கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Appointment of 8 High Court Chief Justices including Madras...


சென்னை உட்பட 8 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம்...


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்...



உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று ஸ்ரீராமை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு...


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கே.ஆர்.ஸ்ரீராமை தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இவர், தற்போது மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.


இதையடுத்து புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.


இதேபோல தில்லி, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், மேகாலயா, கேரளம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.


டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம்.


சென்னை உள்ளிட்ட 8 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மன்மோகன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராஜீவ் சக்தேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுரேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திர பிரசன்ன முகர்ஜி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நிதின் மதுகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.


ஜம்மு காஷ்மீர், லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஷி ரப்ஸடன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எஸ்,ராமச்சந்திர ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியான கே.ஆர்.ஸ்ரீராமை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால், மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.


இதேபோல், மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள மூன்று நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்படி, மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள ஆர்.பூர்ணிமா, ஜோதிராமன், அகஸ்டின் தேவதாஸ் மரியா ஐகோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

07-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மருந்து ...