கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

16.09.2022 அன்று காலை 09.30 முதல் 11.30 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Counselling for District Educational Officers on 16.09.2022 from 09.30 AM to 11.30 AM - Proceedings of Commissioner of School Education)...



>>> 16.09.2022 அன்று காலை 09.30 முதல் 11.30 மணி வரை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Counselling for District Educational Officers on 16.09.2022 from 09.30 AM to 11.30 AM - Proceedings of Commissioner of School Education)...




Today's (16-09-2022) Wordle Answer...

                                                                      

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (16-09-2022) Wordle Answer: PARER






 

இன்றைய (16-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 16, 2022



மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : எண்ணங்கள் உண்டாகும்.


பரணி : ஒற்றுமை அதிகரிக்கும். 


கிருத்திகை : உதவி கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 16, 2022



பெரியோர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படுவதற்கான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் தேவைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : நம்பிக்கை ஏற்படும். 


ரோகிணி : சுபச்செலவுகள் உண்டாகும். 


மிருகசீரிஷம் : தனவரவு கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 16, 2022



சமூகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விவாதங்களின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தகவல் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். குழப்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


திருவாதிரை : மாற்றம் உண்டாகும்.


புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 16, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். சமூக பணிகளில் நிலையான கொள்கைகளை பின்பற்றுவது மேன்மையை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். முன்கோபமின்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சூழ்நிலைக்கு ஏற்ப அறிவுத்திறனை வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




புனர்பூசம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.


பூசம் : லாபம் ஏற்படும்.


ஆயில்யம் : நம்பிக்கை மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 16, 2022



வியாபார பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




மகம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.


பூரம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திரம் : சோர்வு ஏற்படும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 16, 2022



கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புரிதல் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.


அஸ்தம் : புரிதல் ஏற்படும். 


சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 16, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் காலதாமதம் ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : மாற்றம் உண்டாகும்.


விசாகம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 16, 2022



கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். தொழில் சார்ந்த ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : புரிதல் உண்டாகும். 


அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும். 


கேட்டை :  சாதகமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 16, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த சில புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத சில இடமாற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். துன்பம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மூலம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


பூராடம் : சாதகமான நாள்.


உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 16, 2022



பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும். 


திருவோணம் : இழுபறிகள் குறையும்.


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 16, 2022



குழந்தைகளின் கல்வி தொடர்பான வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிதல் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். நிம்மதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : புரிதல் மேம்படும்.


சதயம் : சேமிப்பு குறையும். 


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 16, 2022



எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பொருளாதாரம் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவிலும், உடலளவிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.


ரேவதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...



>>> 10ஆம் வகுப்பு - கணிதம் (தமிழ் வழி) - வினா விடை வங்கி 2022-23 & அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாள் - செப்டம்பர் 2020 (10th Standard - Mathematics (Tamil Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020)...




10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...



>>> 10th Standard - Mathematics (English Medium) - Question Bank 2022-23 & GovernmentQuestion Paper - September 2020...




எண்ணும் எழுத்தும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி - அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Second Term Training for Elementary School Teachers - From 6th to 8th October - Proceedings of SCERT Director) ந.க.எண்: 2411/ ஈ2/ 2021, நாள்: 14-09-2022...



>>> எண்ணும் எழுத்தும் - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி - அக்டோபர் 6 முதல் 8 ஆம் தேதி வரை வழங்குதல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Second Term Training for Elementary School Teachers - From 6th to 8th October - Proceedings of SCERT Director) ந.க.எண்: 2411/ ஈ2/ 2021, நாள்: 14-09-2022...



காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம் - மதுரையில் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஊட்டிவிட்டார் (Start of breakfast program - After starting the program in Madurai, Chief Minister M.K.Stalin sat and had food with the students and fed the students)...



 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம் - மதுரையில் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்திய முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஊட்டிவிட்டார் (Start of breakfast program - After starting the program in Madurai, Chief Minister M.K.Stalin sat and had food with the students and fed the students)...


நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க காலை உணவு திட்டம்:


எத்தகைய நிதிச்சுமை இருந்தாலும் பசிச்சுமையை போக்க முடிவு எடுத்து காலை உணவு திட்டத்தை துவக்கியுள்ளோம்.






பசியோடு வரக்கூடிய ஏழை குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் முதலில் உணவு வழங்க உள்ளோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.


காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம்.


வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது.


பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

A request from Headmaster and Teachers for hairdressing stylists

 முடி திருத்தும் சிகை அலங்கார நிபுணர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோள்... 2019ஆம் ஆண்டு கடிதம்