கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2022 - School Morning Prayer Activities...

 

>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.12.2022 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அன்புடைமை


குறள் : 76

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.


பொருள்:

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.


பழமொழி :

Who hath a good trade though all waters may wade.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு .


இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.


 2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்


பொன்மொழி :


படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. --எட்மண்ட் பர்க்



பொது அறிவு :


1. பாலாறு எந்த இடத்தில் உற்பத்தியாகிறது? 


சிந்தாமணி. 


2. களிமண்ணை போல் கையால் பிசையக்கூடிய உலோகம் எது? 


சுத்த தங்கம்.


English words & meanings :


creak -squeak, high pitched sound. both noun and verb. சுண்டெலி போல் கீச்சிடு. பெயர்ச் சொல், வினைச் சொல். creek - stream of water. சிறிய உப நதி. noun. பெயர்ச் சொல்.


ஆரோக்ய வாழ்வு :


ஒரு வேகவைத்த முட்டையில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு உள்ளது. இது உங்கள் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் வேகவைத்த முட்டை உங்கள் உடலை குளிர்காலத்திற்கு ஏற்றதாக ஆக்குகிறது. வேகவைத்த முட்டையில் நல்ல கொழுப்பு உள்ளது. இதை மிதமாக எடுத்துக் கொண்டால், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

 

NMMS Q


A26, B25, .........., ___?____. a) Z1. b) Y1. c) Z. d) Z26 


 விடை: Z1 


டிசம்பர் 06


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்


பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]


நீதிக்கதை


குருவி கொடுத்த விதை


ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 


பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 


சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 


அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 


திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 


அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 


மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 


இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 


அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 


அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 


பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 


மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 


நீதி :

பொறாமை குணம் இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள் 


06.12.22


* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று சென்னை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


* காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 8-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


* ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


* வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.


* பஞ்சாபில் வானில் பறக்க ஆசைப்பட்டு விமான மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் விவசாயி.


* உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.


* உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.


* 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஷபாலி வர்மா.


Today's Headlines


* Chennai Smart City officials have said that the final draft report of the Chennai Climate Change Action Plan will be out in two months.


* Chennai Meteorological Department has issued a red alert warning in some places of Tamil Nadu on the 8th due to low-pressure areas.


*  Minister MRK. Panneerselvam has said that small farmers belonging to Adi Dravida and tribal classes can apply for an additional 20 percent subsidy in the government's agricultural schemes.


* Glass suspension bridge at Villivakkam Lake at a cost of Rs 8 crore: It will be commissioned in May next year.


* A farmer in Punjab who aspires to fly in the sky builds model airplanes and teaches technology to students.


* French President Emmanuel Macron has said the West should consider guaranteeing Russian security if President Putin agrees to talks to end the war in Ukraine.


* France entered the quarter-finals of the World Cup football tournament.


 *Women's Under-19 T20 World Cup: Shabali Verma to lead the Indian team.








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education Regarding the provision of Practical Exercises for the Employability Skills course introduced to students of the First Year of Higher Secondary Education) ந.க.எண்: 50510/ பிடி2/ இ2/ 2021, 05-12-2022...


>>> மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்பு திறன்கள் (Employability Skills) பாடத்திற்கு செய்முறைக்கான பயிற்சிகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education Regarding the provision of Practical Exercises for the Employability Skills course introduced to students of the First Year of Higher Secondary Education) ந.க.எண்: 50510/ பிடி2/ இ2/ 2021, 05-12-2022...








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2022 - School Morning Prayer Activities...

 

>>> பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2022 - School Morning Prayer Activities...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


 இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அன்புடைமை


குறள் : 74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.


பொருள்:

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்


பழமொழி :

A rolling stone gathers no moss


அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது


இரண்டொழுக்க பண்புகள் :


1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள். 


2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன் 


பொன்மொழி :


ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது. --டிசிடெரியஸ் எராஸ்மஸ்



பொது அறிவு :


1. கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?


 ஆக்ஸ்பர்க், 1080 . (ஜெர்மனி ).


 2.குளோரினை கண்டுபிடித்தவர் யார்?


 கே. ஷீல்லி, 1774.


English words & meanings :


scent -odor, perfume.noun வாசனை. பெயர்ச் சொல். cent - Penny coin. least money value. noun. குறைந்த பணமதிப்பு. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


ஒரு முட்டையில் வைட்டமின் ஏ, ஃபோலேட், வைட்டமின் பி 5, வைட்டமின் பி 12, வைட்டமின் டி, இரும்பு, கரோட்டினாய்டுகள், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளன. இதுபோல பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு எதுவும் இல்லை. மேலும், ஒரு வேகவைத்த முட்டையில் 78 கிலோ கலோரி, ஒரு கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் புரதம், 9 கிராம் கொழுப்பு மற்றும் 187 மில்லிகிராம் கொழுப்பு உள்ளது


NMMS Q


36, 4, 18, 8, 9, 16, ? a)18. b) 32. c) 8. d) 9/2. 


 விடை: 9/2. 


விளக்கம்: 36÷2 =18; 18÷2 = 9; 9÷2= 9/2


டிசம்பர் 05


கல்கி அவர்களின் நினைவுநாள்

கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.


நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்

நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்


நீதிக்கதை


வல்லவர் யார்?


ஒரு நாள் எறும்பு தரையில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது. நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்? என்று கேட்டது. எறும்பு பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே என்று சொன்னது. அப்படியென்ன முக்கியமான கடமை? என்று பூரான் கேட்டது. 


மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை என்றது எறும்பு. உன்னிடம் பேசிக்கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது என்று கூறி எறும்பு சென்றுவிட்டது. பூரானுக்கு எறும்பின் மேல் வருத்தம். அதனால் எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக்கொண்டது. 


அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப்போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக்கொள்கிறேன் என்றது. அதற்கு எறும்பு மிக அமைதியுடன் பூரானே, உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம் என்று திரும்பவும் கூறியது. பூரானோ அப்படி என்ன சாகசத்தை நீ செய்வாய் என்று கேட்டது. 


எறும்பு பூரானை ஒரு தண்ணீர் தொட்டியின் மேல் அமர்ந்து வேடிக்கை பார்க்கச் சொல்லிவிட்டு, கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் ஏறி தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்தது. பூரானைப் பார்த்து உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா? என்று கேட்டது. பூரான் அப்போதுதான் தனது தவறினை உணர்ந்தது. பின்பு, பூரான் எறும்பிடம் மன்னிப்புக் கேட்டு சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது. 


நீதி :

எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு.


இன்றைய செய்திகள்


05.12.22


* ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.


* பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39,315 பேருக்கான ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


* அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* ரேஷன் அட்டையுடன் வங்கிக் கணக்கை குடும்ப அட்டைதாரர்கள் இணைக்காவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


* வீரர்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பழைய ஏஎன்-32 ரக விமானங்களுக்கு மாற்றாக நவீனசி-295 ரக விமானங்களை வாங்குவது குறித்து இந்திய விமானப்படை பரிசீலித்து வருகிறது.


* கரோனா கட்டுப்பாட்டை நீக்கினால் 20 லட்சம் பேர் உயிரிழப்பர் - சீன மருத்துவ நிபுணர்கள் கணிப்பு.


* சுற்றுச்சூழல் பங்களிப்புக்காக வழங்கப்படும் மதிப்புமிக்க எர்த்ஷாட் பரிசை, இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் வென்றுள்ளது.


* தென் மண்டல சீனியர் நீச்சல் போட்டி: தமிழக வீராங்கனை தீக்‌ஷா 2 தங்கம் வென்றார்.


* இந்தியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 4-1 என வென்றது ஆஸ்திரேலியா.


Today's Headlines


* A consultative meeting regarding the G-20 summit will be held tomorrow under the chairmanship of Prime Minister Modi.  Tamil Nadu Chief Minister Stalin is going to Delhi tomorrow to participate in it.


 * Tamil Nadu Chief Minister Stalin has announced that the pension for 4 lakh 39,315 people, including the blind and differently abled, will be increased from Rs.1,000 to Rs.1,500.


 *According to the Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu from the 7th due to a new low pressure area forming near the Andamans.


 *Cooperatives, Food and Consumer Protection Department Secretary J. Radhakrishnan said that even if the family card holders do not link the bank account with the ration card, the supply of goods will not be stopped.


* The Indian Air Force is considering purchasing the modern C-295s to replace the aging AN-32s used to transport personnel and supplies.


* 20 lakh people will die if Corona safety measures removed - Chinese medical experts predict.


 *An Indian startup has won the prestigious Earthshot Prize for environmental contribution this year.


 * South Zone Senior Swimming Competition: Tamil Nadu's Deeksha wins 2 golds.


 *Hockey series against India: Australia won 4-1.


12ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் அறிதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Knowing the Intended Higher Education Optional Courses of Class 12th Students - State Project Director's Proceedings) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-10/ ஒபக/ 2022, நாள்: 02-12-2022...

 


>>> 12ஆம் வகுப்பு மாணவர்களின் உத்தேச உயர் கல்வி விருப்பப் பாடப் பிரிவுகள் அறிதல் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Knowing the Intended Higher Education Optional Courses of Class 12th Students - State Project Director's Proceedings) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-10/ ஒபக/ 2022, நாள்: 02-12-2022...



>>>  உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




இன்றைய (05-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

டிசம்பர் 05, 2022




உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களைக் குறை கூறுவதைத் தவிர்த்து விடவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களிடம் பேசும் பொழுது பேச்சில் கவனம் வேண்டும். எதிலும் விழிப்புடன் செயல்படவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும். 


பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.


கிருத்திகை : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------




ரிஷபம்

டிசம்பர் 05, 2022




வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாகக் குறையும். பெரிய மனிதர்களின் நட்பு மனதளவில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.  பொறுமை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



கிருத்திகை : முடிவு கிடைக்கும். 


ரோகிணி : மந்தத்தன்மை குறையும்.


மிருகசீரிஷம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 05, 2022




விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் நுட்பமாகச் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். வாழ்வு சிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : லாபம் கிடைக்கும். 


திருவாதிரை : நட்பு மேம்படும். 


புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

டிசம்பர் 05, 2022




உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை சார்ந்த பணிகளில் வரவுகள் மேம்படும். நிறைவான நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும். 


பூசம் : புத்துணர்ச்சியான நாள்.


ஆயில்யம் : வரவுகள் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

டிசம்பர் 05, 2022




திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். இழுபறியான சில விஷயங்களுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : தீர்வு கிடைக்கும்.


பூரம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




கன்னி

டிசம்பர் 05, 2022




புதிய வியாபார பணிகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதமும், அனுபவமும் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வேலையாட்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நினைத்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். விழிப்புணர்வு வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



உத்திரம் : தடைகள் நீங்கும்.


அஸ்தம் : அனுபவம் உண்டாகும்.


சித்திரை : சேமிப்புகள் குறையும். 

---------------------------------------




துலாம்

டிசம்பர் 05, 2022




கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.


சுவாதி : தடைகள் விலகும்.


விசாகம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




விருச்சிகம்

டிசம்பர் 05, 2022




விலகி இருந்தவர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சந்தேக உணர்வுகளைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்குத் தெளிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். சலனம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



விசாகம் : சாதகமான நாள்.


அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

டிசம்பர் 05, 2022




மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். எதிர் பாலின மக்களின் செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான சில பணிகளை எளிதில் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். அசதிகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மூலம் : கட்டுப்பாடுகள் குறையும். 


பூராடம் : தெளிவு பிறக்கும். 


உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

டிசம்பர் 05, 2022




குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


திருவோணம் : சுறுசுறுப்பான நாள்.


அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

டிசம்பர் 05, 2022




பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் வரவு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் மேன்மை ஏற்படும். அலுவலகத்தில் மரியாதை உயரும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த போட்டிகளை சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



அவிட்டம் : ஆதரவான நாள்.


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.

---------------------------------------




மீனம்

டிசம்பர் 05, 2022




நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சோர்வு நீங்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.


உத்திரட்டாதி : திருப்திகரமான நாள். 


ரேவதி : மதிப்பு அதிகரிக்கும். 

---------------------------------------


பள்ளிகளில் SHWAAS மராத்திய மொழி சிறார் திரைப்படம் திரையிடல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4015/ஆ7/ஒபக/2022, நாள்: 01.12.2022 மற்றும் திரைப்பட கதை சுருக்கம் (SHWAAS Marathi Language Juvenile Film Screening in Schools – State Project Director Proceedings and Film Synopsis)...



>>> பள்ளிகளில் SHWAAS மராத்திய மொழி சிறார் திரைப்படம் திரையிடல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 4015/ஆ7/ஒபக/2022, நாள்:  01.12.2022 மற்றும் திரைப்பட கதை சுருக்கம் (SHWAAS Marathi Language Juvenile Film Screening in Schools – State Project Director Proceedings and Film Synopsis)...



>>> நாளை (05-12-2022) அன்று அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய மராத்திய மொழி SHWAAS சிறார் திரைப்படம் - இணைப்பு...



>>> தமிழ்த்தாய் வாழ்த்து - சைகை மொழிப் பாடல் (அனைத்து பள்ளிகளிலும், திங்கள்கிழமை குழந்தைகள் திரைப்படம் திரையிடலுக்கு முன், சைகை மொழிப் பாடல் திரையிட வேண்டும்)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



05-12-2022 அன்று அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய மராத்திய மொழி SHWAAS சிறார் திரைப்படம் - இணைப்பு ( Link - SHWAAS Juvenile Movie in Marathi language to be aired in all Middle, High, Higher Secondary Schools Tomorrow (05-12-2022)...

 




நாளை (05-12-2022) அன்று அனைத்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒளிபரப்ப வேண்டிய மராத்திய மொழி SHWAAS சிறார் திரைப்படம் - இணைப்பு ( Link - SHWAAS Juvenile Movie in Marathi language to be aired in all Middle, High, Higher Secondary Schools Tomorrow (05-12-2022)...


SHWAAS


>>> Click Here to Download SHWAAS Film File (614MB)...


>>> Shwass கதை தமிழில்...


GOOGLE DRIVE LINK👇👇👇

https://drive.google.com/file/d/1PMAik7vekuWUVEof-BHBHrAzb70Pl01n/view?usp=drivesdk


💥💥💥💥💥🌹🌹🌹

நாளை குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டிய சிறார் திரைப்பட லிங்க்

Shwaas Movie Link 

(Any 1 of the links can be used for Download)


Link 1: shorturl.at/tvTV3

Link 2: shorturl.at/drUV2


👉2GB ஆக உள்ளது.


>>> பள்ளிகளில் SHWAAS மராத்திய மொழி சிறார் திரைப்படம் திரையிடல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் & திரைப்பட கதை சுருக்கம்...



>>> தமிழ்த்தாய் வாழ்த்து - சைகை மொழிப் பாடல் (அனைத்து பள்ளிகளிலும், திங்கள்கிழமை குழந்தைகள் திரைப்படம் திரையிடலுக்கு முன், சைகை மொழிப் பாடல் திரையிட வேண்டும்)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...