கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (21-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 21, 2022




திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். எந்தவொரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : வாய்ப்புகள் மேம்படும். 


பரணி : பொறுப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 21, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனையும், அதை சார்ந்த முயற்சிகளும் வெளிப்படும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். நன்மை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : உயர்வான நாள். 


ரோகிணி : சிந்தித்து செயல்படவும். 


மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 21, 2022




சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணியில் சக ஊழியர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை உண்டாகும். சுபமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள். 


திருவாதிரை : நன்மை ஏற்படும். 


புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 21, 2022




உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் செல்வது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 21, 2022




உத்தியோக ரீதியான பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சிக்கலான செயல்களையும், சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



மகம் : மந்தமான நாள். 


பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.


உத்திரம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 21, 2022




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திரம் : நெருக்கடிகள் நீங்கும்.


அஸ்தம் : போட்டிகள் குறையும்.


சித்திரை : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------






துலாம்

பிப்ரவரி 21, 2022




புதிய தொழில்நுட்ப பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் பணியாட்களால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். துணிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும். 


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 21, 2022




கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். எண்ணிய காரியங்களைச் செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : இழுபறிகள் குறையும்.


அனுஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 21, 2022




நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆடம்பர பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : ஆதாயம் ஏற்படும்.


பூராடம் : நம்பிக்கை மேம்படும்.


உத்திராடம் : ஈர்ப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 21, 2022




வாகனம் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



உத்திராடம் : அனுபவம் மேம்படும்.


திருவோணம் : இன்னல்கள் குறையும். 


அவிட்டம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 21, 2022




பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தெளிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



அவிட்டம் : அனுகூலமான நாள். 


சதயம் : நெருக்கடிகள் குறையும்.


பூரட்டாதி : தெளிவு ஏற்படும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 21, 2022




தனவருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்ப விவகாரங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலை காணப்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : ஏற்ற, இறக்கமான நாள்.


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : மந்தமான நாள்.

---------------------------------------

நாளை (21-02-2022) மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு....

 நாளை (21-02-2022) மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர பிற இடங்களில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..



இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் மற்றும் தகுதி (Appointment and Qualification of High Court Judges in India)...



 இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் மற்றும் தகுதி (Appointment and Qualification of High Court Judges in India)...


 நாட்டில் 21 உயர் நீதிமன்றங்கள் உள்ளன, அவற்றின் அதிகார வரம்பு அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில நீதிமன்றங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை அவற்றின் அதிகார வரம்பிற்குள் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கவுகாத்தியில் உள்ள உயர்நீதிமன்றம் அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. சென்னை, கொல்கத்தா, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் உள்ள உயர் நீதிமன்றங்கள் இரட்டை அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளன, அதே சமயம் சண்டிகரில் உள்ள உயர் நீதிமன்றம் பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகியவற்றை உள்ளடக்கியது. மாநிலத்தின் நீதித்துறையின் தலைவராக உயர் நீதிமன்றம் உள்ளது. உயர் நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளைக் கொண்டுள்ளது, அவர்களின் எண்ணிக்கை அவ்வப்போது மாறுபடும். இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும் காலத்திற்கான கூடுதல் நீதிபதிகள் தற்காலிக அடிப்படையில் ஜனாதிபதியால் நியமிக்கப்படலாம்.


 நியமனம் மற்றும் தகுதிகள்: 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்தியத் தலைமை நீதிபதி, மாநில ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோருடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். 


உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு, 

அந்த நபர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 

அவர் இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் பத்து ஆண்டுகளுக்குக் குறையாத காலம் நீதிபதியாகப் பணியாற்றியவராக இருக்க வேண்டும். 

இந்தியக் குடியரசுத் தலைவரால் புகழ்பெற்றதாகக் கருதக்கூடிய எந்தவொரு உயர் நீதிமன்றத்திலும் பத்தாண்டுகள் பணிபுரியும் வழக்கறிஞர்களும் தகுதியுடையவர்கள்.


 இந்தியாவில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவது எப்படி? 

உயர் நீதிமன்றம் மாநில நீதித்துறை நிர்வாகத்தின் தலைவர். உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆவதற்கான தகுதிகள் ஒரு நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 


இளநிலைப் பட்டப் படிப்புடன் LLB/ LLM / BL பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அவர் இந்தியாவில் 10 ஆண்டுகள் நீதித்துறை பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.


 பணி நிபந்தனைகள்: 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் பதவி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களை நீக்க முடியாது. இதுவரை எந்த ஒரு நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. பதவி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில்,  தேவையான பெரும்பான்மையை திரட்ட முடியவில்லை. 


சம்பளம் மற்றும் இதர நன்மைகள்: 

தலைமை நீதிபதி மாத சம்பளம் ரூ. 2,50,000 மற்ற நீதிபதிகளுக்கு மாத சம்பளம் ரூ. 2,25,000. அவர்களுக்கு இலவச வசதிகளுடன் கூடிய தங்கும் உரிமையும் உண்டு. இந்த ஊதியம் மற்றும் படிகளை அவர்களுக்கு குறைக்க முடியாது. 

மாநில சட்டப் பேரவைகளால் சம்பளம் மாற்றப்படாது. 

நீதிபதிகள் எந்தவிதமான அரசியல் அழுத்தம் அல்லது செல்வாக்கிலிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை இந்த விதி உறுதி செய்கிறது. 

எவ்வாறாயினும், நீதிபதிகள் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தில் வாதிடவோ அல்லது செயல்படவோ தடை விதிக்கப்பட்டுள்ளனர்.



>>> உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021...



The High Courts in India: Appointment and Qualification for Judges!


There are 21 High Court Courts in the country with their jurisdiction extending to all the 28 States and 7 Union Territories. Some courts have more than one States/ Union Territory under their jurisdiction. For example, the High Court at Guwahati has jurisdiction over Assam, Manipur, Meghalaya, Nagaland, Tripura, Mizoram and Arunachal Pradesh.


The High Courts at Chennai, Kolkata, Ernakulum have dual jurisdictions while the High Court at Chandigarh covers Punjab, Haryana and Chandigarh.


The High court stands at the head of the judiciary in the State. The High Court comprises a Chief Justice and other judges, their number varying from time to time. Additional judges for a period not exceeding two years may be appointed by the President on a temporary basis.


Appointment and Qualifications:

Judges of the High courts are appointed by the President in consultation with the Chief Justice of India, Governor of the State and also the Chief justice of the concerned court.


For appointment as a judge of a High Court the person must be an Indian citizen who has worked as a judge in any court in India for a period not less than ten years. Advocates with a ten year standing in any High Court are also eligible besides jurists whom the President of India may consider as eminent.


How to Become a Judge in High Court in India?

The high court is the chief of the state judicial administration. 


Qualifications to Become a Judge in High Court

A person must be a citizen of India.

Must have an LLB/LLM degree.

He/she should have held a judicial office in India for 10 years or he should have been an advocate of a high court for 10 years.


Service Conditions:

The age of retirement in respect of the Judges of the High Court stands at 65 years. They cannot be removed except though impeachment by both Houses of the Parliament in accordance with the procedure prescribed in the Constitution. No judge has so far been removed by impeachment. In one instance where the impeachment proceedings had been initiated, the address could not muster the requisite majority.


Salary and Fringe Benefits:

The Chief Justice gets a salary of Rs. 2,50,000 p.m. while the other judges are paid a monthly salary of Rs. 2,25,000. They are also entitled to free furnished accommodation. These pay and allowances cannot be changed to their disadvantage.


The salaries are not put to vote in the State Legislatures. This provision ensures that the judges remain insulated from any kind of political pressure or influence. The Judges however are barred from pleading or acting in a court except at the Supreme Court or a High Court other than the one in which he held office.

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...

 


உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...


உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களால் லோக்சபாவில் டிசம்பர் 21, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்த மசோதா திருத்தமானது 

(i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; மற்றும் 

(ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன. 


சம்பளம்: இரண்டு சட்டங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைக் குறிப்பிடுகின்றன. 


ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களின் சம்பளத்தை திருத்த மசோதா அமல்: 


அட்டவணை 1: நீதிபதிகளின் சம்பளம் (மாதந்தோறும்)

Table 1: Salary of judges (per month)

பதவி

தற்போது (ரூ.) 

முன்மொழியப்பட்டது (ரூ.) 

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

1,00,000

2,80,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

90,000

2,50,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

90,000

2,50,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

80,000

2,25,000

 

ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017; 


படிகள் : 

இரண்டு சட்டங்களின் கீழ், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு, பார்வையாளர்களை உபசரிப்பதற்காக ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்ய, ஒரு தொகை படி வழங்கப்படுகிறது. 

செப்டம்பர் 22, 2017 முதல் இந்த படியை திருத்த மசோதா அமலாக்குகிறது. 


அட்டவணை 2: 

நீதிபதிகளின் தனிப்பட்ட செலவுகளுக்கான படி (மாதத்திற்கு) 

Table 2: Sumptuary Allowance of judges (per month)

பதவி (Designation)

தற்போது (ரூ.) Present (Rs)

முன்மொழியப்பட்டது (ரூ.) Proposed (Rs)

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

20,000

45,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

15,000

34,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

15,000

34,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

12,000

27,000

 

ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017; 



உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உத்தியோகபூர்வ இல்லத்தை வாடகை செலுத்தாமல் பயன்படுத்துவதற்கு உரிமையுடையவர்கள் என இரண்டு சட்டங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், நீதிபதிகள் இந்த உரிமையைப் பயன்படுத்தாவிட்டால், அவர்களுக்கு அவர்களின் சம்பளத்தின் 30%க்கு சமமான மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இந்தச் சலுகையை அவர்களின் சம்பளத்தில் 24% ஆக மாற்றியமைக்க மசோதா முயல்கிறது. 

மேலும், இந்தக் படி பின்வருமாறு திருத்தப்படும் என்று குறிப்பிடுகிறது: 

(i) அகவிலைப்படி (DA) 25% ஐத் தாண்டும்போது சம்பளத்தில் 27%, மற்றும் 

(ii) DA 50% ஐ தாண்டும்போது சம்பளத்தில் 30%. 


ஓய்வூதியம்: 

இரண்டு சட்டங்களும் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வூதியத்தைக் குறிப்பிடுகின்றன: 

(i) அவர்கள் முன்பு மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் கீழ் ஓய்வூதியம் பெறக்கூடிய பதவியை வகித்திருந்தால் அல்லது 

(ii) அவர்கள் அத்தகைய பதவியை வகிக்கவில்லை என்றால். 

இந்த இரண்டு பிரிவுகளின் கீழும் நீதிபதிகளுக்கான ஓய்வூதியத்தை திருத்த மசோதா முயல்கிறது. 

மேலும், இந்த நீதிபதிகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதியத்தின் உச்சவரம்பையும் இது திருத்துகிறது (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்). 


அட்டவணை 3: நீதிபதிகளின் அதிகபட்ச ஓய்வூதியம் (ஆண்டுக்கு) 


பதவி (Designation)

தற்போது (ரூ.) Present (Rs)

முன்மொழியப்பட்டது (ரூ.) Proposed (Rs)

இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India)

6,00,000

16,80,000

உச்ச நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of the Supreme Court)

5,40,000

15,00,000

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (Chief Justice of High Court)

5,40,000

15,00,000

உயர் நீதிமன்றத்தின் மற்ற நீதிபதிகள் (Other Judges of High Court)

4,80,000

13,50,000


ஆதாரங்கள் : 

உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958; உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017...


நன்றி: 

https://prsindia.org/billtrack/the-high-court-and-the-supreme-court-judges-salaries-and-conditions-of-service-amendment-bill-2017




உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2021

நவம்பர் 30, 2021 அன்று மக்களவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜுவால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

மசோதா திருத்தங்கள் : 

(i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954, மற்றும் 

(ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் சம்பளம் மற்றும் நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன. 

இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணி. ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தின் கூடுதல் அளவு சட்டங்களின் கீழ், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. 

குறிப்பிட்ட அளவுகோலின்படி குறிப்பிட்ட வயதை அடையும் போது, ​​கூடுதல் அளவு ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. இந்த அளவுகோலில் ஐந்து வயது அடைப்புக்குறிகள் உள்ளன (குறைந்தபட்ச வயது 80, 85, 90, 95 மற்றும் 100 ஆண்டுகள்), 

மேலும் கூடுதல் அளவு வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது (ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் 20% முதல் 100% வரை). 

சம்பந்தப்பட்ட வயது வரம்புக்குட்பட்ட குறைந்தபட்ச வயதை நிறைவு செய்யும் மாதத்தின் முதல் நாளிலிருந்து ஒரு நபர் கூடுதல் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்திற்கு உரிமையாளராக இருப்பார் என்பதை மசோதா தெளிவுபடுத்துகிறது.


நன்றி: 

https://prsindia.org/billtrack/the-high-court-and-supreme-court-judges-salaries-and-conditions-of-service-amendment-bill-2021



>>> இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனம் மற்றும் தகுதி...


1950 முதல் 2022 வரை உள்ள அனைத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் தரவிறக்கம் செய்ய இணையதள இணைப்பு (Website link to download all Supreme Court Judgements from 1950 to 2022)...

 


1950 முதல் 2022 வரை உள்ள அனைத்து உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் கீழ்க்கண்ட இணையதளத்தின் மூலம்   பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


http://www.liiofindia.org/in/cases/cen/INSC/


வாட்ஸ் அப் உருவான தன்னம்பிக்கை வரலாறு (The Self-Confidence History that formed WhatsApp)...



>>> வாட்ஸ் அப் உருவான தன்னம்பிக்கை வரலாறு (The Self-Confidence History that formed WhatsApp)...

இன்றைய (20-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 20, 2022




பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்குவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பரணி : புத்துணர்ச்சியான நாள்.


கிருத்திகை : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 20, 2022




புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நுட்பமான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.


ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 20, 2022




உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மூலம் வருவாய் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். திருப்திகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.


திருவாதிரை : மேன்மை உண்டாகும்.


புனர்பூசம் : தனவரவு மேம்படும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 20, 2022




உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறு தொழில் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். மாறுபட்ட சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் வெற்றி அடைவீர்கள். வசதி மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : முயற்சிகள் ஈடேறும்.


ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 20, 2022




வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் பொறுமையை கையாளுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



மகம் : வாய்ப்புகள் கைகூடும்.


பூரம் : மாற்றம் உண்டாகும்.


உத்திரம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 20, 2022




சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றத்தை அடைய முடியும். புதிய முயற்சிகளில் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மன உறுதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.


அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.


சித்திரை :  விவாதங்களை தவிர்க்கவும். 

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 20, 2022




உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் ஓரளவு குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : முதலீடுகள் மேம்படும்.


விசாகம் : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 20, 2022




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.  குழந்தைகளின் மூலம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 20, 2022




இழுபறியான தனவரவு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மதிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


 

மூலம் : வரவு கிடைக்கும்.


பூராடம் : நெருக்கடிகள் குறையும்.


உத்திராடம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 20, 2022




வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். ஆசை நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


திருவோணம் : இன்னல்கள் குறையும்.


அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 20, 2022




உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்களும், அலைச்சலும் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். அலைச்சலால் ஆதாயம் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : நிதானம் வேண்டும்.


சதயம் : அனுபவம் ஏற்படும்.


பூரட்டாதி : கவனம் வேண்டும். 

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 20, 2022




மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : கற்பனைகள் மேம்படும்.


உத்திரட்டாதி : லாபகரமான நாள்.


ரேவதி : பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...