கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Equal Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Equal Pay லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - இயக்குநரின் செயல்முறைகள்

 

நாளை (10.03.2026) சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை தொடர்பான கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் :  09.03.2026


சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை (Equal Work, Equal Pay Demand) தொடர்பான கூட்டம் - நாளை (10.03.2026) சென்னையில் நடைபெறுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.35372/இ1/2022, நாள். .03.2026


பொருள்:


தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப்பணி சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது இக்கோரிக்கை சார்பாக அழைக்கப்படாத பிற சங்கங்களுக்கான ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது -தகவல் தெரிவித்தல் - சார்ந்து.


பார்வை:


1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 01.01.2023 நாளிட்ட செய்தி வெளியீடு.


2. அரசாணை (நிலை) எண்.25 பள்ளிக் கல்வி (தொ.க.3(1)) துறை நாள்.30.01.2023.


3. அரசாணை (நிலை) எண்.229 பள்ளிக் கல்வித் (.5.3(1)) . நாள் 06.12.2023.


4. அரசுக் கடித எண் 730/தொக.5.3(1)/2023-3, 5, 6, 8, 11 01.06.2023, 18.10.2023, 30.10.2023, 08.12.2023, 08.01.2025, 18.06.2025, 04.09.2025 06.03.2026.


5. சென்னை-600 006, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். ந.க.எண்.35372/1/2022, 23.01.2025, 03.03.2023, 06.06.2023, 26.10.2023, 01.11.2023, 19.09.2024, 20.05.2025, 20.06.2025, 23.06.2025, 21.08.2025 மற்றும் 08.09.2025.


தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3-ல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி ஐந்தாவது கூட்டம் 10:03.2026 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.


இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி குழுவின் தலைவர் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 06.03.2026 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி 10.03.2026 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு பத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஒரு சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எண் , சங்கத்தின் பெயர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


நாள் மற்றும் நேரம் : 10.03.2026 பிற்பகல் 02.30 மணி


இடம் 

பள்ளிக் கல்வித் துறை கூட்டரங்கு. 6-வது தளம், நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், சென்னை-9.





சங்கப் மேற்குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத பிரதிநிதிகளை தவிர்த்து மற்ற சங்கப் பிரதிநிதிகளை பிறிதொரு நாளில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குநர்


பெறுநர்


1. தமிழக ஆசிரியர் மன்றம்


2. ஆசிரியர் முன்னேற்ற சங்கம் 3. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்


4. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம்-2


5. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி-2


6. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


7. அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம். 


8. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்


9. தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை


10. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கம்.


மின்னஞ்சல் வழியாக



"சம வேலைக்கு சம ஊதியம்" போராட்டத்திற்கு டிட்டோஜாக் மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு கொடுக்க SSTA வேண்டுகோள்


"சம வேலைக்கு சம ஊதியம்" போராட்டத்திற்கு டிட்டோஜாக் மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு கொடுக்க SSTA வேண்டுகோள் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு டிட்டோஜாக் மற்றும் ஏனைய தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு கொடுக்க வேண்டுகோள்


இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் அடிப்படை ஊதியம் ₹.3,170 குறைக்கப்பட்டு தற்போது ஏழாவது ஊதியக் குழுவில் கடைநிலை ஊழியர்களின் ஊதியமான ₹.20,600  அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.  16 ஆண்டுகளாக பல இயக்கங்கள் போராடி வரும் சூழ்நிலையில் எங்களது இயக்கமும் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தோம்.  அதிலும் குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளில் தீவிரமான போராட்டங்களை எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்தி வருகிறோம் என்பதை அனைவரும் அறிந்ததே.  இதற்காக கடந்த ஆட்சியில் தற்போதைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரில் இரண்டு முறை வந்திருந்து ஆதரவு கொடுத்து திமுக அரசின் தேர்தல் அறிக்கை 311ல்  இடம் பெற வைத்து ஆட்சி அமைந்ததும் 01-01-2023ல் முதல் அறிவிப்பாக  இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு சம ஊதியம்" வழங்க பரிந்துரைக்க மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்து அரசாணை பிறப்பித்தார்.


மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைத்து மூன்றாண்டுகளாகியும் எந்த முடிவும் ஏற்படாததால் ஆட்சியும் இன்னும் சில நாட்களில் முடிவடைய போவதால் மிகத் தீவிரமான போராட்டத்தை சென்னையிலும் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னெடுத்து வருகிறோம்.


இந்த போராட்டமானது ஒரு இயக்கம் நடத்தும் போராட்டம் என்று கடந்து செல்லாமல் ஒரு இடைநிலை ஆசிரியர் இனத்திற்கான போராட்டமாக கருதி தொடக்கக் கல்வித் துறையில் உள்ள டிட்டோஜாக் மற்றும் பிற ஆசிரிய இயக்கங்கள் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவை வழங்கி நேரடியாக களத்தில் வந்து 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் குடும்பங்களை பாதுகாத்திட அன்போடு வேண்டுகிறோம். இயக்கங்களுக்குள்  கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இனத்திற்காக ஒன்றுபடுவோம்.


கடந்த பத்து நாட்களில் அரசின் கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டி ஆண் ஆசிரியர்கள் மற்றும் பெண் ஆசிரியர்கள் கடுமையாக தொடர்ந்து போராட்டக் களத்தில் பங்கெடுத்து வருவதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து வருகிறது. கடந்த காலங்களில் ஜாக்டோ ஜியோ போராட்டங்களில் ஆசிரியர்களை கைது செய்த போதும் SSTA அதில் பங்கெடுத்து எங்கள் இயக்க 73 ஆசிரியர்களும் சிறைக்குச் சென்றார்கள். மேலும் தற்போதைய ஜாக்டோ ஜியோ ஒரு நாள் மற்றும் காலவரையற்ற போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்தது மேலும் பங்கெடுப்போம் என்ற உறுதியையும் சமூக வலைதளங்களில் கடிதம் வாயிலாக வெளியிட்டோம்.


தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு இயக்கத்திற்கான போராட்டம் என்று அமைதி காப்பது நமது ஒட்டுமொத்தமான ஆசிரியர்இன ஒற்றுமைக்கும் பேர் ஆபத்தாக மாறிவிடும்.


தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த ஊதிய முரண்பாட்டிற்கான போராட்டத்தில் பங்கெடுக்கும் போது இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு என்ற ஒற்றைக் கோரிக்கையில் அனைவரும் போராடி இந்த ஊதியத்தை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைத்து தொடக்கக் கல்வித்துறை சங்கங்களுக்கும் உள்ளது. எனவே தயவு செய்து இதில் சங்க பிரிவினை பாராமல் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.


அனைத்து இயக்கங்களுக்கும் SSTA ஆதரவு கேட்டு கடிதம் 17.12.2025 அன்று அனுப்பி வைக்கப்பட்டது. தொடக்கக் கல்வித் துறையின் ஆணிவேரான இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஒற்றுமையாக களம் கண்டு ஊதியத்தை வென்று கொடுத்த பெருமை மூத்த இயக்கங்களுக்கு கிடைத்திடட்டும்.

நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளது.


தொடக்கக்கல்வி இயக்கங்கள் மட்டும் இதுவரை பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை.

ஒன்றுபட்ட போராட்டம் ஓர் இனத்தை வாழ வைக்க உதவட்டும்.


 நன்றி


*தகவல் பகிர்வு*


SSTA-மாநிலத் தலைமை



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


"சமவேலைக்கு சமஊதி​யம்" வழங்​கக்​கோரி சென்னை DPI வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது



 சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட முயன்ற ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்​பட்​டனர். சாலை​யில் அமர்ந்து போராடிய​தால் போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்டது. ஆசிரியை ஒரு​வர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்​பட்​டது.


அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009க்கு முன்னர் பணி​யில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதற்கு பின்னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வருகின்​றனர்.


இந்​நிலை​யில், டிசம்பர் 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்​துள்ள DPI வளாகத்தை முற்றுகையிட்டு போராட்​டம் நடத்​தப்​ போவதாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து வளாகத்​தின் அனைத்து வாயில்​களும் மூடப்​பட்டு போலீ​ஸார் குவிக்கப்​பட்​டனர்.


போராட்​டத்​துக்​காக வெளியூர்​களில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்​களை நுங்கம்பாக்கம், எழும்​பூர் ரயில்​நிலை​யங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் வழிமறித்து போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றிச்​சென்​றனர். இந்நிலையில், காலை 11.30 மணி​யள​வில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்​தின் பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் மற்​றும் நிர்​வாகி​கள் தலை​மை​யில் 50-க்கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் டிபிஐ வளாகத்தை முற்றுகை​யிட முயன்​றனர்.


மற்​றொரு​புறம் ஏராள​மானோர் குவி​யத்​தொடங்​கினர். அதில் ஒரு பிரி​வினர் சாலையில் அமர்ந்து கோஷமிட்​டனர். அவர்களை காவல் துறையினர் குண்​டுக் கட்டாக தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்றினர்.


திடீர் மறியல்: தொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டம் கூட்​ட​மாக வரு​வதும் சாலை​யில் அமர்ந்து கோஷமிடு​வதும், அவர்​களை போலீஸார் வாக​னங்​களில் ஏற்​றிச் செல்வதும் என கல்​லூரிச்சாலை​யில் போக்குவரத்து நெரிசல் ஏற்​பட்​டது. வாகனங்கள் மாற்​றுப் பாதை​யில் திருப்​பி​விடப்​பப்​பட்​டன. இதற்​கிடையே, போராட்டத்தில் ஈடு​பட்ட நாமக்​கல் ஆசிரியை மகேஸ்​வரி என்​பவர் மயங்கி விழுந்​தார். இதையடுத்து அவர் அங்கு நிறுத்​தப்​பட்​டிருந்த ஆம்​புலன்​ஸில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டார்.


போராட்​டம் தொடரும்: போராட்​டம் சற்று தணிந்த நிலை​யில் 50-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​களை ஒய்​எம்​சிஏ கல்​லூரி அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். இதனால் அவர்​கள் அனை​வரும் சாலை​யில் அமர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பின்​னர் அவர்​கள் போலீஸ் வாக​னத்​தில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்​டனர்.


முன்​ன​தாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்​கத்​தின் பொதுச்​செயலாளர் ஜே.​ராபர்ட் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தி​முக தேர்​தல் வாக்​குறு​தியை இது​வரை நிறைவேற்​ற​வில்​லை, தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை, குழு அமைப்​பது என தள்ளிக்​கொண்டு செல்​கிறார்​கள்.


முன்​கூட்​டியே கைதுசெய்​வது, வலுக்கட்டாயமாக அப்​புறப்​படுத்​து​வது என எங்​கள் போராட்​டத்தை ஒடுக்க நினைத்தாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராடு​வோம்.  போராடக்​கூட அனு​மதி மறுக்​கிறார்​கள். அறவழி​யில் போராடும் எங்​களை தீவிரவாதிகளைப் போல நடத்துகிறார்கள்” என்​றார்.


அரசியல் தலை​வர்​கள் கண்​டனம்: சமவேலைக்கு சம ஊதி​யம் வழங்​கக்கோரி போராட்​டத்​தில் ஈடு​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டதற்கு அரசியல் கட்சி தலை​வர்​கள் கண்​டனம் தெரிவித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​:


அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: திமுக அளித்த தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றக் கோரி போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்​களை காவல்​துறையினர் கைது செய்​திருப்​பது கடும் கண்டனத்​துக்​குரியது. முதல்​வர் ஸ்டா​லின் தான் கொடுத்த வாக்​குறு​தியை நிறைவேற்ற முடிய​வில்லை எனில், அதனை ஒப்​புக்​கொள்ள வேண்​டும். ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்​டும்.


பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்திரன்: சமவேலைக்கு சம ஊதி​யம் கேட்​டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்​களின் மீது அடக்​கு​முறையை ஏவி அவர்​களை வலுக்​கட்​டாய​மாகக் கைது செய்​துள்​ளது கடும் கண்​டனத்​துக்​குரியது.


ஆசிரியர்கள் முதல் செவிலியர்​கள் வரை அனை​வரை​யும் போராடும் அவல நிலைக்கு தள்​ளுவது​தான் நல்​லாட்​சி​யின் அம்​ச​மா? காலி பணி​யிடங்​களை நிரப்​பாமல், பணி​யில் இருப்​பவர்​களுக்கு முறை​யான ஊதி​யம் வழங்​காமல், ஓய்​வு​பெற்ற அரசு ஊழியர்களுக்​கான ஓய்​வூ​தி​யப் பலன்​களை விடுவிக்​காமல் ஒட்​டுமொத்த அரசு இயந்திரத்தையே பழு​தாக்​கியது​தான் திமுக அரசின் நான்​காண்டு சாதனை.


பாமக தலை​வர் அன்​புமணி: சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வேண்​டும் என்று போராட்​டம் நடத்​திய ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்​கு​முறை​களை கட்​ட​விழ்த்து விட்​டிருப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. ஆசிரியர்களின் போராட்​டத்தை அடக்​கு​முறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற எண்​ணத்தை திமுக அரசு கைவிட்​டு, அவர்​களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.


தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: திமுக அறி​வித்த தேர்தல் வாக்​குறு​தி​களை இடைநிலை ஆசிரியர்​களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் இன்​னும் நிறைவேற்​றப்​ப​டாதது ஏற்​புடையதல்ல. போராட்​டம் நடத்​திய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்​தது அடக்குமுறையான செயல். தொடர்ந்து அடக்கு​முறை​களைக் கையாளாமல் இடைநிலை ஆசிரியர்​களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற முன்வர வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறியுள்​ளனர்.




Car Washer High Pressure Gun Cordless Portable Wireless Pressure Washer Gun 48V 12000mah High Pressure Water Gun Car Wash Bike Washing Cleaning| Adjustable Nozzle and 5M Hose Pipe


https://amzn.to/4pLA6Qb



இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை - 7 சங்கங்களுக்கு அழைப்பு

 

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை - 7 சங்கங்களுக்கு அழைப்பு


இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது - குழுவின் நான்காவது கூட்டம் 11-09-2025 பிற்பகல் 3 மணி அளவில் கூட்டம் நடைபெறவுள்ளது தகவல் தெரிவித்தல் சார்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


SG Teachers' "Equal pay for Equal work" demand - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை - இன்று (24.06.2025) நடைபெற உள்ள 4வது கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க சங்கங்களுக்கு அழைப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



Secondary Grade Teachers' demand for "equal pay for equal work" - Invitation to Federations to participate in the 4th consultation meeting to be held today (24.06.2025) - Proceedings of the Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Negotiations on Demand for Equal Pay for Equal Work of SGTs on 04.02.2025 - DEE Proceedings

 

இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று நடைபெறுகிறது - தொடக்கக் கல்வி இயக்குநரின் DEE செயல்முறைகள்


Negotiations on Demand for Equal Pay for Equal Work of Secondary Grade Teachers on 04.02.2025 -  Directorate of Elementary Education - DEE Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...



 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...


19 நாட்களாக போராடி வந்த  ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்...


மாணவர் சேர்க்கை நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதை ஒட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பு...


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உறுதிமொழி ஏற்று போராட்டம் வாபஸ்...



*_இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்_*


*19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைப்பு.*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார். அங்கிருந்து போராட்ட களத்திலிருக்கும் மாநில தலைமை ஜே.ராபர்ட் அவர்களுடன்  (இடைநிலை ஆசிரியர்களுடன்) தொலைபேசியில் பேசிய பின்பு மதிப்புமிகு பள்ளிகல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  போராட்டத்திற்கான சுமுகமான தீர்வு மிக விரைவில் எட்டப்படும் என்பதால் தற்காலிகமாக 19 நாளாக நடைபெற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்ட நாட்கள் அனைத்தும் தகுதியான விடுப்பாக முறைப்படுத்தப்படும்.*



*மற்ற அனைத்து விபரங்களும் விரைவில் நடைபெறவுள்ள  மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.*


_நன்றி..!!_


_ஜே.ராபர்ட்_


*_SSTA மாநில தலைமை_*


இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...

 


 இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் - செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024...


தமிழ்நாடு அரசு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க மூவர் குழு ஒன்றை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.

.

இக்குழு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மூன்று சுற்று கருத்து கேட்புக்கூட்டங்களை நடத்தியுள்ளது.மற்ற சங்கப் பிரதிநிதிகளுடன் அடுத்த சுற்று கருத்துக் கேட்பு நடைபெற வேண்டியுள்ளது. 


அதன் பின்னர் இப்பொருள் சார்ந்து விரிவான அறிக்கையினைப் பெற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிவித்துக் கொள்கின்றேன் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்...



>>> செய்தி வெளியீடு எண்: 388, நாள்: 27-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாம் பெற்றோர். தேர்வு காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பள்ளிக்குத் திரும்ப பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள்...


01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டம் 5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 அன்று பிற்பகல் 4-மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 01-11-2023 (Proceedings of the Director of Elementary Education, TamilNadu Regarding on conducting a meeting of teachers union representatives on 08.11.2023 at 4pm regarding the equal work, equal salary demand of Secondary Grade Teachers - invitation to 5 teachers federations)...

 

 01.06.2009க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" கோரிக்கை குறித்த கருத்து கேட்புக் கூட்டம்  5 ஆசிரிய சங்கங்களுடன் வரும் 08.11.2023 அன்று பிற்பகல் 4-மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 01-11-2023 (Proceedings of the Director of Elementary Education, TamilNadu Regarding on conducting a meeting of teachers union representatives on 08.11.2023 at 4pm regarding the equal work, equal salary demand of Secondary Grade Teachers  - invitation to 5 teachers federations)...



>>>  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 01-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 06-06-2023 (On 14-06-2023 at 3 PM on behalf of Secondary Grade Teachers' demand for "Equal pay for Equal work" a meeting of Federations Office Bearers headed by Government Finance Secretary - Proceedings of Tamilnadu Director of Elementary Education Rc. No: 35372/ E1/ 2022, Dated: 06-06-2023)...

 

>>> இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை சார்பாக 14-06-2023 அன்று பிற்பகல் 3 மணி அளவில் அரசு நிதித்துறை செயலாளர் தலைமையில் இயக்கப் பொறுப்பாளர்கள் கூட்டம் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 35372/ இ1/ 2022, நாள்: 06-06-2023 (On 14-06-2023 at 3 PM on behalf of Secondary Grade Teachers' demand for "Equal pay for Equal work" a meeting of Federations Office Bearers headed by Government Finance Secretary - Proceedings of Tamilnadu Director of Elementary Education Rc. No: 35372/ E1/ 2022, Dated: 06-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம் 10.03.2023 அன்று நடைபெறுகிறது - முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 35372/ இ1/ 2022, நாள்: 03-03-2023 (Preliminary meeting on demand for equal pay for equal work for Secondary Grade Teachers to be held on 10.03.2023 - Proceedings of the Director of Elementary Education regarding the invitation to two associations in the preliminary stage No: 35372/ E1/ 2022, Date: 03-03-2023)...



>>> இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம்  கோரிக்கை தொடர்பான முதற்கூட்டம்  10.03.2023 அன்று நடைபெறுகிறது - முதற்கட்டமாக இரு சங்கங்களுக்கு அழைப்பு குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 35372/ இ1/ 2022, நாள்: 03-03-2023 (Preliminary meeting on demand for equal pay for equal work for Secondary Grade Teachers to be held on 10.03.2023 - Proceedings of the Director of Elementary Education regarding the invitation to two associations in the preliminary stage No: 35372/ E1/ 2022, Date: 03-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்

𝐋𝐢𝐭𝐭𝐥𝐞 𝐁𝐢𝐠 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 திரைப்படம் குறித்த தகவல்  மாற்றங்கள் மலர்ந்தே தீரும் * அது ஒரு தனியார் சர்வதேசப் பள்ளி, அங்கே 100க்கு 2 மதி...