கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...



மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வலைதள முகவரி (Website address to check if Aadhaar number is linked with Electricity Board connection number)...


 மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ம் தேதி கடைசி நாள் ஆகும். இதன்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. 


இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. 


https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?

 


இந்திய ஆட்சிப் பணி - ஐ.ஏ.எஸ். (IAS - Indian Administrative Service) பணிநிலை என்பது என்ன?


அரசு என்பது ஒரு அறக்கட்டளை மாதிரி. அரசின் அதிகாரிகள்தான், அந்த அறக்கட்டளை நிர்வாகிகள். அந்த இரண்டுமே மக்கள் நலனுக்காக செயல்பட வேண்டும் என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார்.


ஐ.ஏ.எஸ். அதிகாரி


இந்தியாவின் உயர்ந்த ஆட்சிப் பணி அதிகாரிதான் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனப்படுகிறார். ஆங்கிலேயர் காலத்தில் ஐ.சி.எஸ் (Indian Civil Service) என்று இருந்தது, சுதந்திர இந்தியாவில் IAS (Indian Administrative Service) என்று பெயர் மாற்றப்பட்டது.


இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தலைமை நிர்வாகப் பதவிகளை வகிக்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், அரசு இயந்திரத்தை தலைமையேற்று இயக்குபவர்கள் இவர்களே.


அரசு என்பது வேறு. அரசு இயந்திரம் என்பது வேறு. ஏனெனில், ஆட்சிக்கு வருபவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். எனவே, அரசு அவ்வப்போது மாறும். ஆனால், அரசு இயந்திரம் மாறாது. அது, எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டே இருக்கும். ஒரு அரசாங்கம் (Ministry) எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் அரசு இயந்திரம்.


ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகிய இரண்டிலும் பணியமர்த்தப்பட முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மத்திய அரசில் பணியமர்த்தப்படுவார் மற்றும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் பணியமர்த்தப்படுவார்.


இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பவர், சமூகத்தில் உயர்ந்த மதிப்பு பெற்றவராக திகழ்கிறார். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சொல்வதை ஏறக்குறைய 60% இந்திய மாணவர் சமூகம் வழக்கமாக வைத்துள்ளது, பலருக்கு அதைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாமல் இருந்தாலும்கூட.


ஐ.ஏ.எஸ். எனும் பணி


ஐ.ஏ.எஸ். என்பது அரசு நிர்வாகத்தை தலைமையேற்று நடத்தும் பணி என்பதால், ஒரு நேர்மையான அதிகாரியால், சமூகத்திற்கு நிறைய சேவைகளை செய்ய முடியும். ஆனால், இப்பணியில் உள்ள அதிகாரம், சலுகைகள், வெகுமதிகள், சமூக அந்தஸ்து உள்ளிட்ட பல காரணங்களே, இப்பணிக்கு வர வேண்டும் என்று பலரைத் தூண்டுகிறது.


ஐ.ஏ.எஸ். பணி என்பது இந்திய நிர்வாக கட்டமைப்பில், அதிக அதிகாரத்தையும், அதிக பொறுப்பையும் கொண்டதாகும். மத்திய அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் கேபினட் செயலாளர் என்ற பதவியிலும், மாநில அரசின் உத்தரவுகளை செயல்படுத்தும் தலைமைச் செயலாளர் என்ற பதவியிலும் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே.


ஐ.ஏ.எஸ். பணி நிலைக்கு சமமாக, இந்திய வெளியுறவு பணிகள்(Indian Foreign Service) எனப்படும் பணி உள்ளது. ஆனால், உள்நாட்டு நிர்வாகத்தில் இதற்கு சம்பந்தமில்லை. உள்நாட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, IAS பணிதான் உயர்ந்தது. இதற்கு அடுத்த நிலையில் ஐ.பி.எஸ்.(இந்திய காவல் பணிகள்) வருகிறது. அதற்கடுத்து IFS (Indian Forest Service) எனப்படும் இந்திய வனப் பணிகள் வருகின்றன.


IAS பணிக்கு தேவையான தகுதிகள்


நேர்மறை எண்ணம்

தலைமைத்துவ பண்பு

ஆளுமைத் திறன்

தைரியம்

உறுதியான மனப்பாங்கு

தன்னம்பிக்கை

ஒவ்வொரு நெருக்கடி சூழலிலும் அமைதியைக் கடைபிடித்தல்

நல்ல தகவல்தொடர்பு திறன்

நல்ல அறிவுத்திறன்

சிறப்பான பொதுஅறிவு


ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவதற்கான அடிப்படை தகுதிகள்


ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறார்கள். அத்தேர்வை எழுதும் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.


குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த ஒருவர், ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதலாம். மேலும், பட்டப் படிப்பு இறுதித் தேர்வை எழுதப் போகிறவர்கள் அல்லது எழுதி முடித்து, தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வின், முதல்நிலைத் தேர்வை (Preliminary) எழுதலாம்.


MBBS அல்லது வேறொரு மருத்துவ பட்டப் படிப்பை மேற்கொள்வோர், அவர்கள் தங்களின் இறுதியாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்து, அதேசமயம், இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமல் இருந்தாலும், அவர்கள் ஐ.ஏ.எஸ். மெயின் தேர்வை எழுதலாம். அதேசமயம், அவர்கள், மெயின் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.


ஐ.ஏ.எஸ். தேர்வு, முதல்நிலைத் தேர்வு (Preliminary), மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மொத்தம் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.


பணிகள் மற்றும் பொறுப்புகள்


* தொடர்புடைய அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, தனது மாவட்டம் அல்லது பிராந்தியத்திற்கான கொள்கைகளை வடிவமைப்பதில் உதவுதல்.


* மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகள், நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்தல். இதன்பொருட்டு, அதுதொடர்புடைய பகுதிகளுக்கு பயணம் செய்து, அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறதா என்பதைக் கண்காணித்தல். அதன்பிறகு, நடைபெறும் பணிகள் பற்றி, தொடர்புடைய அமைச்சகத்திற்கு தனது கருத்துக்களை (feedback) தெரிவித்தல்.


* பொது நிதியானது, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முக்கியப் பணியாகும். அதில், ஏதேனும் முறைகேடு நடந்தால், அவர் மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் பதில்சொல்ல வேண்டியிருக்கும்.


* வெள்ளம், நிலநடுக்கம் மற்றும் கலவரம் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழும்போது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள், துன்பத்திலிருந்து மக்களை மீட்டு, நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.


* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தங்களது கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்து, நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கவனித்து, சிறப்பான முடிவுகளை எடுக்க, அரசுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டியுள்ளது.


பணி நிலை


ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பணித்தன்மை என்பது, பன்முகத்தன்மை வாய்ந்தது, சவால் மிகுந்தது, ஆர்வமூட்டக்கூடியது அதேசமயத்தில் நிறைவுத்தன்மை கொண்டது.


ஒரு இளநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உருவாக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறார் மற்றும் அவரும் சீனியர் நிலைக்கு உயரும்போது, கொள்கைகள் மற்றும் திட்டங்களை அவரும் சேர்ந்து உருவாக்குகிறார். பொதுத்துறை நிறுவனங்கள் சம்பந்தமான விவகாரங்களை கையாளுதல் உள்பட, பல சிக்கல்களை தீர்த்து வைக்கும் நபராகவும் இருக்கிறார்.


சம்பளம்


ஜுனியர் ஸ்கேல்


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.5,400


சீனியர் டைம் ஸ்கேல்


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.6,600


ஜுனியர் Administrative கிரேடு


Pay Band - ரூ.15,600 முதல் ரூ.39,100

கிரேடு pay ரூ.7,600


Selection கிரேடு


Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000

கிரேடு pay ரூ.8,700


சூப்பர் டைம் ஸ்கேல்


Pay Band - ரூ.37,400 முதல் ரூ.67,000

கிரேடு pay ரூ.10,000


வாய்ப்புகள்


உள்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான், ஐ.பி.எஸ். அதிகாரிகளை வழிநடத்தும் பொறுப்பை வகிக்கிறார்.

நிதித்துறை செயலர் என்ற பொறுப்பை வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஒரு அரசின் அனைத்து நிதி செயல்பாடுகளுக்கும் தலைவர்.

சுருக்கமாக சொல்வதென்றால், ஐ.ஏ.எஸ். அதிகாரி பணி என்பது, பல்வகை பொறுப்புகளை நிறைவேற்றும் மற்றும் அவற்றை மாறிமாறி மேற்கொள்ளும் நிலையில் உள்ள ஒரு பணியாகும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரடியாக உதவக்கூடிய ஒரு பணியாகும்.

நாட்டின் உயர்ந்த பதவியாக உள்ள ஐ.ஏ.எஸ்., பணியில் ஒருவருக்கான பொறுப்புகள் எவ்வளவு அதிகமோ, அந்தளவிற்கு சலுகைகளும் அதிகம்.


நாம் செய்ய வேண்டியது


இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்பதால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால், சமூகத்திற்கு எத்தனையோ நன்மைகள் கிடைத்துள்ளன. அதே நேரத்தில், பல தீமைகளும் சமூகத்திற்கு நிகழ்ந்துள்ளன.


எனவே, பெரியளவில் நன்மை செய்ய இயலாவிட்டாலும், முடிந்தளவு, தீமை செய்யாமல் இருப்போம் என்பதை உறுதியாக எடுத்துக்கொண்டு, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகுங்கள் மாணவர்களே!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




தியாகிகள் தினம் - ஜனவரி 30 (Martyrs' Day - January 30)...

 


 தியாகிகள் தினம் - ஜனவரி 30 (Martyrs' Day - January 30)...


🏁 இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  தியாகிகள் தினம் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.


🏁 தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30ஆம் தேதி இந்தியாவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.


🏁 தியாகிகளின் வீரச் செயல்களை நினைவுப்படுத்தி இளம் தலைமுறையினரிடம் நாட்டுப்பற்றை ஏற்படுத்தவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு (Ennum Ezhuthum - Term 3 - Unit 3 - TLM - Tamil, English, Mathematics)...

   


>>> எண்ணும் எழுத்தும் - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ் (Ennum Ezhuthum - Unit 3 - TLM - Tamil)...












>>>  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week)...

 

 

           


>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week)...



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 3 - பிப்ரவரி முதல் வாரம் - 2023 - மாதிரி 2 (Ennum Ezhuthum Lesson Plan - Unit 3 - February 1st Week - Model 2)...



>>>  எண்ணும் எழுத்தும் - பருவம் 3 - அலகு 3 - கற்றல் கற்பித்தல் கருவிகள் - தமிழ், ஆங்கிலம், கணக்கு...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான (TET Paper 2) தேதி மாற்றம் - 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Date Change for Teacher Eligibility Test Paper II - Rejection of 30 Candidates' Applications - Teacher Examination Board Notification)...


ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கான (TET Paper 2) தேதி மாற்றம் - 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு (Date Change for Teacher Eligibility Test Paper II - Rejection of 30 Candidates' Applications - Teacher Examination Board Notification)...



சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளுக்கான தேதியை மாற்றம் செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தாள்-1 தேர்வு, கடந்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 30 ஆயிரத்து 87 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு முடிவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதில் தேர்வை எழுதிய ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 23 பேரில், 21 ஆயிரத்து 543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதனைத் தொடர்ந்து தாள் இரண்டுக்கான தேர்வை எழுத 4 லட்சத்து 1,886 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.


அவர்களுக்கான தேர்வு வருகிற 31ம் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 12ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே கடந்த 3ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் செய்து இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை கணினி வாயிலாக 2 கட்டங்களாக தேர்வு நடத்த இருப்பதாக கூறி அதற்கான அட்டவணையையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால்டிக்கெட் 2 கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.


எந்த மாவட்டங்களில் தேர்வு எழுத போகிறார்கள் என்ற விவரத்துடன் முதல் ஹால்டிக்கெட்டும், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மையங்கள் குறித்த விவரத்துடன் மற்றொரு ஹால்டிக்கெட்டும் வெளியிடப்படுகிறது. இதில் முதல் ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு இரண்டாம் தாளுக்கு விண்ணப்பித்தவர்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணித்தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தடைவிதிக்கப்பட்ட 9 பேர், தாள்1 தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதிய 2 பேர், பெயரை தவறாக பதிவு செய்த 10 பேர் என 30 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன.


வருமான வரி - பழைய மற்றும் புதிய முறை கணக்கீடுகள் - தகுதியான சேமிப்புகள் - கழிவுகள் மற்றும் வரிவிலக்கு பெறும் பிரிவுகள் (தமிழில்) - நிதியாண்டு 2022-2023 / மதிப்பீடு ஆண்டு 2023-2024 (Income Tax - Old and New Regime - Calculations - Eligible Savings - Deductions and Exemption Categories (in Tamil) - Financial Year 2022-2023 / Assessment Year 2023-2024)...

 


>>> வருமான வரி - பழைய மற்றும் புதிய முறை கணக்கீடுகள் - தகுதியான சேமிப்புகள் - கழிவுகள் மற்றும் வரிவிலக்கு பெறும் பிரிவுகள் (தமிழில்) - நிதியாண்டு 2022-2023 / மதிப்பீடு ஆண்டு 2023-2024 (Income Tax - Old and New Regime - Calculations - Eligible Savings - Deductions and Exemption Categories (in Tamil) - Financial Year 2022-2023 / Assessment Year 2023-2024)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...