அகச்சிவப்பு கதிர்களை எது அதிகம் ஈர்க்கும்?


 தண்ணீர். 


2. உலகின் மிகப்பெரிய வைரச்சுரங்கம் எங்கு உள்ளது? 


தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில்


English words & meanings :


Crafty person - a cunning dishonest person - தந்திரமான நேர்மையற்றவர், 


alarmed - frightened of something, எதையோ பார்த்து பயப்படுதல்


ஆரோக்ய வாழ்வு :


சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும்  செம்பருத்தி


செம்பருத்தியை பயன்படுத்தி சிறுநீர் பை, கணையத்தில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்று பிரச்னைகளை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள்:


செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு.  ஒரு பாத்திரத்தில் செம்பருத்தி பூவின் இதழ்களை போடவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும்.


ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.


இதை வடிகட்டி குடித்துவர சிறுநீர் பையில் ஏற்படும் அழற்சி, தொற்று குணமாகும்.


கணையத்தில் உண்டாகும் கட்டிகள் கரையும். சிறுநீர் பையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.


செம்பருத்தி இதயத்தை பலப்படுத்துகிறது. காயவைத்த செம்பருத்தி பூ நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


இதை பயன்படுத்தியும் தேனீர் தயாரிக்கலாம். செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டுவர பல்வேறு நன்மைகள் உண்டாகும்.


செம்பருத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புற்றுநோயை உருவாக்கும்  நச்சுக்களை செம்பருத்தி வெளியேற்றும்.


கணினி யுகம் :


Alt + 0224 - à. 


Alt + 0232 - è


நீதிக்கதை


ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.


ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”

 திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.


“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.


பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”


பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.


அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. 


“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.


நீதி : பேரரசை பெரு நட்டம்


இன்றைய செய்திகள்


13.11.21


◆முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளை இந்திய ராணுவ அதிகாரிகள் தொடர புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.


◆புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


◆அரசு பள்ளிகள் என்பது வறுமை யின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக உயர்த்திக் காட்டுவோம் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


◆மலிவு விலை தேயிலை இறக்குமதியால் உள்நாட்டில் தேயிலை தொழில் கடும் பாதிப்பு.


◆கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்களில் நிறைய ஆபத்துகள் உள்ளன என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.


◆ஐரோப்பிய நாடுகளில் வேகம் எடுக்கும்கொரோனா பாதிப்பு.


◆அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களை வெளியிட்டுள்ளது.


◆2022 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் தென் அமெரிக்க அணி என்ற பெருமையை பிரேசில் பெற்றுள்ளது.


◆தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : வெள்ளி பதக்கம் வென்றார் கீதா போகத்.


◆உலக பெண்கள் டென்னிஸ்: தொடக்க ஆட்டத்தில் கோன்டாவெய்ட், பிளிஸ்கோவா ஆகியோர் வெற்றி.



Today's Headlines


 🌸The Indian Army has signed a memorandum of Understanding with the Central University of Pondicherry for Indian Army officers to pursue postgraduate and research courses.


 🌸The Chennai Meteorological Department has announced that a new depression is developing


 🌸Education Minister Mr. Anbil Magesh said that "let us improve the standard of government schools so let them become a sign of pride  not a sign of poverty" 


🌸 The inland tea industry was severely affected by cheap tea imports.


 🌸 Reserve Bank Governor Shakti Kantha Das has warned investors that there are a lot of risks in digital currency trades like cryptocurrency.


 🌸Corona vulnerability accelerating in European countries.


 🌸NASA, the US Astronomy Research Centre has released new images of Mars.


 🌸 Brazil is proud to be the first South American team to qualify for the 2022 World Cup.


 🌸National Wrestling Championship: Geetha Pokath wins a silver medal.


 🌸World Women's Tennis: Kontaweight, Bliskova won the opening match.


 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

World Carrom Championship: Tamil Nadu's Kasima wins gold

  உலக கேரம் போட்டி: தமிழ்நாடு வீராங்கனை காசிமா தங்கம் வென்று சாதனை World Carrom Championship - Tamil Nadu's Kasima wins gold உலக கேரம் ச...