கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-04-2023 (Kasthuribai Gandhi Balika Vidyalaya (KGBV) Schools Require Teachers and Staff - Last Date to Apply: 10-04-2023)...


>>> கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-04-2023 (Kasthuribai Gandhi Balika Vidyalaya (KGBV) Schools Require Teachers and Staff - Last Date to Apply: 10-04-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) (முதன்மை) - 2023 அமர்வு 2 (ஏப்ரல் 2023) 06 ஏப்ரல் 2023 அன்று தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு (Release of Admit Cards for the Candidates of Joint Entrance Examination (Main) – 2023 Session 2 (April 2023) scheduled to appear on 06 April 2023 - Regarding - Public Notice of National Testing Agency)...



>>> ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) (முதன்மை) - 2023 அமர்வு 2 (ஏப்ரல் 2023) 06 ஏப்ரல் 2023 அன்று தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு (Release of Admit Cards for the Candidates of Joint Entrance Examination (Main) – 2023 Session 2 (April 2023) scheduled to appear on 06 April 2023 - Regarding - Public Notice of National Testing Agency)...

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உண்மையான அன்பு எது..?? - இன்றைய சிறுகதை (What is true love..?? - Today's short story)...


உண்மையான அன்பு எது..?? - இன்றைய சிறுகதை (What is true love..?? - Today's short story)...


ஒரு நாள் குருவும் அவரது சீடனும் குளக்கரையில் அமர்திருந்தார்கள். சீடன் பல கேள்விகளை குருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான்; குருவும் நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

"குருவே! சுயநலமிக்க அன்பிற்கும் சுயநலமில்லாத அன்பிற்கும் வித்தியாசம் என்ன?" எனக்கு கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் என்றான். குரு சீடனுக்கு பதிலை எப்படி விளக்குவது என்று சற்றும் முற்றும் பார்த்தார். ஒரு இளைஞன் குளக்கரையில் தூண்டிலைப் பிடித்துக் கொண்டு அமர்திருந்தான். அவனருகில் கூடையில் அவன் பிடித்துப் போட்ட மீன்கள் துடித்துக் கொண்டிருந்தது.

குரு, அந்த இளைஞனிடம் பேச்சு கொடுத்தார். தம்பி! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்றார். அவனும் ஆமாம் ஐயா மீன் என்றால் எனக்கு உயிர். பிடித்து வைத்த மீன்களையெல்லாம் இன்றிரவு என் மனைவியை சமைக்கச் சொல்லி ஒரு பிடி பிடிக்கப் போகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். குளத்தில் நிறைய மீன் கிடைக்கிறது என்றான்.

குருவோ, எனக்கு வேண்டாம் தம்பி என்று புன்சிரிப்புடன் கூறி மறுத்து விட்டார். நடப்பதையெல்லாம் சீடன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். அந்த இளைஞனும் சற்று நேரத்தில் மீன் பிடித்து விட்டு கிளம்பிவிட்டான்.

ஒரு வயது முதிர்ந்த பெரியவர் குளக்கரையை நோக்கி வருவதை குரு பார்த்து விட்டார். அவர் கையில் ஒரு வெள்ளை நிறப் பை இருந்தது. குரு அதை உற்றுப் பார்த்தார்; அது பையின் நிறமல்ல, அதிலிருக்கும் பொரியின் நிறம் என்பதை தெரிந்து கொண்டார். அந்த பெரியவர் குளக்கரையில் வந்து அமர்ந்தார். பையிலிருந்த பொரியை எடுத்து தண்ணீரில் தூவினார். நூற்றுக்கணக்கான மீன்கள் பொரி இருக்கும் இடத்தை எறும்புகள் போல மொய்த்தன.

குரு, அவரிடமும் பேச்சு கொடுத்தார். என்ன பெரியவரே! மீன் என்றால் ரொம்ப பிடிக்குமோ? என்று சற்று முன் அந்த இளைஞனிடம் கேட்ட அதே கேள்வியை பெரியவரிடம் கேட்டார். பெரியவரும், ஆமாம் ஐயா! மீன் என்றால் எனக்கு உயிர்; நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து இங்குள்ள மீன்களுக்கு உணவளிப்பேன் என்றார். அவரிடம் பேசி முடித்து விட்டு சீடனின் பக்கம் திரும்பினார்.

பார்த்தாயா! இருவரும் மீனின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார

்கள் என்பது அவர்கள் "மீனென்றால் உயிர்" என்று கூறும் போதே தெரிந்திருக்கும். அந்த இளைஞன், மீன்களை "ருசி" என்னும் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான். அவன் தன்னுடைய சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்தினான். ஆனால்., அந்த பெரியவர் மீன்கள் பசியாறுவதற்கு சுயநலமில்லாமல் உணவளித்தார். இருவருக்கும் மீன்கள் பிடித்திருந்தது,

ஆனால்., இருவரின் நோக்கம் வேறு. மொத்தத்தில்,

"அன்பில் சுயநலம் இருந்தால் அது அன்பே இல்லை; சுயநலமில்லாத அன்பு தான் உண்மையானது, நிரந்தரமானது" என்று

குரு சீடனுக்கு புரிய வைத்தார்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வி - மதுரை மாவட்டம் - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள்கள் - மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - Madurai District - Annual Examination Time Table and Question Papers for 6th to 9th Standard Students - Madurai District Chief Educational Officer Proceedings)...

 

>>> பள்ளிக்கல்வி - மதுரை மாவட்டம் - 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு தேர்வு கால அட்டவணை மற்றும் வினாத்தாள்கள் -  மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (School Education - Madurai District - Annual Examination Time Table and Question Papers for 6th to 9th Standard Students - Madurai District Chief Educational Officer Proceedings)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01-01-2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (D.A. Hike) உயர்வுக்கான (38% லிருந்து 42%) அரசாணை வெளியீடு (Revision of rates of Dearness Allowance to Central Government employees effective from 01.01.2023)...

 01-01-2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (D.A. Hike) உயர்வுக்கான (38% லிருந்து 42%) அரசாணை வெளியீடு (Revision of rates of Dearness Allowance to Central Government employees effective from 01.01.2023)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...



>>> கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.


பொருள்:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


பழமொழி :

Do in rome as the romans do.


ஊருடன் ஒத்து வாழ்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன்.


 2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.


பொன்மொழி :


பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.


பொது அறிவு :


1. சீக்கிய மதத்தின் தாயகம் எது? 


 பஞ்சாப்.


 2. டென்மார்க்கின் தேசிய சின்னம் எது? 


கடற்கரை.


English words & meanings :


 marigold - plant of the daisy family. noun. சாமந்தி வகை தோட்டச் செடி. செண்டு மல்லி. பெயர்ச்சொல்.


ஆரோக்ய வாழ்வு :


பால் பொருள்களான பால். யோகர்ட், சீஸ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 மிக அதிகமாக இருக்கின்றது.


இந்த பால் பொருள்களில் வெறும் வைட்டமின் பி12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, பொட்டாசியம், ஜிங்க், கோலின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.


கணினி யுகம்


Ctrl + (Left arrow) - Move one term to the left at a time. Ctrl + (Right arrow) - Move one term to the right at a time


நீதிக்கதை


கதை :


ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 




ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 




குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 




அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 




வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 




வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 




புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 




நீதி :



அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.


இன்றைய செய்திகள்


03.04. 2023


* 2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சேவை மூலம் ரூ.6345 கோடி வருவாய்.


* நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு - மத்திய அரசின் புதிய திட்டம்.


* ரூ.4,400 கோடியில் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒப்பந்தம்.


* எளிதில் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை.


* இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.


* இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.


* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி.


* மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா சாம்பியன்.


Today's Headlines


* 6345 crore revenue for Southern Railway through passenger services in the financial year 2022-23.


 * Share in customs duty for land-granting farmers - Central Govt's new scheme.


 * 4,400 crore agreement to set up sea water desalination plant in Chennai.


 * Extra booster dose should be given to people at risk of corona infection: World Health Organization advice.


*  Ray Kurzweil, a former scientist at Google, said that in 7 years, humans will be blessed with the help of nano robots.


* ICC has released the logo for the 50 Over World Cup to be held in India.


 * Spain Masters Badminton: PV Sindhu qualifies for final.


* Miami Open Tennis: Kvitova wins women's singles.

 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...