கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (05-08-2022) Wordle Answer...

                             

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (05-08-2022) Wordle Answer: BUGGY









இன்றைய (05-08-2022) ராசி பலன்கள் (Rasi Palan), நட்சத்திர பலன்கள் (Today's (05-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...

 



மேஷம்

ஆகஸ்ட் 05, 2022



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு மாறுபட்ட முறையில் தீர்வு காண்பீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மகிழ்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும். 


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 05, 2022



இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.


ரோகிணி : மாற்றம் பிறக்கும். 


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 05, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான லாபம் உண்டாகும். நுட்பமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மிருகசீரிஷம் : புத்துணர்ச்சி ஏற்படும்.


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.


புனர்பூசம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 05, 2022



குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சோதனை விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




புனர்பூசம் : மேன்மையான நாள்.


பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 05, 2022



தன்னம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




மகம் : முடிவு எடுப்பீர்கள். 


பூரம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 05, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார பணிகளில் புதிய முயற்சிகள் கைகூடும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்னல்கள் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திரம் : குழப்பம் குறையும்.


அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.


சித்திரை : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 05, 2022



உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் காலதாமதமாக நிறைவேறும். அறிமுகமில்லாத புதிய நபர்களுடன் அளவுடன் பழகுவது நல்லது. அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். 


சுவாதி : மாற்றம் உண்டாகும்.


விசாகம் : காலதாமதமான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 05, 2022



எதிர்பார்த்த சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும்.  வியாபார பணிகளில் புதிய முதலீடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். வாகன பயணங்களில் விவேகம் அவசியமாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.  


அனுஷம் : கவனத்துடன் செயல்படவும்.


கேட்டை : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 05, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் திருப்தியான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடும், முன்னேற்றமும் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




மூலம் : சிந்தனைகள் உண்டாகும். 


பூராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------






மகரம்

ஆகஸ்ட் 05, 2022



வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


திருவோணம் : ஒத்துழைப்பு மேம்படும். 


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 05, 2022



எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இழுபறியான சில விஷயங்களுக்கு கலந்தாலோசித்து முடிவினை எடுப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். திறமைகளை வெளிப்படுத்தி புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


சதயம் : மகிழ்ச்சி ஏற்படும்.


பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 05, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய உணவினை தவிர்ப்பது நல்லது. பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


உத்திரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும். 


ரேவதி : ஆர்வமின்மை ஏற்படும்.

---------------------------------------


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.08.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நாண் உடைமை


குறள் : 1014

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்

பிணிஅன்றோ பீடு நடை


பொருள்:

நடந்த தவறு காரணமாகத் தமக்குள் வருந்துகிற நாணம் எனும் உணர்வு, பெரியவர்களுக்கு அணிகலன் ஆக விளங்கும் அந்த அணிகலன் இல்லாமல் என்னதான் பெருமிதமாக நடைபோட்டாலும், அந்த நடையை ஒரு நோய்க்கு ஒப்பானதாகவே கருத முடியும்.


பழமொழி :

Feed by measure and defy the physician.


அளவறிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


எல்லோருமே வெற்றியை விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே அதற்காக உழைக்கின்றனர்


-சிசரோ



பொது அறிவு :


1. ஓர் உடலின் வேதிச் செயல்களை செய்வது எது ? 


என்சைம் . 


2. கண்ணிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு எது? 


ஆப்டிக் நரம்பு.


English words & meanings :



ஆரோக்ய வாழ்வு :


ஆரஞ்சு மற்றும் லெமன் போன்ற பழங்களில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது சிறுநீரக கற்களை நீக்க உதவுகிறது. கால்சியத்துடன் பிணைந்து கால்சியம் கற்கள் உருவாகுவதை தடுக்கிறது. இது திசு சேதத்தை தடுக்கிறது. இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


NMMS Q 40:


ஏறுவரிசையில் அமைக்க: -5, 0, 2, 4, -6, 10, -10. 


விடை: -10< -6 <-5 <0 <2 <4 <10


ஆகஸ்ட்  05


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங்  அவர்களின் பிறந்தநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930 – ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. 


நீதிக்கதை


தைரியம்


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தை திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.


திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது. பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரசசபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.


பிச்சைக்காரன் கலங்கவில்லை கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார். அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது.


ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக்காரனை விடுவித்தான். தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.


இன்றைய செய்திகள்


05.08.22


⛰தமிழகத்தில் நடப்பு ஆண்டு பயிர்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ரூ.2,057.25 கோடி நிதியை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


⛰கனமழை எச்சரிக்கை: மீட்புக் குழுக்கள், முகாம்களை தயார் நிலையில் வைத்திட கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.


⛰கோவை, நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


⛰தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம்: முதல்வர் பெருமிதம்.


⛰இங்கிலாந்து அரசியின் பசுமை நிழற்குடை (குயின்ஸ் கனோபி) விருது வழங்கப்பட்டதன் மூலம் சர்வதேச அளவில் கோத்தகிரி லாங்வுட் சோலை புகழ்மிக்க ஒன்றாக மாறியுள்ளது.


⛰முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் வெளியேறினால் மாணவர்களுக்கு முழுக் கட்டணத்தையும் திரும்பித்தர வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.


⛰தைவானை சுற்றியுள்ள கடற்பரப்புகளில் ஆவேசத்துடன் ராணுவப் பயிற்சி நடத்தி வரும் சீனா, அங்கு ஏவுகணைகளையும் வீசி வருவது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.


⛰காமன்வெல்த்தின் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெண்கலப்பதக்கம் வென்றார்.


⛰உலக ஜூனியர் தடகளத்தில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.


⛰காமன்வெல்த் போட்டி - ஒரே நாளில் 5 பதக்கங்களை குவித்த இந்தியா. பதக்கப் பட்டியலில் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.


Today's Headlines


⛰The Government of Tamil Nadu has issued a sum of Rs 2,057.25 crore to implement the current year crop insurance scheme in Tamil Nadu.


⛰Heavy Rain Warning: Chief Minister Stalin's instruction for collectors to prepare the rescue groups and camps.


⛰Heavy rains are expected in Coimbatore and Nilgiris today, the Chennai Meteorological Department said.


⛰Ramsar recognition for 6 more wetlands in Tamil Nadu: CM proud.


⛰Kotagiri Longwood Solai has become internationally popular with the UK king's Green Shypper (Queen's Kanobi) award.


⛰The UGC has ordered that if the first-year students leave the college by 31st October, the administration should refund the full fees to them.



⛰China, eagerly carrying out military training in the seas around Taiwan, has caused tension.


⛰India's Tejaswin Shankar won the bronze medal in the Commonwealth's men's height jump.


⛰India won the silver medal in a mixed series in the World Junior Athletics.


⛰Commonwealth Games - in a single day India won 5 medals and progressed to 7th place in medallist.




மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறும் மாநில அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி அரசாணை (நிலை) எண்: 44, நாள்: 29-07-2022 வெளியீடு (G.O. (Ms) No: 44, Dated: 29-07-2022 Issued to Provide 270 days Child Care Leave to State Government Employees / Teachers who have a child through Surrogate Mother)...



>>> மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறும் மாநில அரசு பணியாளர்கள் / ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கி அரசாணை (நிலை) எண்: 44, நாள்: 29-07-2022 வெளியீடு (G.O. (Ms) No: 44, Dated: 29-07-2022 Issued to Provide 270 days Child Care Leave to State Government Employees / Teachers who have a child through Surrogate Mother)...




ஒவ்வொரு ஆண்டும் கால தாமதமின்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படுதல் - செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதலைத் தவிர்த்தல் - அரசாணை (நிலை) எண்: 77, நாள்: 27-07-2022 வெளியீடு (Publication of Promotion Panel List in Proper time every year without any delay and Give proper promotions - Avoidance of promotion by artificially creating vacancies - G.O. (Ms) No: 77, Dated: 27-07-2022 )...



>>> ஒவ்வொரு ஆண்டும் கால தாமதமின்றி உரிய காலத்தில் தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டு முறையான பதவி உயர்வுகள் வழங்கப்படுதல் - செயற்கையாக காலிப் பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு வழங்குதலைத் தவிர்த்தல் - அரசாணை (நிலை) எண்: 77, நாள்: 27-07-2022 வெளியீடு (Publication of Promotion Panel List in Proper time every year without any delay and Give proper promotions - Avoidance of promotion by artificially creating vacancies - G.O. (Ms) No: 77, Dated: 27-07-2022 )...



ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி - தற்காலிக முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம் (TPF / GPF - Temporary Advance Format)...

 


>>> ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி - தற்காலிக முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம் (TPF / GPF - Temporary Advance Format)...






2022-23ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் (Guidelines) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding Notification of Guidelines to be followed based on Madras High Court Interim Order for Temporary filling up of vacant posts of Secondary Grade Teachers in the Academic year 2022-23) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 03-08-2022...

 


>>> 2022-23ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புதல் - சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் (Guidelines) தெரிவித்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education regarding Notification of Guidelines to be followed based on Madras High Court Interim Order for Temporary filling up of vacant posts of Secondary Grade Teachers in the Academic year 2022-23) ந.க.எண்: 34087/ சி2/ இ2/ 2022, நாள்: 03-08-2022...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...