கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும் - கரூர் மாவட்ட ஆட்சியர்(Girls who are victims of sexual harassment call 1098. Or send 'Hi' via Whatsapp to 8903331098 - Karur District Collector)...






 பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். 1098 என்ற எண்ணை அழைக்கவும். அல்லது 8903331098 என்ற எண்ணிற்கு Whatsapp மூலம் 'Hi' என்று செய்தி அனுப்பவும். நாங்களே தொடர்பு கொள்வோம். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்.

- கரூர் மாவட்ட ஆட்சியர்...


வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியுதவி – மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 1167, நாள்: 22-11-2021)...

 வாகன விபத்தில் உயிரிழந்த கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர், திரு.நா.கனகராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் மற்றும் ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியுதவி –மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...




மின்னல் வந்தால் வெடித்து மலரும் தாழம்பூ - பயன்கள்(Lightning Strikes Flower Hyacinth - Uses)...

 


மின்னல் வந்தால் வெடித்து மலரும்  தாழம் பூ - பயன்கள்...


மின்னல் பட்ட உடனே மலரும் தாழை! விளக்கத்தை கேட்டு வியந்த எம்.ஜி.ஆர்!


தாழம் பூ என கூறப்படும் தாழை மலர்கள் மின்னல் படுவதால் தான் மலர்கிறது என்ற கூற்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இதனை மறுக்க முடியாது. ஏனெனில் சங்ககால புலவர்கள் முதல் தற்போதைய பல கவிஞர்கள் வரை பலர் தாழம் பூ குறித்த இந்த மலர்ச்சியை தங்களது கவிதையில் குறிப்பிட்டுள்ளனர். உதாரணத்திற்கு நாடோடி மன்னன் படத்தில் ஒரு பாடலில், கவிஞர் சுரதா 'சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல' என்ற உவமையை பயன்படுத்தியுள்ளார். இந்த வரிகளை கவனித்த எம்.ஜி.ஆர், அது எப்படி சாத்தியம்? மின்னல் கண்டு தாழம் பூ எப்படி மலரும் என வினாவியுள்ளார். 


இதற்கு கவிஞர் சுரதா, குறுந்தொகை பாடலில் உள்ள இந்த வரிகளை ஆதாரமாக காட்டியபோது  எம்.ஜி.ஆர் வியந்து மகிழ்ந்தாராம். இதற்கான அறிவியல் விளக்கம் என்னவென்றால், தாழை செடி கிளைகளின் இறுதியே தாழம் பூவாக உருமாற்றம் அடையும்.


 பொதுவாக தாவரங்கள் செழிப்பாக வளர நைட்ரஜன் இன்றியமையாதது. மழைபொழியும் காலங்களில் மின்னலானது காற்றில் உள்ள நைட்ரஜனை உடைத்து காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் கலந்து மண்ணை வந்தடைகிறது. இந்த சமயத்தில் தாவரங்கள் செழிப்பாக வளர்கின்றன. உற்று கவனித்தால் தெரியும், சாதாரண பாசன நீரை காட்டிலும் மழைப்பொழிவு ஏற்பட்ட நேரத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருக்கும்.


 தாழை மலர் நைட்ரஜன் பற்றாக்குறையில் உள்ள போது, மின்னலுடன் மழைபெய்கையில் தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மலர்ந்து விடுகிறது. மற்ற நாட்களை காட்டிலும் மின்னலுடன் மழைபெய்த பின்னர் பார்த்தால் அதிக தாழை மலர்கள் மலர்ந்திருக்கும். மின்னலும் தாழை மலர்கள் மலர ஊக்குவிப்பானாக செயல்படுகிறது.


ஆனால் சங்க கால பாடலான குறுந்தொகையிலும் அறிவியல் விளக்கத்துடன் இடம்பெற்றது தான் வியப்பளிப்பதாக உள்ளது என மக்கள் திலகமும் வியந்துள்ளார். 


 செடியின் வேரை இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து அதனுட‌ன் வெ‌ல்ல‌ம் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர வெ‌ப்ப நோ‌ய்க‌ள் த‌ணியு‌ம். தாழ‌ம் இலையின் ‌விழுதை இடி‌த்து சாறு ‌பி‌ழி‌ந்து நெ‌ய்யுட‌ன் கல‌ந்து கா‌ய்‌ச்‌சி 5 ‌மி‌ல்ல‌ி அளவு உ‌ட்கொ‌ண்டு வர ‌நீ‌ர்‌க்கடு‌ப்பு, ‌நீ‌ர்‌ச்சுரு‌க்கு குணமாகு‌ம்.


தாழ‌ம்பூவை து‌ண்டு து‌ண்டாக வெ‌ட்டி ‌நீ‌ரி‌ல் இ‌ட்டு கா‌ய்‌ச்ச வே‌ண்டு‌ம். ‌நீ‌ர் ந‌ன்கு கொ‌தி‌த்து பூ‌வித‌ழ்க‌ள் வத‌ங்‌கிய ‌பி‌ன் வடிக‌ட்டி, தேவையான ச‌ர்‌க்கரை கூ‌ட்டி பாகுபதமா‌ய் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். இதுவே தாழ‌ம்பு மண‌ப்பாகு. இதனை ஒரு ‌தே‌க்கர‌ண்டி அளவு ‌நீ‌ரி‌ல் கல‌ந்து இருவேளை குடி‌த்து வர உட‌ல் உ‌ஷ‌்ண‌த்தை‌த் த‌ணி‌க்கு‌ம். இ‌ப்படி செ‌ய்தா‌ல் ‌பி‌த்த நோ‌ய்களு‌ம் ‌தீரு‌ம். அ‌திகள‌வி‌ல் ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியாவதை‌த் தடு‌க்கு‌ம். தாழ‌ம்பூ மண‌ப்பா‌கினை வெ‌யி‌ல் கால‌ங்க‌ளி‌ல் ‌தினச‌ரி உபயோ‌கி‌த்து வர அ‌ம்மை நோ‌ய் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.


தாழம்பூ தோல்நோய்களை குணமாக்கும். மண‌ப்பாகை தாழ‌ம்பூ வே‌ரினை‌ப் பய‌ன்படு‌த்‌தி செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்டு உ‌ட்கொ‌ண்டு வர சொ‌றி, ‌சிர‌ங்கு, ‌தினவு, தோ‌ல் நோ‌ய்க‌ள் குணமாகு‌ம்.

இன்றைய (23-11-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

நவம்பர் 23, 2021




எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.


பரணி : முன்னேற்றம் உண்டாகும்.


கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.


---------------------------------------




ரிஷபம்

நவம்பர் 23, 2021



குடும்ப உறுப்பினர்களிடத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் நிதானமும், கவனமும் வேண்டும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


ரோகிணி : தெளிவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.


---------------------------------------




மிதுனம்

நவம்பர் 23, 2021



நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகள் நிறைவேறும். லாபகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 


திருவாதிரை : கவனம் வேண்டும்.


புனர்பூசம் : மரியாதை மேம்படும்.


---------------------------------------




கடகம்

நவம்பர் 23, 2021



தந்தை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் வரலாம். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். விரயம் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 



புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 


பூசம் : குழப்பம் உண்டாகும்.


ஆயில்யம் : பதற்றமின்றி செயல்படவும். 


---------------------------------------




சிம்மம்

நவம்பர் 23, 2021



திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 


பூரம் : அறிமுகம் கிடைக்கும். 


உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


---------------------------------------




கன்னி

நவம்பர் 23, 2021



விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வழக்கு சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : கவனம் வேண்டும்.


அஸ்தம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.


---------------------------------------




துலாம்

நவம்பர் 23, 2021



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


சுவாதி : திருப்திகரமான நாள். 


விசாகம் : மாற்றம் உண்டாகும்.


---------------------------------------




விருச்சிகம்

நவம்பர் 23, 2021



புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தாலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : சிந்தித்து செயல்படவும். 


அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.


கேட்டை : விவேகம் வேண்டும்.


---------------------------------------




தனுசு

நவம்பர் 23, 2021



உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : விழிப்புணர்வு வேண்டும். 


பூராடம் : வாய்ப்புகள் அமையும்.


உத்திராடம் : புதுமையான நாள்.


---------------------------------------




மகரம்

நவம்பர் 23, 2021



உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத பயணங்களால் நன்மைகள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 



உத்திராடம் : அனுகூலமான நாள். 


திருவோணம் : நன்மைகள் உண்டாகும். 


அவிட்டம் : மாற்றமான நாள்.


---------------------------------------





கும்பம்

நவம்பர் 23, 2021



திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புரிதல் ஏற்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.


சதயம் : உதவிகள் கிடைக்கும். 


பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.


---------------------------------------





மீனம்

நவம்பர் 23, 2021



வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.


உத்திரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-11-2021 - செவ்வாய் - (School Morning Prayer Activities)...

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.11.21

 திருக்குறள் :


தக்கார் தகவிலர் என்ப தவரவர்

எச்சத்தாற் காணப் படும். 


பொருள் 


ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்


பழமொழி :

we can take a horse to water but can't it make it drink.



  தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால்  கனியுமா?



இரண்டொழுக்க பண்புகள் :


1. சினம் எப்படி பட்ட உறவுகளையும் அழித்து விடும். 


2. ஆனால் பொறுமை பாறை போன்ற மனதை கூட இளக செய்து விடும். எனவே பொறுமை நம் வாழ்வில் முன்னேற மிகவும் அவசியம்


பொன்மொழி :


ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம். ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம்.---அப்துல்கலாம்



பொது அறிவு :


1. மனித உடலின் குளிரான பகுதி எது? 


மூக்கு. 


2. பாலைவனமே இல்லாத கண்டம் எது? 


ஐரோப்பா



English words & meanings :


Heart in my mouth - feeling nervous, பயந்து நடுங்குதல், 


see eye to eye - I agree, ஒத்து போதல்



ஆரோக்ய வாழ்வு :


விட்டமின் D. இது நல்ல ஆரோக்கிய எலும்பு, சிறந்த இரத்த ஓட்டம், நச்சு பொருள் வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காணப்படும் உணவுப் பொருட்கள் - பாலாடை, (cheese) வெண்ணெய், மீன், முட்டை மஞ்சள் கரு, காய்கறிகளில் உள்ளது


கணினி யுகம் :


CTRL+Windows Logo+F (Search for computers)


Windows Logo+F1 (Display Windows Help)



நவம்பர் 23


சுரதா 

சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.




சர் ஜகதீஷ் சந்திர போஸ்  

சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.



நீதிக்கதை

ஒட்டகத்திற்கு நேர்ந்த கவலை


கதை :

ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 


இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 


ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 


குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 


தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 


நீதி :

சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.



இன்றைய செய்திகள்


23.11.21


◆பார்வையிடாத வெள்ள சேத விவரங்கள் எதுவும் விடுபடாது என்று கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக் குழு தெரிவித்துள்ளது.


◆மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.


◆தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் பள்ளிகளை மூட உத்தரவு.


◆கரோனா தொற்று காரணமாக நீண்டகாலமாகப் பள்ளிகளை மூடி வைத்ததால், மாணவர்களின் கற்கும் திறன் மட்டும் பாதிக்கப்படாமல், ஆண்-பெண் பாலினச் சமத்துவமும் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று யுனிசெஃப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


◆ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமை ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் சாவின் விளிம்பில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருப்பதாக யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.


◆பார்முலா1 கார் பந்தயம்: கத்தார் போட்டியில் இங்கிலாந்தின்  ஹாமில்டன் முதலிடம்.


◆உலக ஆண்கள் டென்னிஸ்: மெட்விடேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனியைச் சேர்ந்த   ஸ்வெரேவ்


Today's Headlines


 * In the non-visited areas of Kanyakumari though the team didn't visit no damaged data will be left out says the Central team which visited the flood-affected areas of Kanyakumari.


* To take into account the welfare of students all teachers must take vaccination advice from the Chennai High Court.


* Due to the increased Air pollution in the capital Delhi the government ordered the schools to close. 


* In the study of UNICEF during this pandemic, they declared their concern that not only the educational level of children but also there is a chance for discrimination among the students regarding the male-female equality. 


* There are nearly 10 lakh children are in the edge of death due to poverty, malnutrition, and starving in Afghanistan

 

* In the Formula 1 race that took place in Qatar Hamilton from England won first place. 


* In the World Men's finals in Tennis Swerav of Germany defeat Medvedev and won the Championship

 Prepared by


Covai women ICT_போதிமரம்

நீதியரசர் திரு.முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம்...

 மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட நீதியரசர் திரு.முனீஸ்வர் நாத் பண்டாரி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்...



1591 முதுகலை ஆசிரியர் (2012-2013) பணியிடங்களுக்கு 3 மாத ஊதிய ஆணை(Post Continuation Order) வெளியீடு (Proceedings of the Commissioner of School Education R.c.No. 056599/L/E3/2021, Dated: 20-11-2021)...

 


1591 முதுகலை ஆசிரியர் (2012-2013) பணியிடங்களுக்கு 3 மாத ஊதிய ஆணை(Post Continuation Order) வெளியீடு (Proceedings of the Commissioner of School Education R.c.No. 056599/L/E3/2021, Dated: 20-11-2021)...


>>> Proceedings of the Commissioner of School Education R.c.No. 056599/L/E3/2021, Dated: 20-11-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...