கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024 ஆம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா (Kalai Thiruvizha in Aided Schools) போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 (Issue of Guidelines relating to Conduct of Art Festival Competitions in Government Aided Middle/ High and Higher Secondary Schools - Proceedings of State Project Director, Director of School and Elementary Education Rc.No: 3856 / B3/ Arts/ SS/ 2023, Date: 02-11-2023)...

EMIS இணையதள பதிவுகள் மேற்கொள்ள, தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் (Appointment of temporary staff for EMIS website works)...

 EMIS இணையதள பதிவுகள் மேற்கொள்ள, தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் (Appointment of temporary staff for EMIS website works)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆன்லைன் பணிக்கு தற்காலிக ஊழியர்கள் - பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் EMIS ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன...

இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர்கள் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி தேர்வுகள் உள்ளிட்டவை தொடர்பாக EMIS என்ற ஆன்லைன் தளத்தில் தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பதிவுகளை தாங்களே மேற்கொண்டு வருவதால் பாடம் நடத்த நேரமில்லை என ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . மேலும் EMIS ஆன்லைன் பதிவு பணிகளை மேற்கொள்ளாமல் நேற்று முதல் ஆன்லைன் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் EMIS ஆன்லைன் பதிவு பணி  தொய் வடைந்துள்ளது.இந்நிலையில் EMIS பணிகளை பார்க்க தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதுவரை பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தி EMIS பணிகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர் ..

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்ககம் - தீபாவளி 2023 - விபத்தில்லா தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - இயக்குநரின் கடிதம், நாள்: 01-11-2023 (Directorate of Fire and Rescue Services - Diwali 2023 - Accident Free Diwali - Fire Safety Precautions - Director's Letter, Dated: 01-11-2023)...

பாதுகாப்பான தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல் - தீப்பாதுகாப்பு குறித்து பிரச்சாரம் செய்தல் - தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் (Diwali Safety Instruction - Taking Fire Safety Precautions - Fire Safety Propaganda - Letter to Tamil Nadu Fire Rescue Department Director of Education)...

 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்ககம் - தீபாவளி 2023 - விபத்தில்லா தீபாவளி - தீப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - இயக்குநரின் கடிதம், நாள்: 01-11-2023 (Directorate of Fire and Rescue Services - Diwali 2023 - Accident Free Diwali - Fire Safety Precautions - Director's Letter, Dated: 01-11-2023)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

உலக வங்கி நிதியா?.. ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனா?.. இத்தனை நெருக்கடியோடு SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா? - வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் (Is it the World Bank Fund?.. Is it the educational welfare of the poor students?.. Should the SEAS (PARAKH) exam be conducted with so much stress? - V.ANNAMALAI, AIFETO - ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS)...

*பராக்...பராக்...*

*PARAKH..PARAKH..*

 *உலக வங்கி நிதியா?.. ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனா?..  இத்தனை நெருக்கடியோடு  SEAS (PARAKH) தேர்வு நடத்தப்பட வேண்டுமா?..*

📘📕📗📙📘📕📗📙📘📕📗📙

*AIFETO..02.11.2023*

*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*

📕📗📘📙📕📗📘📕📙📘📙📕

 *தேசிய கல்விக் கொள்கையினை நாம் மிகவும் தீவிரமாக எதிர்த்து வருகிறோம்..*

*We Reject NEP2020...*

*புதிய கல்விக் கொள்கையில் கூட மூன்றாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கிறார்கள்.*

 *ஆனால் தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித்துறையைப்  பொறுத்தவரையில் எண்ணும் எழுத்தும் திட்டம் முதல் NCERT உலக வங்கி உதவியுடன் மாநில அரசு நடத்தும்  PARAKH  Performance Assessment Review and Analysis of Knowledge for Holistic Development. தேர்வு இன்று 02.11.2023 கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தேர்வு பேக்கேஜ்களை கொடுத்து, பள்ளி விபரங்கள், மாணவர்களின் விபரங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொகுத்து வைத்திட வேண்டுமென  வேண்டுகோள் வைத்திட இருக்கிறார்கள்.*

 *அதே மாணவர்களைக் கொண்டு நாளை 3 ஆம் தேதி SEAS தேர்வினை நடத்துகிறார்கள்.*

*தமிழ்நாட்டில் உள்ள அனைத்துமாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்புகள் உள்ள  27,047 பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.*

*இந்தத் தேர்வினை நடத்துவதற்காக கல்லூரிகளில்  பி.எட், எம்.எட், பயிலும் 29,775 மாணவர்கள் கள ஆய்வாளர்களாக இந்த SEAS ஆய்வை மேற்கொள்கிறார்கள்.*

*அதுமட்டுமில்லாமல் வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்களாக   20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் விரிவுரையாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என மொத்தம்1,356  பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.*

*இதெல்லாம்  மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநிலங்கள் அளவில் தனியாக கள ஆய்வு (State Achievement Survey-SAS) நடத்தப்பட வேண்டும் என்பது இடம் பெற்றுள்ளது. அந்த தேர்வைத்தான் வேறு பெயரில் தமிழக பள்ளிக்கல்வித் துறை தற்போது நடத்தி வருகிறார்கள்...  என்ற கல்வியாளர்களின் விமர்சனத்தை ஒதுக்கி விட முடியாது.*

*ஆறு பேக்கேஜ் களில் வினாத்தாள் விடைத்தாள் பேனா ஆகியவை SCERT வழியாக தேர்வினை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.*

*தேர்வு நடைபெறும் அறையில் தேர்வு நடத்தும் கள ஆய்வாளரைத் தவிர தலைமை ஆசிரியரோ?.. வகுப்பு ஆசிரியரோ இருக்கக் கூடாது. அவ்வளவு மந்தனமான முறையில் தேர்வினை நடத்த வேண்டுமாம்.*

 *அதிகபட்சம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது.  மூன்று வகையான (A,B,C)வினாக்கட்டுகள் அனுப்பி வைத்துள்ளார்களாம். ஒரு வினா தொகுப்பில் இருக்கக்கூடிய வினாக்கள் மற்றொரு வினா தொகுப்பில் வினா எண் மாறி, மாறி இருக்குமாம்.*

 *அந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடிய ஆசிரியர்கள் தேர்வறைக்குள் இருக்கக் கூடாது என்றெல்லாம் கெடுபிடிகள்...  நல்லவேளை நீட் தேர்வைப் போன்று எங்களுடைய மாணவர்களின் இடுப்பில் அணிந்துள்ள அரைஞாண் கயிற்றை தவிர  கழுத்திலோ, காதிலோ, அணிகலன்கள் எதுவும் இல்லை.  இல்லையென்றால் அதையும் கழற்றச் சொல்லி இந்தத் தேர்வினை நடத்தினாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை!...*

*தேர்வினை முடித்து 03/11/2023 அன்று மாலையே OMR sheet, எழுது பொருட்களை தேர்தல் பொருள்களை ஒப்படைப்பது போல் இத்தேர்வு பொருள்கள் முழுமையும் ஏழு பேக்கேஜ்களில் ஒப்படைத்தல் வேண்டுமாம்.*

 *பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான ஆசிரியர்களை நியமனம் செய்து அக்கறை காட்டவில்லை. கற்பித்தல் பணிகளைத் தவிர பிற பணிகளை ஆசிரியர்களுக்கு  அடுக்கடுக்காக அள்ளித் தந்து வருகிறார்கள். மாணவர்களின் அடைவுத்திறனை கண்காணிப்பதற்கு மட்டும் ஹெலிகாப்டரில் இருந்து நேரடியாக வந்து இறங்குவதைப் போல, வானளாவிய கற்பனை உலகில் மிதந்து வருகிறார்கள். எப்படி அடைவு சோதனை நடத்தினாலும் சரி; எழுதுகிற மாணவர்கள் எங்கள் மாணவர்கள்; எங்கள் மாணவர்களைப் பற்றி எங்களுக்குத்தான்  தெரியும்.  தேர்வுக்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசினைப் பற்றியும் தெரியும். NCERT பற்றியும் எங்களுக்கு தெரியும்.*

*மதிப்பீடாக இருந்தாலும் சரி, அடைவுத்திறன் சோதனையாக இருந்தாலும் சரி, தேர்வாக இருந்தாலும் சரி இவையெல்லாம் இயல்பான சுதந்திரமான சூழலில் நடைபெற வேண்டும். முற்றிலும் இயல்புக்கு மாறாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களை வைத்து தனி அறையில் நெருக்கடியான  மந்தன முறையில் தேர்வினை நடத்தினால் அந்த மூன்றாம் வகுப்பு மாணவர்கள் எப்படி அந்தத் தேர்வினை எழுதுவார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.*

*OMR (Optical Mark Recognition) தாளில் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் திடுதிப்பெனெ எப்படி தேர்வினை எழுதுவார்கள்?.. இந்த சோதனையின் முடிவுகள் எப்படி சரியான முடிவுகளை தரும்?..*

 *எதார்த்தத்தை (Practical) விட்டு  விலகி நிற்கும் கல்வித்துறையே!.. சிந்திக்க வேண்டியவற்றை சிந்தித்து செயல்படுத்த எப்போதுதான் முன் வருவீர்கள்!..*

*நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்!..*

*தேசிய கல்விக் கொள்கையினை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையினரை நியமனம் செய்தால் முதல் வகுப்பு முதலே பொதுத் தேர்வுகளை நடத்தவும் தயங்க மாட்டார்கள்!...*

 *நீட் தேர்வினை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நியமனத் தேர்வினை நாமே நடத்துகிறோம்.  தேசிய கல்விக் கொள்கையில் தொடக்கக் கல்வியில் உள்ள வகுப்புகளுக்கு பொதுத் தேர்வினை எதிர்க்கிறோம். ஆனால் NCERT நடத்துகிற அடைவுத்திறன் தேர்வினை நாமே வரவேற்று நடத்துகிறோம்!..*

 *விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு 13000 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பெற்றோர்கள் தொழிலை பிள்ளைகள் கற்றுக் கொள்ளலாம். ரூபாய் 15,000 இலவசம். உடனடியாக ஒரு லட்சம் கடனும் தருகிறார்கள். தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் ஒப்புக் கொண்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.  ஆண்டவன் சொல்கிறார்!.. அருணாச்சலம் கேட்கிறார் என்பார்கள்!. ஆனால் தற்போது அருணாசலம் சொல்கிறார்!.. ஆளுபவர்கள் கேட்டு வருகிறார்கள்! என்று பரவலாக தெரிவித்து வருகிறார்களே!..*

 *ஒரு புது பெயரினை நல்ல தமிழ்ப் பெயரினை விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு அருணாசலங்கள் அறிமுகப்படுத்தினால்... இது மாண்புமிகு  முதலமைச்சரின் நல்ல திட்டம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பக்குவ நிலைக்கு  நாம் தள்ளப்பட வைப்பார்களோ?...*

 *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் மையக் கருத்துதான் என்ன?.. பொறுத்திருந்து பார்ப்போம்!..*

 *விடிவு காலத்தை நோக்கி நமது பயணத்தினை தொடர்வோம்!...*

*சமூக நீதிக்கு எதிராக கல்வித்துறை எந்தத் திட்டங்களை அமல்படுத்த முனைப்பு காட்டினாலும் உரிமை உறவுடன் என்றும் குரல் கொடுப்போம்!...*

*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 அன்று பிற்பகல் 4-மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 01-11-2023 (Proceedings of the Director of Elementary Education, TamilNadu Regarding on conducting a meeting of teachers union representatives on 08.11.2023 at 4pm regarding the equal work, equal salary demand of Secondary Grade Teachers - invitation to 5 teachers federations)...

>>>  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 01-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நவம்பர்‌ மாத தேன்சிட்டு மற்றும்‌ புது ஊஞ்சல்‌ இதழ்கள்‌ குழந்தைகள்‌ தினக்‌ கொண்டாட்டம்‌ - அனைத்துப்‌ பக்கங்களிலும்‌ மாணவப்‌ படைப்பாளிகளின்‌ படைப்புகள்‌ - ஒவ்வொருவருக்கும்‌ இதழ்‌ அனுப்புதல்‌ காலைவணக்கக்‌ கூட்டத்தில்‌ பாராட்டி நேரில்‌ வழங்குதல்‌ - சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌:19538/எம்‌/ இ2/ 2022, நாள்‌. 02-11-2023 (Then Chittu and Pudhu Oonjal Magazines for November Children's Day Celebration - All Pages by Student Creators - Magazine Sending to Everyone Appreciation in Morning Meeting - Proceedings of Tamil Nadu Director of School Education, Rc.No:19538/M/E2/2022, Dt. 02-11-2023)...

>>> தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌:19538/எம்‌/ இ2/ 2022, நாள்‌. 02-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -600 006.

ந.க.எண்‌:19538/எம்‌/ இ2/2022, நாள்‌. 02-11-2023

பொருள்‌: பள்ளிக்கல்வி - சிறார்‌ மற்றும்‌ ஆசிரியர்‌ இதழ்கள்‌ - நவம்பர்‌ மாத தேன்சிட்டு மற்றும்‌ புது ஊஞ்சல்‌ இதழ்கள்‌ குழந்தைகள்‌ தினக்‌ கொண்டாட்டம்‌ - அனைத்துப்‌ பக்கங்களிலும்‌ மாணவப்‌ படைப்பாளிகளின்‌ படைப்புகள்‌ - ஒவ்வொருவருக்கும்‌ இதழ்‌ அனுப்புதல்‌ காலைவணக்கக்‌ கூட்டத்தில்‌ பாராட்டி நேரில்‌ வழங்குதல்‌ - சார்பு.

பார்வை: 1 அரசாணை நிலை) எண்‌.108, பள்ளிக்கல்வித்‌ [பக5(1)] துறை, நாள்‌. 22.06.2022.

2. இவ்வியக்ககத்தின்‌ இதே எண்ணிட்ட கடிதங்கள்‌ நாள்‌. 21.06.2022, 27.06.2022, 22.08.2022, 18.12.2022, 20.04.2023, 27.04.2023 & 01.08.2023.

பார்வையில்‌ காணும்‌ அரசாணையின்படி, பள்ளிக்கல்வித்‌ துறையின்‌ வாயிலாக ஜனவரி 2023 முதல்‌ 6.9 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணாக்கருக்காக “தேன்சிட்டு” இதழ்‌ அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளுக்கும்‌ வகுப்பறைக்கு ஒன்று என்ற முறையிலும்‌ ஆசிரியர்களுக்காக கனவு ஆசிரியர்‌” இதழ்‌ பள்ளிக்கு ஒன்று என்ற விதத்திலும்‌ அனைத்து அரசுப்‌ பள்ளிகளுக்கும்‌ அஞ்சல்‌ வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.

இதே போன்று, ஜூன்‌ 2023 முதல்‌ 4 & 5 வகுப்பு மாணாக்கருக்காக - புது ஊஞ்சல்‌ இதழ்‌ அனைத்து அரசு தொடக்க , நடுநிலைப்‌ பள்ளிகளுக்கும்‌ வகுப்பறைக்கு ஒன்று என்ற வகையில்‌ அனுப்பப்பட்டு வருகிறது.

பெயர் மற்றும் முகவரி குறிப்பிடப்படாமல் வரும் அனாமதேய புகார் கடிதங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை - அரசுக் கடிதம் எண்: 68167/ 81-1, நாள்: 03-03-1982 (No action required for anonymous complaint letters without mention of name and address - Govt Letter No: 68167/ 81-1, Dated: 03-03-1982)...

>>> அரசுக் கடிதம் எண்: 68167/ 81-1, நாள்: 03-03-1982 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The news that the Financial demands including the old pension scheme are unlikely to be met - Teachers' Anxiety - Teachers' Fedaration Reaction

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகள் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று வெளியான செய்தி - ஆசிரியர்களின் ஆதங்கம் - ஆசிரியர் கூட...