கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IFHRMS-ல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து சமர்பித்தல் - மாவட்ட அளவில் எண்வகைப்பட்டியல் பெறுதல் சார்பான அறிவுரைகள் அனுப்புதல்-பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் (Preparation and Submission of Number Statement in IFHRMS - Dispatching instructions regarding receipt of Number Statement at district level - Proceedings of Financial Controller of School Education Commissionerate)...



>>> IFHRMS-ல் எண்வகைப்பட்டியல் தயார் செய்து சமர்பித்தல் - மாவட்ட அளவில் எண்வகைப்பட்டியல் பெறுதல் சார்பான அறிவுரைகள் அனுப்புதல்-பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் (Preparation and Submission of Number Statement in IFHRMS - Dispatching instructions regarding receipt of Number Statement at district level - Proceedings of Financial Controller of School Education Commissionerate)...







Today's (24-08-2022) Wordle Answer...

                                               

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (24-08-2022) Wordle Answer: NEEDY








 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 24.08.2022 - School Morning Prayer Activities...


   திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: உழவு


குறள் : 1035

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்.


பொருள்:

தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்


பழமொழி :

A stich in time saves nine.


விரிசலைச் சரி செய்துவிட்டால் உடைவது தப்பும். 


இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்


பொன்மொழி :


நாள்காட்டியின் இருவரி வாசகம் போல், நாளுக்கு நாள் புதிது புதிதாய் அர்த்தம் தந்துகொண்டே இருக்கிறது வாழ்க்கை!


பொது அறிவு :


1.இந்திய அறிவியற் கழகம் அமைந்துள்ள நகரம் எது ? 


 பெங்களூர். 


 2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?


 கங்கை.


English words & meanings :


Xenophobia - a fear or hatred of foreign people and cultures.. Noun. அந்நியர்கள் குறித்து அச்சம். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


தர்பூசணியின் மொத்த எடையில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து என்பதால் வெயிலுக்கு மிகவும் உகந்தது. விட்டமின் அதிகம்  நிறைந்துள்ள பழமாக இப்பழம் திகழ்கிறது.


NMMS Q 47:


12 ÷ 4 = 8 ; 9 ÷ 4 = 5 ; 7 ÷ 5 = 2 எனில் ÷ என்ற குறியீட்டின் அர்த்தம் என்ன?


 விடை: கழித்தல்


நீதிக்கதை


நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்


ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.


அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 


ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.


ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.


அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.


அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.


இன்றைய செய்திகள்


24.08.22


* செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் சனிக்கிழமை ஆகஸ்டு-27 அன்று பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


*நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.


*ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான உச்சவரம்பை அரசு ரூ.3 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


*தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - சுகாதாரத் துறை தகவல்.


*வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


* இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மரியாதை கொடுங்கள்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா, ரஷ்யாவை இடித்துரைத்த இந்தியா.


*ஒருநாள் போட்டி தரவரிசையை வெளியிட்டது ஐசிசி : 3-வது இடத்தில் இந்திய அணி.


*உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்றில் லக்‌ஷயா சென் வெற்றி.


*2023 உலகக் கோப்பை ஹாக்கி : மிகப்பெரிய அளவில் போட்டியை நடத்த தயாராகும் ஒடிசா அரசு.


Today's Headlines


*The Tamil Nadu government has announced that schools in 4 districts of Chennai, Kanchipuram, Tiruvallur and Chengalpattu will function on Saturday, August 27 to compensate for the holiday on July 28 for the Chess Olympiad.


 *Tamil Nadu has achieved a record in paddy production and cultivation area after last 20 years.


* The government has announced raising the annual income ceiling to Rs 3 lakh to benefit from the Adi Dravida Tribal People's Economic Development Scheme.


* 96.20% of people above 18 years of age in Tamil Nadu have received the first dose of vaccine - Health Department data.


* Farmers protested again in Delhi yesterday, demanding nine-point demand, including the proper implementation of Minimum Support Price (MSP) for agricultural product.  This caused a heavy traffic jam.


 *Respect sovereignty, territorial integrity: UN  India slams China, Russia in Security Council meeting


 *ICC publishes ODI Rankings:  Indian team at 3rd place


* World Badminton Championship: Lakshya Sen wins first round


* 2023 Hockey World Cup: Odisha government is gearing up to host the tournament on a grand scale.





இன்றைய (24-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 24, 2022



வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 




அஸ்வினி : அனுபவம் அதிகரிக்கும். 


பரணி : ஒத்துழைப்பு உண்டாகும். 


கிருத்திகை : மந்தமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 24, 2022



செயல்பாடுகளில் சுறுசுறுப்பும், துரிதமும் ஏற்படும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் மறைமுக உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ரகசிய செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். முன்னேற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




கிருத்திகை : துரிதம் ஏற்படும்.


ரோகிணி : அனுகூலம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள். 

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 24, 2022



வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும். 


திருவாதிரை : விவாதங்கள் நீங்கும். 


புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 24, 2022



நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்களை புரிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூசம் : அனுபவம் உண்டாகும். 


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 24, 2022



சிந்தனையின் போக்கில் வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மகம் : கற்பனைகள் உண்டாகும்.


பூரம் : நெருக்கடிகள் குறையும். 


உத்திரம் : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 24, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.


அஸ்தம் : பேச்சுவார்த்தைகள் கைகூடும். 


சித்திரை : மேன்மை உண்டாகும். 

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 24, 2022



உங்களின் திறமையின் மூலம் முன்னேற்றத்தையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : பாராட்டுகளை பெறுவீர்கள்.


சுவாதி : ஆதாயம் உண்டாகும். 


விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 24, 2022



பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். குழந்தைகள் பொறுப்புகளை அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.


அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.


கேட்டை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 24, 2022



பழைய நினைவுகளின் மூலம் குழப்பமும், சோர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். கூட்டாளிகளுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தேவையான ஆவணத்தையும், விவேகத்தையும் கடைபிடிக்கவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : சோர்வு ஏற்படும்.


பூராடம் : காலதாமதமான நாள். 


உத்திராடம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 24, 2022



வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். குழந்தைகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய சொத்துக்கள் மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : ஆதாயம் மேம்படும். 


திருவோணம் : முயற்சிகள் கைகூடும். 


அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 24, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். பேச்சுவன்மையின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். குழப்பம் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.


சதயம் : மாற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 24, 2022



வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் ஏற்பட்ட நேர்மறையான சிந்தனைகள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.


உத்திரட்டாதி : உத்வேகமான நாள்.


ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------





வழக்கொழிந்த 11 பதிவேடுகளை நீக்குதல் - 1, 2, 3ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தால் போதுமானது - 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தால் போதுமானது - பாடத்திட்டம் (Lesson Plan) மற்றும் பணிசெய்பதிவேடுகள் (Work done Register) பராமரிக்க தேவையில்லை - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 015715/ W1/ இ1/ 2021, நாள்: 23-08-2022 - இணைப்பு அரசாணை (நிலை) எண்: 154, நாள்: 15-11-2021 (Abolition of 11 Obsolete Registers - 1st, 2nd, 3rd Standard Teachers only need to maintain Notes of Lesson - 4th to 12th Standard Teachers also need to maintain Notes of Lesson only - Lesson Plan and Work done Register No need to maintain - Co- Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education No: 015715/ W1/ E1/ 2021, Dated: 23-08-2022 - Attachment: G.O. (Ms) No: 154, Dated: 15-11-2021)...



>>> வழக்கொழிந்த 11 பதிவேடுகளை நீக்குதல் - 1, 2, 3ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தால் போதுமானது - 4 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களும் பாடக்குறிப்பேடு (Notes of Lesson) மட்டும் பராமரித்தால் போதுமானது - பாடத்திட்டம் (Lesson Plan) மற்றும் பணிசெய்பதிவேடுகள் (Work done Register) பராமரிக்க தேவையில்லை -  பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 015715/ W1/ இ1/ 2021, நாள்: 23-08-2022 - இணைப்பு அரசாணை (நிலை) எண்: 154, நாள்: 15-11-2021...


11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 24.08.2022 அன்று வெளியீடு - தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல் மற்றும் விடைத்தாள் நகல் /மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்தி குறிப்பு (11th Standard Supplementary Results Released on 24.08.2022 – Download Result as Mark Sheet and Copy of Answer Sheet / Apply for Re-Total – Press Release from Directorate of Government Examinations)...



>>> 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் 24.08.2022 அன்று வெளியீடு - தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்தல்  மற்றும் விடைத்தாள் நகல் /மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்தி குறிப்பு (11th Standard Supplementary Results Released on 24.08.2022 – Download Result as Mark Sheet and Copy of Answer Sheet / Apply for Re-Total – Press Release from Directorate of Government Examinations)...



01-07-1986 முதல் 01-07-2022 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி சதவீதம் மற்றும் அவற்றிற்கான அரசாணைகள் விவரம் (Tamil Nadu Government Employees and Pensioners Dearness Allowance Percentage and Details of G.O.s - From 01-07-1986 to 01-07-2022)...

 


>>> 01-07-1986 முதல் 01-07-2022 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி சதவீதம் மற்றும் அவற்றிற்கான அரசாணைகள் விவரம் (Tamil Nadu Government Employees and Pensioners Dearness Allowance Percentage and Details of G.O.s - From 01-07-1986 to 01-07-2022)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...