கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"நீங்கள் நலமா? என்ற புதிய திட்டம் 6 ஆம் தேதி தொடக்கம்!" - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பு...

 "நீங்கள் நலமா? என்ற புதிய திட்டம் வரும் 6 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைக்கிறேன்!" - மயிலாடுதுறையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்...





அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 31, நாள்: 26-02-2024 வெளியீடு...


 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2024-2025 ஆம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண் : 31, நாள்: 26-02-2024 வெளியீடு...


G.O. (Ms) No. : 31, Dated: 26-02-2024 - Implementation of Anaithu Grama Anna Marimalarchi Thittam - Guidelines for the year 2024-2025 Prescribed...



>>> அரசாணை (நிலை) எண் : 31, நாள்: 26-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளிக்கல்வித்துறை - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 185, நாள்: 04-03-2024 வெளியீடு...


 பள்ளிக்கல்வித்துறை - இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 185, நாள்: 04-03-2024 வெளியீடு...


Department of Education - Transfer of Joint Directors - Ordinance G.O. No: 185, Dated: 04-03-2024...



>>> அரசாணை (வாலாயம்) எண்: 185, நாள்: 04-03-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை Admission விவரங்களை பள்ளியின் EMIS தளத்தில் பதிவு செய்தல் குறித்த வழிமுறைகள்...


 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விவரங்களை பள்ளியின் EMIS தளத்தில் பதிவு செய்தல் குறித்த வழிமுறைகள்...



AY-2024-2025 - How to update new admission in EMIS school login?


புதிய மாணவர் சேர்க்கையை EMIS ல் பதிவு செய்வது மிக எளிமையாக காணப்படுகிறது. ஆதார் எண் இல்லையென்றாலும் பதிவு செய்ய முடியும். மாணவர் பெயர், பிறந்ததேதி, பாலினம், சேர்ப்பவரின் உறவுமுறை, இனம், சேரும் வகுப்பு இது மட்டுமே கட்டாயமாக உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே மேற்கண்ட விவரங்கள் மட்டும் இருந்தாலே EMIS ல் பதிவு செய்து விடலாம். எனவே அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களும் தலைமை ஆசிரியர்களுக்கு மேற்கண்ட விவரங்களைக் கூறி விரைந்து மாணவர் சேர்க்கையைத் துரிதப்படுத்துமாறும் ,அதை EMIS ல் பதிவு செய்ய அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


DEO (E) Krishnagiri


2024-2025 ஆம் கல்வி ஆண்டு - EMIS பள்ளி உள்நுழைவில் புதிய மாணவர் சேர்க்கையை எவ்வாறு புதுப்பிப்பது?



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 5,420 ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகப் உபகரணங்களைக் கையாளுதல் - பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 523/ ஊ4/ 2023, நாள்: 04-03-2024...


 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 5,420 ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வகப் உபகரணங்களைக் கையாளுதல் - பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி -  மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 523/ ஊ4/ 2023, நாள்: 04-03-2024...


Handling of Laboratory Equipment - Safety and Maintenance Training for 5,420 Laboratory Assistants working in Government High and Higher Secondary Schools - State Council of Educational Research and Training Director's Proceedings Rc.No: 523/ U4/ 2023, Dated: 04-03-2024...



>>> மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 523/ ஊ4/ 2023, நாள்: 04-03-2024...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05-03-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05-03-2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை.


குறள் 78:


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.


விளக்கம் :

மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.



பழமொழி : 


Empty vessels make the most noise.


நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்...




பொன்மொழி:


To learn, you have to listen. To improve, you have to try.


 அறிய, நீங்கள் கேட்க வேண்டும். மேம்படுத்த, நீங்கள் முயற்சிக்க வேண்டும். 


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்

வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்

புவி நாட்டம் உடையது - வேர்

இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்

யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்




ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Generation - தலைமுறை 

Gently - மென்மையாக 

Get - பெறு 

Ginger - இஞ்சி 

Gift - பரிசு


ஆரோக்கியம்


தலைவலி


சுக்கைப் பொடித்து தண்ணீருடன் கலந்து பசையாக்கி நெற்றிப் பொட்டில் பசையாகப் போடலாம்.

மஞ்சளைச் சுட்டு புகையை முகர தலைவலி குணமாகும்.

திருநீற்றுப் பச்சிலை இலையை கசக்கி முகர தலைவலி குணமாகும்.



இன்றைய சிறப்புகள்


மார்ச் 5


1981 – ZX81 என்ற பிரித்தானிய வீட்டுக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகம் முழுவதிலும் 1.5 மில்லியன் கணினிகள் விற்பனை செய்யப்பட்டன.




பிறந்த நாள் 

-



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்


மர நாள் (ஈரான்)


நீதிக்கதை


யானை ராஜாவும் சுண்டெலிகளும் 


வெயில் காலம் வந்ததுனால காட்டுல இருந்த நதி சுத்தமா வற்றி போச்சு. காட்டுல நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தது. அதுல ஒரு பெரிய யானை கூட்டம் இருந்துச்சு, அந்தக் கூட்டத்தை யானை ராஜா தான் பத்திரமா பார்த்துகிட்டு இருந்தாரு. அப்போது தண்ணி இல்லாம மற்ற விலங்குகள் இறந்துபோகிறத பார்த்து தன் கூட்டத்தோட வாழ்க்கையை நினைத்து பயந்து போனார் ராஜா யானை. 


ராஜாவுக்குத் தெரியும் அவர் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும்னு, இல்லனா ஒவ்வொரு யானையாக இறந்து போய்விடும். ஒரு நல்ல தீர்வை காண எல்லா யானைகளும் சுற்றி கூடி யோசிச்சாங்க. “தண்ணீர் உள்ள ஒரு இடத்துக்கு போகவில்லை என்றால் எல்லாருடைய வாழ்க்கையும் ரொம்ப மோசமாய் போக நிறைய வாய்ப்புகள் இருக்கு” என்று யானை ராஜா சொன்னார். 


“தண்ணியா! எனக்கு தண்ணீர் இருக்கும் ஒரு இடம் தெரியும். ஆனா அங்க போகணும்னா நம்ம ரொம்ப தூரம் போகனும். நம்ம எல்லாரும் அங்கே போய் விடலாம்” என்று ஒரு யானை சொன்னது. அதுக்கு எல்லா யானைகளும்  ஒத்துகிட்டாங்க, பயணத்தை ஆரம்பிச்சாங்க.


ரொம்ப தூரம் நடந்த அப்புறம் தாகமாக இருந்த யானைகள் தூரத்துல ஒரு நதியை பார்த்ததும்  நதியை நோக்கி ஓடினாங்க. அவங்க அப்படி ஓடி போகும் வழியில் தங்கியிருந்த ஒரு சுண்டெலி கூட்டத்தின் வீடு சுத்தமா அழிஞ்சு போச்சு. எல்லா எலிகளும் திடீரென  என்ன நடந்தது என்று கலந்து பேசினார்கள். 




யானைகள் புகுந்தது அறிந்து, “நம்ம எல்லாரும் யானை கிட்ட போய் நம்ம வாழும் இந்த வழியை விட்டுவிட்டு  வேற வழியாக நதிக்கு  போக சொல்லி கெஞ்சலாம்” என்று எலி கூட்டத்தில் முடிவு செய்தார்கள். எல்லா எலிகளும் யானை கூட்டத்துகிட்ட போய் அவங்களுக்கு முன்னாடி நின்னு யானை ராஜாகிட்ட பேசணும்னு பொறுமையாக கேட்டாங்க. 


“என் ராஜாவே, நாங்க இந்த நதி பக்கம் ரொம்ப வருஷமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். உங்க யானைகள் இந்த வழியா தண்ணிர் குடிக்க போகும் போது நாங்க தங்கியிருக்கும் இடம் சுத்தமாக அழிந்து போகிறது.


இப்பவே பாதி இடத்தை இழந்து விட்டோம் தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்!. உங்கள் யானைகளை வேற வழியே போய் தண்ணி குடிக்க சொல்லுங்க” என்று எலிகள் யானை ராஜாவிடம் கேட்டது. “சரி, அப்போ நான் என் கூட்டம் கிட்ட பேசுறேன்” என்ற யானை ராஜா, தன் கூட்டத்தில் “யானைகளே நம்ம தண்ணீர் குடிக்க போகிற வழியில ஒரு சுண்டெலி கூட்டம் இருக்கு. நம்ம ஓடி வரும்போது அந்த இடத்தை சேதப்படுத்திட்டோம். 


இப்ப இருந்து அவங்க வழியில வராம நாம வேற வழியே தான் போகணும்”. என்றது. “ஐயோ,! ராஜா  நீங்க ஒரு சின்ன விலங்கு கிட்ட பேசினதே பெரிய விஷயம் அவங்களுக்கு  இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காதீங்க. 




நாங்க இதுக்கு ஒத்துக்க மாட்டோம்” என்றது ஒரு யானை. “நேரம் வரும்போது அவங்க உதவி நமக்கு தேவை. நாளையிலிருந்து நம்ம வேறு வழியா தான் போகணும்”. என்று ராஜா யானை தன் கூட்டத்திடம் சொன்னது. யானைகள் ராஜா சொன்னது போல அடுத்த நாள் வேற வழியா தண்ணி குடிக்க போனார்கள். 


தண்ணீர் குடித்து விளையாடி ரொம்ப ஜாலியா இருந்தாங்க, ஆனா அந்த சந்தோஷம் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் யானைகள் நதியில் விளையாடிட்டு  இருக்கும்போது சில வேட்டைக்காரர்கள் அதை பாத்திட்டு, அவங்கள பிடித்துக் கொண்டு போகணும்னு நினைச்சாங்க. 


அடுத்த நாள் வழக்கம்போல யானைகள் நதிக்கு போய்க்கொண்டிருக்கும் போது திடீரென சில யானைகள் வேட்டைக்காரர்கள் வைத்திருந்த கயிறு பொறிக்குள் மாட்டிக்கொண்டங்க. 



யானைகள் தலைவரும் அதில் மாட்டி இருந்தார். அவர் மற்ற யானைகளிடம் “எல்லோரும் உடனே எலிகள் தங்கி இருக்கும் இடத்துக்குப் போங்க, இங்கு நடந்ததைப் பற்றி அவங்க கிட்ட சொல்லுங்க அந்த வேட்டைக்காரர்கள் திரும்பி வருவதற்குள் நமக்கு உதவி செய்ய சொல்லுங்க” என்றது. உடனே அந்த யானைகள் எலிகள் கிட்ட போய் நடந்ததை பத்தி சொன்னாங்க அவங்க சொன்னதை கேட்டதும் யானைகள் மாட்டிய இடத்துக்கு எலிகள் வந்து, அந்த கயிற்றை கடித்து யானைகளை காப்பாற்றினார்கள். 


யானை ராஜா எலிகள் கிட்ட தன் நன்றியை சொன்னார். எலிகளை ஏளனமாக பார்த்த மற்ற யானைகள் ஒருவர் எவ்வளவு சின்னதாக இருந்தாலும் நாம அவங்களை எப்போதும் ஏளனமாக பார்க்க கூடாது என்று உணர்ந்து கொண்டார்கள். 



யார் திறமைகளையும் குறைத்து எடை போடக்கூடாது என்று புரிந்து கொண்ட யானைகள் எலிகள் கிட்ட மன்னிப்பு கேட்டு எல்லாரும் ஒன்றாக அங்க சந்தோஷமா இருந்தாங்க.



இன்றைய முக்கிய செய்திகள் 


05-03-2024 


6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்...


சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது: பிரதமர் மோடி உரை...


பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் ஷெபாஸ் ஷெரீப்...


மயிலாடுதுறையில் ரூ.114 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...


இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி வாக்குறுதி...



Today's Headlines:

05-03-2024


New bank accounts will be opened for students joining class 6 at their school: Minister Anbil Mahesh...


 Chennai city is full of talented youth: PM Modi speech... 


Shebaz Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time...


Chief Minister M.K.Stalin inaugurated the new collector's office built at a cost of Rs.114 crore in Mayiladuthurai... 


9.64 lakh vacant posts in Union government departments will be filled when the coalition government of India takes over: Rahul Gandhi promises...

பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள்...


 பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 57 வகையான திட்டங்கள் - இயக்ககங்கள் - 57 Types of Schemes, Programs & Directorates in the School Education Department...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...