>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளிகள் திறப்பு - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டிய தகவல்கள் (Opening of Schools - Information to check and confirm)...
1. 7.6.2023 முதல் 9.6.2023 தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
2.தூய்மைப் பணிகள் மேற்கொள்வதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. 9.6.2023 அன்று நடைபெற உள்ள SMC கூட்டம் 26.3.2023 அன்று அனைத்து பள்ளிகளிலும் தவறாமல் உரிய வழிகாட்டுதல்படி நடத்திட வேண்டும்.
3. EMIS இல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
இம் மாணவர்கள் அடுத்த உயர் வகுப்பில் சேர்ந்துள்ள பள்ளி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
4. தங்கள் ஊரில் உள்ள பள்ளி வயது 5+ குழந்தைகள் அனைவரும் பள்ளியில் சேர்ந்துள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.
5. பள்ளியில் சேர்த்த மாணவர்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.
6. அனைத்து ஆசிரியர்களுக்கான TIME TABLEஐ EMIS தளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.
7. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கி அடுத்த உயர் வகுப்பில் மாணவர்கள் பெயர் விடுபடாமல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
8. தங்கள் பள்ளி EMIS தளத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் பெயர் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
9. Attendance App இல் வகுப்பு வாரியாக மாணவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும். (மாணவர்கள் வருகை பதிவு செய்யும் வகையில்)
10. குடிநீர் கழிவறை மின்வசதிகள் பள்ளி வளாகம் பயன்படுத்த ஏற்றதாக உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
11. எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளை புதிய பொலிவுடன் மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் வகையில் அமைத்தல் வேண்டும்.
12. பள்ளிகளுக்கு தற்போது பிரிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. பிரிண்டருடன் இணைத்து செயல்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கணிணிகளை/ மடிக்கணிகளை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
🌹டிட்டோஜேக் கூட்டம் இன்று சென்னையில் கூடியது.
🌷தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு(டிட்டோ ஜேக்) வின் மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
*🌷(1)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(2)தமிழக ஆசிரியர் கூட்டணி.
*🌷(3)தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(4)தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(5)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(சண்முகநாதன்).
*🌷(6)தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்(தியோடர்).
*🌷(7)தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(8)JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*🌷(9)தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்.
*🌷(10)தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.
*🌷ஆகிய சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
*🌷இக்கூட்டத்தில் ஆசிரியர்களின் பதவி உயர்விற்கு TET தேர்வு அவசியமில்லை என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது. தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவது எனவும் தேவைப்படும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
*🌷இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் இயற்றப்பட்டது.
*🌷(1)12.6.2023 ல் வட்டாரத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.
*🌷(2)26.6.2023 ல் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.
*🌷(3)14.7.2023 ல் மாநில தலைநகரில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி மற்றும் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்குதல்.
*🌷(4)மீண்டும் டிட்டோஜேக் கூட்டத்தை 18.6.2023 ல் சென்னையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் கூட்டுதல்.
*ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET தேர்வு தேவையில்லை என வலியுறுத்திட டிட்டோஜாக் முடிவு
*👉👉12.6.23- வட்டார தலைநகர் ஆர்ப்பாட்டம்
*👉👉26.6.23 - மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்
*👉👉14.7.23 -மாநில தலைநகர் பேரணி
நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025 1) 2025, ஒரு முழு வர்க்க எண் 2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...