டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05-09-2024 அழைப்பிதழ்...
Dr. Radhakrishnan Award Ceremony 05-09-2024 Invitation...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா 05-09-2024 அழைப்பிதழ்...
Dr. Radhakrishnan Award Ceremony 05-09-2024 Invitation...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கல்வி உதவித் தொகை மோசடி - திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை...
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை...
"மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது ("State Board is very low...")" என்ற தனது கூற்றை ஆளுநர் திரு ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடி விலக வேண்டும்....
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை நாள் 02.09.2024
தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர். என். இரவி அவர்கள் பள்ளி விழா ஒன்றில் பேசும் போது "தமிழ்நாடு பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது" என்று பேசியிருப்பது அவர் வகிக்கும் பொறுப்பிற்கு மிகவும் கண்ணிய குறைவான செயல்.
திரு. ஆர். என். இரவி அவர்கள் பேசியுள்ளது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, மாணவர்களை மிகப் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயல்.
மாணவர்கள் அவர்தம் பெற்றோருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதுடன், தனியார் நடத்தும் மத்தியப் பாடத் திட்டப் பள்ளிகளை ஊக்குவிக்கும் தந்திர மிக்க உரை.
தமிழ்நாடு அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆளுநர், அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் "நமக்கு ஒரு பாடத்திட்டம் உள்ளது, அதை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். அதைத் தாண்டி நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். ஏனெனில், நமது மாநிலத்தில் உள்ள பாடத்திட்டம், குறிப்பாக மாநிலப் பாடத்திட்டம் மிகவும் கீழ் நிலையில் உள்ளது" ("We have a syllabus, which you follow. But, I urge you to think beyond it. Because (the) syllabus in our State, especially (that of the) State Board is very low..." - The Hindu, Chennai Dated September 2,2024) என்று கூறியுள்ளார். இந்த உரை மிகவும் அநாகரிகமானது.
பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக, தொண்டுள்ளம் கொண்ட பெரியவர்களால் உருவாக்கப்பட்டு, சென்னையின் முதன்மையான பெண்கள் பள்ளிகளில் ஒன்றாக திகழும் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், கடந்த நூறு ஆண்டுகளாக தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு நடத்தி வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பும் உரையாக ஆளுநர் உரை அமைந்துள்ளது.
கடந்த நூறு ஆண்டுகளில் இந்த பள்ளி பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவிகள் யாரும் எந்த பயனும் அடையாமல் போய்விட்டனரா?
இப்பள்ளியில் பின்பற்றும் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவிகளின் அறிவு நம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயன்படாமல் போய்விட்டதா?
வடசென்னையின் மையப் பகுதியில் இயங்கி வரும், மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும், நூற்றாண்டு பழமைவாய்ந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் இந்திய சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லையா?
என்ற கேள்விகளை ஆளுநர் உரை எழுப்புகிறது.
ஆளுநர் அவர்கள் மாநிலப் பாடத்திட்டம் மிகவும் தரம் தாழ்ந்தது (State Board is very low) என்று எதன் அடிப்படையில் கூறுகிறார்?
தரத்தை அளக்க என்ன அளவுகோல் ஆளுநரால் பயன்படுத்தப்படுகிறது?
மாநிலப் பாடத்திட்டத்தை எந்த பாடத்திட்டத்துடன் ஒப்பாய்வுச் செய்தார்? எப்போது செய்தார்? எந்த வகையில் தரம் தாழ்ந்து இருப்பதாக கண்டறிந்தார்?
மாநிலத்தின் தலைவராக உள்ள ஆளுநர், அவ்வாறு ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தால், தான் ஆய்ந்தறிந்தவற்றை மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறையிடம் தெரிவித்தாரா? ஒப்பீட்டு ஆய்வறிக்கையை மாநில அரசிடம் வழங்கி கருத்து கோரினாரா?
இவை எதையுமே ஆளுநர் செய்ததாக அவரே கூறவில்லை. தான் பார்த்தாக ("I can see") கூறுவதற்கும், தான் ஆராய்ந்து அறிந்துக் கொண்டதாக கூறுவதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது.
மாநிலப் பாடத்திட்டம் போட்டிகளுக்கு தகுதியானதாக இல்லை என்ற விமர்சனத்தை போகிறபோக்கில் பொத்தாம் பொதுவாக வைப்பது மாநிலப் பாடத்திட்டத்தைச் சிறுமைப்படுத்தும் நோக்கம் கொண்டது.
என்சிஇஆர்டி (NCERT) தயாரித்த இயற்பியல் பாடப் புத்தகம் அணு குறித்து 2017யில் ஒரு விதமாகவும் 2020க்கு பின்னர் வேறு விதமாகவும் உள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) உச்ச நீதிமன்றத்தில் "நீட்" முறைகேடுகள் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது.
வேறு வழி இல்லாமல் இரண்டு வகையான விடைகள் மாணவர்கள் எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, அதன் விளைவாக இரண்டு விதமான பதில்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசியத் தேர்வு முகமை தெரிவித்தது.
ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் இருக்க முடியும் என்று கருதிய உச்ச நீதிமன்றம், எது சரியான விடை என்று கண்டறிய தில்லி ஐஐடியை நாடவேண்டிய அவசியம் ஏற்பட்டதை உலகமே பார்த்து சிரித்தது என்ற செய்தியை ஆளுநர் திரு.ஆர். என்.இரவி படிக்கத் தவறிவிட்டாரா?
தேசிய தேர்வு முகமையால் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, கேள்வியை தயார் செய்த அமைப்பு, "இதுதான் இந்த கேள்விக்கு விடை" என்று திட்டவட்டமாக கூற முன்வரவில்லை.
கேள்வியை தயார் செய்தவருக்கு எது சரியான விடை என்று தெரியவில்லை. பாடநூலில் உள்ளதைத் தான் சரியான விடையாக எடுத்துக் கொள்கிறார்.
இவ்வளவுதான் என்சிஇஆர்டி (NCERT) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) ஆகியவற்றின் தரமும் தகுதியும்.
இப்படிப் பட்ட அமைப்புக்கள்தான் மருத்துவப் படிப்பிற்கு தகுதியான மாணவர்களை கண்டறிவார்களாம்.
அணுவின் நிலைத்தன்மை குறித்து 2017க்கு பின்னர் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளதா?
2017க்கு முன் இருந்த அணு நிலைத்தன்மை குறித்து புரிதலில் 2017 க்கு பின்னர் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துள்ளதா?
அவ்வாறு இல்லை என்றால் எப்படி 2017க்கு முன் இருந்த என்சிஇஆர்டி பாடப் புத்தகம் ஒரு விதத்திலும், 2017 க்கு பின்னர் உருவான என்சிஇஆர்டி பாடப் புத்தகம் வேறு விதத்திலும் அணு குறித்து எழுதியிருக்க முடியும்.
இதைப் பின்பற்றிய சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களில் யார் தரமானவர்கள்? 2017 க்கு முன் படித்தவர்களா? பின்னர் படித்தவர்களா?
இந்த கேள்விகளுக்கு ஆளுநர் திரு. ஆர். என். இரவி பதில் சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் மாணவர்கள் மனங்களில் தாழ்வு மனப்பான்மை உருவாகக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்தில் கல்வி சமச்சீராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பாடத்திடத்தை உருவாக்கியது.
மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்று தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அதை தொடர்ந்து உச்சநீதிமன்றமும் மிக ஆழமாக ஆராய்ந்து, விவாதித்து, தனது தீர்ப்பில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தரமற்றது என்ற வாதத்தை நிராகரித்து, மாநிலப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது.
மாநிலப் பாடத் திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செழுமைப்படுத்தி வருவதுடன், பல புதிய அம்சங்களை இணைத்து மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடநூல்கள் தயாரிக்கிறது.
தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) என்ற ஒரு சூழ்ச்சி வலையில் மாணவர்கள் சிக்கித் தவிக்கும் நிலையில், எத்தகையப் போட்டியையும் எதிர்கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப்பட்டுள்ளச் சூழலில், மாணவர்களிடையே ஆளுநர் நிகழ்த்தியுள்ள, எந்தவித அடிப்படை ஆய்வும் இல்லாத, அவதூறு பரப்பும் உரை கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்கள், அதன் ஏற்பில் இயங்கும் பல நூறு கல்லூரிகள், இவற்றில் பயிலும் பல இலட்ச மாணவர்களில் பெரும் பகுதியினர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள்.
வின்வெளி ஆய்வில் கோலோச்சும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பலரும் மாநிலப் பாடத்திட்டத்தில், மாநில அரசுக் கல்லூரிகளில் பயின்றவர்கள்.
மிகப் பெரும் அளவில் துறை சார்ந்த ஆளுமைகளை உருவாக்கித் தந்துள்ளதன் மூலம் இந்திய அறிவியல், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு செய்துள்ளது மாநில அரசுப் பள்ளிகளும் அதில் பின்பற்றப்படும் மாநிலப் பாடத்திட்டமும்.
ஆளுநர் என்ற பதவியை வகிப்பதனால், பதவி வழிப் பொறுப்பாக தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக பொறுப்பு வகிக்கும் திரு. ஆர். என். இரவி அவர்கள், பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலையிலும் செயல்படும் தமிழ்நாடு மாநில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மிகவும் சிறுமைப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
குழந்தைப் பருவ மாணவர்களிடம் பாடத்திட்டம் குறித்த தவறான விமர்சனங்களை முன்வைத்ததின் விளைவாக, மாநிலப் பாடத்திட்டதில் பயிலும் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். மன ரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்படையும் வகையில் பேசப்பட்டப் பேச்சு கண்டனத்திற்குரியது.
"மாநிலப் பாடத்திட்டம் தரம் தாழ்ந்தது ("State Board is very low...")" என்ற தனது கூற்றை ஆளுநர் திரு ஆர். என். இரவி அவர்கள் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடி விலக வேண்டும்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுச் செயலாளர்
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
மின்னஞ்சல்: spcsstn@gmail.com
தொடர்பு எண்: 94456 83660
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"செப்டம்பர் 4வது வாரத்தில் சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடத்தப்படும்"
5 பல்கலைக் கழகங்களில் பட்டங்கள் வழங்காமல் இருப்பதால் மாணவர்கள் பாதிப்பு என உயர்கல்வித்துறை கடிதம்
உயர்கல்வித்துறை கடிதம் எழுதிய நிலையில், பட்டமளிப்பு விழாவிற்கு ஆளுநர் அனுமதி...
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத வைக்கும் பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை...
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்./எம்.எட் பட்ட வகுப்புகளில வெளி மாநிலத்தில் இயங்கும் Global Academy போன்ற பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக, மாணவர்களை Irregular முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வு எழுத அனுமதிப்பதாக UGC -யில் இருந்து புகார் மனு இப்பல்கலைக்கழகத்தில் பெறப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் நேரில் சென்று கேரளா காவல்துறையில் Global Academy மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கல்லூரி முதல்வர்கள் / செயலாளர்கள் இது போன்ற பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கலாகிறது.
மேலும், இது போன்ற தவறான irregular மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ளும் கல்லூரிகளின் மீது பல்கலைக்கழகத்தின் சார்பில் முன் அறிவிப்பின்றி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிய வழிமுறைகளை பின்பற்றி, ஆட்சிமன்ற குழுவின் அனுமதி பெற்று, கல்லூரிகளின் இணைவு ரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்.
நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் வெளியீடு (பாண்டிச்சேரி)...
SELECTION OF TEACHERS FOR THE CONFERMENT OF Dr. S. RADHAKRISHNAN AWARDS / HON'BLE CHIEF MINISTER'S SPECIAL AWARDS / HON'BLE EDUCATION MINISTER'S REGIONAL AWARDS - 2024 - LIST OF AWARDEE TEACHERS
State Best Teacher Awards 2024...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
2024-2025ஆம் ஆண்டில் டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துகள்...💐💐💐💐💐
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் - மேலும் 6 பேர் கைது...
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
விருதுநகர்: அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது தாக்குதல் நடத்திய வழக்கில் மேலும் 6 பேர் கைது.
தமிழ்நாடு: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஓட்டுனர் கொலையில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் பெண் துணைக் கண்காணிப்பாளர் மீது சரமாரியாகத் தாக்கினர்.
டிஎஸ்பி காயத்ரி மற்றும் அவரது குழுவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர்.
தன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதும் பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார் டிஎஸ்பி...
அருப்புக்கோட்டையில் மறியல் போராட்டத்தின்போது பெண் டிஎஸ்பியிடம் தவறாக நடந்த இளைஞர்.
அவரை பெண் டிஎஸ்பி தாக்கியதால் சூழ்ந்துகொண்ட போராட்டக்காரர்கள் தலை முடியைப் பிடித்து இழுத்து அத்துமீறல்.
விருதுநகர்: டிரைவர் காளிக்குமார் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, அவரின் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற டிஎஸ்பி காயத்ரி தலை முடியை பிடித்து இழுத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் வெளியான வீடியோ…..
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் - முன்னதாக ஒருவர் கைது.
அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது.
4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது.
சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டார்.
டிஎஸ்பி மீது தாக்குதல் - ஈபிஎஸ் கண்டனம்.
அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
தாக்குதலில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Tamil Nadu: A women Deputy Superintendent of Police was manhandled by protesters on Tuesday while they were staging agitation demanding immediate arrest of people who were reportedly involved in the murder of a driver near Aruppukkotai in #Virudhunagar district.
DSP Gayatri and her team were trying to stop the agitators from holding a road blockade.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்: பழ...