கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-24 NMMS தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...

 

 2023-2024 NMMS  தேர்வு முடிவுகள் உணர்த்தும் உண்மைகள் குறித்த விளக்கம்...


அன்பிற்குரிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.


*NMMS 2023-24 தேர்வு முடிவுகளின் விபரம்*:

General 2053 / 2053

OBC. 1377 / 1774 =    397

BCM.   152 /  234.  =     82

MBC. 1013 / 1339 =.  326

SC.     1004 /1004

SCA.     201 /  201

ST.           67 /    67

Blind.         7 /      7

Hearing.    5 /      5

Ortho.       11/.   11

              ----------  --------

               5890.   6695

               ----------  --------



NMMS தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்கள் விவரம்...

SAT 36 

MAT 36 

(BC / MBC / BC MUSLUM)



SAT 29 

MAT 29 

(SC/ST) .


மேற்கண்ட புள்ளி விபரம் நமக்கு தெரிவிக்கும் உண்மை .


நமது மாநில ஒதுக்கீடு அகில இந்திய அளவில்  6695 இடங்கள். மேற்கண்ட தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 5890 மட்டுமே.


அதாவது பொது/ SC/ST /PWD பிரிவு மாணவர்கள்  மட்டுமே அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடத்தையும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதனால்  அதிகளவில் தகுதி மதிப்பெண் பெற்ற SC/ ST மாணவர்களால் தேர்வு பட்டியலில் இடம் பெற இயலவில்லை. அதேவேளையில் 

BC /MBC/ BC( MUSLIM) மாணவர்களில் குறைந்த பட்சமதிப்பெண் SAT 36 MAT 36 மதிப்பெண்கள் கூட பெறாமல் நமது மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட3347 இடங்களில்  2542 இடங்களுக்கு மட்டுமே தகுதி பெற்று 805 இடங்களை அகில இந்திய அளவில் இழந்திருக்கிறோம்.


MAT இல் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நமது மாணவர்கள் SAT இல் குறைந்த பட்ச மதிப்பெண் 36 பெறாமல் வெற்றியை இழந்துள்ளனர்.


இந்த ஆண்டு BC/MBC/BC (MUSLIM)CUT OFF MAT 36 SAT 36 TOTAL 72 இல் முடிந்திருக்கிறது.


SAT இல் 36 மதிப்பெண்கள் பெறாமல் ஒன்று இரண்டு மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் நூற்றுக்கணக்கில் மாணவர்கள் வெற்றியை இழந்துள்ளனர். தோல்வியில் இருந்து தான் மிக பெரிய பாடங்களை கற்றுகொள்ள முடியும்.


வெற்றி பெறாமல் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மாணவர்களின் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன வேதனை தாங்கிட முடியாதது.வரும் ஆண்டில் 

வெற்றி இலக்கை அடைய 

இன்றே தற்போது நம்மிடம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ /மாணவிகளை அடுத்த ஆண்டு  NMMS SAT தேர்வுக்கு தயார் செய்யும் பணியை தொடங்குவோம்.

அறிவியல் மற்றும்  சமூகவியல் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சி கொடுப்போம்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...