கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அடிப்படை விதிகள் - மகப்பேறு விடுப்பு - 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான பிரார்த்தனையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பாக எதிர் அஃபிடவிட்கள் / ரிட் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் - வழிமுறைகள் - சம்பந்தமாக - மனிதவள மேலாண்மை (FR-III) துறை செயலாளர் அரசுக் கடிதம் எண்.3312185/ FR-Ill /2022-2, தேதி: 19-12-2022 (Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding - Human Resources Management (FR-III) Department Secretary to Government Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022)...


>>> அடிப்படை விதிகள் - மகப்பேறு விடுப்பு - 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான பிரார்த்தனையுடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் தொடர்பாக எதிர் அஃபிடவிட்கள் / ரிட் மேல்முறையீடுகளை தாக்கல் செய்தல் - வழிமுறைகள் - சம்பந்தமாக - மனிதவள மேலாண்மை (FR-III) துறை செயலாளர் அரசுக் கடிதம் எண்.3312185/ FR-Ill /2022-2, தேதி: 19-12-2022 (Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ  Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding - Human Resources Management (FR-III) Department Secretary to Government Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022)...



Human Resources Management (FR-III) Department, Secretariat, Chennai-600 009. 

Letter (Ms) No.3312185/ FR-Ill /2022-2, Dated: 19-12-2022... 

From 

Tmt. Mythili K. Rajendran IAS 

Secretary to Government.

To 

All Secretaries to Government Chennai-6. 

All Departments of Secretariat, Chennai-9. 

All Heads of Departments Including District Collector.(w.e) 

Sir/Madam, 

Sub: Fundamental Rules - Maternity leave — Filing of Counter Affidavits/Writ  Appeals in respect of Writ Petitions filed with a prayer for grant of Maternity Leave for 3rd child - Instructions —Regarding. 

Ref: The judgment of the High Court of Madras in W.A.No.1442/2022, dated 14.09.2022. 

I am directed to invite your kind attention to rule 101(a) of the Fundamental Rules of the Tamil Nadu Government which provides for the grant of maternity leave. Instruction 1 of the said Fundamental Rule 101(a) provides as follows:- 

(i) A competent authority may grant maternity leave on full pay to permanent married women Government servants and to non-permanent married women Government servants, who are appointed on regular capacity, for a period not exceeding 365 days, which may spread over from the pre-confinement rest to post confinement recuperation at the option of the Government servant. Non-permanent married women Government servants, who are appointed on regular capacity and join duty after delivery shall also be granted maternity leave for the remaining period of 365 days after deducting the number of days from the date of delivery to Government service (both days Inclusive) recuperation, for the post confinement.



ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல் - இல்லம் தேடிக் கல்வி, சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 3545/ C7/ இதேக/ ஒபக/ 2022, நாள்: 02-01-2023 ( ITK - Instructing Districts to temporarily fill the Places of Secondary Grade Teachers/Graduate Teachers serving as District / Block Teacher Coordinators in Illam Thedi Kalvi through School Management Committees for 4 months, Special Duty Officer Proceedings NO: 3545/ C7/ ITK/ SS/ 2022 , Dated: 02-01-2023)...



>>> ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதிலாக அவர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள மாவட்டங்களுக்கு அறிவுறுத்துதல் - இல்லம் தேடிக் கல்வி, சிறப்புப் பணி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 3545/ C7/ இதேக/ ஒபக/ 2022, நாள்: 02-01-2023 ( ITK - Instructing Districts to temporarily fill the Places of Secondary Grade Teachers/Graduate Teachers serving as District / Block Teacher Coordinators in Illam Thedi Kalvi through School Management Committees for 4 months, Special Duty Officer Proceedings NO: 3545/ C7/ ITK/ SS/ 2022 , Dated: 02-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2023 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 97

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.


பொருள்:

நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கு இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.


பழமொழி :

Labour conquers everything.

உழைப்பு அனைத்தையும் வெல்லும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


பிரார்த்தனை என்பது நீங்கள் கடவுளிடம் பேசுவது என்றால், உள்ளுணர்வு என்பது கடவுள் உங்களிடம் பேசுவது. --வெய்ன் டயர்



பொது அறிவு :


1. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு எது?


 ஜெர்மனி .


2. மனோன்மணியம் நூலை எழுதியவர் யார்? 


 மீனாட்சி சுந்தரம் பிள்ளை.


English words & meanings :


flew - move through the air using wings: verb .பறந்தது. வினைச் சொல். flu - fever with cold. noun. சளிக் காய்ச்சல். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்கவும்.


இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு 150மி லி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.


NMMS Q


தேசிய கீதத்தை பாடும், இசைக்கும் கால நேரம் ________வினாடிகள் ஆகும். 


விடை: 52


ஜனவரி 03


சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]


சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது


நீதிக்கதை


வாங்கினால்தானே அது என்னுடையது


ஒரு அலுவலகத்தில் பணியாற்றும் மேலதிகாரி, எப்போதும் சக ஊழியர்களைத் திட்டிக் கொண்டே இருப்பார். எப்பொழுதும் எரிந்து விழுந்து கொண்டும், வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டும் இருப்பார். இதனால் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் எப்போதும் மன வறுத்தத்துடன் இருப்பார்கள்.


இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவர் புதிதாக பணிக்கு சேர்ந்தார். அவரையும் அந்த மேலதிகாரி திட்டித் தீர்த்தார். ஆனால், புதிய இளைஞனின் முகத்திலோ எந்த பதற்றமும் இல்லை, கவலையும் இல்லை. எப்போதும் போல தனது வேலையை அவரே செய்து வந்தார்.


இதனைக் கண்டதும் மற்ற ஊழியர்களுக்கு மிகவும் ஆச்சரியம். என்னப்பா அவர் உன்னை அப்படி திட்டுகிறார். ஆனால் அதை நீ கண்டுகொண்டதாகக் கூட தெரியவில்லையே. எப்போதும் முகத்தை சிரித்தபடியே வைத்துக் கொண்டு வேலை செய்ய உன்னால் மட்டும் எப்படி முடிகிறது என்று கேட்டார்கள்.


இதற்கு அந்த ஊழியர் அளித்த பதில், அந்தத் தெருவின் முனையில் இரு மனிதர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தை சுட்டிக் காண்பித்து அங்கே பாருங்கள்! புரியும் என்றார்.


அங்கே பார்த்தும் புரியாத விழிகளோடு புரியவில்லையே! எனக் குழப்பமாகச் சொன்ன ஊழியர்களிடம் கேட்டார். அந்தக் மனிதர் தன் அருகில் இருப்பவரிடம் ஏதோ ஒன்றைக் கொடுக்க முயற்சி செய்கின்றார். தெரிகின்றதா? ஏதோ பரிசுப் பொருள் போல் தெரிகிறது. ஏதோ கோபம் காரணமாக அந்த மனிதர் எவ்வளவுதான் கொடுக்க முயற்சி செய்தாலும் அருக்கிலுள்ளவர் அந்தப் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொள்ளவேயில்லை.


புதிய இளைஞன் கூறினான், அருக்கிலுள்ளவர்அந்தப் பரிசை வாங்காதவரை அந்தப் பரிசுப்பொருள் யாருக்குச் சொந்தம்? நிச்சயம் அது கொடுக்கும் மனிதர்க்குதான் சொந்தம் என்று சொன்னார்கள் மற்றவர்கள். அப்போது... இந்தப் பதிலைக் கேட்டு சிரித்துக்கொண்டே சொன்னார்.


அதேதான் என் கதையிலும்... மேலதிகாரி தனது மூர்க்கத்தனத்தையும், கோபத்தையும் என்னிடம் தருவதற்கு எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் நான் அதை வாங்கிக் கொள்ளவேயில்லை. அதனால்தான் நான் அவர் என்னிடம் காட்டிய கோபத்தை நான் வாங்கிக்கொள்ளவில்லை என்றார். இதைக் கேட்ட மற்ற ஊழியர்கள் திகைத்து நின்றனர்.


இன்றைய செய்திகள்


03.01.2023


* தமிழகத்தில் இதுவரை பி.எப்-7 வகை கரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


* காலநிலை மாற்ற திட்டங்களுக்கு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை தமிழக அரசு உருவாக்கி உள்ளது.


* சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் 2022-ம் ஆண்டில்தான் அதிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


* தமிழக சுகாதாரத் துறையின் 'நலம் 365' யூடியூப் சேனல் தொடக்கம்: மாதம் ஒருமுறை மக்களுடன் கலந்துரையாடல் - அமைச்சர் தகவல்.


* அரசு போக்குவரத்து கழகங்களுக்கு  442 பேருந்துகள் விரைவில் கொள்முதல்: டெண்டருக்கு அவகாசம் நீட்டிப்பு.


* இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


* இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் பங்கஜ் மோகன் சின்ஹா பொறுப்பேற்பு.


* இந்தியாவுடனான உறவு மேம்பட சீனா விரும்புகிறது என அதன் புதிய வெளியுறவு அமைச்சர் கீன் கேங் தெரிவித்துள்ளார்.


* 2023 உலகப் பொருளாதாரத்திற்கு கடினமான காலம்: சர்வதேச நிதியம் கணிப்பு.


* கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கோஸ்தாவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆகியிருக்கிறார்.


* பெண்கள் பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'.


Today's Headlines


* Minister M. Subramanian has said that there is no PF-7 type of corona infection in Tamil Nadu so far.


 * The Tamil Nadu Government has created the Tamil Nadu Climate Change Fund to raise funds of Rs.1000 crore for climate change projects.


* In the year 2022 alone, 6.09 crore trips have been made in the Chennai Metro train. In the last 7 years since the start of Chennai Metro Rail, the most trips have been made in 2022.


 * Launch of Tamil Nadu Health Department's 'Nalam 365' YouTube Channel: Once a month discussion with people - Minister informs.


* Soon procurement of 442 buses for state transport corporations: extension of time for tender.


* Unemployment in India has reached a 16-month high, according to the India Economic Observatory.


* Air Marshal Pankaj Mohan Sinha takes charge as Chief of the Western Wing of the Indian Air Force.


* China wants to improve relations with India, its new foreign minister Qin Gang has said.


* 2023 is a tough time for the global economy: International Monetary Fund forecast.


* 19-year-old chess player Kostav Chatterjee from Kolkata has become India's 78th Grandmaster.


 * Women's Varsity Volleyball Tournament: SRM Team 'Champion'.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (03-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



இன்றைய (03-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 03, 2023



வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொறுமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.


பரணி : ஆர்வம் உண்டாகும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 03, 2023



பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும், ஆதரவுகளையும் பெறுவீர்கள். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய செயல்களை மேற்கொள்ளும் பொழுது சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் பிறக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 

கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் பிறக்கும்.

---------------------------------------

 



மிதுனம்

ஜனவரி 03, 2023



சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.


திருவாதிரை : வெற்றிகள் கிடைக்கும்.

 

புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------

 



கடகம்

ஜனவரி 03, 2023



வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகளும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவில் சேமிப்பு அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



புனர்பூசம் : உதவி கிடைக்கும்.


பூசம் : ஒத்துழைப்பு உண்டாகும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 03, 2023



வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனைகள் மேம்படும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். குழந்தைகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளிப்படையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். ஆதரவுகள் நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : லாபம் உண்டாகும்.


பூரம் : மாற்றங்களை செய்வீர்கள்.

 

உத்திரம் : ஆதரவான நாள்.

---------------------------------------




கன்னி

ஜனவரி 03, 2023



கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் பொறுமை வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதற்கு தாமதமாகும். வியாபாரம் மந்தமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். வெளியூர் சார்ந்த பயணம் சாதகமாகும். அலுவலக பணிகளில் மரியாதை அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



உத்திரம் : முன்னேற்றமான நாள்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : மரியாதை அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

ஜனவரி 03, 2023



முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற செயல்களை குறைத்து கொள்ளவும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். மனதை கட்டுப்பாடுடன் வைத்திருக்கவும். சிறு மற்றும் குறு தொழிலில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். திடீர் செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு



சித்திரை : தாமதம் உண்டாகும்.

 

சுவாதி : கவனம் வேண்டும்.


விசாகம் : சேமிப்புகள் குறையும்.

---------------------------------------

 




விருச்சிகம்

ஜனவரி 03, 2023



கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுக்களில் பெரியோர்களின் ஆதரவு ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் குறையும். பேச்சுத் திறமையால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அனுஷம் : ஆதரவு ஏற்படும்.


கேட்டை : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------

 



தனுசு

ஜனவரி 03, 2023



பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


 

மூலம் : ஒற்றுமை மேம்படும்.


பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.


உத்திராடம் : மேன்மையான நாள்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 03, 2023



பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். தேர்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை.



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : சோர்வு நீங்கும்.


அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 03, 2023



வாழ்க்கைத் துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பயணம் தொடர்பான செயல்களில் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மனைகள் வாங்குதல் மற்றும் விற்றல் பணிகளில் மேன்மை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நன்மை உண்டாகும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.



அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : முன்னேற்றம் கிடைக்கும்.


பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

 



மீனம்

ஜனவரி 03, 2023



உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். திறமைக்கு உண்டான பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் வேகமும், துரிதமும் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.



பூரட்டாதி : இடமாற்றம் ஏற்படும்.


உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2023 - School Morning Prayer Activities...

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2023 - School Morning Prayer Activities...


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...


திருக்குறள் :


பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: இனியவை கூறல்


குறள் : 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


பொருள்:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின் பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.


பழமொழி :

Many hands make work light


கூடி வாழ்ந்தால் கோடி நன்மை



இரண்டொழுக்க பண்புகள் :


1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.


2. செல்பேசியில் விளையாட்டு விளையாடி ,நேரத்தை வீணடிக்க மாட்டேன்.


பொன்மொழி :


"உங்கள் உள்ளுணர்வுக்குச் செவிசாயுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அது உங்களுக்குச் சொல்லும். --அந்தோனி ஜே. டி'ஏஞ்சலோ



பொது அறிவு :


1. அதிகமாக தேசம் விட்டு தேசம் செல்லும் பறவை எது? 


 ஆர்க்டிக் என்னும் கடற்பறவை. 


2. மிக அழகான இறக்கைகளை உடைய பறவை எது ? 


 சொர்க்கப் பறவை.


English words & meanings :


English words:

1.Substantiate - establish -உறுதிப்படுத்து

2.Thriving - Successful - முன்னேற்றம்


ஆரோக்ய வாழ்வு :


குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டையில் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்ற அறிகுறிகளுடன் தொண்டை வலியும் சேர்ந்து வரும்.


பாக்டீரியா தொற்று மூலம் உண்டாகும் தொண்டை வலி ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் . காய்ச்சல் இருந்தபோதும் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை.


NMMS Q


DOCTOR என்பதை FMERQP எனவும், LAWYER என்பதை NYYWGP எனவும் குறித்தால் PLAYER என்பதன் குறியீடு __________. விடை: RJCWGP. 


நீதிக்கதை


பலம் எது? பலவீனம் எது ?


ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன. அங்கே வசித்த மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமைபட்டுக் கொண்டே இருந்தது.


உதாரணத்திற்கு யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும், மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும்.


இப்படியிருக்க ஒரு மழைக்காலத்தில் அந்த மயில் அழகாக ஆடத்துவங்கியது. அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத்துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப்படுத்தி அருகில் சென்றது.


மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷப்பட்டிருக்கிறாயா என்றது. மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லை என்று பதில் கூறியது.


இதனை கேட்டு சிரித்த மைனா உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும், வலிமையும் இருக்கும். அது என்ன என்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டுமே அன்றி எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ, பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.


இறுதியில் தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.


இன்றைய செய்திகள்


02.01.23


* தமிழகத்தில் 34 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதில் 8 பேருக்கு இணைச் செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


* இந்தியா, பாக்., இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் உள்ள அணு சக்தி நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் கைதிகள் குறித்த பட்டியலை நேற்று பரிமாறிக்கொண்டன. 


* இந்தியாவின் முதல் எல்.என்.ஜி.,எரிவாயு லாரியான 'பி.இ., 5528 டிராக்டர்' என்ற லாரியை, 'ப்ளூ எனர்ஜி மோட்டார்ஸ்' நிறுவனம் செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.


* புதுடில்லி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசை குறைக்கும் வகையில், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலக்கரி எரிபொருள்களை பயன்படுத்துவதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்ததுள்ளது. 


* டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் விளையாட இந்தியாவின் ராம்குமார் தகுதி .


Today's Headlines


* 34 IAS officers have been promoted in Tamil Nadu. 8 of them have been promoted as Joint Secretary.


* India and Pakistan yesterday exchanged lists of civilians and prisoners at nuclear power plants in their countries.


* Blue Energy Motors has launched India's first LNG and LPG powered truck 'PE, 5528 Tractor'.


* In order to reduce pollution in New Delhi and nearby areas, a ban on the use of coal fuel in industries and commercial establishments has come into effect from yesterday.


* India's Ram Kumar qualifies to play in Tata Open Maharashtra Tennis Singles Main Round.


இன்றைய (02-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



இன்றைய (02-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 02, 2023




பொன், பொருள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் மனமறிந்து நடந்து கொள்ளவும். நண்பர்கள் வழியில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றங்கள் பிறக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. உதவிகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அஸ்வினி : ஆர்வம் அதிகரிக்கும்.


பரணி : மாற்றங்கள் பிறக்கும்.

 

கிருத்திகை : பயணங்கள் அதிகரிக்கும். 

---------------------------------------




ரிஷபம்

ஜனவரி 02, 2023



மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ரகசிய நடவடிக்கைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதில் புரட்சிகரமான சிந்தனைகள் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்




கிருத்திகை : தெளிவு பிறக்கும்.

 

ரோகிணி : நெருக்கடிகள் உண்டாகும்.

 

மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------

 


மிதுனம்

ஜனவரி 02, 2023



உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். செல்வ சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். மனதை வருத்திய சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பணிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.

 

திருவாதிரை : தீர்வு கிடைக்கும்.

 

புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 02, 2023



புதிய தொழில் நிமிர்த்தமான உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். நாத்திகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். புதிய நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : உற்சாகமான நாள்.


பூசம் : அமைதி உண்டாகும்.

 

ஆயில்யம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 02, 2023



வியாபார பணிகளில் சோர்வின்றி செயல்படவும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களை சமாளிக்கும் திறமை மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அசதிகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 




மகம் : சிந்தனைகள் மேம்படும்.

 

பூரம் : அனுசரித்து செல்லவும்.

 

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 02, 2023



வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் கவனம் வேண்டும். தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். சூழ்நிலையை அறிந்து மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படவும். பிள்ளைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான சில விரயங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் குழப்பம் உண்டாகும். பணியிடங்களில் பொறுமையை கையாளவும். நகைச்சுவையான பேச்சுக்கள் சில நேரங்களில் வருத்தத்தை உண்டாக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : வர்த்தகத்தில் கவனம்.

 

அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.

 

சித்திரை : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------


துலாம்

ஜனவரி 02, 2023



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். நண்பர்களின் உதவி திருப்தியை ஏற்படுத்தும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பாராத தனவரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்




சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : திருப்தியான நாள்.


விசாகம் : தனவரவு ஏற்படும்.

---------------------------------------


விருச்சிகம்

ஜனவரி 02, 2023



உபரி வருமானத்தில் முயற்சிக்கு ஏற்ப தனவரவு அதிகரிக்கும். வீண் விரயங்களை தவிர்க்கவும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முதலீடு தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். கடவுச்சீட்டு பணிகளில் இருந்த வந்த இழுபறியான சூழல் மறையும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : முன்னேற்றம் உண்டாகும். 


அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.

 

கேட்டை : இழுபறிகள் மறையும்.

---------------------------------------


தனுசு

ஜனவரி 02, 2023



பணிபுரியும் இடத்தில் பொறுப்புகளும், பணிகளும் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த வில்லங்கங்கள் குறையும். கற்பனை கலந்த உணர்வுகள் மனதில் அதிகரிக்கும். நன்மை, தீமை எது என்று அறிந்து செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.  அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : பொறுப்புகள் மேம்படும்.


பூராடம் : கற்பனை அதிகரிக்கும்.


உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------


மகரம்

ஜனவரி 02, 2023



சிந்தனைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனைகளை வாங்குவீர்கள். உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தையை பற்றிய கவலைகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மாற்றம் ஏற்படும். 


திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------


கும்பம்

ஜனவரி 02, 2023



உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டு தொழில் சார்ந்த வளர்ச்சியை உருவாக்குவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும். 


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


மீனம்

ஜனவரி 02, 2023



அக்கம் - பக்கம் இருப்பவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். சகோதரர்களின் மூலம் நன்மை ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்டதிசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : நன்மை ஏற்படும். 


ரேவதி : கலகலப்பான நாள்.

---------------------------------------


5.1.2023 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ‌நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல்(On 5.1.2023 it has been announced that JACTTO-GEO will hold an attention-grabbing demonstration in the district capitals across Tamilnadu, the Hon'ble Chief Minister is going to call the JACTTO-GEO State Coordinators on Monday 2.1.2023 at 10.00 a.m. in the Chief Secretariat for a discussion)...


 * மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை 2.1.2023 அன்று திங்கட்கிழமை காலை 10.00மணிக்கு தலைமை செயலகத்தில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்...


* 5.1.2023ல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ‌நடைபெறும் என்ற அறிக்கையின் அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தை நடக்கிறது...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...