கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

27-08-2022- அன்று வகுப்பு - 4,5க்கான குறுவளமைய (CRC) பயிற்சி கூட்டத்தில் நேர வாரியாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் விளக்கங்கள் (Guidelines)...


>>> 27-08-2022- அன்று வகுப்பு - 4,5க்கான குறுவளமைய (CRC) பயிற்சி கூட்டத்தில் நேர வாரியாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் விளக்கங்கள் (Guidelines)...





27-08-2022- அன்று வகுப்பு - 1,2,3க்கான குறுவளமைய (CRC) பயிற்சி கூட்டத்தில் நேர வாரியாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் விளக்கங்கள்...



>>> 27-08-2022- அன்று வகுப்பு - 1,2,3க்கான குறுவளமைய (CRC) பயிற்சி கூட்டத்தில் நேர வாரியாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் மற்றும் விளக்கங்கள்...






எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (ஆ) - Ennum Ezhuthum - Formative Assessment - FA(B) Modules 3 & 4 Opened...

 எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (ஆ) -  Ennum Ezhuthum - Formative Assessment - FA(B) Modules 3 & 4 Opened...





ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறுத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் (The free booster vaccine provided by the Union Government will stop on September 30 - Minister M. Subramanian informed)...

 ஒன்றிய அரசு வழங்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறுத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் (The free booster vaccine provided by the Union Government will stop on September 30 - Minister M. Subramanian informed)...






Today's (26-08-2022) Wordle Answer...

                                                 

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (26-08-2022) Wordle Answer: IRONY








 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 26.08.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: உழவு


குறள் : 1038

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்

நீரினும் நன்றதன் காப்பு.


பொருள் :

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.


பழமொழி :

The pen is mightier than the sword.


வாளினும் வலியது எழுதுகோல்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்


பொன்மொழி :


கண்களை மட்டும் கவருவது அழகு! அன்புடன் கூடிய நற்செயல்கள் மனதையும், ஆன்மாவையும் கவரும். - அல்க்ஸாண்டர் போவ்


பொது அறிவு :


1.இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன? 


அக்னி. 


2. தொழில் புரட்சி முதல் முதலில் ஆரம்பித்த நாடு எது? 


இங்கிலாந்து.


English words & meanings :


zo·og·ra·phy - The biological description of animals and their habitats. noun. வெவ்வேறு நில இயல் சூழ்நிலைகளில் வாழும் உயிரினங்கள் பற்றிய ஆய்வு. பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


சாத்துக்குடி


சாத்துக்குடியில் வைட்டமின் சி வளமான அளவில் நிறைந்திருப்பதோடு, இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், காப்பர், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகளும் அடங்கியுள்ளன.


ஆகஸ்ட்  26


அன்னை தெரேசா  அவர்களின் பிறந்தநாள்


அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும்[1] இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.  1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ஜ் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.



நீதிக்கதை


பழைய நிலைமையை மறந்து விடாதே!


முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.


இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.


அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.


அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.


இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.


மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.



இன்றைய செய்திகள்


26.08.22


* தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில், செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கார், வேன், ஜீப்களுக்கு 5 ரூபாயும், டிரக், பஸ், பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரையும் உயர்த்தப்படவுள்ளது.


* தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை.


* இந்தியாவிலேலய சிறந்த மலை/மலைக் காட்சிகள் இடத்திற்கான அவுட்லுக் டிராவேர் விருதை தமிழ்நாடு வென்றுள்ளது.


* FIFA விதியின் படி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும் 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் தடை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* உலக பேட்மிண்டன் போட்டி: 2வது சுற்றில் சாய்னா நேவால் தோல்வி


Today's Headlines


 * The Union Government has decided to increase customs duty in 28 customs booths in Tamil Nadu from September 1.  Accordingly, the toll for cars, vans, and jeeps will be increased by Rs 5 and for trucks, buses, and multi-axle vehicles up to Rs 150.


 * Tamil Nadu will receive heavy rain for 4 days - Meteorological Center warns.


 * Tamil Nadu won the Outlook Traverse Award for Best Hill/Mountain Views in India.


 * FIFA has ordered the postponement of the election which was scheduled to be held on the 28th by one week to facilitate the conduct of the election as per the rules.  India's ban is expected to be lifted soon.


 * World Badminton Championship: Saina Nehwal lost in the 2nd round.


இன்றைய (26-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 26, 2022



சகோதரர்களின் வழியில் ஆதரவு உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். மனை மீதான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : எண்ணங்கள் மேம்படும்.


பரணி : பயணங்கள் சாதகமாகும்.


கிருத்திகை : உதவி கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 26, 2022



சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் ஏற்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் உண்டாகும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : ஆதாயம் ஏற்படும். 


ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 26, 2022



உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பேச்சு திறமையின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும். 


திருவாதிரை : எண்ணங்கள் கைகூடும்.


புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 26, 2022



தன்னம்பிக்கையுடன் சில முடிவினை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். வாதங்களில் பொறுமையை கையாளுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




புனர்பூசம் : ஆதரவான நாள்.


பூசம் : திறமைகள் வெளிப்படும்.


ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 26, 2022



வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். கௌரவ பொறுப்புகளின் மூலம் மதிப்பு மேம்படும். புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சமூகம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மகம் : மேன்மையான நாள்.


பூரம் : மதிப்பு மேம்படும்.


உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும். 

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 26, 2022



தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


அஸ்தம் : ஒத்துழைப்பு ஏற்படும்.


சித்திரை : புதுமையான நாள்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 26, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். 


விசாகம் : செல்வாக்கு மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 26, 2022



தந்தையிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயகரமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனிவான பேச்சுக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும். 


அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.


கேட்டை : ஆதரவான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 26, 2022



கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். ஊக்கம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : சஞ்சலங்கள் நீங்கும்.


உத்திராடம் : காலதாமதம் உண்டாகும். 

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 26, 2022



மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கு  ஏற்ற பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 26, 2022



உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கை துணைவரின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


சதயம் : சிந்தனைகள் மேம்படும். 


பூரட்டாதி : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 26, 2022



தாய்வழி உறவினர்களின் மூலம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.  சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் ஆதரவுகளால் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




பூரட்டாதி : விவாதங்கள் நீங்கும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : ஆசைகள் பிறக்கும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...