சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்களில் இந்தியாவுக்கு பதில் பாரத் என மாற்ற NCERT பரிந்துரை (Suggestion to change India as Bharat in CBSE textbooks)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...
பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை (Calculation of Weightage Marks in Direct Recruitment of Graduate Teachers / Block Resource Center Teacher Educators Appointment Exam who are passed in Teacher Eligibility Test (TET) - Paper 2)...
DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023
2012 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5.5 மதிப்பெண் போனஸ்...
2013 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண் போனஸ்...
2014 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 4.5 மதிப்பெண் போனஸ்...
2017 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 3 மதிப்பெண் போனஸ்...
2019 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 2 மதிப்பெண் போனஸ்...
2022 ல் தேர்ச்சி பெற்றிருந்தால் 0.5 மதிப்பெண் போனஸ் வழங்கப்படும்.
2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...
2023 ஆம் ஆண்டில் மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள் (Remaining Restricted Leave (RL) Days in 2023)...
🌻2023 ஆம் ஆண்டு மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RL) நாட்கள்...
-----------
✒️அக்டோபர் :-27...
வெள்ளி...
*கர்வீன் ஆப் மொய்தீன் அப்துல் காதர்*
✒️நவம்பர் :-02.. வியாழன்.
*கல்லறை திருநாள்..*
✒️நவம்பர் :- 13... திங்கள்...
*தீபாவளி நோன்பு... ( அரசுபொது விடுமுறை பட்டியலில் 12-11-2023.. ஞாயிறு.. தீபாவளி என்று உள்ளது... மறுநாள் திங்கள் அன்று அரசு ஈடுசெய்யும் பொது விடுமுறை விடவில்லை எனில் 13-11-2023.. திங்கள்.. RL எடுக்கலாம்...)*
✒️நவம்பர் :-27... திங்கள்..
*குருநானக் ஜெயந்தி..*
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவிப்பு (Extension of time till 31.12.2024 for registration of child's name in birth certificate - Notification of Registrar of Births and Deaths)...
பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய தவறியவர்கள் கவனத்திற்கு...
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு - பிறப்பு இறப்பு பதிவாளர் அறிவிப்பு (Extension of time till 31.12.2024 for registration of child's name in birth certificate - Notification of Registrar of Births and Deaths)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பிறப்பு சான்றிதழ்
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி. குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற, பிறப்பு- இறப்பு பதிவு சட்டம், 1969 வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே, அது முழுமையான சான்றிதழ் ஆகும்.
பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், அயல்நாட்டில் குடியுரிமை பெற இன்றியமையாத ஆவணமாக உள்ளது. ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு- இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம்.
கால அவகாசம் நீட்டிப்பு
12 மாதங்களுக்கு பிறகு 15 வருடங்களுக்குள் ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி, குழந்தையின் பெயரை பதிவு செய்திடலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது. இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரைப்படி, 1.1.2000 -க்கு முன்பு பதிவு செய்த பிறப்புகளுக்கும், 1.1.2000 -க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி, மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட தாலுகா, பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் (கல்வி சான்று, ஓட்டுநர் உரிமம்) விண்ணப்பிக்கலாம். இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு, இனிவரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்று பயன்பெறலாம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.10.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : கள்ளாமை
குறள் :284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
விளக்கம்:
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
பழமொழி :
Every ass loves his bray
காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஒன்று சேர்ந்தால், நாம் வாழ்வோம்; பிரிந்தால், வீழ்ந்து விடுவோம்.
பொது அறிவு :
1. நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்–
சுறாமீன்.
2. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடு -
ஜப்பான்
English words & meanings :
kempt(adj)- கெம்ப்ட்- clean தூய்மையான. kudos(n)-குடூஸ்- praise பாராட்டு
ஆரோக்ய வாழ்வு :
முருங்கைப் பூ: முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
நீதிக்கதை
ஓர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் புதையல் இருப்பதாக பேசிக் கொண்டனர். இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, புதையலைத் தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்றான்.. தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழும் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான். அதுவரை வியாபாரத்தின் மீது முழுக் கவனம் செலுத்திய அவன் புதையல் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். புதையலை பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டு இருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றம் அடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அந்த வழியாக வந்த துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் உன்னிடம்," இருப்பதை கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதை விட்டு. இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால் துயரம் தான்" ஏற்படும் என்றார். ஆம்... பொருளாதாரம் மட்டுமே ஒரு மனிதனின் வாழ்வை நிறைவு செய்யாது. குடிசையில் வாழ்ந்து கூழைக் குடிப்பவர்கள் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அவர்கள் பொருளாதார நிறைவைப் பொருட்படுத்தாது மனநிறைவோடு வாழ்கிறார்கள். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால் அதுவே வாழ்வுக்கு சுகம் தரும் திறவுகோல்.
இன்றைய செய்திகள்
26.10.2023
*இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா வரும் 27ஆம் தேதி நடக்கிறது. குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை- டிஜிபி அலுவலகம்
*இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த விருதான தேசிய பதக்கம் கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழங்கினார்.
* தமிழகத்தில் வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.
*என்சிஇஆர்டி - இன் கீழ் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இனி "இந்தியா" என்ற வார்த்தைக்கு பதிலாக "பாரத்" என்ற வார்த்தையே இடம் பெறும்.
*ஆப்கானிஸ்தானிடம் தோல்வி எதிரொலி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாமை நீக்க வலியுறுத்தல்.
Today's Headlines
*The 8th Convocation of Indian Maritime University will be held on 27th. No change in President's visit to Chennai - DGP office
*Two people of Indian origin have received the National Medal of Science and Technology, America's highest award. Presented by US President Joe Biden.
* Northeast Monsoon strengthening in Tamil Nadu - Chennai Meteorological Centre.
* In the books produced under NCERT, the word "India" will now be replaced by the word "Bharat".
*Defeat echoes in Afghanistan, calls for removal of Babar Azam from captaincy.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (4% increase in Dearness Allowance for Government officials, Teachers - Chief Minister Mr. M.K.Stalin's announcement)...
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு - முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (4% increase in Dearness Allowance for Government officials, Teachers - Chief Minister Mr. M.K.Stalin's announcement)...
>>> செய்தி வெளியீடு எண்: 2130, நாள்: 25-10-2023...
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...