கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் நேற்று(12-10-2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் - முழு விவரம் (Demands agreed upon yesterday (12-10-2023) in the meeting held in the presence of Hon'ble Minister of School Education, Director of School Education, Director of Elementary Education - Full Details)...



மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர், மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர், மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் நேற்று(12-10-2023) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் - முழு விவரம் (Demands agreed upon yesterday (12-10-2023) in the meeting held in the presence of Hon'ble Minister of School Education, Director of School Education, Director of Elementary Education - Full Details)...


 டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் 13.10.2023 இன்று சென்னை DPIவளாகத்தில் 30 அம்ச கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதை முன்னிட்டு மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் மதிப்புமிகு பள்ளிக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில் பேச்சு வார்த்தை 12.10.2023அன்று மாலை நடைபெற்றது.

பேச்சு வார்த்தையில்    

1. 1.1.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை மூன்று ‌நபர் குழு மூலமாக நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.                 

2.EMIS பதிவேற்றம் நவம்பர் முதல் தேதியிலிருந்து ஆசிரியர்கள் செய்ய வேண்டாம்.              

3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் இணைய சேவை செய்ய தேவையில்லை.     

4.ஆசிரியர்கள் கருத்தாளர்களாக ஜனவரி முதல் பயன்படுத்துவதில்லை.   ‌‌                       

5.பி.லிட். படித்து விட்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பி.எட்.படித்தபின் ஊதிய  உயர்வு பெறலாம்.தணிக்கைதடை‌நீக்கப்படும்.              

6.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும்.                 

7.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகங்களில் தமிழ்நாடு முழுவதும் 58 DI  பணியிடங்கள் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ‌           

8. நிதி உதவி பள்ளிகளில் பணிபுரியும் 1500, ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்க படும்.         

9.ஜாக்டோ‌ஜியோ போராட்டத்தில் வழக்கில் உள்ள ஆசிரியர்களுக்கு போடப்பட்ட FIR நீக்கப்படும்.                

10., TET தேர்ச்சி பெற்று பணிநாடும்  பணி நியமன தேர்வு அரசாணை எண் 149 நீக்கப்படும்.   ‌     

11. ஆசிரியர்களுக்கு மருத்துவ காப்பீடு மருத்துவ செலவு முழுவதும் வழங்க வேண்டும்.            ‌   

12. தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரூ.5400 என்பதற்கு தணிக்கை தடை நீக்கப்படும்.               

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றுவதாக மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் நிறைவேற்றுவதாக உறுதி அளித்த அடிப்படையில் 13ந் தேதி ஆர்ப்பாட்டம் பேச்சு வார்த்தை விளக்க கூட்டமாக சென்னை எழும்பூர் ‌ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் 13.10.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.ஆகவே தவறாமல் அணி திரண்டு சென்னை நோக்கி வரும்படி தங்களை அன்புடன் வேண்டுகிறேன்.      

இவண் 

சமரசமில்லா போராளி சி.சேகர் 

பொதுச் செயலாளர்  

தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2023 - School Morning Prayer Activities...


 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.10.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 



பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்


குறள் :277


புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

முக்கிற் கரியார் உடைத்து.


விளக்கம்:


வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.



பழமொழி :

Do what you can with what you have where you are


வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்



இரண்டொழுக்க பண்புகள் :



1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

 


2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.


பொன்மொழி :


நாங்கள் எப்போதும் ஒரு சிறந்த பெண்ணைக் கொண்டாடுகிறோம். ஆனால், , பெண் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே சிறந்து விளங்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். - பரிசு குகு மோனா


பொது அறிவு :


1. உலகின் மிகப்பெரிய தீவு எது?



விடை: கிரீன்லாந்து


பெரிய தீவு - கிரீன்லாந்து



2. உலகின் மிகச்சிறிய கண்டம் எது?

விடை: ஆஸ்திரேலியா


English words & meanings :


 formidable (adj)- dangerous வலிமையான, பயங்கரமான. 

confounded (adj.) - confused குழப்பமடைந்த


ஆரோக்ய வாழ்வு : 


வாழைப்பூ: உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது. வாழைப்பூவில் உள்ள நரம்பை நீக்கிவிட்டு வாழைப்பூவை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். 


நீதிக்கதை


 ஆபத்து வேளையில் உதவியவர் யார்?


ஒரு சிறிய நகரத்தில் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.


அவர் பலருக்குக் கல்வி கற்றுக் கொடுத்து, அதனால் கிடைக்கும் பொருளில் வாழ்க்கை நடத்தினார்.


அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் சோமன். இளையவன் காமன்.


மூத்தவன் சோமன், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமமாகக் கருதி பழகுவது அவன் வழக்கம்.


இளையவன் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்தான். கல்வி போதித்து வந்தான். அந்தணரான தந்தை இறக்கவே, இருந்த சிறிது நிலத்தை அண்ணனும் தம்பியும் பகிர்ந்து கொண்டனர்.


மூத்தவனான சோமன் விவசாயத்தில் ஈடுபட்டு உழைக்கலானான். ஒரு நாள், சோமன் தாழ்த்தப்பட்ட இனத்து இளைஞர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தான்


அதைக் கண்டு வெறுப்படைந்த அந்தணப் பெரியவர் ஒருவர், சோமனிடம் “நீ அந்தண குலத்தில் பிறந்தவன் அல்லவா? தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுடன் பழகலாமா?” என்று கண்டித்து அவனை ஏசினார்.


பெரியவரின் பேச்சு அவனுக்குக் கோபத்தைத் தூண்டியது, “கடவுளின் படைப்பில் உயர்வு தாழ்வு எப்படி இருக்க முடியும்? பிறப்பு என்பது எல்லோருக்கும் சமம். அதில் வேறுபாடு காண்பது முட்டாள்தனமானது. மேலும், அந்த தாழ்த்தப்பட்ட இனத்தவர், உழுது பயிர் செய்து தருவதைத்தானே அனைவரும் சாப்பிடுகிறோம். அதில் வேறுபாடு காண்கிறோமா? மக்களின் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பது முட்டாள் தனமானது.” என்று கூறினான்.


பெரியவர் பேசாமல் சென்று விட்டார்.


சில நாட்களுக்குப் பிறகு, அந்த அந்தணப் பெரியவர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, மயக்கமுற்றுக் கீழே விழுந்துவிட்டார். அதைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இனத்தவன் ஒருவன், ஓடி வந்து, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது தண்ணீர் குடிக்கச் செய்து, அருகில்இருந்த, தன் குடிசைக்குத் தூக்கிச் சென்று மயக்கத்தை தெளியவைத்து உதவினான்.


பெரியவர் எழுந்து புறப்படும் போது எதிர்பாராமல் அங்கே வந்த சோமன், “அந்தணப் பெரியவர்! மயக்கமுற்று கீழே விழுந்த உங்களைக் காப்பாற்றி உயிர்பிழைக்கச் செய்தவன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் என்பதை நினைத்துப் பாருங்கள் உங்கள் இனத்தவர் வரும்வரை காத்திருந்தால் நீங்கள் செத்துப் போயிருப்பீர்கள்” என்று இடித்துக் காட்டினான். பெரியர் தலைகவிழ்ந்து, எதுவும் பேசாமல் நடக்கலானார்.


இன்றைய செய்திகள்


13.10.2023


*மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்துக்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருது கிடைத்தது; முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


* தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வராததால் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம்.


*தரைவழி தாக்குதலை தொடங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிறது. காசாவிலிருந்து நான்கு லட்சம் பேர் வெளியேறினர்.


* மதுரை - சிங்கப்பூர் இடையே வருகிற 22ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு.


*செம்மஞ்சேரியில் அதிநவீன உலகளாவிய விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது.


 *உலகக்கோப்பை கிரிக்கெட்: சேப்பாக்கத்தில் இன்று 2வது போட்டி நியூசிலாந்து- வங்காளதேசம் மோதல்.


Today's Headlines


*Museum for Persons with Disabilities received "Global Design" award in Delhi;  They showed it to the Chief Minister and CM congradulated them. 


 * Delay in onset of North East Monsoon in Tamil Nadu as South West Monsoon has not ended.


 *Israeli army prepares to launch ground attack.  Four lakhs people left Gaza.


*There will be daily flight service between Madurai and Singapore from 22nd onwards- Announced by Air India Express.


 * A state-of-the-art global sports city will be set up at Semmanchery.


  *World Cup Cricket: 2nd Match today in Chepak between New Zealand-Bangladesh.


டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் (Details of the demands accepted when the TETOJAC organization held talks with the Hon'ble Minister of School Education)...

 டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் (Details of the demands accepted when the TETOJAC organization held talks with the Hon'ble Minister of School Education)...


1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு அமைத்தல், அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்தல்.


2. EMIS பதிவுகள் 01.11.2023 முதல் ஆசிரியர்களுக்கு பதில், BRTE க்கள் மேற் கொள்வார்கள்.


3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் இராது.


4. SMC கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டினால் போதும்.


5. உயர்கல்வி பயின்ற 4500 பேருக்கு பின்னேற்பு வழங்குதல்.


6. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்.


7. B.Lit., B.Ed., படித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்.


8. DEO - Elementary அலுவலகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு DI ஆக பணி மாற்றம் அளித்தல்.


9. பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவதை தவிர்த்தல். கால அவகாசம் 3 மாதம்.


10. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிவர்த்தி செய்தல்.


மேற்கண்ட தகவல்கள் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக செய்தியில் அளித்த தகவல்களின் அடிப்படையில் பகிரப் படுகிறது.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது (Talks are going on with TETOJAC officials - School Education Minister Anbil Mahesh)...

 டிட்டோஜாக்  பொறுப்பாளர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது (Talks are going on with TETOJAC officials - School Education Minister Anbil Mahesh)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளிக்கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்பு - போராட்டம் ரத்து - பேச்சுவார்த்தை விளக்க கூட்டமாக நடைபெறும் - "டிட்டோஜாக்" அறிவிப்பு (Acceptance of 11 demands in talks with Minister of Education - Cancellation of protest - Meeting will be held as briefing Negotiations - Announcement of "TETOJAC")...


>>> பள்ளிக்கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தை...


கல்வி அமைச்சருடனான பேச்சு வார்த்தையில் 11 கோரிக்கைகள் ஏற்பு...


நாளை நடைபெற இருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டு பேச்சுவார்த்தை  விளக்க கூட்டமாக சென்னை இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் என "டிட்டோஜாக்" அறிவிப்பு...


நாளைய டிட்டோஜாக் அறிவித்திருந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் 11 கோரிக்கைகள் அரசு ஏற்றது குறித்தான விளக்கக் கூட்டமாகவும், பிற கோரிக்கைகள் குறித்தான கோரிக்கை கேட்பு கூட்டமாகவும் சென்னை ராஜரத்னம் மைதானத்தில் நடைபெறும். எனவே, திட்டமிட்டபடி பொறுப்பாளர்கள் சென்னை வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விரைவில் முழு விவரம் தெரிவிக்கப்படும்...













பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாற்றம் - அரசாணை வெளியீடு (Principal Secretary of School Education Transferred - Issue of Ordinance)...

 

 பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.4229, Dated: 12-10-2023) வெளியீடு (IAS Officers-Transfers and Postings - Principal Secretary of School Education Transferred - Issue of Ordinance)...


>>> Click Here to Download G.O.Rt.No.4229, Dated: 12-10-2023...



தற்போதைய பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி காக்கர்லா உஷா அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக திரு.ஜெ.குமரகுருபரன் நியமனம்.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)...


 EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை (No need to fill Bonafide certificate while giving School and Medium verification of former students who studied in our school in EMIS Website)...


நமது பள்ளியின் EMIS இணையதளத்தில்,

EMIS Websiteல் நமது பள்ளியில் பயின்ற, முன்னாள் மாணவர்களின் School and Medium verification கொடுக்கும் பொழுது Bonafide certificate நிரப்பத் தேவையில்லை...


அவர்கள் கல்வி பயின்ற ஆண்டினை Approve  செய்யும் பொழுது கணினியில் தானாகவே Bonafide certificate தோன்றும். அதை சரிபார்த்த பிறகு confirm கொடுத்தால் போதுமானது.


Medium verification மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தங்களது மொபைலில் எளிதாக செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hon'ble Finance Minister's announcement regarding implementation of Unified Pension Scheme which has created disappointment and dissatisfaction among Teachers and Government Employees - Hon'ble Chief Minister should issue notification for immediate implementation of old pension scheme - TNTF insists

 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளத்தில் ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் உருவாக்கியுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தல் தொட...