கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - நிறுவனங்கள் & பணியிடங்கள் எண்ணிக்கை...



தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் - நிறுவனங்கள் & பணியிடங்கள் எண்ணிக்கை - District Skill Training Office - Krishnagiri - PM National Apprenticeship Mela - January 2024 - Venue: Govt ITI Hosur, Date: 08.01.2024 - ESTABLISHMENTS VACANT AND STALL DETAIL...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் ஜனவரி 10 (புதன்) 2024 முதல் - PM National Apprenticeship Mela from 10th (wed) Jan 2024...

 தேசிய தொழில் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் ஜனவரி 10 (புதன்) 2024 முதல் - PM National Apprenticeship Mela from 10th (wed) Jan 2024...



 

Educational District wise Status of Hi-Tech lab DEE - As on 04.01.2024 - 11.00pm...


 Middle Schools - Hi-Tech Lab - Site Preparation Status on 04-01-2024...



>>> Click Here to Download...


Educational District wise Status of Smart Class DEE - As on 04.01.2024 - 11.00pm...


 Elementary Schools - Smart Class - Site Preparation Status on 04-01-2024...



>>> Click Here to Download...


யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

மாநில அரசு ஊழியர்கள்...

வருமான வரி செலுத்துவோர்...

பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...

சர்க்கரை அட்டைதாரர்கள்...

பொருளில்லா அட்டைதாரர்கள்...




குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



*பொங்கல் பரிசு 1000 ரூபாய்... யாருக்கு கிடைக்கும்.. யாருக்கு கிடைக்காது?


தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை பார்ப்போம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

"தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.



மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10-ம் தேதியன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்றுவரும் 1 கோடியே 15 இலட்சம் மகளிரின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்கும்:
 முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி பார்த்தால் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ.1000 கிடைக்கும். அதாவது PHH எனப்படும் முன்னுரிமை கார்டுகளுக்கும். PHH - AAY எனப்படும் அந்தோதயா அன்ன யோஜா கார்டுகளுக்கும், அதாவது 35 கிலோ அரிசி வாங்குவோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் NPHH - எனப்படும் முன்னுரிமையற்ற கார்டுகளுக்கும் வழங்கப்படும்.


*யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு கிடைக்காது:
 NPHH-S என்று குறிப்பிட்டிருக்கும் ரேஷன் கார்டுக்கு சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என்பதால் இந்த கார்டுகளுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு கண்டிப்பாக கிடைக்காது, NPHH-NC ரேஷன் அட்டைதார்கள் எந்த பொருளும் வாங்காதவர்கள் என்பதால் அவர்களுக்கும் 1000 பொங்கல் பரிசு கிடைக்காது. அதேநேரம் NPHH கார்டோ அல்லது PHH கார்டோ, PHH - AAY கார்டிலோ குடும்ப உறுப்பினர்கள் யாராவது அரசு ஊழியராக இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருமான வரி கட்டியிருந்தாலோ அந்த குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசான 1000 ரூபாய் கிடைக்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வருமான வரி கட்டியவர்கள், அரசு ஊழியர்கள் என்றால், உங்கள் ரேஷன் கார்டு காட்டிக் கொடுத்துவிடும். எனவே உங்களுக்கு 1000 ரூபாய் கிடைக்காது.



*முதல் முறை: மகளிர் உரிமை தொகை வழங்கும் பாணியில் தான் 1000 ரூபாய் பொங்கல் பரிசினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேநேரம் பொங்கல் பரிசு வருமான வரி கட்டுவோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தரப்படாது என்று தனியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட பொங்கலுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் இந்த நடைமுறையில் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்குமே பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு இல்லை என்று அறிவித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிதி நெருக்கடி காரணமாக அரசு இவர்களுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.


குறள் 392:


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.


விளக்கம் :

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.



பழமொழி : 


All are not saints that go to church


வெளுத்ததெல்லாம் பாலாகுமா. கறுத்ததெல்லாம் தண்ணீராகுமா?



பொன்மொழி:


Innovation distinguishes between a leader and a follower. - Steve Jobs


புதுமையே தலைவரையும் பின்பற்றுபவரையும் தனித்துக் காட்டுகிறது. - ஸ்டீவ் ஜாப்ஸ் 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்

அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை

நீரில் கரையாத பொருள் - கந்தகம்

நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Advance - முன்பணம் 

Advertisement - விளம்பரம்

Advice - யோசனை 

Affable - உபசரணை

Afford - தாங்கு 

After - பிறகு


ஆரோக்கியம்


குடமிளகாய் 


பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு... எனப் பல்வேறு நிறங்களில் உள்ளது. உணவுக்கு சுவைகூட்டுவது. ஊட்டச்சத்துகள் நிறைந்த ஆரோக்கியத்தை கொடுப்பது இந்த குடமிளகாய்.. இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ உள்ளதால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை கிடைக்கும். அதோடு மக்னீசியம், இரும்புச்சத்தும் இதில் உள்ளன.



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 5


1592 – ஷாஜகான், முகலாயப் பேரரசர்


1955 – மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்


1968 – கனிமொழி கருணாநிதி, இந்திய அரசியல்வாதி - தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்


ஆகியோர் பிறந்த நாள் இன்று...



ஜனவரி 5 - சிறப்பு நாட்கள் :


தேசிய பறவை நாள் (ஐக்கிய அமெரிக்கா)



நீதிக்கதை


நடப்பது எல்லாம் நன்மைக்கே...


காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.


சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.


ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.


நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.


சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.


“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.


சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.


இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.


உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.


சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.


வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.


தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.


கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.


இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.


“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.


உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.


நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை.




இன்றைய முக்கிய செய்திகள் 


05-01-2024 


தமிழகத்தின் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தாயுடன் மீண்டும் இணைந்த யானைக் குட்டியின் தூக்கத்தின் படம் இதயங்களை வென்றது.


PM செல்ஃபி புள்ளிகளின் விலையை வெளிப்படுத்திய சில நாட்களுக்குப் பிறகு ரயில்வே RTI விதிமுறைகளை கடுமையாக்குகிறது.


ஜனவரி 20ம் தேதிக்குள் டாக்டர்கள் ஆட்சேர்ப்பு முடிக்கப்படும்: சுகாதார அமைச்சர்..


என்ஆர்ஐ பிரிவின் கீழ் கல்விக் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் குறைக்கிறது.


தமிழக எம்.பி.க்கள் அமித்ஷாவிடம் அப்பாயின்ட்மென்ட் கோருகின்றனர்; வெள்ள நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தல்.


விழுப்புரத்தில் வளர்ச்சிப் பணிகளை தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு.


ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



Today's Headlines 


05-01-2024


A sleeping image of a baby elephant reunited with its mother at Tamil Nadu's Anaimalai Tiger Reserve has won hearts. 


Railways tightens RTI norms days after PM reveals price of selfie points 


Recruitment of doctors will be completed by January 20: Health Minister.. 


Anna University reduces tuition fees under NRI category.


Tamil Nadu MPs demand appointment from Amit Shah; Urge to provide flood relief funds. 


Tamil Nadu Assembly Evaluation Committee examines development works in Villupuram. 


Jallikattu events will begin on January 15. Collector MS Sangeetha said in a press release that it will be held at Avaniyapuram, Palamedu and Alankanallur.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Type 2 diabetes நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

 டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள் ஆம், சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க ஒர...