கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...



 அரசு பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவு அறிமுகம்...


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை விரைவில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அறிமுகப்படுத்த உள்ளது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இம்முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டு சில அரசு பள்ளிகளில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது..



கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்கவும் நிர்வாக வசதிக்காகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு பின் பற்றப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய கடைகளிலும் இம்முறை பயன்பாட்டில் உள்ளது ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில் வருகை விவரம் பதிவு செய்யப்படுகிறது இந்த பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய தமிழக அரசு அறிமுகம் செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு சோதனை முறையில் அறிமுகம் ஆகிறது.



செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது.



ஆறாவது முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவர்களுக்கு  பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.



இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மற்ற பள்ளிகளுக்கும் பயம் மெட்ரிக் வருகை பதிவு விரிவுபடுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



இத்திட்டம் அமலானாதால் அரசின் நலத்திட்டங்களை தவறாக கணக்கிடுவது, மாணவர்கள் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது போன்ற பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.



பயோமெட்ரிக் கருவி பொருத்துவதன் மூலம் பள்ளிகளின் வருகைப்பதிவு அழிக்க முடியாத ஆவணமாகிவிடும் என கல்வித் துறை வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.



மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்...

 மழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம்...



கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை காரணமாக 19-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 19-12-2023 due to heavy rain) விவரம்...


கனமழை காரணமாக நாளை (19.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*தூத்துக்குடி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
*திருநெல்வேலி* (பள்ளி மற்றும் கல்லூரிகள்)


Hi-Tech Lab - Headset Instalation Guide...

 உயர் தொழில்நுட்ப ஆய்வகம் - Hi-Tech Lab - Headset Instalation Guide...



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...

 நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், தேவையான உதவிகளை பெற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு...


📱வாட்ஸ்அப் எண்: 81485 39914


✖️ட்விட்டர் (X): @tn_rescuerelief மற்றும் @tnsdma


💻பேஸ்புக்: @tnsdma








கனமழை காரணமாக திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது...

 கனமழை காரணமாக திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது - செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது; தண்டவாளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிப்பு...



>>> திருநெல்வேலி ரயில் நிலைய தண்டவாளங்களை மூழ்கடித்தது  வெள்ள நீர்...


4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி....

 


4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி.


1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது.


மேலடுக்கு சுழற்சி காரணமாகவே அதிக கனமழைதான் பெய்துள்ளது, மேகவெடிப்பு அல்ல.


90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம்.


மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attention Sabarimala Devotees - Devasam Board Notice

  சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு - தேவசம் போர்டு அறிவிப்பு சபரிமலை செல்லும் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைக...