கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு விவரத்தை EMIS வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் (Instructions for uploading SMC Reconstitution details to the EMIS website)...

 




>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறு கட்டமைப்பு விவரத்தை EMIS வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் (Instructions for uploading SMC Reconstitution details to the EMIS website)...


1.தலைமை ஆசிரியர், ஆசிரியர் தவிர மற்ற 18 நபர்கள் புகைப்படம்,, ஆதார் எண், படிப்பு, அலைபேசி எண், என்ன வேலை செய்கிறார், எந்த வகுப்பில் படிக்கும் குழந்தையின் தந்தை /தாய், 20 பேரும் சேர்ந்து எடுத்த குழு புகைப்படம்....... போன்ற விவரங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


2.பள்ளி மேலாண்மை குழு தலைவர் முழு விவரம், போட்டோ பதிவேற்றம் செய்து submit கொடுக்க வேண்டும்


3.பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் முழு விவரம், போட்டோ பதிவேற்றம் செய்து submit கொடுக்க வேண்டும்


4.தலைமை ஆசிரியர் முழு விவரமும் தானாக வருகிறது. எந்த ஆசிரியர் என்று செலக்ட் செய்தவுடன் ஆசிரியர் விவரமும் வருகிறது. Submit கொடுக்க வேண்டும்


5. பெற்றோர்கள் 12 பேரையும் ஒவ்வொருவராக முழு விவரமும் பதிவு செய்து போட்டோவை ஏற்றிய பின்னர்,


சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவரையும் முழு விவரம் பதிவு செய்து போட்டோ ஏற்றி


மொத்தம் 13 பேருக்கும் submit கொடுக்க வேண்டும்


6.உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இருவர் முழு விவரம், கல்வியாளர் ஒருவர் முழு விவரம் போட்டோ ஏற்றி submit கொடுக்க வேண்டும்


7.Final ல் மறு கட்டமைப்பு ஆரம்பித்த நாள்  20-03-2022 எனப் பதிவு செய்து


மறு கட்டமைப்பு நடந்த நாள் 23-4-2022 / 30-4-2022 /  7-5-2022  எனப் பதிவு செய்து


மறு கட்டமைப்பு நடந்த நாளில் எத்தனை பெற்றோர்கள் கலந்து கொண்டனர் என்ற விவரம் பதிவு செய்து


நிறைவாக 20 பேர் சேர்ந்து எடுத்து கொண்ட குழு போட்டோவை ஏற்றி submit கொடுக்க வேண்டும்.


நன்றி...



>>> SMC மறுகட்டமைப்பில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள SMC உறுப்பினர்கள் விவரங்களை EMIS Websiteல் பதிவேற்றம் செய்வதற்கு தேவைப்படும் விவரங்கள் - படிவம்...


இன்றைய (18-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

மே 18, 2022



தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் கைகூடும். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனுகூலமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.


பரணி : பயணங்கள் கைகூடும்.


கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

மே 18, 2022



பயணங்களின் போது நிதானம் வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை கவனத்துடன் கேட்கவும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

மே 18, 2022



குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : செல்வாக்கு மேம்படும். 


திருவாதிரை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

மே 18, 2022



எண்ணங்களில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். தவறிப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


பூசம் : முடிவு கிடைக்கும்.


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

மே 18, 2022



கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சமூக பணிகளில் ஆதரவும், மதிப்பும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மகம் : வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். 


பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.


உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





கன்னி

மே 18, 2022



கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாசனை திரவியம் தொடர்பான பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : லாபம் உண்டாகும். 


அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.


சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

மே 18, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தற்பெருமை தொடர்பான விஷயங்களை குறைத்து கொள்வது நல்லது. உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : புதுமையான நாள்.


சுவாதி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


விசாகம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

மே 18, 2022



நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும். பழைய கடன் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஏற்கக்கூடாது என முடிவு எடுப்பீர்கள். எதிர்பாராத சில அறிமுகத்தின் மூலம் புதுவிதமான காண்ணோட்டம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




விசாகம் : ஆதரவு கிடைக்கும். 


அனுஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும். 


கேட்டை : புதுமையான நாள்.

---------------------------------------





தனுசு

மே 18, 2022



வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். சமூகம் தொடர்பான பணிகளில் சூழ்நிலைகளை அறிந்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் பதற்றமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : சிந்தனைகள் நீங்கும்.


பூராடம் : பொறுமை வேண்டும்.


உத்திராடம் : பதற்றமின்றி செயல்படவும்.

---------------------------------------





மகரம்

மே 18, 2022



வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.


திருவோணம் : ஆதரவு கிடைக்கும். 


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

மே 18, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் புதிய மாற்றங்களை உருவாக்குவீர்கள். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள். 


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

மே 18, 2022



எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். உறுதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




பூரட்டாதி : நெருக்கடியான நாள்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும். 


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


MGNREGA திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான பணி - 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 786, நாள்: 16-05-2022 (Unique work for the Differently Abled under the MGNREGA scheme - 4 hours of work can earn full pay - Government of Tamil Nadu)...



>>> MGNREGA திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவமான பணி - 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 786, நாள்: 16-05-2022 (Unique work for the Differently Abled under the MGNREGA scheme - 4 hours of work can earn full pay - Government of Tamil Nadu)...


 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும்.


சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் - தமிழ்நாடு அரசு...


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றுவோருக்க அதிகபட்சமாக ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.


இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும். சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம்.


மாற்றுத்திறனாளிகளுக்கு 3 கி.மீ தூரத்திற்குள் வேலை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் வங்கிக்கணக்கில் ஊதியம் செலுத்தப்படும். வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு நீல நிற அட்டை வழங்கப்படும்.


தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான செயல்பாட்டினை மத்திய அரசு பாராட்டியதோடு இதர பிற மாநிலங்களும் பின்பற்ற செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST) பிரிவினருக்கான 10402 பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்ப அரசாணை (நிலை) எண்: 32, நாள்: 20-04-2022 வெளியீடு (G.O. (Ms) No: 32, Dated: 20-04-2022 - Issued to fill the 10402 backlog vacancies for Scheduled Caste / Scheduled Tribal (SC / ST) section through Special Recruitment Camp)...



>>> ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC / ST) பிரிவினருக்கான 10402 பின்னடைவுப் பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்ப அரசாணை (நிலை) எண்: 32, நாள்: 20-04-2022 வெளியீடு (G.O. (Ms) No: 32, Dated: 20-04-2022 - Issued to fill the 10402 backlog vacancies for Scheduled Caste / Scheduled Tribal (SC / ST) section through Special Recruitment Camp)...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கை செய்தி (Press Release of the Teachers'Recruitment Board regarding the release of the selection list for the Polytechnic Lecturer Examination)...



>>> பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பத்திரிக்கை செய்தி (Press Release of the Teachers'Recruitment Board regarding the release of the selection list for the Polytechnic Lecturer Examination)...


01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education seeking details of Post Graduate Teachers retiring from 01.06.2022 to 31.12.2023)...

 


>>> 01.06.2022 முதல் 31.12.2023 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Joint Director of School Education seeking details of Post Graduate Teachers retiring from 01.06.2022 to 31.12.2023)...


அரசுப் பணியாளர்களின் இருதுணை மணம் - துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூடுதலாக குற்றவியல் வழக்கு பதிவு செய்தல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 30331/அ1/இ4/2022, நாள்.02.05.2022 மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அரசு கடிதம் எண். 29620/ஏ1/2019-03, நாள்: 13.04.2022 (Bigamous marriage of Public servants - In addition to departmental disciplinary action, criminal case registration - Tamil Nadu Joint Director of School Education (Staff) Proceedings 30331 / A1 / E4 / 2022, Dated: 02.05.2022 and Department of Human Resource Management Government Letter No. 29620 / A1 / 2019-03, Dated: 13.04.2022)...



>>>   அரசுப் பணியாளர்களின் இருதுணை மணம் - துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன் கூடுதலாக குற்றவியல் வழக்கு பதிவு செய்தல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண். 30331/அ1/இ4/2022, நாள்.02.05.2022 மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அரசு கடிதம் எண். 29620/ஏ1/2019-03, நாள்: 13.04.2022 (Bigamous marriage of Public servants - In addition to departmental disciplinary action, criminal case registration - Tamil Nadu Joint Director of School Education (Staff) Proceedings 30331 / A1 / E4 / 2022, Dated: 02.05.2022 and Department of Human Resource Management Government Letter No. 29620 / A1 / 2019-03, Dated: 13.04.2022)... 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Disciplinary action against panchayat union middle school teacher engaged in political party work

அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை... அரசியல் கட்சிப் பணியில் ஈடுபட்ட சேலம் அரியா...