கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (26-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 26, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கனிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 26, 2022
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 26, 2022
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : இழுபறிகள் குறையும்.
புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 26, 2022
நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். சோர்வு அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : விவாதங்களை தவிர்க்கவும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 26, 2022
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 26, 2022
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.
சித்திரை : நம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 26, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தயக்க உணர்வை குறைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி வாகை சூடுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : முயற்சிகள் மேம்படும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 26, 2022
வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனை மற்றும் வீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : தடைகளை அறிவீர்கள்.
கேட்டை : வரவு உண்டாகும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 26, 2022
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய மனை மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவும், புரிதலும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : உதவி கிடைக்கும்.
பூராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 26, 2022
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : திருப்திகரமான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 26, 2022
மனதில் இருந்துவந்த சோர்வுகள் படிப்படியாக குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அவிட்டம் : சோர்வுகள் நீங்கும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : மந்தத்தன்மை குறையும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 26, 2022
வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மற்றவர் கூறும் கருத்துக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மன உறுதி அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
2021-2022ஆம் ஆண்டுக்கான M.B.B.S., மற்றும் B.D.S., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் (PROVISIONAL RANK LIST) வெளியீடு...
2021-2022ஆம் ஆண்டுக்கான M.B.B.S., மற்றும் B.D.S., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
>>> PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2021 2022 SESSION (GOVERNMENT QUOTA )...
>>> PROVISIONAL RANK LIST FOR MBBS/BDS 2021 2022 SESSION (MANAGEMENT QUOTA INCLUDING NRI)...
Spouse Priority உள்ளவர்கள் அவர்கள் விரும்பும் எந்த மாவட்டம் வேண்டுமானாலும் எடுக்கலாம் - மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலில் கலந்து கொள்வோருக்கு பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள காலியிடம் காட்டப்படமாட்டாது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (CSE Proceedings - The latest instructions on Spouse priority, resultant vacancies and inter district transfers) ந.க.எண்.25154 / அ1 / இ2 / 2021, நாள்.24.01.2022....
அவசரம் // தனிக்கவனம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6
ந.க.எண்.25154 / அ1 / இ2 / 2021, நாள். 24.01.2022.
பொருள்: பள்ளிக் கல்வி 2021-22ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு சார்பான அறிவுரைகள் வழங்குதல்- சார்பு.
பார்வை: 1) அரசாணை (நிலை)எண்: 176, பள்ளிக் கல்வி (பக5(1) துறை, நாள்.17:12.2021
2)பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள்: 30.12.2021, 06.1.2022, 07.1.2022, 08.1.2022, 10.1.2022, 20.1.2022, 21.1.2022, 22.1.2022 மற்றும் 24.1.2022
பார்வை-2ல் காணும் 24.1.2022 நாளிட்ட செயல்முறைகளில் பத்தி-3ற்கு கீழ்க்காணுமாறு திருத்தம் செய்து வாசிக்குமாறும் அதன் தொடர்ச்சியாக சில கூடுதல் அறிவுரைகளும் கீழ்க்காணுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
1. கணவன்-மனைவி (Spouse Priority) முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கணவன் / மனைவி எந்த மாவட்டத்தில் பணிபுரிகின்றனரோ அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியினை தான் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதற்கு பதிலாக அவர்கள் விரும்பும் ஏனைய மாவட்டத்தினையும் தெரிவு செய்துகொள்ளலாம்.
2. கணவன் / மனைவி மேற்காண் முன்னுரிமையினை (Spouse Priority) எவரேனும் ஒருவர் பயன்படுத்தினால் கூட அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்த முன்னுரிமையினை (Priority) கோரக்கூடாது.
3. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அவர்களின்முன்னுரிமையின் (Seniority basis) அடிப்படையில் அவரது சுழற்சி (turn) வரும்பொழுது உள்ள காலிப்பணியித்தினை மட்டுமே தெரிவு செய்ய ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவருக்கு பின்னர் வரும் Resultant Vacancy ஐ தெரிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது.
4.மாவட்டம் விட்டு மாவட்டம் (Inter District Transfer) கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கலந்தாய்வின் போது தற்போது பணிபுரியும் மாவட்டத்தினை தவிர்த்து பிற மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடத்தினையே தெரிவு செய்யப்படவேண்டும். (தனியரின் தற்போது பணிபுரியும் மாவட்டம் EMIS இணையத்தில் காண்பிக்கப்படமாட்டாது)
5. மேலும் மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் வருகைபுரியாமலோ (Absent) (அ) தாமதமாக வருகைபுரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது.
மேற்காண் அறிவுரைகளிண்படி காலிப்பணியிடங்கள் மற்றும் மாறுதல் விண்ணப்பங்களில் அனைத்து முறையீடுகள், திருத்தங்கள் ஆகியவற்றினை குறித்த காலக்கெடுவிக்குள் சரிசெய்யப்படவேண்டும். கலந்தாய்வு நடைபெறும் அன்றைய நாளில் தெரிவிக்கப்படும் எவ்வித முறையீடுகளும் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...