கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (27-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

அக்டோபர் 27, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் போட்டி அதிகரிக்கும். எந்தவொரு செயல்பாட்டிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில பொறுப்புகளால் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அஸ்வினி : போட்டி அதிகரிக்கும்.


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 27, 2022



நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 


ரோகிணி : பொறுமையுடன் செயல்படவும்.


மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 27, 2022



எதிர்பாராத உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவினை எடுப்பீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மிருகசீரிஷம் : உதவி கிடைக்கும்.


திருவாதிரை : வாய்ப்புகள் அமையும். 


புனர்பூசம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 27, 2022



உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலை பொருட்களின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான செலவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.


பூசம் : ஈர்ப்பு அதிகரிக்கும். 


ஆயில்யம் : மந்தமான நாள்.

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 27, 2022



வாகன பராமரிப்பு தொடர்பான விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பின் மூலம் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மகம் : விரயங்கள் உண்டாகும். 


பூரம் : பிரச்சனைகள் குறையும். 


உத்திரம் : அனுகூலமான நாள். 

---------------------------------------




கன்னி

அக்டோபர் 27, 2022



கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : புரிதல் ஏற்படும்.


அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும். 


சித்திரை : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 27, 2022



உடனிருப்பவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




சித்திரை : ஒத்துழைப்பு மேம்படும்.


சுவாதி : முன்னேற்றமான நாள்.


விசாகம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 27, 2022



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பரிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




விசாகம் : மந்தத்தன்மை குறையும்.


அனுஷம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


கேட்டை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------




தனுசு

அக்டோபர் 27, 2022



கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகளின் மூலம் புதுவிதமான சூழல் அமையும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக முடியும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : புதுவிதமான நாள்.


உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 27, 2022



மனதில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வேலை மாற்றம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும்.  அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 


திருவோணம் : முயற்சிகள் மேம்படும். 


அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 27, 2022



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சிந்தித்து செயல்படவும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.


சதயம் : ஆரோக்கியம் மேம்படும்.


பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மீனம்

அக்டோபர் 27, 2022



மனதில் புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், அங்கீகாரங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர் (People of Indian descent who are emerging as world leaders)...

  உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர் (People of Indian descent who are emerging as world leaders)...


உலக தலைவர்களாக வலம் வரும் இந்திய வம்சாவளியினர்



ரு காலத்தில் இந்தியாவை 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட இங்கிலாந்தின் பிரதமராக தேர்வாகி, இந்தியர்களை பெருமிதம் கொள்ள செய்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்.

அவர் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்திய வம்சாவளியினர் தலைமைப் பொறுப்பை ஏற்று இந்தியர்களுக்கு கவுரவம் சேர்த்துள்ளனர். இன, மொழி, மத வேறுபாடுகளை கடந்து அந்நாட்டு மக்களின் மனங்களை கவர்ந்து நாட்டின் தலைவராகியுள்ள அவர்கள் யார்? யார்? என்கிற விபரத்தை பார்ப்போம்.


 கமலா ஹாரீஸ்

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக கருதப்படும் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரீஸ். இவரது தாய் ஷியாமளா கோபாலன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்கா நாடு துளசேந்திரபுரத்தைச் சேர்ந்தவர். அமெரிக்க அரசியல் வரலாற்றில் பெண் ஒருவர் அடைந்த உச்சபட்ச வளர்ச்சியாக அந்நாட்டின் துணை அதிபர் பதவியை கமலா ஹாரீஸ் அலங்கரித்து வருகிறார். சிறந்த வழக்கறிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக வலம் வந்த கமலா ஹாரீஸ் தற்போது உலகின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக உள்ளார்.


பிரதிவிராஜ் சிங் ரூபன்

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொரீசியஸ் நாட்டு அரசியலில் இந்திய வம்சாவளியினருக்கு எப்போதும் முக்கிய பங்கு இருந்து வருகிறது. மொரீசியஸ் நாடு பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு குடியரசு ஆன பிறகு மொரீசியசின் முதல் அதிபராக பொறுப்பேற்றவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட வீராசாமி ரிங்காடோ. அதன் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் மொரீஷியஸ் அதிபர் ஆகி இருக்கிறார்கள். தற்போது அதிபராக உள்ள பிரதிவிராஜ் சிங் ரூபன், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ந்தேதி முதல் அந்த பதவியை வகித்து வருகிறார். கடந்த 1983ம் ஆண்டு முதல் சுமார் 40 வருடங்களாக மொரீசியஸ் நாட்டு அரசியலில் பயணித்து வருகிறார் பிரதிவி ராஜ் சிங் ரூபன்.


பிரவிந்த் ஜூகுநாத்

மொரீசியஸ் நாட்டின் அதிபர் மட்டும் அல்ல அந்நாட்டின் பிரதமரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான். மொரீசியஸ் நாட்டின் பிரதமராக கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் பிரவிந்த் குமார் ஜூகுநாத். மொரீசியஸ் நாட்டின் சிறந்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராக வலம் வரும் பிரவிந்த் ஜூகுநாத், புரட்சிகர சோசலிச இயக்கமான எம்.எஸ்.எம் கட்சியின் தலைவராக கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 30ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். 1987ம் ஆண்டு முதல் மொரீசியஸ் அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.


முகம்மது இர்பான் அலி

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானாவின் அதிபராக கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2ந்தேதி முதல் பதவி வகித்து வருகிறார். வங்கி அதிகாரியாக, சிறந்த பொருளாதார அறிஞராக அறியப்பட்ட முகம்மது இர்பான் அலி, தற்போது அந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக உயர்ந்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இர்பான் அலி, கயானா அரசியலில் தனித்துவம் மிக்க தலைவராக தற்போது வலம் வருகிறார்.


அன்டோனியோ கோஸ்டா

போர்ச்சுக்கல் நாட்டின் 119வது பிரதராக பதவி வகித்து வருகிறார் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ்டா கோஸ்டா. கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 26ந்தேதி முதல் கடந்த 7 ஆண்டுகளாக போர்ச்சுகல் பிரதமராக பதவி வகித்து வரும் அன்டோனியோ கோஸ்டாவின் தாத்தா கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர்.


சான் சாந்தோகி

தென் அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான சுரிநேமின் 9வது அதிபராக கடந்த 2020ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார் சான் சாந்தோகி. 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியே இல்லாமல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான சான் சாந்தோகி பின்னர் அரசியலில் களம் இறங்கி சுரிநேமின் அதிபராகவும் ஆனார்.


லியோ வராட்கர்

ஐயர்லாந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவியான தனைஸ்தேவாக உள்ளார் லியோ வராட்கர். துணை அதிபருக்கு நிகரான அந்த பதவியை கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வகித்து வருகிறார் லியோ வராட்கர். ஐயர்லாந்தின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராகவும் அவர் உள்ளார். லியோ வராட்கரின் தந்தை அசோக் மும்பையை பூர்வீகமாக கொண்டவர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை (Who have passed the Teacher Eligibility Test should be admitted to the Promotion Counselling for B.T.Assistants (Graduate Teachers) &/HeadMasters - Madras High Court Judgement) W.P.Nos.17895 and 19587 of 2022 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS - RESERVED ON W.P.No.19587 of 2022 : 05.08.2022 & W.P.No.17895 of 2022 : 29.08.2022 - DELIVERED ON:20.10.2022 - CORAM: THE HON'BLE MR. JUSTICE D.KRISHNAKUMAR - W.P.Nos.17895 & 19587 of 2022 and WMP.Nos.17235 &18884 of 2022)...


>>> பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை (Who have passed the Teacher Eligibility Test should be admitted to the Promotion Counselling for B.T.Assistants  (Graduate Teachers) &/HeadMasters - Madras High Court Judgement) W.P.Nos.17895 and 19587 of 2022 - IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS  - RESERVED ON  W.P.No.19587 of 2022 : 05.08.2022 & W.P.No.17895 of 2022 : 29.08.2022 - DELIVERED ON:20.10.2022 - CORAM: THE HON'BLE MR. JUSTICE D.KRISHNAKUMAR - W.P.Nos.17895 & 19587 of 2022 and WMP.Nos.17235 &18884 of 2022)...



>>> முழுமையான செய்தி...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அலுவலக நடைமுறை - பணிப்பங்கீடு - மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) - அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்குதல் - சென்னை 6 - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:014170 /அ1/ 2022, நாள் 26-10-2022 - இணைப்பு : பணிப்பகிர்வு ஆணை (OFFICE PROCEDURE - DISTRIBUTION OF WORK - DISTRICT EDUCATION OFFICE (ELEMENTARY EDUCATION) - ISSUANCE OF ORDER REGARDING DISTRIBUTION OF WORK TO OFFICE STAFF - CHENNAI 6 - TAMIL NADU DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS NO:014170 /A1/ 2022, DATED 26-10-2022 - ATTACHMENT : DISTRIBUTION OF WORK ORDER)...


>>>  அலுவலக நடைமுறை - பணிப்பங்கீடு - மாவட்ட கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி) - அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்குதல் - சென்னை 6 - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:014170 /அ1/ 2022, நாள் 26-10-2022 - இணைப்பு :  பணிப்பகிர்வு ஆணை (OFFICE PROCEDURE - DISTRIBUTION OF WORK - DISTRICT EDUCATION OFFICE (ELEMENTARY EDUCATION) - ISSUANCE OF ORDER REGARDING DISTRIBUTION OF WORK TO OFFICE STAFF - CHENNAI 6 - TAMIL NADU DIRECTOR OF ELEMENTARY EDUCATION PROCEEDINGS NO:014170 /A1/ 2022, DATED 26-10-2022 - ATTACHMENT : DISTRIBUTION OF WORK ORDER)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் (Only those who have passed the Teacher Eligibility Test should be admitted to the Promotion Counselling for B.T.Assistants (Graduate Teachers) - Madras High Court)...

>>> பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணை...



பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வில் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்...


📝 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்க வேண்டும்...


✒️தமிழக பள்ளிக்கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...











>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டார். அதன்படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



2022 ஜூலை 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுக்கு முன், தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்தக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பதவி உயர்விற்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.



இதை எதிர்த்து வனஜா, பிரபு உள்ளிட்ட 41 இடைநிலை ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சக்திவேல் என்ற ஆசிரியர் வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்குகள் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​பதவி உயர்வு ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில், "கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட தங்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.



ஆசிரியர் சக்திவேல் தரப்பில், "தகுதியில்லாத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.



மத்திய, மாநில அரசுகள் தரப்பில், "கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்" என வாதிடப்பட்டது.



அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வித் தகுதியைப் பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது, அவர்களும் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டு, கலந்தாய்வை தள்ளிவைத்ததை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.



தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கூடுதல் வாய்ப்பு? - நாளிதழ் செய்தி (Extra chance for teachers who don't qualify in TET? -Newspaper)...

 தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு கூடுதல் வாய்ப்பு? - நாளிதழ் செய்தி (Extra chance for teachers who don't qualify in TET? -Newspaper)...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...






Today's (26-10-2022) Wordle Answer...

                                                                                                              

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (26-10-2022) Wordle Answer: FLOUT












 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...