கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான வருகையினை கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் (Attendance Registration Procedures for Resource Persons and Participants in Ennum Ezhuthum Training)...
எண்ணும் எழுத்தும் பயிற்சி செயலிவழியாக எவ்வாறு வருகை பதிவு மேற்கொள்வது...?
1.TNSED APP(EMIS APP) update செய்யப்பட வேண்டும்.
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
2. கருத்தாளர்கள் முதலில் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.
செயலியை 8 இலக்க username password கொண்டு login செய்யப்பட வேண்டும்.
Training Attendance பகுதியை select செய்து I am Trainer என்பதை தேர்ந்தெடுத்தால் 3 வினாக்கள் வரும்.
1.Training type என்பதற்கு எண்ணும் எழுத்தும் என்றும்
2. Udise code of location என்பதற்கு பயிற்சி மையம் நடைபெறும் UDISE CODE பதிவு செய்ய வேண்டும்
3. Training time பதிவு செய்து save செய்ய வேண்டும்.
பதிவு செய்தபின் UNIQUE CODE வரும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த UNIQUE CODE ஐ பங்கேற்பாளர்கள் தங்கள் வருகைப் பதிவில் குறிப்பிட வேண்டும்.
பங்கேற்பாளர்கள் வருகைப் பதிவு
1. TNSEDசெயலியை update செய்ய வேண்டும்.
2. தங்கள் 8 இலக்க username and password மூலமாக Login செய்ய வேண்டும்.
3. Training Attendance ஐ select செய்து
I am attending training என பதிவு செய்ய வேண்டும்
4. கருத்தாளர் மூலம் வழங்கப்பட்ட UNIQUE CODE உள்ளீடு செய்ய வேண்டும்.
வருகை பதிவு நிறைவடைந்தது.
விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம் - தட்டிக் கேட்ட தனியார் நிறுவன ஊழியரை தாக்கிய காவலர் கைது (School vehicle caused the accident - Police arrested for assaulting a private company employee who asked)...
>>> Traffic Police hit Swiggy Delivery boy at Fun Mall Signal in Coimbatore (Video)...
விபத்தை ஏற்படுத்திய பள்ளி வாகனம்;தட்டிக் கேட்ட ஸ்விக்கி ஊழியரை தாக்கிய காவலர் கைது...
கோவையின் பீளமேட்டில் உள்ள ஃபன்மால்(FUN MALL) அருகே,ஸ்விகியில் உணவு டெலிவிரி செய்யும் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்கும் வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Coimbatore: Swiggy delivery boy attacked by policeman after he allegedly tried to stop a van that knocked down a woman
A policeman attached to the traffic wing of the Coimbatore City Police was caught on camera slapping a Swiggy delivery partner after he allegedly tried to stop a school van that knocked down a pedestrian woman. It happened at a busy traffic junction on Avinashi Road on Friday, visuals of which went viral on social media.
இதனையடுத்து,இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஸ்விக்கி ஊழியர் மோகனசுந்தரம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
"நான் ஒரு பட்டதாரி,எனக்கு பிசினஸ் செய்ய விருப்பம்.எனவே ஸ்விக்கியில் வேலை பார்த்துக் கொண்டே சுய தொழில் செய்து வருகிறேன்.மேலும்,சுய தொழிலால் ஏற்பட்ட கடனை உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே அடைத்து வருகிறேன்.
இந்த சூழலில்,நேஷனல் மாடல் பள்ளி வாகனம் ஒன்று ஃபன்மால் அருகே ஒரு பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதன்பின்னர்,நான் அந்த வண்டியை நிறுத்த முயன்று நியாயம் கேட்டேன்.
ஆனால்,உடனே அங்கிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் என்னை அடித்து,அதனை விசாரிக்க நாங்கள் இருக்கிறோம், நீ யார்?,மேலும் அந்த பள்ளி வாகனம் யாருடையது என தெரியுமா? என்று கேட்டு,சம்மந்தப்பட்ட பள்ளி வாகனத்தை அனுப்பி வைத்து விட்டு,என் செல்போன்,ஹெட்போன் உள்ளிட்டவற்றை பிடிங்கி சென்று விட்டார்.எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இந்நிலையில்,உணவு டெலிவரி செய்யும் ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவல்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும்,காவலர் சதீஸ் கைது செய்யப்பட்ட நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key
3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...