பள்ளிக்கல்வி - 2022-23ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - கல்வித் தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்
குறள் :240
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
விளக்கம்:
தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
பழமொழி :
Be just before you are generous
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
எங்கே மனம் பயமில்லாமல், தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அங்கு அறிவு சுதந்திரமாக இருக்கும் - ரவீந்திரநாத் தாகூர்
பொது அறிவு :
1. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்?
விடை: அகிலன்
2. தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்?
விடை: மனோன்மணியம் சுந்தரனார்
English words & meanings :
geniune - sincere action or thought, உண்மையான, போலி இல்லாத.
haggard -looking exhausted and unwell,தளர்வுற்றுக் காணப்படுகிற
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி விதை : பார்கின்சன் மற்றும் அல்சைமர் குறைபாடுகளுக்பு, கொத்தமல்லி சாறு நரம்பு செல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது.
நீதிக்கதை
வியாபாரி ஒருவர். எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. கவலையில் ஆழ்ந்திருந்த அவர், வீட்டுக்குப் போக விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த, தொலைதூர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே ஆற்றின் மணலில் மெல்லிய நிலவொளியில் அமர்ந்து தன் நினைவுகளை ஓட விட்டான்.
மறுபுறம், எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம்… குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என எதிர்காலக் கவலைகள் எழுந்தன. இந்தச் சிந்தனையினாலேயே அவனுடைய வலது கை அவனை அறியாமல் ஆற்றின் மணலை துழாவி அவன் கையில் தட்டுப்பட்ட சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
விடியல் தொடங்கியது! வெளிச்சம் பரவியது. ஆற்றில் எறிய கற்கள் தீர்ந்தன. கடைசியாக கையிலிருந்த கல்லைப் பார்த்து வியந்தான். காரணம் – அது சாதாரண கூழாங்கல் அல்ல. வைரம்கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற விலைமதிப்பற்ற வைரங்களைத் தவறவிட்டு ஓடியுள்ளனர். அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான். ஒருவகையில் பார்த்தால் நம்மில் பலர் அந்த வியாபாரி மாதிரிதான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை சிறப்பாக வரவேற்கும்.
இன்றைய செய்திகள்
17.08.2023
*அறக்கட்டளைக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை தனிநபர்கள் பெயருக்கு மாற்ற முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.
* தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.
* தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்: நிலவை நெருங்கும் சந்திராயன் 3.
*தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.
*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து... இறுதி போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.
*பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து சென்றது.
Today's Headlines
*Properties donated to a trust cannot be transferred to the individuals- A striking verdict by Madras High Court.
* There will be a raise in temperature for two days in Tamil Nadu - Meteorological Department informs.
* ISRO scientists eager to land the Chandrayan 3: Chandrayaan 3 is approaching the moon.
* 4.2 Richter earthquake in Tajikistan.
*Women's World Cup Football...England advanced to the final.
*Indian cricket team led by Bumrah went to Ireland.
ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு-IV (குரூப்-IV) இல் சேர்க்கப்பட்டுள்ள தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தேர்வானோர் பட்டியல் (அறிவிப்பு எண்.07/2022, தேதி 30.03.2022) - (தேர்வு தேதி : 24.07.2022 FN ) 21.08.2023 FN/AN முதல் 11.09.2023 FN/AN வரை நடைபெறும் - TNPSC ( Selection List - The Physical Certificate Verification and Counselling for the Post of Typist included in Combined Civil Services Examination–IV (Group-IV Services)(Notification No.07/2022, dated 30.03.2022) - (Examination Date : 24.07.2022 FN )will be held from 21.08.2023 FN/AN to 11.09.2023 FN/AN)...
Post of Typist included in Combined Civil Services Examination–IV (Group-IV Services)
(Notification No.07/2022, dated 30.03.2022)
The candidates whose register numbers mentioned below have been provisionally admitted to Physical Certificate Verification and Counselling to the post of Typist based on the marks and rank position hosted in the Commission’s website on 24.03.2023, for which the written examination was conducted by the Commission on 24.07.2022 FN. The Physical Certificate Verification and Counselling for the said post will be held from 21.08.2023 FN/AN to 11.09.2023 FN/AN (except Sundays, Onam (29.08.2023) and Krishna Jayanthi (06.09.2023)). The Physical Certificate Verification and Counselling will be held at the Office of the TNPSC, No.3, TNPSC Road, Chennai - 600 003.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: புகழ்
குறள் :239
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
விளக்கம்:
புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.
பழமொழி :
Be friendly but not familiar
அனைவருக்கும் நண்பனாக இரு. ஆனால் நெருங்கி பழகாதே
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
சுயராஜ்ஜியம் என்பது எனது பிறப்பு உரிமை. அதை நான் பெறுவேன் - பால கங்காதர் திலக்
பொது அறிவு :
1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்?
விடை: முத்துலெட்சுமி ரெட்டி
2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது?
விடை: ஈரோடு
English words & meanings :
Satch-el - a small bag. Noun. சிறு புத்தகப் பை. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி விதை : கொத்தமல்லி விதைகள் கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும் இவற்றில் செம்பு, துத்தநாகம், இரும்பு மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.
நீதிக்கதை
காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்
இன்றைய செய்திகள்
16.08. 2023
*77 வது சுதந்திர தினம்... வாகா எல்லையில்
கொடியிறக்கும் நிகழ்ச்சி.. கம்பீரமாக நடைபெற்ற இந்திய வீரர்கள் அணிவகுப்பு....
*எலான் மஸ்க் இன் அடுத்த சம்பவம்... சீக்கிரமே வீடியோ கால் பேசலாம்.... X இல் புதிய அம்சம்...!
*46வது பிறந்தநாள் கொண்டாடிய மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில்.
*முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பு.
*அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம். முதல்வர்
மு. க. ஸ்டாலின் பேச்சு.
*பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து... ஸ்வீடனை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின்.
Today's Headlines
*77th Independence Day celebration at Wagah border . In Flag hoisting ceremony Indian soldiers held a proud parade.
* Elon Musk's next incident... Let's have a video call soon.... New feature in X...!
*Madurai Vaigai Express celebrated its 46th birthday.
*Kalpana Chawla Award to Mrs. Muthamizhselvi Chief Minister M.K. Honoured by Stalin.
*Extension of breakfast program in government schools. Chief Minister
M. K. Stalin's speech.
*Women's World Cup Football... Spain advanced to the final after defeating Sweden.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Attention Sabarimala Devotees - Devasam Board Notice
சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...