கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர் கற்றல் அடைவுநிலைத் (Periodical Assessment Test) தேர்வு - 6-8 வகுப்புகள் - வினாத்தாள் & மதிப்பீடு படிவங்கள் (Standard 6-8 - Question Paper & Assessment Forms)...

 


>>> மாணவர் கற்றல் அடைவுநிலைத் (Periodical Assessment Test) தேர்வு - 6-8 வகுப்புகள் - வினாத்தாள் & மதிப்பீடு படிவங்கள் (Standard 6-8 - Question Paper & Assessment Forms)...

இன்றைய (10-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 10, 2022




குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பரணி : வரவு மேம்படும். 


கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 10, 2022




எந்தவொரு செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : புரிதல் மேம்படும். 


ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 10, 2022




நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. செலவுகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : வரவு மேம்படும்.  


திருவாதிரை : புரிதல் உண்டாகும். 


புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

மார்ச் 10, 2022




உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உதவி கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 


பூசம் : லாபம் மேம்படும். 


ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 10, 2022




அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடந்த கால இனிய அனுபவங்களை சிந்தித்து பார்த்து மனம் மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்



மகம் : சிந்தனைகள் மேம்படும்.


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

மார்ச் 10, 2022




சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 


அஸ்தம் : உதவி கிடைக்கும். 


சித்திரை : ஈர்ப்பு அதிகரிக்கும். 

---------------------------------------





துலாம்

மார்ச் 10, 2022




கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.  பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும். 


சுவாதி : விவாதங்களை தவிர்க்கவும். 


விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 10, 2022




பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க தேவையான  உதவி கிடைக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் ஆதரவு பெருகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : உதவி கிடைக்கும். 


அனுஷம் : நெருக்கடியான  நாள். 


கேட்டை :  நிதானம் வேண்டும்.

---------------------------------------





தனுசு

மார்ச் 10, 2022




கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : இன்னல்கள் குறையும்.


பூராடம் : திருப்தி உண்டாகும்.


உத்திராடம் : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------





மகரம்

மார்ச் 10, 2022




உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும். 


திருவோணம் : குழப்பங்கள் அகலும். 


அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

மார்ச் 10, 2022




தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேம்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி  சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்துடன் செயல்படுவதை காட்டிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. முயற்சிகள் மேம்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : அபிவிருத்தியான நாள். 


சதயம் : மாற்றம் பிறக்கும். 


பூரட்டாதி : விவேகம் வேண்டும்.

---------------------------------------





மீனம்

மார்ச் 10, 2022




ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுவன்மையின் மூலம் காரியசித்தி உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உறுதுணையாக செயல்படுவார்கள். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


 

பூரட்டாதி : முன்னேற்றமான நாள். 


உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். 


ரேவதி : தன்னம்பிக்கையான நாள். 

---------------------------------------



தொடக்கக்கல்வித் துறை - மண்டல ஆய்வுக் கூட்டம் - பள்ளி ஆய்வுப் படிவம் (DEE - Zonal Review Meeting - School Inspection Format)...



>>> தொடக்கக்கல்வித் துறை - மண்டல ஆய்வுக் கூட்டம் - பள்ளி ஆய்வுப் படிவம் (DEE - Zonal Review Meeting - School Inspection Format)...


2022-2023 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 18-03-2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது (Budget of the Tamil Nadu Government for the financial year 2022-2023 is to be submitted on 18-03-2022)...

 2022-2023 நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 18-03-2022 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது (Budget of the Tamil Nadu Government for the financial year 2022-2023 is to be submitted on 18-03-2022)...



6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு - அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...



 * 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் தேர்வு நடத்தப்படும்


*அடுத்த ஆண்டுகளில் இருந்து வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு (Tamil Reading Practice Guide) - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சிறப்பான தமிழ் வாசித்தல் திறனை பெறுவதற்கான கையேடு...



>>> தமிழ் வாசிப்புப் பயிற்சிக் கையேடு (Tamil Reading Practice Guide) - 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள  மாணவர்கள் சிறப்பான தமிழ் வாசித்தல் திறனை பெறுவதற்கான கையேடு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்றைய (09-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மார்ச் 09, 2022




வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும்.  கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மையை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அஸ்வினி : ஆதாயகரமான நாள். 


பரணி : மகிழ்ச்சி உண்டாகும். 


கிருத்திகை : சேமிப்பு மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

மார்ச் 09, 2022




வியாபார பணிகளில் உள்ள மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் நேரிடும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : வெற்றிகரமான நாள். 


ரோகிணி : லட்சியம் பிறக்கும்.


மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.

---------------------------------------





மிதுனம்

மார்ச் 09, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வரவுக்கு ஏற்ப செலவு உண்டாகும். புதிய நபர்களின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மதிப்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் 



மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


திருவாதிரை : இழுபறிகள் குறையும்.


புனர்பூசம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------





கடகம்

மார்ச் 09, 2022




மூத்த சகோதரர் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

மார்ச் 09, 2022




தாய்மாமன் வழியில் இருந்துவந்த மனவருத்தம் குறையும். உத்தியோக பயிற்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். புதிய முதலீடுகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


 

மகம் : சிந்தனைகள் மேம்படும். 


பூரம் : தடைகள் குறையும். 


உத்திரம் : மகிழ்ச்சியான நாள். 

---------------------------------------





கன்னி

மார்ச் 09, 2022




விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் கௌரவப் பொறுப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் தொடர்பான  எண்ணங்கள் நிறைவேறும். புரிதல் நிறைந்த நாள்.


   

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



உத்திரம் : மேன்மையான நாள். 


அஸ்தம் : பொறுப்புகள் மேம்படும். 


சித்திரை : எண்ணங்கள் நிறைவேறும்.  

---------------------------------------





துலாம்

மார்ச் 09, 2022




வியாபார பணிகளில் கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


  

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.


சுவாதி : அனுசரித்து செல்லவும். 


விசாகம் : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------





விருச்சிகம்

மார்ச் 09, 2022




வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்களும், அறிமுகங்களும் கிடைக்கும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



விசாகம் : அறிமுகம் கிடைக்கும். 


அனுஷம் : ஆதரவான நாள். 


கேட்டை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------





தனுசு

மார்ச் 09, 2022




விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : முடிவு கிடைக்கும்.


பூராடம் : நெருக்கடியான நாள். 


உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





மகரம்

மார்ச் 09, 2022




நண்பர்களின் மத்தியில் எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். நிதானம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



உத்திராடம் : உதவி கிடைக்கும். 


திருவோணம் : லாபம் மேம்படும். 


அவிட்டம் : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------





கும்பம்

மார்ச் 09, 2022




மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய பயிற்சி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். ஒப்பந்தம் தொடர்பான பணிகள் விரைவில் நிறைவுபெறும்.  சுகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அவிட்டம் : ஏற்ற, இறக்கமான நாள்.


சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


பூரட்டாதி : நிதானம் வேண்டும். 

---------------------------------------






மீனம்

மார்ச் 09, 2022




வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உள்ளுணர்வு சிந்தனைகளின் மூலம் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சிக்கல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



பூரட்டாதி : திறமைகள் மேம்படும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள். 


ரேவதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...