கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்...



தவறான தகவல்: கூகுளுக்கு ரூ.421 கோடி அபராதம்...


கூகுள் நிறுவனத்துக்கு ரூ.421 கோடி அபராதம் விதித்து ரஷிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்பபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

        

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப்  பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது.


ரஷியாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கூகுள் நிறுவனத்துக்கு ரஷிய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. 


உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததாக கூகுள் நிறுவனத்திற்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உக்ரைன் மீது கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, இதற்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்புக்கு நேட்டோ நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து பொருள் உதவியும், ராணுவ உதவியும் செய்து வருகின்றன.


இதனிடையே இது குறித்து பல்வேறு தகவல்களும் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் கூகுள் நிறுவனம் சார்பில் ரஷ்யா குறித்து தீவிரவாதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் இருந்ததாகவும், அதனை நீக்க கோரி ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு தகவல் அனுப்பியிருந்ததாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது.


ஆனால், இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் சரியாக பதில் அளிக்காததால், ஆல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு 421 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டுக்கு பிறகு உள்ளடக்கம், தணிக்கை, தரவுகள் உள்ளிட்டவை தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா தொடர்ந்து முரண்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


கூகுளின் இத்தகைய செயலை ஒருதலைபட்ச பிரசாரம் என ரஷியா விமர்சித்துள்ளது. 


உக்ரைன் மீதான ரஷியாவின் போரை, சிறப்பு ராணுவ நடவடிக்கை என ரஷிய அரசு குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..

சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன்..


சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டின் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.


கடைசி சுற்று முடிவில், கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் ( 2 வெற்றி, 5 டிரா), அர்ஜூன் எரிகாசி (3 வெற்றி, 1 தோல்வி, 3 டிரா) ஆகியோர் தலா 4.5 புள்ளிகள் பெற்றிருந்தனர்.


வெற்றி, தோல்வி, டிரா கணக்கிட்டு புள்ளிகள் வழங்கியதில் முதலிடத்தை பிடித்த குகேஷ்க்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



தொலைத் தொடர்பு மசோதா 2023 -ன் முக்கிய அம்சங்கள்...



தொலைத் தொடர்பு மசோதா 2023 (Telecommunication Bill) -ன் முக்கிய அம்சங்கள்...


சிம் வாங்க போலி ஆவணங்களை கொடுத்தால் சிறை உறுதி: மத்திய அரசு...


போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் வாங்கினால், 3 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என புதிய தொலைத்தொடர்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.


வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாக கூறப்பட்டுள்ளது.



தொலைத் தொடர்பு மசோதா 2023 -ன் முக்கிய அம்சங்கள்:


- தொலைத் தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.


- போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


- தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


- சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.


- வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.


- மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.


- தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்


- தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.


கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்...

கனமழை பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகள் கட்டணமின்றி சான்றிதழ் நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்பால் இழந்த சான்றிதழ்களை பெற www.mycertificates.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதே இணையதளத்தில் தென்மாவட்ட கல்லூரி மாணவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து நகல் பெறலாம்- உயர்கல்வித்துறை.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,  வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



பட்டா மாற்றம் செய்துதரக் கோரிய மனுவை 6 மாதம் பரிசீலிக்காமல் இருந்ததால் நடவடிக்கை


வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என நீதிபதிகள் கருத்து


உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.. 


பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசீலிக்காத வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு சர்வே எண்களுடன் உள்ள நிலத்திற்கான பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளூர் தாசில்தார் ஆகியோரிடம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கடந்த மே 3ம் தேதி பரிந்துரை மனு அனுப்பியுள்ளார்.அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை எதிர்த்து கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானபானு ஆஜராகி மனு கொடுத்து நீண்ட நாட்களாகியும் விசாரிக்கவில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டுமென்று மே மாதத்தில் கோரிக்கை அளித்த மனுதாரரையும், நான்கெல்லையிலும் உள்ள நில உரிமையாளர்களையும் விசாரிக்க வேண்டிய பணி 6 மாதங்களாகியும் முடிக்கப்படவில்லை. எனவே, இரண்டு மாதத்திற்குள் மனுதாரரின் மனு மீது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் முடிவெடுக்க வேண்டும்.வருவாய் துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறு ஆய்வு மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதை வருவாய் துறையினர் முறையாக பின்பற்றவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினரின் மெத்தனப்போக்கான செயல் கண்டனத்திற்குரியது. உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மீது இரண்டு மாதத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கையை தலைமை செயலாளர் எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது - முதலமைச்சர் அவர்கள்...



தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது...


“உழவர்களின் நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுள்ளார்” - மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்.


மக்களின் உடல்நலனை உறுதிசெய்திட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.


6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்...

பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்...


 இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக் போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதையடுத்து பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்கிறேன். அதை அறிவிக்கவே நான் எழுதிய கடிதம் இது. இது எனது அறிக்கை" என்று பஜ்ரங் புனியா ட்வீட் செய்துள்ளார்.


எக்ஸ் இடுகைக்குப் பிறகு, பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரின் இல்லத்திற்கு வெளியே உள்ள நடைபாதையில் வைக்கச் சென்றார். அவரை டெல்லியின் கர்தவ்யா பாதையில் போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.


வியாழக்கிழமை, பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் வென்று இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர், இதில் சாக்ஷி தனது எதிர்ப்பின் அடையாளமாக விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்தார். "நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷண் போன்ற ஒருவர் டபிள்யூ.எஃப்.ஐயின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் மல்யுத்தத்தை விட்டுவிடுகிறேன். இன்னைக்கு முதல் என்னை விளையாட்டில் பார்க்கவே மாட்டீங்க" என்று சாக்ஷி கண்ணீருடன் விலகிக் கொண்டார்.


"அன்புள்ள பிரதமர் அவர்களே, உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் பல வேலைகளில் பிஸியாக இருப்பீர்கள், ஆனால் நாட்டின் மல்யுத்த வீரர்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்க நான் இதை எழுதுகிறேன். நாட்டின் பெண் மல்யுத்த வீராங்கனைகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிஷ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் கூறி அவருக்கு எதிராக போராட்டத்தைத் தொடங்கினர் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டது, "என்று புனியா எழுதினார்.


ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் பிரிஜ் பூஷண் மீது எஃப்.ஐ.ஆர் இல்லை. அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மாதம் மீண்டும் வீதிகளில் இறங்கினோம். ஜனவரியில் 19 புகார்தாரர்கள் இருந்தனர், ஆனால் ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. அதாவது பிரிஜ் பூஷண் 12 பெண் மல்யுத்த வீராங்கனைகள் மீது தனது செல்வாக்கை செலுத்தினார்" என்று பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.


எங்கள் போராட்டம் 40 நாட்கள் நீடித்தது. அந்த நாட்களில் எங்களுக்கு அதிக அழுத்தம் இருந்தது. நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச சென்றோம். அப்போது எங்களை விவசாய தலைவர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது உங்கள் அமைச்சரவையில் இருந்து பொறுப்பான அமைச்சர் ஒருவர் எங்களை அழைத்து நீதி வழங்குவதாக உறுதியளித்தார். இதற்கிடையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம், அவரும் எங்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தார். எங்கள் போராட்டத்தை நிறுத்தினோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


"ஆனால் டிசம்பர் 21 அன்று நடந்த டபிள்யூ.எஃப்.ஐ தேர்தலில், கூட்டமைப்பு மீண்டும் பிரிஜ் பூஷனின் கீழ் வந்தது. எப்போதும் போல கூட்டமைப்பை வெல்வேன் என்று அவரே கூறினார். கடும் நெருக்கடிக்கு ஆளான சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


"நாங்கள் அனைவரும் கண்ணீருடன் இரவைக் கழித்தோம். எங்களுக்கு என்ன செய்வது, எங்கே போவது என்று புரியவில்லை. அரசு எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. 2019-ம் ஆண்டு எனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அர்ஜூனா, கேல் ரத்னா விருதும் பெற்றேன். இந்த விருதுகளை நான் பெற்றபோது, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். ஆனால் இன்று சோகம் அதிகமாக இருக்கிறது. காரணம், ஒரு பெண் மல்யுத்த வீராங்கனை தனது பாதுகாப்பு காரணமாக விளையாட்டை விட்டு வெளியேறினார்" என்று பஜ்ரங் தெரிவித்துள்ளார்.


"விளையாட்டு நமது பெண் விளையாட்டு வீரர்களுக்கு அதிகாரமளித்துள்ளது, அவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. எல்லாப் புகழும் முதல் தலைமுறை பெண் விளையாட்டு வீரர்களையே சாரும். பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விளம்பரத் தூதர்களாக இருக்கக்கூடிய பெண்கள் இப்போது தங்கள் விளையாட்டில் தங்கள் நடவடிக்கைகளைத் திரும்பப் பெறும் அளவுக்கு நிலைமை உள்ளது. 'விருது' பெற்ற மல்யுத்த வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நமது பெண் மல்யுத்த வீராங்கனைகள் அவமதிக்கப்படும்போது பத்மஸ்ரீ விருது பெற்றவனாக என்னால் வாழ முடியாது. எனவே எனது விருதை உங்களிடம் திருப்பித் தருகிறேன்" என்று பஜ்ரங் குறிப்பிட்டுள்ளார்.






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Powers given to Government Aided School Correspondents to pay Teachers

  அனைத்து வகை அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குகின்ற முழு அதிகாரமும் பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி உத்தரவு The order ...