கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.10.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :273


வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.


விளக்கம்:


மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.



பழமொழி :

Discretion is better than valour


விவேகம் வீரத்தினும் சிறப்பு



இரண்டொழுக்க பண்புகள் :



1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 


2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


ஒவ்வொரு சிறுமியின் சிரிக்கும் முகமே கடவுளின் பிரசன்னத்தின் கையொப்பம்." - அமித் ரே


பொது அறிவு :


1. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?



விடை: 1919


2. இந்தியாவின் மிகப்பெரிய நதி எது?


விடை: கங்கை

English words & meanings :


 Novelty.    புதுமை

Orphan     அநாதை

Order.       ஒழுங்கு

Peahen   பெண்மயில்

Plait.       பின்னல்


ஆரோக்ய வாழ்வு : 


வாழைப்பூ: வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. 


அக்டோபர் 09


சே குவேரா அவர்களின் நினைவுநாள்


சே குவேரா (Che Guevara) என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (14 சூன் 1928 – 9 அக்டோபர் 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபெற்ற போராளி எனப்பல முகங்களைக் கொண்டவர்.




உலக அஞ்சல் தினம்


உலக அஞ்சல் தினம் (World Post Day) அக்டோபர் 9 இல் சர்வதேச ரீதியில் நினைவு கொள்ளப்படுகிறது.[1] அக்டோபர் 9, 1874இல் சுவிட்சர்லாந்திலுள்ள பேர்ன் நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட தினமே சர்வதேச அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. மொத்தம் 150 மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த அனைத்துலக அஞ்சல் ஒன்றிய கூட்டத்தில் இந்த தினம் குறித்து முடிவெடுத்து கடைபிடிக்கப்படுகிறது.


நீதிக்கதை


 காக்கையின் அருமை




ஒரு மரத்தில் ஆண் காகமும்  பெண்காகமும. பறவைகளும்


வாழ்ந்து வந்தது.அங்கிருந்து சற்று  தொலைவில்  உள்ள நகரத்துக்கு தன் குஞ்சுகளுடன் வந்து, கிடைக்கும் உணவை உண்டு மாலை ஆனதும் தனது கூட்டுக்கு சென்றுவிடும். 


தினம் தினம் மனிதர்கள் போடும் மிச்சம் மீதி உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருவதை அந்த மரத்திலே வசிக்கும் மற்ற பறவைகள் கேலி செய்தன. எங்களை போல் காட்டுக்குள் சென்று உணவு உண்ணாமல் இருப்பது உன்னால் எங்களுக்குத்தான் கேவலம் என்றன.


காகம் அந்த பறவைகளிடம் நாங்கள் மக்களிடம் சென்று சாப்பிட்டு பிழைப்பதால் நகரத்தில் சுத்தம் ஏற்படுகிறது. ஒரு விதத்தில் நாங்கள் மனிதர்கள் வீசும் கழிவுகளை உண்பதால் நகரம் சுத்தமாக ஆகிறது ஆகவே நாங்கள் உழைத்துத்தான் சாப்பிடுகிறோம். அதுவும் அவர்களாக பார்த்து கொடுப்பதை நாங்கள் சாப்பிடுகிறோம் என சொல்லியது. மயில்,புறா,குருவி போன்றவைகள் காக்கைகளை கேலியும் கிண்டலும் செய்து கொண்டுதான் இருந்தன.


நீங்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறீர்கள் அதனால் தான் மனிதர்கள் உங்களை அடிமை போல நடத்துகிறார்கள் என்றும், காக்கைகளின் நீங்கள் மாமிசபட்சிணிகள், எங்களுடன் நீங்கள் வசிப்பது எங்களுக்கு வருத்தமாக உள்ளது என்றெல்லாம் பேசின.நிறத்தையும் கேலி செய்து பேசின.மேலும் இதை கேட்ட காக்கை குஞ்சுகள் மனம் வேதனைப்பட்டு தங்கள் பெற்றோரிடம் நாம் இங்கிருந்து போய் விடலாம் என்று சொல்லின.


ஆண் காகம் உடனே தன் குஞ்சுகளை பார்த்து, குழந்தைகளே மற்றவர்கள் பேசுவதற்கும்,ஏசுவதற்கும் பயப்பட்டு நாம் கூட்டைவிட்டு சென்றோம் என்றால் நம்மால் எங்கும் வசிக்க முடியாது. எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டேதான் இருக்கும். நாம் அதனை அனுசரித்து பழகிக்கொண்டோம் என்றால் நம்மால் நன்றாக வாழமுடியும். ஆகவே யார் சொல்வதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய அருமை எல்லாம் மற்றவர்களுக்கு புரியும் போது சரியாகிவிடும் என்று அறிவுரை கூறியது. அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் கொஞ்ச நாட்களாக கவலையில் இருந்தன.


தங்களுக்குள் வருத்தப்பட்டு பேசிக்கொண்டன. இதை கவனித்த ஆண் காகமும்  பெண் காகமும் மயில்களிடம் சென்று கேட்டன.ஏன் கவலையாயிருக்கிறீர்கள்?   என்று .மயில்கள் சோகமுடன் நாங்கள் மனிதர்களின் விவசாய நிலத்தில் பயிராகும் கதிர்களை தின்று மரத்தில் வசிக்கிறோம். எங்கள் அனைவரையும் மனிதர்கள் எங்கள் மேல் கோபம் கொண்டு எங்களுக்கு மருந்து வைத்து அழிக்க முற்படுகிறார்கள்.அது மட்டுமல்ல இந்த வலை போட்டு பிடித்துச்செல்ல இன்று வருவதாக பேசிக்கொண்டிருந்தார்கள் என்று வருத்தத்துடன் சொன்னது. காகங்கள் கவலைப்படாதீர்கள் இந்த மரத்தில் வசிக்கும் உங்களை காக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றன. இவர்களால் எப்படி எங்களை காப்பாற்ற முடியும் என்று நம்பிக்கை இல்லாமல் மயில்கள் காகங்களை பார்த்தன.


இவைகள் பேசிக்கொண்டிருந்த மறு நாள் நான்கைந்து மனிதர்கள் மரத்தின் அருகில் வந்து நின்று மயில்களை எப்படி பிடிக்கலாம் என பேசிக்கொண்டிருந்த பொழுது திடீரென்று அந்த மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான காகங்கள் கிளம்பி அந்த மனிதர்களை நோக்கி பறந்து வந்தன. வந்தவைகள் மனிதனின் தலை மேல் கொத்துவதற்கு பாய்ந்து வர அங்கிருந்த மனிதர்கள் ஐயோ, அம்மா, என்று கூக்குரலிட்டு பயந்து தலைதெறிக்க ஓட ஆரம்பித்து விட்டனர்.


ஒரு சில நாட்கள் கழித்து அந்த மரத்தில் வசித்து வந்த மயில்கள் காகங்களிடம் வந்து உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் இந்த மரத்தில் வசிப்பதால் எங்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. மனிதர்கள் இந்த மரத்திற்கு அருகில் வந்தாலே நீங்கள் கொத்திவிடுவீர்கள் என பயப்படுகிறார்கள் உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை நண்பர்கள் என்று ஆச்சர்யத்துடன் கேட்டன. காகங்கள், சிரித்தவாறு நாங்கள் பிழைப்புக்காக மனிதர்களை நாடினாலும்,எப்பொழுதும் எங்களுக்கிடையில் ஒற்றுமையாய் இருப்போம். ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அனைவரும் உதவிக்கு வந்து விடுவோம் என்று கூறியது.மயில்கள் மிக்க நன்றி கூறி விடைபெற்றன.


ஒரு நாள் குருவிகள் கீச், கீச், என்று கத்தியவாறு அலை பாய்ந்து கொண்டிருந்தன. என்னவென்று எட்டிப்பார்த்த காகம் அங்கு ஒரு பாம்பு குருவிக்கூட்டை நோக்கி போவதை பார்த்து தன் குஞ்சுகளை காப்பாற்றுவதற்குத்தான் அவ்வாறு கத்துகிறது என்பதை புரிந்துகொண்டு ஆண் காகமும், பெண் காகமும் பாய்ந்து சென்று அந்த பாம்பை கொத்த ஆரம்பிக்க இவைகள் இருவரின் கொத்துதல்களை சமாளிக்க முடியாத பாம்பு விட்டால் போதும் என்று கீழே சர சர வென இறங்கி சென்றுவிட்டது.குருவிக்குஞ்சுகள் காக்கைகளிடம் வந்து மிக்க நன்றி சொல்லி அவர்களை கேலியும் கிண்டலும் செய்ததற்கு வருத்தம் தெரிவித்தன. ஒரு முறை ஒருவீட்டில் பெரிய விசேஷம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.அந்த விசேஷம் நடந்த வீட்டில் இருந்தவர்கள் ஒரு இலையில் நிறைய சாப்பாட்டை எடுத்து வந்து வீட்டிற்கு மேலே வைத்தனர். அப்பொழுது மேலே பறந்து கொண்டிருந்த பறவைகள் வாசத்தில் கவரப்பட்டு அந்த சாப்பாட்டை  சாப்பிடுவதற்கு கீழே இறங்கின. 


உடனே அந்த வீட்டில் இருந்தோர் அந்த பறவைகளை  சாப்பிட விடாமல் விரட்டினர்.அப்பொழுது அந்த இரு காக்கைகள் பறந்து வந்து அந்த சாப்பாட்டை கொத்த ஆரம்பித்தன. உடனே அந்த மனிதர்கள் கையெடுத்து கும்பிட்டனர். மற்ற பறவைகளுக்கு ஒரே ஆச்சர்யம்? நம்மை சாப்பிடவிடாமல் விரட்டிய மனிதர்கள் இவைகளை கும்பிடுகிறார்களே? என்று கேட்டன


காகங்களிடம், தங்களுடைய முன்னோர்களே அந்த சாப்பாட்டை சாப்பிடுவதாக் மக்கள் நினைக்கிறார்கள், அதனால்தான் கை கூப்பி நன்றி தெரிவிக்கிறார்கள் என்றன.இதை கேட்ட மற்ற பறவைகள் காகங்களின் அருமையை உணர்ந்து கொண்டன.தாங்கள் கேலி செய்து பேசியதற்கு மன்னிப்பு கூறின.


(பிறரின் தோற்றம் முக்கியமல்ல. அவர்களின் செயல்கள்தான்


நன்கு கவனிக்கப்படவேண்டும்)


இன்றைய செய்திகள்


09.10.2023


*இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் எதிரொலி: அக்டோபர் 14ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து.


* வெற்றிகரமாக பயணிக்கும் ஆதித்யா L-1:

இஸ்ரோ தகவல் 


*ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 2000 பேர் பலி 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்தன.


* புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு டெங்கு‌.  பாதிப்பு எண்ணிக்கை  81ஆக உயர்ந்துள்ளது.


* ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களை கைப்பற்றிய இந்திய வீரர் ,வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்


* ஆசிய விளையாட்டு 2023: செஸ் போட்டியில் வெள்ளி வென்றது இந்தியா.


Today's Headlines


*Israel-Hamas War Tension Echoes: Air India Flight Service Cancelled Till October 14


  * Aditya L-1 successfully travels:  ISRO information


  *A powerful earthquake in Afghanistan  2000 people died and completely destroyed 12 villages.


  * Four more dengue cases in Pudukottai district have increased to 81.


  * 107 medals in the Asian Games Chief Minister M K Stalin praises the Indian team.


  * Asian Games 2023: India won silver in chess.

 

ஆசிரியர்களை EMIS - லிருந்து விடுவிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு (Minister of School Education said that the process of releasing teachers from EMIS has started)...

 ஆசிரியர்களை EMIS - லிருந்து விடுவிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேச்சு (Minister of School Education said that the process of releasing teachers from EMIS has started)...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - திருச்சியில் ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேச்சு (Teachers should not suffer themselves and join the protest - Minister of School Education Mr. Anbil Mahesh Poyyamozhi's speech at the Anbil with Teachers program in Trichy)...

ஆசிரியர்கள் தங்களை வருத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - திருச்சியில் ஆசிரியர்களுடன் அன்பில் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேச்சு (Teachers should not suffer themselves and join the protest - Minister of School Education Mr. Anbil Mahesh Poyyamozhi's speech at the Anbil with Teachers program in Trichy)...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வித் துறைக்காக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் 32. அவற்றில் ஏறக்குறைய 29 வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.


போராடிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக வந்து பேசிய பலரும் ஆளாளுக்கு ஒரு கருத்தை தெரிவித்தனர். அதை தவறென சொல்லவில்லை. ஆனால், உண்மை நிலை எங்களுக்குத்தான் தெரியும்.


நம் இருவருக்கும் இடையே உள் நுழைந்து நம்மை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஒன்றுதான் பதில். அடித்தாலும், பிடித்தாலும் நாம் அண்ணன், தம்பிகள். எங்களுடைய கரத்தை நீங்கள் வலுப்படுத்துங்கள். உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் - ஆசிரியர்களுடனான கலந்தாய்வு நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.


பள்ளிக்‌ கல்வி - அறிவியல்‌ மன்ற செயல்பாடுகள்‌ - "ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌" - தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள்‌ - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -சார்பு - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்‌.05.10.2023 (School Education - Science Forum Activities - "Shining Tamil Nadu Shining Tamils" - Tamil Nadu Astronaut Appreciation Events - Exhibition to Students - Advising - Regarding - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No.050188/ SE (NEMU)/ 2023, Dated: 05.10.2023)...



பள்ளிக்‌ கல்வி - அறிவியல்‌ மன்ற செயல்பாடுகள்‌ - "ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌" - தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள்‌ - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -சார்பு - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்‌.05.10.2023 (School Education - Science Forum Activities - "Shining Tamil Nadu Shining Tamils" - Tamil Nadu Astronaut Appreciation Events - Exhibition to Students - Advising - Regarding - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No.050188/ SE (NEMU)/ 2023, Dated: 05.10.2023)...


>>> பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்‌.05.10.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



 சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌

ந.க.எண்.050188/ பகஇ (நேமுஉ)/ 2023, நாள்‌.05.10.2023


பொருள்‌: பள்ளிக்‌ கல்வி - அறிவியல்‌ மன்ற செயல்பாடுகள்‌ - "ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌" - தமிழ்நாடு விண்வெளி வீரர்களுக்கான பாராட்டு விழா நிகழ்வுகள்‌ - மாணவர்களுக்கு காட்சிப்படுத்துதல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ -சார்பு. -


2023-24ம்‌ கல்வியாண்டின்‌ அறிவியல்‌ மன்ற செயல்பாடுகளின்‌ ஒரு பகுதியாக அனைத்து அரசு / அரசு உதவி பெறும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை  /மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ தமிழ்நாடு அரசின்‌ " ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌" - விண்வெளி விரர்களுக்கான பாராட்டு விழாவினை அனைத்து பள்ளி மாணவர்களும்‌ கண்டு களித்திடும்‌ வகையில்‌ திரையிட அனைத்து வகை பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கும்‌ அறிவுரைகள்‌ -வழங்கிட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


மேலும்‌ இந்நிகழ்வில்‌ உள்ளுர்‌ அறிவியல்‌ அறிஞர்கள்‌, கல்லூரி பேராசிரியர்கள்‌ மூலம்‌ ஒந்திய ' விண்வெளி ஆய்வுகள்‌ மற்றும்‌ விண்வெளி சாதனைகளில்‌ தமிழர்களின்‌ பங்கு குறித்து உரைநிகழ்த்திடவும்‌, மாணவர்களிடம்‌ இந்நிகழ்வு குறித்து அறிவியல்‌ மனப்பான்மையை வளர்க்கும்‌ வகையில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அக்டோபர்‌ மாதத்திற்கான அறிவியல்‌ மன்ற செயல்பாடுகளை " சந்திராயன்‌ -3 திட்டமும்‌ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்‌ (ISRO) சாதனைகளும்‌" என்ற கருப்பொருளை. அடிப்படையாகக்‌ கொண்டு திட்டமிட்டு நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அரசு / அரசு உதவிபெறும்‌ தொடக்கப்‌ பள்ளிகள்‌ எதிர்வரும்‌ 09.10.2023 

அன்று தொடங்கப்படவுள்ள நிலையில்‌, 10.10.2023 அன்று அனைத்து வகைப்‌ 

பள்ளிகளுக்கும்‌ இந்நிகழ்வினை திட்டமிட்டு திரையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தேவைப்படும்‌ பள்ளிகளில்‌ LCD Projector/ Smart TV ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக்‌ குழு மூலம்‌ வாடகைக்குப்‌ பெற்று பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப் படுவதுடன்‌, அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ " ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌" நிகழ்வு திரையிடப்பட்டதை ஆவணப்படுத்தி, நிகழ்வு தொடர்பான அறிக்கையினை 10.10.2023 மாலை 05.00 மணிக்குள்‌ desjdnss@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பிவைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இணைப்பு: " ஒளிரும்‌ தமிழ்நாடு மிளிரும்‌ தமிழர்கள்‌” நிகழ்வின்‌ காணொளி

இணைப்பு


பள்ளிக்கல்வி இயக்குநர்‌

பெறுநர்‌

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌


பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரோப்கார் சேவை, இன்று (08-10-2023) முதல் மீண்டும் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு(The rope car service suspended due to maintenance work at Palani Murugan Temple will be resumed from today (08-10-2023), temple administration has announced)...

 பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட கம்பிவட ஊர்தி சேவை, இன்று (08-10-2023) முதல் மீண்டும் இயக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு(The rope car service suspended due to maintenance work at Palani Murugan Temple will be resumed from today (08-10-2023), temple administration has announced)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

'மகப்பேறு விடுப்பு (Maternity Leave)' நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ('Maternity Leave' days cannot be considered as working time' - High Court order)...

 

 'மகப்பேறு விடுப்பு (Maternity Leave)' நாட்களை பணிக்காலமாக கருத முடியாது' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ('Maternity Leave' days cannot be considered as working time' - High Court order)...


பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.


திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார்.


இந்த விடுமுறை காலத்தை பணிக் காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.


மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக் காலமாகதான் கருத வேண்டும்.


''கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின்போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணி காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,'' என்றார்.


அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ''விடுமுறை நாட்களை, முழு பணிக் காலமாக கருத முடியாது,'' என்றார்.


மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:


வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும்.


பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.


பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின்போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.


அதற்காக, அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.


இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...


 16-10-2023 முதல் Teacher, Student Attendance தவிர வேறு எந்த ஆன்லைன், EMIS, TNSED App, எண்ணும் எழுத்தும் மதிப்பீடு பதிவிடுதல் போன்ற பணிகளை செய்ய மாட்டோம் - டிட்டோஜாக் சார்பில் தீர்மானம் (From 16-10-2023, we will not do any other online works like EMIS, TNSED App, Ennum Ezhuthum assessment posting other than Teacher, Student Attendance - Decision on behalf of TETOJAC)...









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



எதிர்வரும் 16.10.2023 முதல் ஆசிரியர் & மாணவர்கள் வருகை பதிவு தவிர வேறு எந்த பதிவுகளையும் EMIS, TNSED Appகளில் பதிவிடமாட்டோம் - டிட்டோஜாக் அறிவிப்பு...


டிட்டோ ஜாக்

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


பெறுதல்


மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள்

தொடக்கக்கல்வி இயக்ககம்,

பேராசிரியர் க.அன்பழகனார் வளாகம்,

கல்லூரி சாலை, சென்னை - 600 006.


மதிப்புடையீர், வணக்கம்,


பொருள் : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் 25.09.2023 நாளிட்ட கூட்டத் தீர்மானங்கள் சமர்ப்பித்தல் சார்பு


EMIS, TNSED APP பதிவேற்றங்களில் இருந்து ஆசிரியர்கள் தங்களை 16.10.2023 முதல் விடுவித்துக்கொள்ளுதல்


ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை முழுமையாக மேற்கொள்ள இயலாத வகையில் ONLINE பதிவேற்றங்கள் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது. மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நடத்திய சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இப்பொருள் தொடர்பாக அனைத்து சங்கங்களும் தெளிவுபடுத்தியுள்ளோம். மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செப்டம்பர் 05 அன்று சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்கள் ONLINE பதிவேற்றப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என அறிவிப்பினை வெளியிட்டார்கள். ஆனால் இன்றுவரை ஆசிரியர்கள் பதிவேற்றப்பணிகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை.


எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிடவேண்டும்


ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தினைப் பாதிக்கும் எண்ணும், எழுத்தும் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும்.


எண்ணும், எழுத்தும் திட்டத்தில் செல்போன் செயலி மூலம் தேர்வு நடத்துவதைப் பெற்றோர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். செல்போன் மூலம் தேர்வு நடத்துவதிலும், செல்போன் மூலம் மாணவர் வளரறி மதிப்பீட்டுப் பணிகளை ஒவ்வொரு வாரமும் பதிவேற்றம் செய்வதிலும், கிராமப்புறங்களில் NETWORK இல்லாத நிலையில் ஆசிரியர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்களுக்குத் தேவையற்ற பணிச்சுமைகளை உருவாக்கி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ONLINE பதிவேற்றப்பணிகளில் இருந்தும், EMIS, TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றப் பணிகளில் இருந்தும் 16.10.2023 முதல் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.


மாணவர் வருகை, ஆசிரியர் வருகைப் பதிவேற்றம் தவிர பிற எவ்வித விபரங்களையும் செல்போன் மூலம் பதிவேற்றும் பணிகளை 16.10.2023 முதல் ஆசிரியர் மேற்கொள்வதில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்கிறார்கள் என்ற விபரத்தினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களுக்கும், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு. கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குநர் ஆகியோருக்கும் டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.


இப்படிக்கு,


செ.முத்துச்சாமி EX.MLC, 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


(அ.வின்சென்ட் பால்ராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆசிரியர் கூட்டணி


ச.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இரா.தாஸ்)

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(சி.சேகர்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம்


(வி.எஸ்.முத்துராமசாமி) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(இல.தியோடர் ராபின்சன்) பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(நா.சண்முகநாதன்) 

பொதுச்செயலாளர் 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்


(கோ.காமராஜ்) 

பொதுச்செயலாளர் 

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


சி.ஜெகநாதன்

பொதுச்செயலாளர் 

JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


(டி.ஆர்.ஜான் வெஸ்லி) 

பொதுச்செயலாளர் 

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...