கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Appointment of 8 High Court Chief Justices including Madras...


சென்னை உட்பட 8 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்...


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்...



உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு...


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கே.ஆர்.ஸ்ரீராமை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர், தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.


இதையடுத்து புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.


இதேபோல தில்லி, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, கேரளம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.


டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.


சென்னை உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜீவ் சக்தேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திர பிரசன்ன முகர்ஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஷி ரப்ஸடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எஸ்,ராமச்சந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.


இதேபோல், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


Schoolboy slashed by blade...

 பள்ளி மாணவனுக்கு சரமாரியாக பிளேடு வெட்டு...


வேலூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரு மாணவர்கள் இடையே தகராறு


பள்ளி வளாகத்தில் வைத்தே மாணவனை, சக மாணவன் பிளேடால் வெட்டிய சம்பவத்தால் பரபரப்பு...



Education department conducting only exam - No syllabus, book, teacher (daily news)…


பாடத்திட்டம், புத்தகம், ஆசிரியர் இல்லை - தேர்வு மட்டும் நடத்தும் கல்வித் துறை (நாளிதழ் செய்தி)...



கொடைக்கானல் செல்லும் பயணிகளின் தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக ₹20 வசூலிக்கப்படும் - மாவட்ட நிர்வாகம்...


Kodaikanal bound commuters will be charged ₹20 per bottle of water or soft drink as green tax - District Administration...


 கொடைக்கானல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக ₹20 வசூலிக்கப்படும் - மாவட்ட நிர்வாகம்.


கொடைக்கானல் பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்றம் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி- தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது.


இதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்கள் வைத்து இருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரி விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதித்து, பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்யும் தனிநபர், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் வகையில் ஒரு பாட்டில்களுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி கூறும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்திலும் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் மற்றும் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு முறை செப்.20-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


WhatsApp introduces new feature to Block unknown account messages...


அடையாளம் தெரியாதவர்களின் மெசேஜ்களுக்கு செக் - வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகம்...


WhatsApp introduces new feature to Block unknown account messages...


வாட்ஸ்அப்பை அப்டேட் செய்த ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.


வாட்ஸ்அப்பில் > Settings > Privacy > Advanced > Block unknown account messages என்ற முறையை பாலோ செய்வதன் மூலம், இந்த புதிய அம்சத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.


குறிப்பாக, ஸ்பேம் மெசேஜ்களினால், செல்போனின் செயல்திறன் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக, இந்த புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.



>>> வாட்ஸ்அப் செயலியை Update செய்ய இங்கே சொடுக்கவும்...


School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...



 மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக்கான பொருள்கள்...


 அனைத்து மாவட்டங்களிலும் அரசின் நலத்திட்டங்கள், பள்ளி ஆய்வு, முதன்மை கல்வி அலுவலகம் , மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை உயர் அதிகாரிகள் நியமனம்...


School Education Department Secretary to appoint district wise higher officers to monitor welfare programs for students - Subjects for Inspection of Monitoring Officers in Primary and Middle Schools, High and Higher Secondary Schools, CEO Offices, DEO Office and BEO Office...








Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...



 இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக...


Anura Kumara Dissanayake Becomes President of Sri Lanka...


இலங்கை அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இதுவரை எண்ணப்பட்டவற்றில் 53.84% வாக்குகளைப் பெற்றார் அனுர குமார திசநாயக.


மொத்தம் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 16 மாவட்டங்களின் முடிவுகள் அறிவிப்பு.


16 மாவட்ட தேர்தல் முடிவுகளில் அனுர குமார திசநாயக அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.


இலங்கையின் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக அதிபராகிறார்.


இலங்கை அதிபராகிறார் அனுர குமார திசநாயக.. தமிழர் - சிங்களர் ஒற்றுமை குறித்து முதல் வாக்குறுதி!


இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் முதல் அறைகூவலாக சிங்களர் - தமிழர் ஒற்றுமை குறித்து வாக்குறுதி அளித்துள்ளார்.



இலங்கை அதிபர் தேர்தல் - இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக்க வெற்றி - நாளை காலை பதவியேற்பு...


இந்தியாவின் மிக நெருக்கமான அண்டை நாடாக இருந்து வரும் இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு 38 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்டனர்.


குறிப்பாக சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக, ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, தமிழர்கள் தரப்பு வேட்பாளர் அரியநேத்திரன் உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவி வந்தது. எனினும், யாரும் எதிர்பார்க்காத விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுரா குமார திஸநாயக அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தார்.


வாக்கு எண்ணிக்கை முடிவில் அநுரா குமார திஸநாயக 39.52 சதவிகித வாக்குகளும், சஜித் பிரேமதாச 34.28 சதவிகித வாக்குகளும் பெற்றிருந்தனர். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில் அநுரா குமார திஸநாயக வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு அவர் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.


இதனையடுத்து அநுரா குமார திஸநாயக வெளியிட்ட அறிவிப்பில், “நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளம் ஆகும். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி இந்த பகிரப்பட்ட வலிமை மற்றும் பார்வையில் இருந்து எழும். ஒன்றிணைந்து இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுத தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.



அனுர குமார திசநாயக்க இலங்கையின் அனுராதபுரத்தில் 1968-ல் எளிய குடும்பத்தில் பிறந்தவர். இலங்கையில் மாற்றம் தேவை என்று கூறி ஊழல் ஒழிப்பு கொள்கைகளை முன்னெடுத்தார். ஏகேடி என அழைக்கப்படும் இவர், 1987ஆம் ஆண்டு முதல் ஜனதா விமுக்தி பெருமுனாவில் இணைந்து தற்போது அதன் தலைவராக உள்ளார்.



2019 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் 3.16 சதவிகித வாக்குகளை பெற்றார். கடந்த 2022ல் இலங்கையில் பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டபோது மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...