கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

MBBS கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


 எம்பிபிஎஸ் கலந்தாய்வு : நீட் கட்-ஆஃப் வெளியானதாக வதந்தி...


MBBS Counseling : NEET Cut-Off Released Rumors...




Income Tax Refund மோசடி - வருமான வரித்துறை எச்சரிக்கை...



Income Tax Refund மோசடி - வருமான வரித்துறை எச்சரிக்கை...


 இந்த மெசேஜ் வந்தால் உஷாராக இருங்கள்!


ஐ.டி ரீஃபண்ட்டுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து, டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது.


ரீஃபண்ட் பெற ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, கிரெடிட் கார்டு போன்ற தகவலைக் கேட்டு மெசேஜ்களை சிலர் அனுப்புகின்றனர்.


அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால், கணக்கில் இருந்து பணத்தை உரியவருக்குத் தெரியாமல் திருடி விடுகின்றனர். எனவே, ஐ.டி பெயரில் வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருங்கள்.


தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் - அரசாணை வெளியீடு...

 

 தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம் - அரசாணை G.O. Rt. No.3875, Dated: 19 .08.2024 வெளியீடு...



>>> Click Here to Download G.O. Rt. No.3875, Dated: 19 .08.2024...




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இளம் பகவத் ஐஏஎஸ் பணியிட மாற்றம்...


முதலமைச்சரின் இணை செயலாளராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நியமனம்...


 தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமனம்...


Abstract
Transfers and postings
Elambahavath, IAS - Notified.

- Thiru G. Lakshmipathy, IAS; and


PUBLIC (SPECIAL- A) DEPARTMENT
G.O. Rt. No.3875, Dated: 19 .08.2024
Krodhi, Aavani -3,
Thiruvalluvar Aandu - 2055.
Thiru K.
ORDER:
Under Rule 4(2) of the IAS (Cadre) Rules, 1954, sanction is accorded for the creation of a temporary post of Joint Secretary to Chief Minister in the Senior Scale of IAS for a period of one year with effect from the date of appointment, or till the need for it ceases, whichever is earlier.
The following transfers and postings are notified:-
(i) Thiru
. Lakshmipathy, IAS, Collector, Thoothukudi District is transferred and posted as Joint Secretary to Chief Minister in the post created in para 1 above; and
(ii)
Thiru K. Elambahavath, IAS, Director of Public Libraries is transferred and posted as Collector, Thoothukudi vice Thiru G. Lakshmipathy,IAS.
Under Rule 12(1) of the IAS (Pay) Rules, 2016, the Government declare that the post of Joint Secretary to Chief Minister created in para 1 above in the Senior Scale of IAS be equivalent in status and responsibilities to the cadre post of "Joint Secretary to Government" specified in Schedule II-B of the IAS(Pay) Rules, 2016.


(BY ORDER OF THE GOVERNOR)
N. MURUGANANDAM


To
CHIEF SECRETARY TO GOVERNMENT
Thiru G. Lakshmipathy, IAS, Collector, Thoothukudi District, Thoothukudi.
Thiru K. Elambahavath, IAS, Director of Public Libraries, Chennai.
The Principal Secretary to Government,
Revenue & Disaster Management Department, Chennai-9.The Secretary to Government, School Education Department /
Other Secretaries to Government, Chennai-9.


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


17.8.2024 முதல் 9.11.2024 வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


SCERT Director's Proceedings for Conducting ICT Training for Graduate Teachers B.T.Assistants at Block Level from 17.8.2024 to 9.11.2024...


 🪩💻🖱️💻🖱️💻🖱️💻

17.8.24 முதல் 09.11.24 வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி  வட்டார உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில்  உள்ள கணினிகள் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப-ஆசிரியர்களது பணி பாதிக்காத வகையில் நடத்திடுதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


 ஆகஸ்ட் 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...


சங்கரநாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆக.23ல் தென்காசியில் மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை


உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21 வேலைநாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர்...


தென்காசி மாவட்டத்திற்கு சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு வருகிற 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சங்கரன் கோவிலில் அமைந்துள்ள  "சங்கர நாராயணசாமி கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 23ல் தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்கள் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.


இந்த நாளில் அரசு தேர்வுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்டம்பர் 21 வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கலைத்திருவிழா 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல்...

 

கலைத்திருவிழா Kalai Thiruvizha 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல்...


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...


கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து


 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு...


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


 *போட்டி நடைபெறும் நாட்கள்


 *22.08.2024 முதல் 30.08.2024 வரை


அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.


கலைத் திருவிழா போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு


பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 


பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள் :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.



 *EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

(19.08.2024 - 21.08.2024)


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும். (03.09.2024)


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு (ID, ASD, CP) மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



>>> கலைத்திருவிழா Kalai Thiruvizha 2024-2025 - பங்கேற்கும் மாணவர்களின் பெயரினை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் முறை...




>>> "கலைத்திருவிழா"  போட்டிகள் நடத்துதல் - கால அட்டவணை & வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்...



*அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு*, 


இன்று (19.08.2024) முதல் பள்ளி அளவில் கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெறும்  மாணவர்களின் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பள்ளிகளுக்கு இத்தகவலை தெரிவித்து, கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை 21.08.2024 -க்குள் EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்குமாறு தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.


EMIS School Login - > School - > Competition - > Kalai Thiruvizha 2024-25


CWSN மாணவர்கள் கலைத்திருவிழா 2024-25 போட்டியில் பங்குபெற *CWSN Kalai Thiruvizha 2024 – 2025* என்ற Option பயன்படுத்தி பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.


குறிப்பு: ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஒரு போட்டியிலாவது பங்குபெறுவதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  -முதன்மைக்கல்வி அலுவலர்


தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


 தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புதிய பொறுப்பு...


*ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


*▪️. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.*


*▪️. 2023-ம் ஆண்டு ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.*


*▪️. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனாவுக்கு, தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.*


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Union Education Minister Mr. Dharmendra Pradhan launched The Teacher App - Press Release

   டீச்சர் ஆப் (The Teacher App) என்ற செயலியைத்  தொடங்கி வைத்தார் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் - செய்தி வெளியீடு Union Educ...