கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Demands லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Demands லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசுக்கு TETOJAC கோரிக்கைகள்



தமிழ்நாடு அரசுக்கு டிட்டோஜாக் பேரமைப்பு முன் வைக்கும் கோரிக்கைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டிட்டோஜாக் சார்பில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுடன் சந்திப்பு



*1. அ) 04.07.2026 மற்றும் 05.07.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற சில மாநிலங்களைப் போல் தேர்வு எழுதிய அனைத்து ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்திட வேண்டும்.*


*ஆ) தேர்வு எழுதிய பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு, அவர்களது பணி அனுபவத்திற்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*இ) தேர்வு எழுதிய ஆசிரியர்களுக்கு அவர்களது உயர்கல்வித் தகுதிக்கேற்ப weightage மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.*


*ஈ) சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடத்திட்டத்தைத் தாண்டி கேட்கப்பட்ட சம்பந்தமில்லாத வினாக்களுக்குரிய மதிப்பெண்களை அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும்.*


*2. தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டின் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.*


*3. இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் இழைக்கப்பட்ட அநீதி களையப்பட்டு ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் 01.01.2006 முதல் மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*4. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 1,76,000 ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009ன் பிரிவு 23ல் திருத்தம் செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.*


*5.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின், குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப்பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ முற்றிலும் ரத்து செய்திட வேண்டும்.*


*6. தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய அட்டவணையில் (Pay Matrix) Level -10க்கான Cell-45 உடன் முடிவடைந்து விட்ட நிலையில் வருடாந்திர ஊதிய உயர்வு பெற முடியாமல் இடைநிலை ஆசிரியர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஊதியக் குழுக்களில் மிகக் கடுமையான ஊதிய இழப்பைச் சந்தித்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்குஇது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. எனவே, ஊதிய அட்டவணையில் Level-10க்கு கூடுதல் கலங்களை உருவாக்கி Cell-45 லிருந்து Cell-50 வரை நீட்டித்து உரிய ஆணை வெளியிட வேண்டும்.*


*7. தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து வழங்கிய, 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்து வந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஆசிரியர்களுக்கு உடனடியாக மீண்டும் வழங்கிட வேண்டும்.*


*8. தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும். தொகுப்பூதிய நியமனங்கள் கூடாது.*


*9. அரசாணை எண்: 23 நிதி (ஊதியப் பிரிவு) துறை, நாள்: 12.01.2011ன் படி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நிலைக்குப் பெற்ற தர ஊதியம் ரூ.5400- மற்றும் சிறப்பு நிலைக்குப் பெற்ற தர ஊதிய ரூ.5700- ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் தணிக்கைப் பிரிவு விதித்துள்ள தவறான தணிக்கைத் தடைகளின் மீது பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் உரிய உத்தரவுகளை உடனடியாகப் பிறப்பித்து 1500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பணப் பலன்கள் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும்.*


*10.(அ) பி.லிட் தகுதி பெற்று நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.எட் உயர் கல்வித் தகுதிக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தவறான தணிக்கைத் தடையால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இலட்சக்கணக்கில் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் பெருத்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, உடனடியாக தவறான இத்தணிக்கைத் தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்.*


*(ஆ) அரசாணைகளின்படி M.com; B.Ed மற்றும் M.A (பொருளாதாரம்) ஆகிய உயர் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து விதிகளுக்குப் புறம்பாக, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறை ஆணையை ரத்து செய்திட வேண்டும். இது தொடர்பாக உயர்நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்.*


*11.அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமனம் பெற்று பல ஆண்டுகளாக நியமன ஒப்புதல் வழங்கப்படாமல் ஊதியமின்றிப் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு உடனடியாக நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும்.*


*12.தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.*


*13.நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 55 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கும் விலக்கு அளித்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் அவரவர் பணியாற்றும் பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கேரள மாநில அரசு வழங்கியுள்ளதுபோல் 10 நாட்கள் தற்செயல் விடுப்பு அல்லது 20 அரைநாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கிட வேண்டும்.*


*இப்படிக்கு*


*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்*


08-09-2025 JACTTO GEO பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை மனு

 

08-09-2025 JACTTO GEO பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை மனு 


08-09-2025 ஜாக்டோ ஜியோ பெருந்திரள் முறையீடு : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் ஓய்வூதியக்குழுவிற்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக அளிக்கும் மனுவை அந்தந்த  Colour xerox எடுத்து மாவட்டங்களில் பங்கேற்கும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கையொப்பமிட்டு வழங்குவர்



>>> மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கும் கோரிக்கை மனு 



>>> ஓய்வூதியக்குழுவிற்கு வழங்கும் கோரிக்கை கடிதம்




10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)

 


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (24-02-2025) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கியுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் கடிதம்


10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TETOJAC Demands என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...

 

டிட்டோஜாக் கோரிக்கைகள் என்னென்ன? அதில் அரசின் நிலைப்பாடு என்ன? விளக்கும் செய்திக் காணொளி...


What are the TETOJAC Demands? What is the Government's position on it? An explanatory news video...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


TETOJAC - தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியீடு எண்: 1387, நாள் : 07-09-2024...

 

ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை செய்தி வெளியீடு - ஏற்கப்பட்ட கோரிக்கைகள்...


டிட்டோஜாக் - தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 அம்சக் கோரிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து செய்தி வெளியீடு எண்: 1387, நாள் : 07-09-2024...



TETOJAC - Press Release No: 1387, Dated : 07-09-2024 regarding the current status of the 12-point demands accepted in the talks led by the Hon'ble Minister of School Education on behalf of the Tamilnadu Elementary Teachers' Organizations Joint Action Committee...










தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஜி.கே.வாசன்...

 

தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை போராட்டக் களத்திற்கு தள்ளுவதற்கு பதிலாக அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற, தேர்தல் நேர வாக்குறுதியை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


- ஜி.கே.வாசன் MP, தலைவர்,  தமிழ் மாநில காங்கிரஸ்



TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...

 

 டிட்டோஜாக் TETOJAC சார்பில் 10.09.2024 அன்று நடைபெற உள்ள மாநிலந்தழுவிய  ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான 31அம்சக் கோரிக்கைகள் கொண்ட மாதிரி துண்டுப் பிரசுரம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...


அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...



>>> TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து 13.5.2024 அன்று மாவட்டத்தலைநகரில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  தொடர்பான கடிதம் வழங்கினர்....


 மேலும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதங்களை நேரில் வழங்கினர்...




டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் (Details of the demands accepted when the TETOJAC organization held talks with the Hon'ble Minister of School Education)...

 டிட்டோ ஜாக் அமைப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது ஏற்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் (Details of the demands accepted when the TETOJAC organization held talks with the Hon'ble Minister of School Education)...


1. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய 3 நபர் குழு அமைத்தல், அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரை செய்தல்.


2. EMIS பதிவுகள் 01.11.2023 முதல் ஆசிரியர்களுக்கு பதில், BRTE க்கள் மேற் கொள்வார்கள்.


3. எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆன்லைன் பதிவேற்றம் இராது.


4. SMC கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை கூட்டினால் போதும்.


5. உயர்கல்வி பயின்ற 4500 பேருக்கு பின்னேற்பு வழங்குதல்.


6. உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1500 பேருக்கு ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்தல்.


7. B.Lit., B.Ed., படித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உள்ள குறைகளை நிவர்த்தி செய்தல்.


8. DEO - Elementary அலுவலகத்தில் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 58 பேருக்கு DI ஆக பணி மாற்றம் அளித்தல்.


9. பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை கருத்தாளர்களாக பயன்படுத்துவதை தவிர்த்தல். கால அவகாசம் 3 மாதம்.


10. ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளுக்கு உரிய நிவர்த்தி செய்தல்.


மேற்கண்ட தகவல்கள் டிட்டோ ஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக செய்தியில் அளித்த தகவல்களின் அடிப்படையில் பகிரப் படுகிறது.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கோரிக்கைகள் தொடர்பாக 07-08-2023 அன்று பிற்பகல் 12.30மணிக்கு தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்துரையாடல் அழைப்பு (The Director of School Education has called for a discussion on 07-08-2023 at 12.30 PM to the Tamil Nadu Graduate - Post Graduate Teachers Association regarding the demands)...



>>> கோரிக்கைகள் தொடர்பாக 07-08-2023 அன்று பிற்பகல் 12.30மணிக்கு தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்துரையாடல் அழைப்பு (The Director of School Education has called for a discussion on 07-08-2023 at 12.30 PM to the Tamil Nadu Graduate - Post Graduate Teachers Association regarding the demands)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்