கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BLO பணியை செய்யாத ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள்...

 

 BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு...



>>>  காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற வாசகங்களை வாகனங்களில் ஒட்டினால் மே 2 முதல் அபராதம்...

 


PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை...


மே 2 முதல் இதுபோன்ற வாசகங்களை வாகனங்களில் ஒட்ட சென்னை காவல்துறை தடை, மீறினால் அபராதம்...



>>> காவல் துறை செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம்...

 


*💢பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா?*



*_Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்._*


மே மாத (May Bank Holidays List) வங்கி விடுமுறை நாட்களின் முழு விவரம் :


மே 1 - மே தினம் / மகாராஷ்டிரா ஸ்தாபன நாள் (சென்னை, கொச்சி, பெங்களூர், தெலுங்கானா, ஆந்திரா, இம்பால், கொல்கத்தா, நாக்பூர், மும்பை, பனாஜி திருவனந்தபுரம் மற்றும் பாட்னா) வங்கி விடுமுறை.


மே 5 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 8 - இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா) வங்கி விடுமுறை.


மே 10 - அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு) வங்கி விடுமுறை.


மே 11 - இரண்டாவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 12 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 13 - நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 16 - மாநில தினம் (காங்டாக்) வங்கி விடுமுறை.


மே 19 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 20 - ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் வங்கி விடுமுறை.


மே 23 - புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்) வங்கி விடுமுறை.


மே 25 - நான்காவது சனிக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மே 26 - ஞாயிற்றுக்கிழமை (அனைத்து மாநிலங்களிலும்) வங்கி விடுமுறை.


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

 


மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...




>>> விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள் - JUDICIAL RECRUITMENT CELL, HIGH COURT, MADRAS - COMMON INSTRUCTIONS TO THE CANDIDATES APPLYING FOR VARIOUS POSTS IN THE SUBORDINATE JUDICIAL SERVICE IN THE STATE OF TAMIL NADU (Notification Nos. 75 to 171/2024, dated 28.04.2024)...



>>> மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் - காரணம் என்ன...?



ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரம் - காரணம் என்ன...?


கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்ததால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர்.


தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான கிரீஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர் பெற்றது. பால்கன் தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த நாட்டின் தலைநகரமாக ஏதென்ஸ் நகரம் உள்ளது. 



அட்டிக் சமவெளியில் அமைந்துள்ள இந்த நகரம் மிகப்பெரிய பரப்பளவை கொண்டது. 3 பக்கம் மலைகளால் சூழப்பட்ட ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக உள்ளது. 


கிரேக்க சாம்ராஜ்யத்தின் மையப்புள்ளியாக விளங்கும் ஏதென்ஸ் நகரம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நவீன ஒலிம்பிக் போட்டியின் தாயகமாக விளங்கும் கிரீஸ் நாட்டில் பல்வேறு சிறப்பு வாய்ந்த நினைவு சின்னங்களும், பண்டைய கால கட்டடங்களும் உள்ளது. இதனால் வெளிநாட்டினர் விரும்பி சுற்றுலா செல்லும் நகரமாக உள்ள ஏதென்ஸ் உள்ளது.


இந்நிலையில் இந்த நகரில் உள்ள சிண்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்டஸ் குன்று உள்ளிட்ட பகுதிகள் நேற்று ஆரஞ்சு நிறமாக மாறியது. இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் அதிர்ச்சியடைந்தனர்.



பார்ப்பதற்கு செவ்வாய் கிரகத்தை காண்பது போல காட்சியளிக்க என்ன காரணம் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கமளித்துள்ளது. அதாவது, “வட ஆப்பிரிக்காவில் இருந்து மேக கூட்டங்கள் இந்த காலக்கட்டத்தில் கிரீஸ், மாசிடோனியா, சிப்ரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நகர்வது இயற்கையான ஒன்று தான். 


இந்த மேக கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் புழுதி புயல் தாக்கியுள்ளது. இதனால் அந்நகரம் ஆரஞ்சு கலரில் தெரிந்தது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...



''சிறந்த ஆசிரியரால் மட்டுமே மிகச் சிறந்த குடிமகனை உருவாக்க முடியும்...''



_*ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது என்பது நூறு சதவீதம் உண்மை. தாய், தந்தையை விட, ஆசிரியரிடம் தான் ஒரு குழந்தை அதிக நேரம் செலவழிக்கிறது.*_ 


_எனவே தான், ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் என அழைக்கப்படுகின்றனர். தன்னிடம் படிக்கும் மாணவர்களை, சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் மனிதனாக மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு._ 


_*மாணவனுக்கு சமூகத்தில் கிடைக்கும் வெற்றி தான் கற்பித்த ஆசிரியரின் வெற்றி.*_


_பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான்.._


_*அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும் வரை வீசிக் கொண்டே இருந்தான்..*_


_அப்போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான்.._


_*மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார். ''மன்னர் ஆண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை' மக்களிடம் தங்கக் காசு கொடுத்து அதனை தெரிவித்து மகிழ்கிறார் என்று சொன்ன போது..*_


_மன்னன் குறுக்கிட்டுச் சொன்னான்,_


_*''இல்லை இல்லை, எனக்கு ஆண்மகவு*_ _*பிறந்ததற்காக நான் தங்கக் காசு கொடுக்கவில்லை .*_


_எனக்குப் பாடம் நடத்தி என்னைச் சிறந்த மனிதனாக உருவாக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும் போது என் மகன் பிறந்து விட்டான்.._


_*அவர் என் மகனை மிகப் பெரும்*_ _*அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கித்*_ _*தருவார் என்ற மகிழ்ச்சியில் தான் இந்தப் பொற்காசுகளை அள்ளித்*_ _*தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளித்*_ _*தூவினான் ..*_


_அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிகப் பெரும் அறிவாளியாக உருவெடுத்தவன் தான் பிலிப் என்ற மன்னனின் மகன் மாவீரன் அலெக்சாண்டர்.._



_*ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர்..*_

 

_மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்குப் புகழ் சேர்க்கின்றன._


_*ஆம்..,ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிகச் சிறந்த குடிமகனாக உருவாக்க முடியும்..*_



உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...

உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு...


27-04-2024 – Press News – Date Extension for Online Application - Direct Recruitment to The Posts of Assistant Professors in Tamilnadu Collegiate Educational Service for Govt. Arts & Science Colleges and Govt. Colleges of Education. 





>>> ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிகை செய்தி - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...