கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.0.83 - Updated on 12-09-2023 - Ennum Ezhuthum Module Changes & Bug Fixes & Performance Improvements...

 

 

TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum Module Changes....

*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  12 SEPTEMBER - 2023


*_Version: Now 0.0.83


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.09.2023 - School Morning Prayer Activities...

   

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :259


அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.


விளக்கம்:


நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.


பழமொழி :

Contentment is more than a kingdom


போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து



இரண்டொழுக்க பண்புகள் :


1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.


 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.


பொன்மொழி :


 சமூக புரட்சி பணியில்

ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை

துன்பமானது தான். ஆனால்

அவர்களது பெயர் வரலாற்றில்

நிலைத்து நிற்கிறது. அறிஞர் அண்ணா 


பொது அறிவு :


1.இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?


விடை: ஆரியபட்டா


2. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?


விடை: அக்னி



English words & meanings :


 knav·er·y - Dishonest or crafty dealing. It is very dangerous to be a friend of a knavery. Noun. வஞ்சகர். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு : 


எள்: செரிமானப் பாதையை பராமரிக்க எள் உதவுகிறது. அதில் அதிக நார்ச்சத்து மற்றும் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது மலச்சிக்கலை குணப்படுத்த உதவுகிறது.


நீதிக்கதை


அக்காளும் தங்கையும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை உண்டாகும்.


ஒரு நாள் இருவருக்கும் சச்சரவு அதிகமாயிற்று. அப்பொழுது தங்கையின் தலையை பிடித்து இழுத்து அடி அடி என்று பலமாக அடித்து விட்டாள் அக்காள்.


அதை அறிந்த பெற்றோர் அவளைத் திட்டி, ஒரு அறையில் தள்ளி, பூட்டி வைத்தனர், மேலும்,அவளுக்குப் பகல் உணவு அளிக்காமல் பட்டினி போட வேண்டும் என்று தீர்மானித்தனர்.


அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. அப்பளம், வடை, பாயசத்துடன் எல்லோரும் வயிறு நிறைய உண்டு மகிழ்ந்தனர்.


அக்காள் பட்டினியாக கிடப்பாளே என்று இரக்கப்பட்டு, பெற்றோருக்குத் தெரியாமல், உணவை எடுத்துச் சென்றாள் தங்கை.


தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, சாப்பிடச் செய்தாள். தங்கை தன்னிடம் கொண்டிருந்த அன்பையும், தான் அவளிடம் நடந்து கொண்ட மூர்க்கத்தனத்தையும் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர்மல்கியது.


“இனி, உன்னோடு ஒரு போதும் சண்டையிட மாட்டேன், இது உறுதி!” என்றாள் அக்காள்.


ரத்த பாசம் என்பது இதுதான்.


இன்றைய செய்திகள்


13.09.2023


*மழைக் காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை அறிவுரை.


* முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் செஸ் வீரர் குகேஷ்.


*மேக்சிவிஷன் கண் மருத்துவமனை தமிழ்நாட்டில் 100 கண் சிகிச்சை மையம் அமைக்கிறது முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்.


* சென்னையில் 'மெட்ராஸ் ஐ' மிகவும் வேகமாக பரவுகிறது.12 லட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த அமைச்சர் உத்தரவு.


*குறைந்த போட்டியில்  10000 ரன்கள் -சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா.


*ஆசிய கோப்பை 2023: 213 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது இந்தியா.


Today's Headlines


*Precautionary measures for the safety of students during the rainy season are advised by the School Education Department.


 * Chess player Gukesh met and greeted Chief Minister M K Stalin.


 *Maxivision Eye Hospital to set up 100 eye treatment centers in Tamil Nadu Signed agreement in presence of Chief Minister.


 * 'Madras Eye' is spreading very fast in Chennai. Minister orders to test 12 lakh students.


 *10000 runs in the shortest match - Rohit Sharma broke Sachin's record.


 *Asia Cup 2023: India lost the match by 213 runs.


 

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்ட வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 12-09-2023 (Skill Development Training for Primary and Middle School HeadMasters - List of HeadMasters to attend Madurai Pillar Center Training (District wise) - Director of Elementary Education Proceedings Rc.No: 14257/ K2/2023, Dated: 12-09-2023)...

 

 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - மதுரை பில்லர் மைய பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்ட வாரியாக) - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 14257/ கே2/2023, நாள்: 12-09-2023 (Skill Development Training for Primary and Middle School HeadMasters - List of HeadMasters to attend Madurai Pillar Center Training (District wise) - Director of Elementary Education Proceedings Rc.No: 14257/ K2/2023, Dated: 12-09-2023)...




மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறையில் தேர்தல் அலுவலர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு (Lok Sabha Election 2024 - Order to collect list of Election Officers in Education)...

 மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறையில் தேர்தல் அலுவலர்கள் பட்டியல் சேகரிக்க உத்தரவு (Lok Sabha Election 2024 - Order to collect list of Election Officers in Education)...


இணைப்பு :


>>> கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை பூர்த்தி செய்யும் படிவம்...


புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தின் படி . 2024 ஆம் ஆண்டு மக்களவைக்கு நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு பணியாளர்களின் தரவுத்தளத்தை தயார் செய்யும் பொருட்டு புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது .


இணைப்பு :


>>> Click Here to Download Election duty form... 





மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை பூர்த்தி செய்யும் படிவம் (Lok Sabha Election 2024 - Patriculars of Polling Personnel - Format)...

 


மக்களவை தேர்தல் 2024 - கல்வித்துறை சார்பாக அலுவலகம் மற்றும் அரசு / அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / அலுவலர்கள் சார்பான விவரங்களை பூர்த்தி செய்யும் படிவம் (Lok Sabha Election 2024 - Patriculars of Polling Personnel - Election Duty Details Format)...



>>> லோக்சபா தேர்தல் 2024 - வாக்குச் சாவடி அலுவலர்கள் & பணியாளர்கள் விவரம் - படிவம் (Lok Sabha Election 2024 - Patriculars of Polling Personnel - Format)...



>>> கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கடிதம் மற்றும் படிவம்...


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07-10-2023க்கு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Tamil Nadu Chief Minister Talent Exam Postponed to 07/10/2023 - Directorate of Government Examinations)...


 தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 07-10-2023க்கு ஒத்திவைப்பு - அரசுத் தேர்வுகள் இயக்ககம் (Tamil Nadu Chief Minister Talent Exam Postponed to 07/10/2023 - Directorate of Government Examinations)...


>>> Click Here to Download DGE Letter...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

சைகை மொழி - வாரத்தின் கிழமைகள் (Sign Language - Days of the Week)...



 சைகை மொழி - வாரத்தின் கிழமைகள் (Sign Language - Days of the Week)...


>>> Click Here to Download...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...