கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (07-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஜனவரி 07, 2022




தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்படும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் :  5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : புதுவிதமான நாள்.


கிருத்திகை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 07, 2022




வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : அனுபவம் ஏற்படும்.


ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






மிதுனம்

ஜனவரி 07, 2022




நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.


திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------






கடகம்

ஜனவரி 07, 2022




கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது தேவையற்ற மனக்கசப்பை தவிர்க்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் சில அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவினர்களிடத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பங்கு வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம். ஓய்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


ஆயில்யம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 07, 2022




எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் ஆதயமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மகம் : மகிழ்ச்சியான நாள். 


பூரம் : இலக்குகள் பிறக்கும்.


உத்திரம் : முடிவுகள் சாதகமாகும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 07, 2022




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் மனதிற்கு பிடித்தவாறு சில மாற்றங்களை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திரம் : விருப்பம் நிறைவேறும்.


அஸ்தம் : இன்னல்கள் குறையும்.


சித்திரை : ஆதரவான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 07, 2022




சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். மற்றவர்களின் உள்ளத்தில் இருக்கக்கூடிய எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



சித்திரை : மாற்றம் உண்டாகும். 


சுவாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


விசாகம் : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 07, 2022




கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். பேச்சுத்திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



விசாகம் : பயணங்கள் சாதகமாகும்.


அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும். 


கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 07, 2022




விளையாட்டு சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முயற்சிக்கான உயர்வு உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் தோன்றும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 07, 2022




உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நன்மை உண்டாகும். விருப்பம் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 


திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும். 


அவிட்டம் : நன்மை உண்டாகும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 07, 2022




குணநலன்களில் மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். செயல்திறனும் லாபகரமான கண்ணோட்டமும் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கு பெற்று மகிழ்வீர்கள். இளைய சகோதரர் வகையில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : மாற்றமான நாள். 


சதயம் : நினைவாற்றல் மேம்படும். 


பூரட்டாதி : அனுகூலமான நாள்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 07, 2022




வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் காணப்படும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



பூரட்டாதி :  கவனம் வேண்டும். 


உத்திரட்டாதி : புதுவிதமான நாள். 


ரேவதி : இழுபறிகள் உண்டாகும்.

---------------------------------------


ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது எழும் சிக்கல்களும், அவற்றிற்கு State EMIS Teamன் பதில்களும் (Problems that arise when registering for a Teacher Transfer Application on the EMIS website and the State EMIS Team's response to them)...





ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் பொழுது எழும் சிக்கல்களும், அவற்றிற்கு State EMIS Teamன் பதில்களும் (Problems that arise when registering for a Teacher Transfer Application on the EMIS website and the State EMIS Team's response to them)...



ஐயா/அம்மா,

EMISல் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நுழைவு பற்றிய விளக்கங்கள்... ================ 

*பணிவரன்முறை தேதி: 1899 என தவறாகக் காட்டப்பட்டுள்ளது* *மாநிலத்திலிருந்து பதில்:* எடிட் ஆப்ஷன் கொடுக்கப்படும். 

=====

*ஏற்கனவே பள்ளிகளில் இருந்து இடமாற்றம் / ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பெயர் சில பள்ளிகளில் தவறாக காட்டப்பட்டுள்ளது* *மாநிலத்தின் பதில்:* விரைவில் சரியாக அமைக்கப்படும்.
=====

*பணிபுரியும் இடம்: தட்டச்சு செய்ய வசிப்பிடம் என தவறாகக் காட்டப்பட்டுள்ளது* *மாநிலத்தின் பதில்:* தீர்க்கப்படும்.
=====

*HMகளுக்கான இடமாற்ற விண்ணப்பப் பதிவு* *மாநிலத்திலிருந்து பதில்:* HM EMIS ஐடியில் விரைவில் செயல்படுத்தப்படும்.
=====

*HMகள் இல்லாத பள்ளிகளுக்கான HM ஒப்புதல் திரை* *மாநிலத்திலிருந்து பதில்:* பள்ளி உள்நுழைவில் ஒப்புதல் வழங்கப்படும்.

*அனைத்து HM களும், ஆசிரியர் விண்ணப்பத்தை அங்கீகரிக்க காத்திருங்கள்*

=====

*விண்ணப்பத்தை மாற்றுவதற்கான PDF பதிவிறக்கம் விருப்பம் விரைவில் வழங்கப்படும்*

=====

Sir/Mam,
*Clarifications regarding Teacher Transfer Counselling Entry in EMIS*
================

*Regularization Date : Wrongly shown with year as 1899*
*Reply from State :* Edit option will be given.
=====

*Already Transferred / Retired Teachers from Schools : Wrongly shown in some schools*
*Reply from State :* Will be set right soon.
=====

*Working Place : Wrongly shown as Residence to be typed*
*Reply from State :* Will be solved.
=====

*Transfer Application Entry for the HMs*
*Reply from State :* Will be enabled in HM EMIS ID soon.
=====

*HM Approval Screen for the Schools not having HMs*
*Reply from State :* Approval will be given in School Login.
*All HMs, kindly wait to approve the Teachers Application*
=====

*Transfer Application PDF Downloading Option will be given soon*
=====

ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் (Teachers' Transfer Application - Instructions for registering on the EMIS website)...



>>>  ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் (Teachers' Transfer Application - Instructions for registering on the EMIS website)...


>>> ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை-1)...


ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை-1) [Proceedings of the Commissioner of School Education in favour of uploading applications for Teacher General Counselling on the Internet (Circular-1)] ந.க.எண்: 25154/அ1/இ2/2021, நாள்: 06-01-2022...



>>> ஆசிரியர் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பான பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (சுற்றறிக்கை-1) [Proceedings of the Commissioner of School Education in favour of uploading applications for Teacher General Counselling on the Internet (Circular-1)] ந.க.எண்: 25154/அ1/இ2/2021, நாள்: 06-01-2022...


>>> ஆசிரியர் மாறுதல் விண்ணப்பம் EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்...

அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Schedule and Proceedings of the Commissioner of School Education for imparting capacity building training to all Primary, Middle and High School Teachers)...



>>> அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Schedule and Proceedings of the Commissioner of School Education for imparting capacity building training to all Primary, Middle and High School Teachers) ந.க.எண்: பிடி1/இ2/2022, நாள்: 06-01-2022...

ஆசிரியர்களின் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் அங்கீகரிக்கும் முறை (Approval of Headmasters for Teachers' Transfer Applications)...

Teachers' Transfer Counselling 2022 -  ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கோரும் விண்ணப்பத்தை EMIS Portal-லில் submit செய்த பின் தலைமை ஆசிரியர் தங்களுடைய User IDயைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் விண்ணப்பத்தை Approve செய்ய வேண்டும்.











புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை நிர்ணயம் செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on behalf of the Union Level Seniority Determination in the Newly Divided Districts) ந.க.எண்: 27304/டி1/2021, நாள்: 29-12-2021...



>>> புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அளவிலான முன்னுரிமை நிர்ணயம் செய்தல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on behalf of the Union Level Seniority Determination in the Newly Divided Districts) ந.க.எண்: 27304/டி1/2021, நாள்: 29-12-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...