கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை



50க்கும் மேற்பட்ட சேவைகளை இனி WhatsApp மூலம் பெறலாம் - தமிழ்நாடு அரசு அசத்தல் நடவடிக்கை


‘வாட்ஸ்-அப்’ மூலம் 50 அத்தியாவசிய சேவைகள் : ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் - தமிழ்நாடு அரசு முடிவு


இதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் திறனை மேம்படுத்துதலில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, ‘வாட்ஸ்-அப்’ மூலம் அரசின் சேவைகளை செயல்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘மெட்டா’ நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசேஜ் பிரிவு இயக்குனர் ரவி கார்க் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ‘வாட்ஸ்-அப்’ ‘சாட்பாட்டினை’ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தலாம். அதன் மூலம் ‘வாட்ஸ்-அப்’பில் புகார்கள் அளிப்பது, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகளை கட்டுவது, மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்றவற்றை எளிதாக செய்ய முடியும். இதனால், அரசு சேவைகள் மக்களின் கையடக்கத்தில் நேரடியாக கிடைக்கின்றன. சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பல முறை செல்வதற்கான தேவையும் நீங்குகிறது.


முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெறலாம்.


இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், தமிழ்நாடு மின் அளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ், இணை முதன்மை செயல் அலுவலர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இணை இயக்குனர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அரசு சேவைக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட 50 சேவைகளை, இனி தமிழ்நாடு மக்கள் வாட்ஸ்-ஆப் மூலமே பெறும் வகையிலான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் மெட்டா நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.


தமிழ்நாடு அரசு, தன்னுடைய சேவைகளை மிக விரைவாக மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.


ஒரே ஒரு எண் மூலம் அணுகக்கூடிய இந்த சாட்பாட் உருவாக்கப்பட்டு, முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள தமிழக மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும் தமிழக அரசு வழங்கும் 50 அத்தியாவசிய சேவைகளை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் முதற்கட்டமாக இந்த சேவை வழங்கப்படும். அதிகபட்ச வார்த்தைகளை எழுதி மக்கள் தேவைகளை கேட்டறியலாம். அது மட்டுமல்லாமல் மின் மற்றும் குடிநீர் போன்ற கட்டணங்களை செலுத்துவது,வரி செலுத்துவது, மெட்ரோ டிக்கெட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே சாட்பாட்டின் மூலம் பெற முடியும்.


ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவிருக்கிறது.


மக்களை மையமாகக் கொண்ட, வெளிப்படையான மற்றும் உறுதியான நிர்வாகத்தை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தை வழிநடத்தும் தொலைநோக்குப் பார்வையை தமிழக அரசு கொண்டிருக்கிறது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.



தற்போது மெட்டா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தப் பயணத்தில் ஒரு முக்கியப் படியாகும். மாநிலத்தின் முக்கிய சேவைகளை, வாட்ஸ்அப்பின் எளிமை மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்துடன் இணைப்பதன் மூலம் தமிழக அரசு மக்களுக்கான சேவைகளை எளிமையாகக் கிடைப்பதுடன், அதில் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒருங்கே ஏற்படும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்கான மெட்டாவின் வணிகப் பிரிவு இயக்குநர் ரவி கார்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் என்பது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு சமூக வலைத்தளமாகும், மேலும் அதன் எளிமை மற்றும் பயன்பாட்டு வசதி அரசு சேவைகளுக்கு டிஜிட்டல் பயன்பாட்டை வழங்குவதற்கான சிறந்த தளமாக அமையும் என்றார்.


An agreement has been signed between the Tamil Nadu government and Meta, under which the people of Tamil Nadu will now be able to access 50 services, including payment of government service fees, through WhatsApp.


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழும் வகையில் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் - தமிழ்நாடு அரசு அறிக்கை - நாளிதழ் செய்தி 


Demands will be fulfilled successively for the benefit of government employees, teachers - Tamil Nadu Government Announcement 


சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் மகிழும் வகையில் அவர்களது கோரிக்கைகள் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி, ஒரு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வாங்கும் ஊதியத்தைச் சொல்லி ஆசிரியர்களுக்கு இவ்வளவு சம்பளமா எனக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களைக் கேவலப்படுத்தினார். அவருடைய ஆட்சியில் போராடிய அரசு ஊழியர், ஆசிரியர்களைப் பார்த்து, "அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா? என்று கேட்டு, ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கொச்சைப்படுத்தினார்.


ஆனால், இன்று ஆசிரியர், அரசு ஊழியர்களுக்காக இந்த அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறுகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 19 ஆண்டு முதல்வர் பொறுப்பில், 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கினார். அதனால், அவர்கள் இந்த அரசுக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிறார்கள்..


ஒரே ஒரு கையெழுத்தில் 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தனர். அதன்பின், சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்று உத்தரவை டிஸ்மிஸ் செய்ய வைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. திமுக அரசு வழங்கிய பல சலுகைகளை, அதிமுக அரசு ரத்து செய்தது. அனைத்தையும் 2006-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மீ்ணடும் நடைமுறைப்படுத்தினார்.


அரசு ஊழியர் நியமனத் தடைச் சட்டம், "டெஸ்மா" சட்டம் ரத்து செய்யப்பட்டன. 1996-ல், அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற தகுதியுள்ள பணிக்காலம் 33 ஆண்டுகள் என்பது 30 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இவ்வாறு பல சலுகைகள் வழங்கப்பட்டது.


அதேவழியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ல் பொறுப்பேற்றது முதல் அரசு ஊழியர் ஆசிரியர்களின் நலன்களைப் பரிவோடு கவனித்து சலுகைகள் வழங்கி வருகிறார். மகளிருக்கு மகப்பேறு விடுப்புக் காலம் 9 மாதம் என்பதை 12 மாதங்களாக உயர்த்தியுள்ளார். அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் என்பது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


கடும் நிதிநெருக்கடிகளுக்கு இடையிலும் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மத்திய அரசு உயர்த்திவரும் அகவிலைப்படிகளை அவ்வப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்து வருகிறார். அடுத்தடுத்து அவர்களுடைய கோரிக்கைகளும் அவர்கள் அனைவரும் மகிழும் வகையில் நிறைவேற்றப்படும்.

 

பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.


சமக்ர சிக்சா அபியான் திட்டத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு வழங்காத நிலையிலும் 32,500 ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்குரிய ஊதியங்களை உரிய நாளில் வழங்கி பாதுகாத்துள்ளது திமுக அரசு. பழனிசாமியின் நாடகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கடும் எதிர்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்படடுள்ளது.





Tamil Nadu Government Chief Whip Change...



தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா மாற்றம்...


Tamil Nadu Government Chief Whip Change...


சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசு தலைமைக் கொறடாவாக நியமனம்.


அரசு தலைமைக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் (Thiruvalluvar Award 2023 and Tamil Nadu Government Awards 2022)...



 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் (Thiruvalluvar Award 2023 and Tamil Nadu Government Awards 2022)...


2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இன்று (ஜனவரி 16ஆம் தேதி) வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு காலை 8.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் விருதுகளை வழங்கினார்.


விருது பெற்றோர்:


திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி


பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா


பெருந்தலைவர் காமராசர் விருது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்


மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி


பாவேந்தர் பாரதிதாசன் விருது - வாலாஜா வல்லவன்


திரு.வி.க விருது - நாமக்கல் பொ.வேல்சாமி


கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா


பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்


அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை


தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்.













தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்(Change in TamilNadu Cabinet)...



பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம்.


போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.






தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை(Tamilnadu Government Budget) வரும் ஆகஸ்ட்(August) 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு...

 தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு...


தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவதாக பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்ய உள்ளார்.



தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் நியாய விலை கடைகளில் ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு...

 




பொங்கல் பரிசு - ரூ.2500:

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகையை கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் -முதலமைச்சர் அறிவிப்பு.

பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படும்.

ஜனவரி 4ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கும்.

இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும்.

எந்த தேதியில் யார் வர வேண்டும் என டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்