கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.08.2023 - School Morning Prayer Activities...

 

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஈகை


குறள் :233

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.


விளக்கம்:


ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.



பழமொழி :

As rare as hen's teeth


அத்தி பூத்தார் போல.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.



2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! விவேகானந்தர்


பொது அறிவு :


1. இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது எது?


விடை: பரம் வீர் சக்ரா.


2. இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?

விடை: தேசிய திரைப்பட விருது.


English words & meanings :


 neu·ro·ma·ta - a tumor formed of nerve tissue., noun. நரம்பு கட்டி. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு : 


வெந்தயம்: சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.


நீதிக்கதை


ஒரு நாள் சுந்தர், சிவா என்ற இரண்டு நண்பர்கள் வேலை சம்மந்தமாக பக்கத்து ஊருக்கு சென்றார்கள். அப்போது, இரவு நெருங்கிவிட்டதால் குளிரவும் தொடங்கி விட்டதாலும் இருவரும் விஷயங்களைப் பற்றி பேசியபடியே பயம் தெரியாமல் நடந்தார்கள். ஒரு மரத்தில் ஏறி இரவைக் கழித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த சமயத்தில், அவர்கள் எதன்மீதோ கால்தடுக்கி எப்படியோ உருண்டு ஆழமான கிணறு ஒன்றில் விழுந்துவிட்டார்கள். இருவருக்கும் நீச்சல் தெரியும் என்பதால் நீரில் மூழ்கவில்லை. ஆனால், மிக ஆழமான பாசிபடர்ந்த கிணறு என்பதாலும், இருட்டு என்பதாலும் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. கிணற்றில் விழுந்த நிலவின் பிம்பம் மட்டுமே இருக்க இருவரும் விடியும்வரை கிணற்றுக்குள்ளேயே இருந்தார்கள். விடிந்த பிறகு வெளிச்சம் பரவ ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருந்த கொஞ்சம் நம்பிக்கையும் இருண்டுபோனது. ஏனென்றால், அவர்கள் நினைத்ததைவிட கிணறு மிக மிக ஆழமாக இருந்தது. அதைவிட மோசமாக, அதிலிருந்து ஏறி வர எந்தப் பிடிப்போ, படிகளோ எதுவுமே இல்லை. சேறும் சகதியும் வெளியேறுவது கடினமாக இருந்தது.


அதனால், சுந்தர் மிகவும் சோர்ந்து போனார். ஆனால், சிவா சற்று நேரம் அமைதியாக தியானத்தில் அமர்ந்தார். பிறகு யோசிக்க ஆரம்பித்தார். அப்போது, கிணற்றின் ஒரு மூலையில் காட்டு மரம் ஒன்றின் கனமான வேர் பரவி இருப்பது அவர் கண்ணில்பட்டது. அதைப் பார்த்ததும், அடியில் இருந்து ஒரு கல்லை எடுத்து தட்டித்தட்டி சிறு மூங்கில் கழி போல் செய்தார்.


சட்டென்று கிணற்றுக்குள் மூழ்கி, வந்தார். அந்தக் கல்லால் வேரைத் இரு துண்டுகளாக வெட்டி எடுத்தார். வேர்க்குச்சிகளை பிடிமானமாகப் பயன்படுத்தி மேலே ஏறுவோம் என சுந்தரை அழைத்தார். ஆனால் அவர் பயந்து நடுங்கி சிவாவிற்கு வர மறுத்து விட்டார்.சிவா நண்பனை சுமந்து செல்லவும் முடியாது.அதே சமயம் நண்பனை கிணற்றுக்குள்ளேயே விட்டுவிட்டுப் போகவும் முடியாது.


அதனால், சிவா ஒரு சில நிமிடங்கள் யோசித்து, பின் சுந்தரிடம் எனக்கு ஒரு மந்திர வார்த்தை தெரியும். அதைச் சொன்னால் எந்தவித பயமும் வராது. அதைத்தான் நான் இவ்வளவு நேரம் சொல்லி தியானம் செய்தேன். நீயும் சொல். உனக்கும் அச்சம் இருக்காது. சுலபமாக நாம் வெளியேறிவிடலாம் என்றார். அதைக் கேட்டதுமே சுந்தர் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்தது. அவசர அவசரமாக என்ன மந்திரம் அது, சொல் என்றார். உடனே சிவா  இது என்ன நமஇவெயா... ? என்று சுந்தர் கேட்டார் உனக்கு கிணற்றை விட்டு வெளியேற ஆசை இருக்கிறதா இல்லையா? என்று சிவா கேட்டதும், இருக்கிறது. என்று சுந்தர் கூறினார்.


அப்படியானால் கேள்வி எதுவும் கேட்காமல் மந்திரத்தைச் சொல் என்று சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர்கள் பயணம் தொடர்ந்தது. சிவா கூறினார். அதனால், சுந்தரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.


உடனே அவர் மனதிலும் நம்பிக்கை உண்டானது. பிறகு இருவரும் சிரமப்பட்டு வெளியில் வந்தார்கள். வழியில் சுந்தர், சிவாவிடம் எனக்குத்  தெரியாமல் நீ எப்போது மந்திர தந்திரங்களைக் கற்றாய்? நீ சொன்ன மந்திர வார்த்தையைச் சொன்னபோது எனக்குள் ஒருவித ஆற்றல் பொங்கி      எழுந்தது. அபூர்வமான இந்த மந்திரத்தைப்போல் இன்னும் ஏதாவதுஉனக்கு தெரியுமா? அவற்றையும் சொல்லித் தருகிறாயா? என்று கேட்டார்.


அதற்கு சிவா, சிரித்துக் கொண்டே, நண்பா என்னை மன்னித்துவிடு. எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது. நான் உனக்கு சொல்லித் தந்தது மந்திர வார்த்தை இல்லை. 


மனதில் இருந்த எதிர்மறை எண்ணத்தை போக்கி உன்னை நம்பிக்கையுடன் செயல்பட நான் சொல்லியது. நம்பிக்கை மனதில் இருந்தால் வெல்லலாம் யாவரும் (நமஇவெயா) முதல் எழுத்துக்கள்தான் என்று கூறினார்


இன்றைய செய்திகள்


08.08. 2023


*மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்.


* தன் நாட்டில் ஒரு கிராமத்தையே காலி செய்யும் ரஷ்யா. இந்தியாவிற்கு போட்டியாக விண்வெளி முயற்சி.


* தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும்-  வானிலை ஆய்வு மையம் தகவல்.


*ஆர்சிபி அணியை தொடர்ந்து புதிய பயிற்சியாளரை நியமித்தது ஹைதராபாத் அணி.


*வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் கோகோ காப்.


Today's Headlines


*Delhi Emergency Ordinance Amendment Bill is passed in the State Assembly through voting.


* Russia evacuates a village in its own country. Competing with India's space effort.


* It will be hot in Tamil Nadu today and tomorrow - Information from Meteorological Department.


*Hyderabad has appointed a new coach after RCB.


*Coco Cope wins Washington Open tennis title

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (Bikes should not be allowed to ride without a license - High Court Madurai Bench)...

 லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்ட அனுமதிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை (Bikes should not be allowed to ride without a license - High Court Madurai Bench)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) - இரண்டாம் நிலை காவலர் (போலீஸ்) தேர்வு அறிவிப்பு - காலிப் பணியிடங்கள்: 3359 - இணைய வழி விண்ணப்பம் கடைசி தேதி : 17.09.2023 (Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) - Grade II Constable (Police) Examination Notification - Vacancies: 3359 - Online Application Last Date : 17.09.2023)...



>>> தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) - இரண்டாம் நிலை காவலர் (போலீஸ்) தேர்வு அறிவிப்பு - காலிப் பணியிடங்கள்: 3359 - இணைய வழி விண்ணப்பம் கடைசி தேதி : 17.09.2023 (Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) - Grade II Constable (Police) Examination Notification - Vacancies: 3359 - Online Application Last Date : 17.09.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை - பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Regarding the main demands of the Teachers and staff, detailed consultation with Hon'ble Thangam Thenarasu - Minister of Finance and Human Resource Management and senior officers - Hon'ble Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education)...





 ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை - பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Regarding the main demands of the Teachers and staff, detailed consultation with Hon'ble Thangam Thenarasu - Minister of Finance and Human Resource Management and senior officers - Hon'ble Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education)...


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்  அறிவுறுத்தலின்படி மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து  ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை மேற்கொண்டோம்.


@Tamil Nadu School Education Department


- பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



1839 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை, நாள்: 07-08-2023 வெளியீடு (1839 COMPUTER INSTRUCTOR POSTS PAY AUTHORIZATION ORDER UPTO DECEMBER 2023 ISSUED, DATED: 07-08-2023)...

 

>>> 1839 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் கொடுப்பாணை வழங்கும் அதிகார ஆணை, நாள்: 07-08-2023 வெளியீடு (1839 COMPUTER INSTRUCTOR POSTS PAY AUTHORIZATION ORDER UPTO DECEMBER 2023 ISSUED, DATED: 07-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புகழ்


குறள் :232


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.



விளக்கம்:


புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.



பழமொழி :

As is the king, so are subjects


அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.



2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல. விவேகானந்தர்


பொது அறிவு :


1. இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது?


விடை: பாரத ரத்னா.


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது.



English words & meanings :


 inaugurate -initiate துவக்கி வைத்தல்; 

saplings - young plant நாற்றுகள்


ஆரோக்ய வாழ்வு : 


வெந்தயம்: இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.


ஆகஸ்ட்07


இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.


கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்


கலைஞர் மு. கருணாநிதி

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.

கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.


இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.


நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.




நீதிக்கதை


ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 


அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 


இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன.அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. 


“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லா முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 


அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது. 


அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியானாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கிறோம். “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.



அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.நம்மை பார்த்துமா இவை பயப்படுகின்றன? இனி நாம் இந்த நதியில் விழுந்து சாகாமல்  நாமும் இவ்வுலகில் தைரியமாய் வாழ வேண்டும் என முடிவு செய்தன.


இன்றைய செய்திகள்


07.08. 2023


*மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.


*ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜோபைடன் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வருகை.


*கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மராத்தான்.


*ஜனாதிபதி நாளை வருகை- புதுச்சேரியில் இரண்டு நாள் ட்ரோன்கள் பறக்க தடை.


*உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தங்கம் வென்று சாதித்த 17 வயது இந்திய வீராங்கனை அதிதி.


*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சீனா - தென்கொரியா ஆட்டம் சமன் ஆனது.


Today's Headlines


*Students don't get stressed : President Draupadi Murmu at Madras University Convocation.


*Joe Biden will visit India on September 7 to participate in the G-20 conference.


* Kalainjar 's hundredth International Marathon made Guinness World Record.


*President's visit tomorrow- Drones will be banned in Puducherry for two days.


*17-year-old Indian archery champion Aditi has won gold at the World Archery Championships.


*Asian Champions Cup Hockey: China vs South Korea draw.


எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் (TLMs) - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன் (Ennum Ezhuthum - Teaching Learning Materials - Tamil Vowels, Consonants, English Alphabets & Colors Name - with Pictures)...



>>> எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன் (Ennum Ezhuthum - Teaching Learning Materials - Tamil Vowels, Consonants, English Alphabets & Colors Name - with Pictures)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...