கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தங்கம் தென்னரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தங்கம் தென்னரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Old Pension Scheme - Objection to Finance Minister's notification - Request to Chief Minister Stalin



பழைய ஓய்வூதியத் திட்டம் - நிதி அமைச்சரின் அறிவிப்புக்கு எதிர்ப்பு - முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை


கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதலமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது. மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயல் என அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.


கடந்த 2003-ம் ஆண்டு பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, 2004 ஜனவரி 1-ம் தேதிமுதல் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதே நடைமுறையில் 01-04-2003 முதலே தமிழ்நாடு அரசும் புதிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டப்படி, அரசு ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. இது தவிர பணவீக்கத்திற்கு ஏற்ப ஓய்வூதியத்தில் மாற்றங்களும் செய்யப்பட்டது.


இதன்படி பார்த்தால் ஒருவரின் ஆண்டுச் சம்பளம் 15 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றால், அவர்களின் மாத ஓய்வூதியம் சுமார் 62,500 ரூபாயாக இருக்கும். (ஆண்டுக்கு 15 லட்சத்தில் 50% = 7.5 லட்சம் ரூபாய் அதாவது மாதம் 62,500 ரூபாய்) ஆக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அக விலைப் படி உயர்வுக்கு ஏற்ப இந்த தொகை அவ்வப்போது ஓய்வூதியதார்களுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வருகிறது.


இந்த பழைய ஓய்வூதியம் என்பது 2003ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறையில் இருக்கிறது. ஆனால் 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியம் தான் நடைமுறையில் இருக்கிறது. இது பெரிய அளவில் ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இல்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சரியான தொகையை கணிப்பது கடினமாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை விட மிக குறைவாகவே உள்ளது. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அகவிலைப் படியின் படி உயர்வு இருக்காது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.


இந்த சூழலில் மத்திய அரசு  புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டப்படி, உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். ஒருவர் 25 ஆண்டு அரசு பணியாற்றி ஓய்வு பெறுவார் என்று வைத்து கொண்டால் அவரது கடைசி 12 மாத சம்பளத்தின் அடிப்படை ஊதியத்தின் சராசரியில் இருந்து 50 சதவீதம் வரை ஓய்வூதியம் கிடைக்கும். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து 10ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். அரசு ஊழியர் இறக்கும் பட்சத்தில் அவரது ஓய்வூதியத்தில் 60 சதவீத அடிப்படையில் ஓய்வூதிய பலனாக துணைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் குறித்து அண்மையில் சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும் போது, புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS or Unified Pension Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கும் திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை என்றார்.


மேலும் தென்னரசு கூறும் போது, மத்திய அரசு புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மிக விரைவில் அந்த வழிக்காட்டுதல்கள், செயல்முறைகள் வழிகாட்டப்படும் என்று நம்புகிறோம். அது வெளியான உடனேயே நம்முடைய மாநிலத்தில் தக்கதொரு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முதல்வருடன் கலந்து ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். அந்த குழுவின் வழிக்காட்டுதல்படி நம்முடைய மாநிலத்தில் அந்த ஓய்வூதிய திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த நம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருந்தார். அதாவது மத்திய அரசு அமல்படுத்தும் திட்டத்தை தமிழகத்திலும் மாநில அரசு அமல்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதே கருத்தாக உள்ளது. இந்நிலையில் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்மைச்சர் ஸ்டாலினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை புறக்கணிக்கக் கூடாது.

மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. இது வாக்குறுதியை மீறிய செயலாகும். குழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" இவ்வாறு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் அறிவிப்பு


Steps will be taken to implement the Unified Pension Scheme for Government Employees and Teachers - Tamil Nadu Finance Minister Mr. Thangam Thennarasu


 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டவுடன், அதனை ஆராய ஒரு குழு அமைத்து விரைவில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 309ல் அறிவித்த  பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு (Old Pension Scheme) பதிலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (Unified Pension Scheme) அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்


- தமிழ்நாடு நிதி அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அறிவிப்பு




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Keeladi selected as the Best heritage tourism site...

 சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு...


Keeladi selected as the Best heritage tourism site...


உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில்,  மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 


பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை!


- அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...








பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...

 "பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது - சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..."


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.


இது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது- சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...








தமிழ்நாட்டுப் பள்ளிக் கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தியவர் கலைஞர் - அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...

 1  கி.மீக்கு ஒரு ஆரம்பப்பள்ளி, 3 கி.மீக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீக்கு ஒரு மேல்நிலைப்பள்ளினு தமிழ்நாட்டுக்கு பள்ளிக் கட்டமைப்பை உருவாக்கி செயல்படுத்தியவர் கலைஞர் - அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


நிதி நிலைமை சீரடைந்த உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் - வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதி அமைச்சர் வேண்டுகோள்...



நிதி நிலைமை சீரடைந்த உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும் - வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட வேண்டும் என நிதி அமைச்சர் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மின்கட்டணம் செலுத்த அவகாசம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...



🚨 மின்கட்டணம் செலுத்த அவகாசம்


 💡மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜன.2ம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம்


💡 மின்கட்டணத்துடன் 18-ம் தேதி அபராதத் தொகை செலுத்தியிருந்தால் அடுத்த மாத மின் கட்டணத்துடன் சரி செய்யப்படும் 


💡 இச்சலுகை வீடு, வணிக நிறுவனம், தொழிற்சாலைகள், சிறு, குறு தொழில் நுறுவனங்களுக்கும் பொருந்தும்


அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...


கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை (Banks should not deduct from the beneficiaries of Kalaignar Magalir Urimai Thittam - Hon'ble Minister of Finance and Human Resource Management Mr. Thangam Thennarasu's statement)...

 கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளிடமிருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக் கூடாது - மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் அறிக்கை (Banks should not deduct from the beneficiaries of Kalaignar Magalir Urimai Thittam - Hon'ble Minister of Finance and Human Resource Management Mr. Thangam Thennarasu's statement)...



➤ மகளிருக்கு அளிக்கப்படும் உரிமைத் தொகையில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்யக்கூடாது;


➤ மாநில அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே

புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 


➤ ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்


➤ உரிமைத் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதுகுறித்து 1100 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்


- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை


கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

 

ரூ 1000 உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


இ சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

 

57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எஸ்எம்எஸ்  மூலம் அனுப்பப்பட்டுவிட்டது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை - பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Regarding the main demands of the Teachers and staff, detailed consultation with Hon'ble Thangam Thenarasu - Minister of Finance and Human Resource Management and senior officers - Hon'ble Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education)...





 ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை - பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Regarding the main demands of the Teachers and staff, detailed consultation with Hon'ble Thangam Thenarasu - Minister of Finance and Human Resource Management and senior officers - Hon'ble Anbil Mahesh Poyyamozhi, Minister of School Education)...


மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்  அறிவுறுத்தலின்படி மாண்புமிகு தங்கம் தென்னரசு - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து  ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பணியாளர்களின் பிரதான கோரிக்கைகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இணைந்து விரிவான ஆலோசனை மேற்கொண்டோம்.


@Tamil Nadu School Education Department


- பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள திரு. சோமநாதன் கமிட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் எடுத்துள்ள முடிவுகளை தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேட்டி - செய்திக்குறிப்பு எண்: 040, நாள்: 22-07-2023 (Regarding the Old Pension Scheme Finance Minister Mr. Thangam Thennarasu's interview that Tamilnadu government is in a position to scrutinize the decisions taken by Andhra State & Mr. Somanathan Committee set up by the Union Government - Press Release No: 040, Date: 22-07-2023)...


>>> பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள திரு. சோமநாதன் கமிட்டி மற்றும் ஆந்திர மாநிலத்தில் எடுத்துள்ள முடிவுகளை தமிழ்நாடு அரசு கூர்ந்து ஆய்வு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நிதியமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பேட்டி - செய்திக்குறிப்பு எண்: 040, நாள்: 22-07-2023 (Regarding the Old Pension Scheme Finance Minister Mr. Thangam Thennarasu's interview that Tamilnadu government is in a position to scrutinize the decisions taken by Andhra State & Mr. Somanathan Committee set up by the Union Government - Press Release No: 040, Date: 22-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு அலுவலகங்கள் முழுவதும் தொடர்பு கொள்ள தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் - தொழில்துறை, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு...

 


தமிழகத்தில் மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முழுவதும் தொடர்பு கொள்ள தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.


சென்னையில் தமிழ் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,


தமிழகத்தில் அரசு கோப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அரசாங்க கோப்புகளை மொழிபெயர்ப்பதை உறுதி செய்ய தலைமை செயலாளர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, இந்த செயல்முறைக்காக புதிதாக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் இந்த செயல்முறையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க  நோடல் அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் - சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் கிளாசிக்கல் தமிழ் (CIET) இன் கீழ், முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் விருதுகளை வழங்குவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து இரு முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இந்த அமைப்பை தொடர தவறிவிட்டது. ஆனால் தற்போது, திமுக அரசு மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில், தமிழ் அறிஞர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் விருதுகள் வழங்குவதை மீண்டும் தொடங்கவுள்ளது.


இதில் விருது பெற தகுதியுள்ள அறிஞர்களின் பெயர்களை பரிந்துரைக்க ஒரு குழு அமைப்பது தொடர்பாக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும், தமிழ் அறிஞர்களுக்கு தாமதமின்றி உதவி வழங்குவது மற்றும் தமிழ் அறிஞர்களின் சிலைகளை முறையாக பராமரிப்பது போன்றவை குறித்து முதல்வருடன் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.


மேலும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் (CICT), ஒரு தன்னாட்சி நிறுவனமாக தொடர்ந்து இயங்கும். என்றும் 'தரமணியில் CICTயின் தற்போதைய இடம் சரியான நிலையில் இல்லை என்பதால், பெரும்பாக்கத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டுமானப் பணிகள் முடிந்ததும், நிறுவனம் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்றும் கூறியுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...