கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :244


மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.


விளக்கம்:


நிலைத்து வரும் உயிர்களைக் காத்து அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.


பழமொழி :

Better an open enemy than a false friend


போலி நண்பனை விட நேரிடை எதிரி மேல்



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்


பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் இயற்கையின் சொர்க்கம் எது?



விடை: ஜவ்வாது மலை


2. தமிழ்நாட்டின் மிக பெரிய அணை எது?


விடை: மேட்டூர் அணை


English words & meanings :


 Predators - preying upon other living things வேட்டையாடுபவர்கள், வேட்டையாடுபவைகள்


Venomous - poisonus விஷம் நிறைந்த


ஆரோக்ய வாழ்வு : 


கடுகு - ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.


ஆகஸ்ட்23


அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது


நீதிக்கதை


ஓர் ஊரில் ஒரு குருகுலம் நடந்து வந்தது.அங்கு பயின்று வந்த சீடர்கள்  அனைவருமே பெரும் திறமைசாலிகள் என்று அனைவராலும் பேசப்பட்டும் வந்தது.அந்த குருகுலத்தில் வருடாவருடம் சிறந்த சீடன் யார் என்று தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறந்த சீடன் என்ற பட்டமும் வழங்கப்படும்.இந்த வருடமும் யார் சிறந்த சீடன் என்பதை தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்தது.குருகுலத்தின் தலைமை குருவும் யார் சிறந்த சீடன் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆலோசனையில் இறங்கினார்.குருகுலத்தில் உள்ள  அனைத்து குருக்களையும் அழைத்தார்.அவர்களிடம் ஆலோசனை நடத்தினார் யார் சிறந்த மாணவன் என்று. இறுதியாக எல்லோரிடமும் கலந்து பேசி ஒரு மூன்று சீடர்களை தேர்ந்தெடுத்தனர்.ஆனால் சிறந்த சீடன் என்ற பட்டம் ஏதேனும் ஒரு மாணவனுக்கு தான் சென்று சேர வேண்டும் என்பது குருகுலத்தில் விதிகளில் ஒன்று.ஆனால் இந்த மூன்று மாணவர்களும் ஒருவருக்கொருவர் எதிலும் விட்டுக்கொடுத்தவர்கள் இல்லை.கல்வி, வீரம் மற்ற கலைகள் என எல்லாவற்றிலும் சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.மிகுந்த யோசனைக்கு பிறகு ஒரு போட்டியின் மூலம் மூவரில் யார் சிறந்தவர் என்று கண்டுபிடிக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்.இப்பொழுது என்ன போட்டி வைக்கலாம் என்று யோசித்தார்.


சரி வாருங்கள் சீடர்களே உங்களுக்கு ஒரு வேலை சொல்வதற்காக தான் உங்களை இங்கு அழைத்தேன்.அதை நீங்கள் மறுத்து விடக் கூடாது என்றார்.சீடர்களும் நாங்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் வேலையை செய்து முடிப்போம் குருவே கூறுங்கள் என்றனர்.


நான் ஆசை ஆசையாக ஒரு கிளி ஒன்றை கூண்டில் வைத்து வளர்த்து வந்தேன்.அதற்கு உணவு அளிப்பதற்காக இன்று காலை கூண்டை திறந்தேன் அந்த நேரத்தில் அந்த கிளி கூண்டை விட்டு வெளியே வந்து பறந்து சென்றுவிட்டது.எனக்கு அந்த கிளியென்றால் மிகவும் பிரியம் எனக்காக அந்த கிளியை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும்‌ என்றார்.


குருவும் தன் சீடர்களை அந்த இடத்திற்கு அழைத்து சென்றார்.அங்கு நீண்ட மற்றும் அகலமான ஆறு ஒன்று தெரிந்தது.அதை தாண்டி ஒரு சிறு தீவு தெரிந்தது.என் கிளி இந்த ஆற்றை கடந்து அந்த தீவுக்கு தான் சென்றது என்றார் குரு.அப்பொழுது அங்கு பழுதடைந்த நீண்ட பாலம் ஒன்று இருந்தது.அதன் வழியாக அந்த ஆற்றை கடக்கலாம்.ஆனால் அந்த பாலத்தின் வழியாக ஒரு நேரத்தில் ஒரு சீடர் மட்டும் தான் செல்ல முடியும்.


முதலாவதாக இருந்த அந்த சீடர், தான் அந்த பாலத்தை கடந்து கிளியை கொண்டு வருவதாக கூறி பாலத்தில் ஏறி நடக்க ஆரம்பித்தார்.இந்த சீடர் நடக்க  நடக்க பாலம் ஆடிக்கொண்டே இருந்தது.எப்படியாவது கிளியை பிடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னேறி நடந்தான்.ஆனால் தீடீரென பாலத்தின் நடுவே சிறிது தூரம் எந்த ஒரு கட்டைகளும் இல்லாமல் பாலம் சிதைந்து இருந்தது.இந்த இடைவெளியை எப்படி கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு ஒரு யோசனை தோன்றியது பாலத்தின் ஒரு பக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டே இந்த இடைவெளியை கடந்து விடலாம் என்று யோசித்தான்.அவ்வாறே பிடித்து தொங்கிக் கொண்டே நகர்ந்தான்.பாதி தூரம் சென்றதும் கை வலி பின்னியது.பாலத்திலிறுந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்தான்.ஆற்றில் முதலைகள் இருப்பதை அறிந்து உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீச்சல் அடித்து கரைக்கு திரும்பினான்.இவ்வாறு மூவரும் ஆற்றில் விழுந்து நம்மால் இந்த பாலத்தை கடக்கவே முடியது என்ற மனநிலையை தங்களுடைய முகத்தில் சுமந்து கொண்டு சோகமாக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தனர்.


குரு அவர்கள் மூவரையும் பார்த்தார்.சிறந்த சீடனுக்கான தகுதி இவர்களிடத்தில் இல்லை என்று அங்கிருந்து கிளம்ப முயற்சித்தார்.அப்பொழுது அங்கு இருந்த மூன்றாவது சீடன் எழுந்து வந்தான் குருவே எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டான்.நான் மீண்டும் முயற்ச்சிக்க விரும்புகிறேன் என்று கூறினான்.


குரு இந்த மூன்றாவது சீடனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.


கதையின் நீதி :


அந்த குருவிற்கு தெரியும் இல்லாத பறவையை யாராலும் கொண்டு வர முடியாது என்று.எனினும் தன்னுடைய சீடர்களின் மனநிலையை தெரிந்து கொண்டு அவர்களில் யார் ஸ்திரத்தன்மை வாய்ந்தவர்கள்.மனதளவில் சக்திவாய்ந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கவே இப்படி ஒரு போட்டியை வைத்தார்.அதில் மூன்றாவது சீடன் மற்ற இருவரை விட மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாக இருந்ததால் அவனை சிறந்த சீடன் என்று அங்கீகரித்து தேர்வு செய்தார்.


முயற்சி செய்தால் மட்டும் அல்ல,முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கூட நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.


இன்றைய செய்திகள்


23.08.2023


*சந்திராயன்-3 விண்கலம் திட்டமிட்டபடி இன்று நிலவில் தரையிறங்கும். - இஸ்ரோ 


*இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார்  சச்சின் டெண்டுல்கர். 


*சென்னையில் மேலும் 60 ஆயிரம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி.


*தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு.


* சென்னை மாவட்ட பள்ளிகள் கைப்பந்து போட்டி 31ஆம் தேதி தொடக்கம்.


* செஸ் உலக்கோப்பை இறுதிப்  போட்டியில் பிரக்ஞானந்தா - கார்ல்சனுக்கு இடையேயான முதல் சுற்று டிராவில் முடிந்தது. நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்று சாம்பியனை நிர்ணயிக்கும்.


Today's Headlines


*Chandrayaan-3 spacecraft will land on the moon today as scheduled.  - ISRO


 * Sachin Tendulkar has been announced as the National Symbol by the Election Commission of India.


 *Breakfast for 60 thousand more students in Chennai.


 * Intensive surveillance to prevent the spread of new type of corona virus in Tamil Nadu.


 * Chennai District Schools Volleyball Tournament will start on 31st.


*. The game 1 of Chess World Cup final between Praggnanandhaa and Calrsen ended in a draw. Tomorrow the second round will be determined the champion.

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021 - Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


>>> கலப்பு திருமண தம்பதியினரின் குழந்தைகளுக்கான சாதி சான்றிதழ் விவகாரம்: இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளின் சாதிச் சான்றிதழ் வழங்குதல் - தெளிவுரை வழங்குதல் - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - அரசாணை (நிலை) எண்.08, நாள்: 09-02-2021 வெளியீடு (G.O Ms.No. 08, Dated: 09-02-2021  -  Backward Classes, Most Backward Classes and Minorities Welfare – Issuance of Community Certificate of the children born to the parents belonging to two different castes – Clarifications)...


கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் சாதி அல்லது தாயின் சாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற உத்தரவு இருந்தாலும், பல இடங்களில் தாயின் சாதியை அடிப்படையாக வைத்து சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுத்து வருவதாக தொடர் புகார் எழுந்த நிலையிலும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததாலும் புதிய அரசாணையை அரசு வெளியிட்ட்டிருக்கிறது.


இதன்படி அனைத்து மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் கலப்பு திருமணம் செய்த பெற்றோர் விருப்பத்தின் பேரிலேயே அவர்களுக்கு குழந்தைக்கு சாதி சான்றிதழை வழங்க வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.


வழக்கமாக தந்தையின் பெயரிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்பட்டாலும், கலப்பு திருமணம் செய்தவர்கள் தாய் சாதியின் அடிப்படையிலும் தங்கள் குழந்தைக்கு சாதி சான்றிதழ் பெறலாம் என்ற உத்தரவு இந்த புதிய அரசாணை மூலம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் (CMBFS) - வழங்கப்படும் உணவுகள் விவரம், ஒவ்வொரு மாணவருக்கான உணவுப் பொருள்களின் அளவு, கைபேசி செயலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நேரம் (Chief Minister's BreakFast Scheme - Meals to be served, quantity of food items per student, time to upload in Mobile App)...



>>> முதலமைச்சரின் காலை உணவு திட்டம் - வழங்கப்படும் உணவுகள் விவரம், ஒவ்வொரு மாணவருக்கான உணவுப் பொருள்களின் அளவு, கைபேசி செயலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நேரம்(Chief Minister's BreakFast Scheme - Meals to be served, quantity of food items per student, time to upload in Mobile App)...



>>> CMBFS Mobile App Download Link...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) - அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் செப்டம்பர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல் வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கள்ளி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 21-08-2023 (School Management Committee Meeting – Conduct of School Management Committee Meeting in September 2023 in all categories of Government Schools – Provision of Guidance – Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 21-08-2023)...

 

 

 

>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC Meeting) - அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் செப்டம்பர் 2023 மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் - வழிகாட்டுதல் வழங்குதல் சார்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கள்ளி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 21-08-2023 (School Management Committee Meeting – Conduct of School Management Committee Meeting in September 2023 in all categories of Government Schools – Provision of Guidance – Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No.: 1680/ A11/ SS/ SMC/ 2023, Dated: 21-08-2023)...


செப்டம்பர் -  2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் - 01.09.2023



செப்டம்பர் -2023 மாதம் நடைபெறவுள்ள மாதாந்திரப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தினை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வரும் 01.09.2023 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது .






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.08.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம்:அருளுடைமை


குறள் :243


அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.


விளக்கம்:


அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.


பழமொழி :

Beter pay the cook than the doctor


வைத்தியனுக்கு கொடுப்பதை விட வாணிகனுக்கு கொடு



இரண்டொழுக்க பண்புகள் :


1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்



பொன்மொழி :


முடிந்தால் மற்றவர்களைக் காட்டிலும் அறிவாளியாய் இருங்கள்; ஆனால் அதை அவர்களிடம் சொல்லாதீர்கள்.  - செஸ்டர் பீல்டு


பொது அறிவு :


1. தமிழகத்தின் முதல் ரயில் நிலையம் எது?


விடை: ராயபுரம், சென்னை


2. தெற்கின் கைலாஷ் என்பது?


விடை: வெள்ளையங்கிரி மலை


English words & meanings :


 spacecraft-a vehicle used for travelling in space.

விண்வெளிக் கப்பல்


firecracker- a loud, explosive firework; a banger.,பட்டாசுகள்


ஆரோக்ய வாழ்வு : 


கடுகு - இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.



ஆகஸ்ட்22


சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்[1].[2] இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது.


கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பாவிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்பன் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்பன் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.


நீதிக்கதை


ஒரு மரத்தில நம்ம காக்கா வாழ்ந்துட்டு இருந்துச்சு. அது உணவுக்காக ரொம்ப தேடி அலைந்து கஷ்டப்பட்டு சாப்பிட்டு வந்தது. ஒரு நாள் அது ஒய்வு எடுக்க ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து இருந்தது. அப்போ அதோட தலைக்கு மேல ஒரு குட்டி செம்மறி ஆடு பறக்குற மாதிரி தெரிஞ்சிது. அட என்னடா இது அதிசயம் செம்மறி ஆடு பறக்குதேன்னு பாத்தா, அது ஒரு பெரிய கழுகு தூக்கிட்டு போகுதுஎன்னடா இது, நம்மளும் தான் நல்ல பறக்குறோம். நமக்கு ஏன் இந்த சிந்தனை வரல, நல்ல ஒரு மாசத்துக்கு வச்சி சாப்பிடலாம் போலயே என யோசித்து கொண்டே ஒரு வாரம் முழுக்க ஆடுகள் இருக்கும் இடத்தை தேடி அலைந்தது. ஒரு வழியாக ஒரு பெரிய ஆட்டு கூட்டத்தை வளர்க்கும் இடத்தை அடைந்தது காக்கா.


பகலில் ஆடுகள் குறைவாக இருந்ததால், மாலை நேரம் வரட்டும் எல்லா ஆடுகளும் நன்றாக சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும் என அங்கிருந்த மரத்திலேயே காவல் இருந்தது காக்கா. செம்மறி ஆடுகளும் மாலை நேரம் ஆனதும் அந்த இடத்திற்கு வந்தடைந்தன. இங்குதான் காக்கா பலமான யோசனை ஒன்றை போட்டதுசின்ன ஆட்டு குட்டிய தூக்கிட்டு போக வேண்டியது தான் என எண்ணியது காக்கா. அங்கதான் ட்விஸ்ட் இருக்கு, காக்காவால செம்மறி ஆடு மேல இருந்து வெளிய வர முடியல, இறக்கையை விரிச்சி பறந்து ட்ரை பண்ணி பார்த்தும் பறக்க முடியல. காக்காவோட கால்கள், செம்மறி ஆட்டின் கடினமான ரோமங்களில் மாட்டி கொண்டதுசெம்மறி ஆட்டின் மேல் இருந்த காகத்தால் சிறிதும் அசைய முடியவில்லை. யாரோ வருவதை உணர்ந்த காகம் இறக்கைகளை அசைக்காமல் இருந்தது. ஆடுகளின் கூடாரத்திற்கு வந்த உரிமையாளர், காகம் அசையாமல் இருந்ததை கண்டு அதன் அருகில் சென்றார். காகம் தன்னுடைய ஆட்டை கடிக்க முயற்சி செய்திருப்பதை பார்த்த அவர், காகத்தை காப்பாற்றி அதன் கால்களில் கயிறை கட்டி தனது குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தார். காக்கா மாட்டி கொண்டு பரிதவித்தது.ஆகையால் குழந்தைகளே, நமக்கு என்ன வருமோ அதை செய்துவிட்டால் அதுவே நமக்கு நன்மை பயக்கும். அதை விடுத்து, மற்றவர்கள் வாழ்க்கையை வாழ முயற்சிப்பதோ, அதில் நம்மால் முடியாத ஒன்றிற்கு பேராசை படுவதோ விபரீதத்தில் தான் முடியும்.


இன்றைய செய்திகள்


22.08. 2023


*நெம்மேலியில் ரூ.4276 கோடியில் மூன்றாவது கடல் குடிநீர் திட்டம் முதலமைச்சர் 

மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.


* சந்திராயன்-2 இன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இயங்கி வருகிறது. இன்று சந்திராயன்- 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.


* ஜெய்சங்கர் உள்பட ஒன்பது பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பு.


*சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் உருவாக்கிய அக்னிப்பான் ராக்கெட் விரைவில் விண்ணில் ஏவப்படுகிறது.


*உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்:

பிரனோய் முதல் சுற்றில் வெற்றி.


*ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு - திலக் வர்மாவிற்கு இடம்.


Today's Headlines


*Chief Minister's Third sea water project at Nemmeli of Rs.4276 crores CM 

 M. K.  Stalin laid the foundation stone.


 * Chandrayaan-2's orbiter is orbiting around the Moon.  Chandrayaan-3 made contact with the lander today.  ISRO scientists are happy.


 * Nine people, including Jaishankar, accepted the post as members of the Rajya Sabha.


 *The Agnipan rocket developed by students of IIT Chennai will be launched soon.


 *World Badminton Championship:

 Prannoy won the first round.


 *India's 17-man squad for Asia Cup announced - Tilak Verma is listed.

 

புது ஊஞ்சல் - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 16-30 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ்...





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 16-31 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-31 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...