கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Today's (01-10-2022) Wordle Answer...

                                                                                     

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (01-10-2022) Wordle Answer: LEAVE










 

இன்றைய (01-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

அக்டோபர் 01, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஏற்படும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.


பரணி : குழப்பம் உண்டாகும்.


கிருத்திகை : திருப்பம் ஏற்படும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 01, 2022



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். தனம் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும். 

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 01, 2022



மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணிச்சலாக முக்கிய முடிவினை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதற்கான சூழல் அமையும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : ஒத்துழைப்பான நாள்.


புனர்பூசம் : மறதி நீங்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 01, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நுட்பமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


ஆயில்யம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 01, 2022



மனதளவில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பணிகளில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனை சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். தாயின் உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மகம் : எண்ணங்கள் உண்டாகும்.


பூரம் : கவனத்துடன் செயல்படவும்.


உத்திரம் : புதுமையான நாள்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 01, 2022



உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளும், சிந்தனைகளும் ஏற்படும். எந்தவொரு செயல்பாட்டிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நவீன பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.


அஸ்தம் : சிந்தனைகள் ஏற்படும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 01, 2022



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் ஆதாயம் அடைவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : அனுசரித்து செல்லவும். 


சுவாதி : பயணங்கள் கைகூடும். 


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 01, 2022



கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செய்கின்ற முயற்சிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : மந்தத்தன்மை குறையும். 


கேட்டை : சிந்தனைகள் மேம்படும். 

---------------------------------------




தனுசு

அக்டோபர் 01, 2022



வியாபார பணிகளில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் சற்று பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


பூராடம் : ஆர்வம் அதிகரிக்கும். 


உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 01, 2022



உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




உத்திராடம் : ஒத்துழைப்பான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : லாபம் மேம்படும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 01, 2022



வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 




அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.


சதயம் : முன்னேற்றமான நாள்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 01, 2022



செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.  உத்தியோக பணிகளில் சக ஊழியர்களால் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8 


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : தெளிவு பிறக்கும். 


உத்திரட்டாதி : ஆதாயம் உண்டாகும். 


ரேவதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------


பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை (வாலாயம்) எண்: 379, நாள்: 30-09-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 379, Dated: 30-09-2022 Issued to Transfer 3 Joint Directors in School Education Department)...



>>> பள்ளிக் கல்வித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு மாறுதல் வழங்கி அரசாணை (வாலாயம்) எண்: 379, நாள்: 30-09-2022 வெளியீடு (G.O. (Provincial) No: 379, Dated: 30-09-2022 Issued to Transfer 3 Joint Directors in School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Transfer of 98 District Education Officers - Commissioner of School Education Proceedings) ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022...️



>>> 98 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பணியிட மாறுதல் - பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Transfer of 98 District Education Officers - Commissioner of School Education Proceedings) ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022...️






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விவரம் - அரசாணைகள் (நிலை) எண்: 171 மற்றும் 172, நாள்: 30-09-2022 மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022 (District Educational Officers Transfer / Promotion and New District Education Office Details - G.O. (Ms) No: 171 and 172, Dated: 30-09-2022 and Commissioner of School Education Proceedings No: 35272/ A1/ E1/ 2022, Date: 30-09-2022)...


>>> மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விவரம் - அரசாணைகள் (நிலை) எண்: 171 மற்றும் 172, நாள்: 30-09-2022 மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 35272/ அ1/ இ1/ 2022, நாள்: 30-09-2022 (District Educational Officers Transfer / Promotion and New District Education Office Details - G.O. (Ms) No: 171 and 172, Dated: 30-09-2022 and Commissioner of School Education Proceedings No: 35272/ A1/ E1/ 2022, Date: 30-09-2022)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் (SMC Meeting) - முதன்மைக் கல்வி அலுவலர் - தெளிவுரைகள் (School Management Committee Meeting - Chief Education Officer's Guidance)...



 பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் -  தெளிவுரைகள் - முதன்மைக் கல்வி அலுவலர் - கோவை மாவட்டம்....



 30ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு மறுக் கட்டமைப்புகள் நிகழ்த்தப்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும்  கூட்டம் கூட்டப்பட வேண்டும்.

  

இக்கூட்டத்தில் கடந்த இரண்டு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வகைப்படுத்தி தேவைகளுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி விவாதிக்கப்பட வேண்டும்


SMC - Parents App Update செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

user name : Mobile number

password : Smc@last 4 digit of the phone no.



இந்த மாதத்திற்கான தீர்மானத்தையும் இணைத்து பள்ளி மேலாண்மைக் குழு தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அவற்றை விளக்கமாக பேச வேண்டும்.



பள்ளி இடை நின்ற மாணவர்கள், பள்ளியில் சேராத மாணவர்கள், வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் சவால்கள், பள்ளி கட்டமைப்பு வசதிகள், இல்லம் தேடிக் கல்வி  செயல்பாடுகள்,  பள்ளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பு சார்ந்து கூட்டங்களில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.



பள்ளி பள்ளி மேலாண்மைக் குழு மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால் அவற்றினுடைய விவரத்தை புகைப்படத்துடன் வட்டாரத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் இவை மாநில அளவில் தயாரிக்கப்படும் கையேட்டில் பிரசுரிக்கப்பட வாய்ப்புள்ளது.



கிராம சபா கூட்டங்களில் கலந்து கொள்ளும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் புகைப்படங்களை எடுத்து வட்டார வளமையத்தின் வழியாக மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தவறாமல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்த்தப்பட்ட பள்ளிகளில் 20 உறுப்பினர்களின் விவரங்களை Emis ல் Update செய்திருக்க வேண்டும் செய்யாமல் உள்ளவர்கள் உடனடியாக அவற்றை Update செய்யவும்.



பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்கள் நடைபெறும் நாளில் தவறாமல், மறவாமல் Emis parents app இல் வருகை பதிவேட்டை அன்றைய தினமே பதிவிட வேண்டும்* பதிவிடாத தலைமை ஆசிரியர்கள் அது சார்ந்து இனிவரும் காலங்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க நேரிடும்.



வருகை பதிவை காலதாமதமாக பதிவிட்டால் அன்றைய நாளில் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் நீங்கள் பதிவிடும் நாளிலே கூட்டம் கூட்டப்பட்டதாக மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பட்டியலிடப்படும் ஆகையால் கூட்டம் தொடங்குவதில் முதல் நிகழ்வாக வருகை பதிவேட்டை பதிவிட வேண்டியது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அனைத்து ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உணர்ந்து செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது.



சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு நிகழ்வுகளை வீடியோ புகைப்படங்களாக அனுப்பவும் சிறப்பு தீர்மானங்கள் ஏதேனும் நிறைவேற்றி இருந்தால் அவற்றைச் சார்ந்த விவரத்தையும் நீங்கள் உடனுக்குடன் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை நமது மதிப்பிற்குரிய மாநிலத் திட்ட இயக்குநர் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி கவனிப்பதால் நமது மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



தற்பொழுது இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் வீடியோ லிங்க் இணைக்கப்பட்டுள்ளது அவற்றை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுவது.



அனைத்து பள்ளி மேலாண்மைக் குழுக்களிலும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை (ID Card) மற்றும் Letter pad தரமானதாக வாங்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும் ஒவ்வொரு கூட்டத்திலும் அனைத்து உறுப்பினர்களும் அடையாள அட்டை அணிந்து வருவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) குறித்த 14 தகவல்கள் (14 information about school management committee meeting)...



 அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும்...


1.   இன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

   

 2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.


4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.


5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username &password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.


  6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள  கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும் .


7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 2.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.


8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில்  தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.


9. அனைத்து செயல்பாடுகளுக்குமான காணொளி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி தலைமையாசிரியர்கள் பள்ளி மேம்பாட்டு திட்டத்தினை update செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


10. அனைத்து தலைமை ஆசிரியர்களும் TNSED Parents app ல் உறுப்பினர்களுடைய பெயர் பதிவை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுப்பினர்களுடைய பெயர்கள் விடுபட்டு இருந்தால் SCHOOL EMIS ல்  login செய்து SMC Reconstution சென்று பெயர்களை பதிவேற்றம் செய்திட கொள்ளப்படுகிறார்கள்.


11.TNSED parents app ல் login ஆகவில்லை என்றால் பள்ளி udise நம்பர் உடன் வட்டார வள மையத்திற்கு  மதியம் 2 மணிக்குள் தகவல் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.


12. ஒரே தொலைபேசி எண் இரண்டு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு  (தலைவர், தலைமை ஆசிரியர்) update செய்யப்பட்டிருந்தால்  username does not exist என்று வரும்.


13. மேற்கண்ட விவரங்களை உடன் சரி பார்த்திட அனைத்து அனைத்து அரசு வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


14. பள்ளி மேலாண்மை குழு கூட்ட நேரம் மாலை 4:30 முதல் 6:00 மணி வரை.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...