கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



 TNPSC வெளியிட்ட சிவில் நீதிபதி தேர்வுப் பட்டியல் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து கடந்த கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் இந்த பணிக்காக விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது.


மொத்தம் இந்த தேர்விற்காக 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.


இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடந்து முடிந்தது. இதன் பின்னர் முதன்மை எழுத்து தேர்வானது (மெயின் தேர்வு) கடந்த தாண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்தது. இந்தத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அத்தேர்வுக்கான அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 472 பேர் அழைக்கப்பட்டனர். இதற்கான முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது.


இதனை தொடந்து, கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியானவர்களின் 245 பேர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான புரவைசனல் பட்டியலை ரத்து செய்ய கோரி ஷீலா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவில், சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில், பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பாமல் இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவில் நீதிபதிகளின் தேர்வு பட்டியலை ரத்து செய்யுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பட்டியலை 2 வாரங்களில் வெளியிட டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி SPD செயல்முறைகள் வெளியீடு...

 

 மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்குடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக பள்ளிக்கு ரூபாய் 2000 ஒதுக்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024 வெளியீடு...



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் 


ந.க.எண்: 0783/ A7/SS/2023, நாள்: 29.02.2024


பொருள் : 2023-24 – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 28.02.2023 முதல் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ளுதல் – நிதிவிடுவித்தல் – தொடர்பாக...


பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், ந.க.எண். 079119/எம்/இ1/2023, நாள். 20.02.2024

அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம் 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு...


அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் - குறைந்தபட்சம்  6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு முடிய 175 மாணவர்கள் மற்றும் ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ள 66 பள்ளிகளுக்கு மட்டும் ஏற்கனவே அந்த பள்ளிகளில் உள்ள 216 பட்டதாரி பணியிடங்களை தவிர்த்து கூடுதலாக அப்பள்ளிகளுக்கு 114 பட்டதாரி பணியிடங்கள் அனுமதி அளித்து ஆணை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 வெளியீடு... 



>>> பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண்: 54, நாள்: 28-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



6-8 வகுப்புகளில் குறைந்தபட்சம் 175 மாணவர்கள் மற்றும் 6-8 வகுப்புகளில் தலா 35 மாணவர்கள் என்ற இரண்டு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு...

26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி...

  


 26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 ஆகிய நாட்களில் நடந்த 6, 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான பிப்ரவரி மாத கற்றல் விளைவுகள் மற்றும் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு விடைக்குறிப்புகள் - தமிழ் & ஆங்கில வழி (Answer Keys of Learning Outcomes (LOs) & Competency Based  Assessment Exam February 2024 for Class 6, 7, 8 & 9 held on 26.02.2024, 27.02.2024, 28.02.2024 மற்றும் 29.02.2024 - Tamil & English Medium)...



>>> Click Here to Download 6th, 7th, 8th & 9th Std - Answer Key - Tamil Medium - February 2024 LOs & Competency Based  Assessment Exam...



>>> Click Here to Download 6th, 7th, 8th & 9th Std - Answer Key - English Medium - February 2024 LOs & Competency Based  Assessment Exam...


NMMS RESULT 2023-2024 - இட ஒதுக்கீடு பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் விவரம்...

 

 

NMMS RESULT 2023-2024 - இட ஒதுக்கீடு பிரிவுகள் வாரியாக மதிப்பெண்கள் விவரம்...


*GEN-2053*

TOP MARK :150

LOW MARK : 96


*OBC-1774*

TOP MARK :96

LOW MARK :72


*BCM-234*

TOP MARK :96

LOW MARK : 72


*MBC-1339*

TOP MARK :96

LOW MARK : 72


*SC-1004*

TOP MARK :96

LOW MARK : 81


*SCA-201*

TOP MARK :96

LOW MARK : 78


*ST-67*

TOP MARK :96

LOW MARK : 82


*GEN LV (BLIND)-7*

TOP MARK :114

LOW MARK : 59


*GEN HH/HI-5*

TOP MARK :102

LOW MARK : 58

*GEN ORTHO-11*

TOP MARK :147

LOW MARK : 63

-----------------------------------

Total.             : 6695

-----------------------------------


2023-24 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...

 

 2023-2024 NMMS  தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...


அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.


*NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்*:

General 2053 / 2053

OBC. 1377 / 1774 =    397

BCM.   152 /  234.  =     82

MBC. 1013 / 1339 =.  326

SC.     1004 /1004

SCA.     201 /  201

ST.           67 /    67

Blind.         7 /      7

Hearing.    5 /      5

Ortho.       11/.   11

              ----------  --------

               5890.   6695

               ----------  --------



NMMS தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் விவரம்...

SAT 36 

MAT 36 

(BC / MBC / BC MUSLUM)



SAT 29 

MAT 29 

(SC/ST) .


மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .


நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில்  6695 இடங்கள். மேற்கண்ட தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.


அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள்  மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதனால்  அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில் 

BC /MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36 MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில்  2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.


MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.


இந்த ஆண்டு BC/MBC/BC (MUSLIM)CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.


SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.


வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது.வரும் ஆண்டில் 

வெற்றி இலக்கை அடைய 

இன்றே தற்போது நம்மிடம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை அடுத்த ஆண்டு  NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.

அறிவியல் மற்றும்  சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.



அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 35000 கோடி ரூபாய் லாபம் - நக்கீரன் இதழ் செய்தி வெளியீடு...

 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழ்நாடு அரசுக்கு 35000 கோடி ரூபாய் லாபம் - நக்கீரன் இதழ் செய்தி வெளியீடு...


35000 crore rupees profit for Tamilnadu government if implementation of old pension scheme for government employees, teachers - Nakkheeran magazine news...



>>> நக்கீரன் இதழ் செய்தி - PDF File...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...