கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்பு - 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


 பேச்சுவார்த்தையில் அனைத்துக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டதால் 11 நாட்கள் நீடித்த வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு...


*மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு, உடனடியாக அரசாணைகள் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதை ஏற்று, 11 நாட்கள் நீடித்த காலவரையற்ற வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு:*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 11 நாட்களாக மிக எழுச்சியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.*


*நேற்று (07.03.2024) சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்ட இரவு பகலான காத்திருப்புப் போராட்டம் மிகப்பெரும் தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.*


*இதன் காரணமாக நேற்று (07.03.2024) மாலை வருவாய்த்துறை செயலாளர் அவர்கள்,  மாநில நிர்வாகிகளோடு அனைத்து கோரிக்கைகள் குறித்தும் விரிவாக பேசினார்கள்.*


*இன்று (08.03.2024) காலை 11.00 மணிக்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில், வருவாய்த்துறை அலுவலர்களின் அனைத்து கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்பட்டதாகவும், இதற்கான அரசாணைகளை விரைந்து வழங்குவதாகவும் அமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள்.*


*இதில் குறிப்பாக இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.* 


*அதைப்போன்றே அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணை மிக விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.*


*வருவாய்த்துறை அலுவலருக்கான 114 ஈப்புகள் வழங்கும் அரசாணை இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்பட உள்ளது.*


*முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கான பணி முதுநிலையில் உள்ள பிரச்சனை குறித்து ஒரு மாத காலத்தில் ஆணைகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*


*அனைத்து நிலை அலுவலருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் & தனி ஊதியம்   வழங்குவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வதாகவும், இது குறித்து மாணபுமிகு முதலமைச்சரிடம் பேசி மிக விரைவில் சாதகமான பதிலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்குவதற்கான அரசாணைகளை விரைவில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள்.*


*நாடாளுமன்ற தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு வருகின்ற ஏப்ரல் மாதத்திலேயே  வழங்கப்படுவதாக வருவாய்த்துறை செயலாளர் அவர்களும், முதன்மை தேர்தல் அலுவலர் அவர்களும் உறுதி அளித்துள்ளார்கள்.*


*உங்களைத்தேடி, உங்கள் ஊரில் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஒரு முகாமிற்கு ரூபாய் 50,000 என்ற அளவில் நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*நமது அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதால், போராட்ட களத்திலேயே நடைபெற்ற அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தின் முடிவின் அடிப்படையிலும், நல்லெண்ணம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்டத்தின் தன்மை குறித்தும், வெற்றிகள் குறித்தும், வென்ற கோரிக்கைகள் குறித்தும், அனைத்து ஊழியர்களையும் மாநில நிர்வாகிகள் நேரடியாக சந்தித்து விளக்க கூட்டங்களை ஒரு வார காலத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் வைரவிழா ஆண்டில் வீரம் செறிந்த 11 நாள் வேலை நிறுத்தத்தில் 12,000 அலுவலர்கள் கலந்து கொண்டு நமது ஒற்றுமையை பறைசாற்றி உள்ளோம்.* 


*இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகள், வட்டக்கிளை நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்களுக்கும் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநில மையத்தின் சார்பில் புரட்சி வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*இப்பேச்சுவார்த்தையில் ஊதியப்பிடித்தமோ, எவ்வித பழிவாங்கல் நடவடிக்கையோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.*


*மாண்புமிகு அமைச்சர் உடனான பேச்சுவார்த்தை முடிவுகள் இன்று மாலை அரசால் வழங்கப்பட உள்ளது.*


*இறுதி வெற்றி நமதே!*


*மாநில மையம்,*

*தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA).*


பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடிய Audio பதிவு...

 

பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் பள்ளிகளை அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடிய Audio Message 👇🏻👇🏻👇🏻👇🏻



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...



 இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...


19 நாட்களாக போராடி வந்த  ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்...


மாணவர் சேர்க்கை நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதை ஒட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பு...


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உறுதிமொழி ஏற்று போராட்டம் வாபஸ்...



*_இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்_*


*19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக  ஒத்திவைப்பு.*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார். அங்கிருந்து போராட்ட களத்திலிருக்கும் மாநில தலைமை ஜே.ராபர்ட் அவர்களுடன்  (இடைநிலை ஆசிரியர்களுடன்) தொலைபேசியில் பேசிய பின்பு மதிப்புமிகு பள்ளிகல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  போராட்டத்திற்கான சுமுகமான தீர்வு மிக விரைவில் எட்டப்படும் என்பதால் தற்காலிகமாக 19 நாளாக நடைபெற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.*


*போராட்ட நாட்கள் அனைத்தும் தகுதியான விடுப்பாக முறைப்படுத்தப்படும்.*



*மற்ற அனைத்து விபரங்களும் விரைவில் நடைபெறவுள்ள  மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.*


_நன்றி..!!_


_ஜே.ராபர்ட்_


*_SSTA மாநில தலைமை_*


Ennum Ezhuthum - CRC Online Training - 1,2,3 Std - Assessment - Tentative Answers...

 

 Ennum Ezhuthum - CRC Online Training - 1,2,3 Std - Assessment - Tentative Answers...


1-ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான குறுவள மைய Online பயிற்சியை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்....


அதன் அடிப்படையில் 1 ஆம் முதல் 5 ஆம் வகுப்பு online பயிற்சியை கீழ்க்கண்ட தேதியில் பெற்றுக் கொள்ளலாம்...


Class -1 to 3  - 05.03.2024 முதல் 13.03.2024 வரை  


Class - 4 to 5 - 06.03.2024 முதல் 14.03.2024 வரை...



>>> Click Here to Download - Ennum Ezhuthum - CRC Online Training - 1,2,3 Std - Assessment - Tentative Answers...


மகளிர் தின வாழ்த்துகள்...

 மகளிர் தின வாழ்த்துகள்...



மகளிர் தினம் 

பிப்ரவரி 28, 1909 அன்று நியூயார்க் நகரில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட " மகளிர் தினம் " என்று அறிவிக்கப்பட்ட முந்தைய பதிப்பு . இது 1910 சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் ஜெர்மன் பிரதிநிதிகளை ஆண்டுதோறும் "ஒரு சிறப்பு மகளிர் தினம்" ஏற்பாடு செய்ய முன்மொழிய தூண்டியது. நிர்ணயிக்கப்பட்ட தேதி இல்லாவிட்டாலும்; [8] அடுத்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தின் முதல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நினைவேந்தல்களைக் கண்டது. 1917 இல் ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு, IWD மார்ச் 8 அன்று தேசிய விடுமுறையாக மாற்றப்பட்டது ; [9] பின்னர் அது சோசலிச இயக்கம் மற்றும் கம்யூனிஸ்ட் நாடுகளால் அந்த தேதியில் கொண்டாடப்பட்டது . 1960 களின் பிற்பகுதியில் உலகளாவிய பெண்ணிய இயக்கத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை இந்த விடுமுறையானது தீவிர இடதுசாரி இயக்கங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் தொடர்புடையது . 1977 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஊக்குவிப்பைத் தொடர்ந்து IWD ஒரு முக்கிய உலகளாவிய விடுமுறையாக மாறியது .


சர்வதேச மகளிர் தினம் பல நாடுகளில் பொது விடுமுறை. ஐ.நா. ஒரு குறிப்பிட்ட பிரச்சினை, பிரச்சாரம் அல்லது பெண்களின் உரிமைகள் தொடர்பான கருப்பொருள் தொடர்பாக விடுமுறையைக் கடைப்பிடிக்கிறது. 


மாணவர் சேர்க்கை - காட்சிப் பதாகைகள்...



 மாணவர் சேர்க்கை - காட்சிப் பதாகைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் - EMISல் பதிவு செய்ய தேவையான விவரங்கள் - Students Admission Campaign (AY 2024-2025)...



மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம் - EMISல் பதிவு செய்ய தேவையான விவரங்கள் - Students Admission Campaign (AY 2024-2025)...



>>> PDF கோப்பாக தரவிறக்கம் செய்வதற்கு இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...