கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (20-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 20, 2021




பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். சுபிட்சமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : நெருக்கடிகள் குறையும். 


பரணி : அன்பு அதிகரிக்கும்.


கிருத்திகை : கலகலப்பான நாள். 

---------------------------------------





ரிஷபம்

நவம்பர் 20, 2021




எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். மறைமுக திறமைகள் வெளிப்படும். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.


ரோகிணி : விவேகம் வேண்டும்.


மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

---------------------------------------





மிதுனம்

நவம்பர் 20, 2021




அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

நவம்பர் 20, 2021




மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


 

புனர்பூசம் : ஆதரவான நாள். 


பூசம் : அனுகூலம் உண்டாகும்.


ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

நவம்பர் 20, 2021




உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.  சமூகப் பணிகளால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மேன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : முன்னேற்றம் உண்டாகும். 


பூரம் : வாய்ப்புகள் அமையும். 


உத்திரம் : மரியாதை அதிகரிக்கும். 

---------------------------------------





கன்னி

நவம்பர் 20, 2021




தொழில் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். அபிவிருத்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : மாற்றமான நாள். 


சித்திரை : நிதானம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

நவம்பர் 20, 2021




உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் அவசியம். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் அனுகூலமான சூழல் காணப்பட்டாலும் சற்று சிந்தித்து செயல்படவும். ஏற்றுமதி தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : விவேகம் வேண்டும்.


விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

நவம்பர் 20, 2021




நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் சுறுசுறுப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சோர்வான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : தீர்வு கிடைக்கும். 


அனுஷம் : உதவிகள் சாதகமாகும். 


கேட்டை : சுறுசுறுப்பு மேம்படும்.

---------------------------------------





தனுசு

நவம்பர் 20, 2021




உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.  வியாபார பணிகளில் இருந்த போட்டிகள் குறைந்து ஆதரவு அதிகரிக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சாதகமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும். 

---------------------------------------





மகரம்

நவம்பர் 20, 2021




மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமைகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 


திருவோணம் : நெருக்கடிகள் மறையும்.


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------





கும்பம்

நவம்பர் 20, 2021




குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கல்வி பணிகளில் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். எண்ணங்கள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும். 


சதயம் : முன்னேற்றமான நாள். 


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

நவம்பர் 20, 2021




மனதில் இருந்த கவலைகள் நீங்கி திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : திருப்தியான நாள். 


உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.


ரேவதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------


பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்(BT / SGT Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021 - இணைப்பு: கணக்கீட்டு படிவம்...



01.08.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம்(BT / SGT Staff Fixation) செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்(Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021 - இணைப்பு: கணக்கீட்டு படிவம்...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 040678/சி3/இ1/2021, நாள்: 02-11-2021...



>>> பணியிடங்கள் நிர்ணயம் கணக்கீட்டு படிவம்...

பள்ளி மற்றும் அலுவலகங்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோருதல்(Bank Account Details) - பள்ளிக்கல்வி ஆணையரக (நிதிக்கட்டுப்பாட்டு) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:051310/PC to FC/ 2021-4, நாள்: 18-11-2021...



>>> பள்ளி மற்றும் அலுவலகங்களின் வங்கி கணக்கு விவரங்கள் கோருதல்(Bank Account Details) - பள்ளிக்கல்வி ஆணையரக (நிதிக்கட்டுப்பாட்டு) அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:051310/PC to FC/ 2021-4, நாள்: 18-11-2021...


கனமழை காரணமாக இன்று (20.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்...

 


1)திருப்பத்தூர் மாவட்டம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


2)காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


3)வேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


 4)கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


5)கடலூர் மாவட்ட பள்ளி ,  கல்லூரிகளுக்கு விடுமுறை


6)ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை


7)விழுப்புரம் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை


8)செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


9) திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை


10)திருவள்ளூர் மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை


வினாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 89 மாணவர்கள் மற்றும் 6ஆசிரியர்களை துபாய் நகரத்திற்கு சுற்றுலாப் பயணம்(Dubai Tour) அனுப்பி வைத்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(CSE Proceedings) ந.க.எண்:56590/எம்/இ2/2021, நாள்:18-11-2021& பெற்றோர் ஒப்புதல் கடிதம்(Parents Consent Letter)...

 


>>> வினாடி-வினா போட்டியில் சிறந்து விளங்கிய 89 மாணவர்கள் மற்றும் 6ஆசிரியர்களை துபாய் நகரத்திற்கு சுற்றுலாப் பயணம் அனுப்பி வைத்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்:56590/எம்/இ2/2021, நாள்:18-11-2021 & பெற்றோர் ஒப்புதல் கடிதம்..

திருமலை - திருப்பதியில் கனமழை - வெள்ளம் (Heavy Rain - Flood in Tirumala Tirupati)...



>>> திருமலை - திருப்பதியில் கனமழை - கபில தீர்த்தம் வெள்ளம் (Heavy Rain - Flood in Tirumala Tirupati - Kapila Theertham)...




>>> திருமலை - திருப்பதியில் கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...




>>> திருமலை - திருப்பதியில் கனமழை - சாலைகளில் வெள்ளம் - இழுத்து செல்லப்படும் மனிதர்...




>>> திருமலை - திருப்பதியில் கனமழை - ஆட்டோக்களை இழுத்து செல்லும் வெள்ளம்... 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2021 - வெள்ளி - (School Morning Prayer Activities)...



 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.11.21

திருக்குறள் :


தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்

பாற்பட் டொழுகப் பெறின். 


பொருள் 


பகைவர், அயலோர், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதியாகும்.


பழமொழி :

If you run after two hares you will catch neither.


இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை.


இரண்டொழுக்க பண்புகள் :


1. படுத்த படுக்கையை மடித்து வைப்பேன். 


2. உணவு உண்ட தட்டை கழுவி வைப்பேன்.


பொன்மொழி :


இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரு பக்கத்தை உலகத்தையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. - அப்துல் கலாம்



பொது அறிவு :


1. இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?


கொல்கத்தா


2. இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?


 கேரளா


English words & meanings :


Not in my book - not according to my views, என் கருத்துக்கு ஒத்தது அல்ல, 


give me a break - leave me to relax, என்னை சற்று ஓய்வு எடுக்க விடு


ஆரோக்ய வாழ்வு :


நுரையீரலுக்கு முள்ளங்கி


அகத்திக்கீரையின் பூவும் முள்ளங்கியும் நுரையீரலுக்கான சிறந்த உணவு. அகத்திப்பூ, உடலில் இருக்கும் நிக்கோட்டினின் அளவைக் குறைக்க உதவும். உடலில் உள்ள நஞ்சை வெளியேற்றிவிடும்.


மேலும், கண் சிவந்து போதல், கண்களில் நீர் வழிதல், அலர்ஜி காரணமாகக் கண்களில் பிரச்னை, சூரிய வெப்பம், தூசு, புகையால் ஏற்படும் கண் எரிச்சல், கண் அழுத்தம் (Glucoma),கண் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கு அகத்திப்பூ கலந்த நீரால் கண்களைக் கழுவினால், மேற் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் குணமாகும். முள்ளங்கியில் உள்ள ராபனைன் (Raphanine)என்ற ரசாயனம் புற்றுநோயை நீக்கக் கூடியது. ராபனைனை எலிக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்ததில், எலியின் நுரையீரலில் உள்ள கட்டிகளின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்தன.


எம்பிசெமா(Emphysema)என்ற நுரையீரல் பாதிப்புப் பிரச்னையும் முள்ளங்கி சாற்றால் குணமாகிறது. நிமோனியா, புகையிலையால் வந்த புற்றுநோய் போன்றவைக்கு, இந்தச் சாறு அருமருந்து. தொடர்ந்து குடித்து வந்தால் மூச்சுக்குழாய் சுருக்கநோய் (Chroni cobstructive pulmonary disease) குணமாகத் தொடங்கும். நுரையீரல் பலப்படும். நுரையீரல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னைகளின் வீரியமும் வெகுவாகக் குறையும். இதனுடன், பத்மாசனம், சித்தாசனம் (யோகமுத்திரை) , பிராணயாமம் போன்றவற்றை செய்து வந்தால், இயற்கையாகவே நுரையீரல் பலப்படும். பாதிக்கப்பட்ட நுரையீரல் கூட புத்துயிர் பெறும்.


கணினி யுகம் :


Alt + 0198 - Æ. 


Alt + 0231 - ç



நவம்பர் 19


இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்... 

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.




உலகக் கழிவறை நாள்

உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.


நீதிக்கதை


சுத்தம் தேவை


புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். ஏண்டா இன்னைக்கு குளிச்சியா என்றாள் அப்புவின் அம்மா. நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடினான்.


அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது. அடுத்தநாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா? என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.


மறந்துட்டேன் சார் சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான். அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், யானை பல் விளக்குகிறதா என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.


அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை. அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை அழுக்குமாமா என்று அழைத்தனர்.


அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். டேய் குளிச்சிட்டுப் போய் படிடா இது அப்புவின் அம்மா. குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா என்பான் அப்பு.


பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான். மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.


அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை. விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.


அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து என்றார் டாக்டர். அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லாம் வரவே வராது என்றார் டாக்டர்.


அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. முதல் மார்க் ரங்கராஜன் என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான். ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.


சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்றார். அப்பு மௌனமாக இருந்தான். அடுத்தநாள் அவன் பள்ளிக்கு பளிச் என்று வந்தான். அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா என்று ஒருவன் சொல்ல பையன்கள் கொல்லென்று சிரித்தனர். அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.


இன்றைய செய்திகள்


19.11.21


★18 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்கள் ரூ.25,000 ரொக்கம் மற்றும் கேடயத்துடன் கூடிய கவிமணி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


★இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வான, மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளதாக வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


★இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



★இந்தியாவின் பூடான் எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்து உள்ளது. இது குறித்த செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளன.


★நிலவு சுற்றுப்பாதையில் இந்திய-அமெரிக்க விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று மோத இருந்த நிகழ்வை விஞ்ஞானிகள் துரிதமான நடவடிக்கை மூலம் தடுத்து உள்ளனர்.


★கனடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் மற்றும் அதனை தொடர்ந்து பெய்த மழை  வெள்ளத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


★அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு.


★இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்:காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து.


★ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா தங்க பதக்கம் வென்றுள்ளார்.



Today's Headlines


 ★ The Tamil Nadu government has announced that young writers under the age of 18 can apply for the Kavimani Award with Rs. 25,000 cash and a shield.


 ★ Astronomers predict that the longest lunar eclipse of this century will occur today.


 ★ The Tamil Nadu government has announced that the cabinet meeting scheduled to be held today will be postponed due to heavy rains.


 ★ China is building 4 villages a year on the Bhutan border with India.  Satellite images of this have been released.


 ★ Scientists have swiftly prevented the collision of INDO-US Space craft which is going to collide with each other in lunar orbit.


 ★ The worst hurricane to hit Canada, followed by flash floods, has caused unprecedented damage  in 100 years.


 ★ The game Silampam is included in the 3% reservation for sportspersons in government service


 ★ Indonesian Masters Badminton: PV Sindhu advanced to the quarterfinals.


 ★ Indian archer Jyoti Sureka wins gold at the Asian Archery Championships.

 Prepared by


Covai women ICT_போதிமரம்

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...