கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Keeladi selected as the Best heritage tourism site...

 சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு...


Keeladi selected as the Best heritage tourism site...


உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில்,  மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 


பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அருங்காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், சுற்றுலா தினத்தில் வழங்கப்படும் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல் அரசுக்குப் பெருமை!


- அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்...








Hon'ble Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin wrote and signed the memorandum at Perarignar Anna Memorial House...

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் "மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில் அயராது உழைப்போம் நன்றி, வணக்கம்!" என்று எழுதி கையொப்பமிட்டார்...


Hon'ble Chief Minister of Tamil Nadu Mr.M.K.Stalin wrote and signed the memorandum at Perarignar Anna Memorial House...


A colourful "Ennum Ezhuthum"...

 

 

 வண்ணமயமாகும் "எண்ணும் எழுத்தும்"...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


District wise list of local bodies to be merged with Corporations and Municipalities in Tamil Nadu...



 தமிழ்நாட்டில் மாவட்டங்கள் வாரியாக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுடன் இணைக்கப்படவுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல்...



District wise list of local bodies to be merged with Corporations and Municipalities in Tamil Nadu...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Festival Advance in Kanjanjiam App - When - How to Apply for Which Festivals?



களஞ்சியம் செயலியில் விழா முன்பணம் : என்னென்ன விழாவிற்கு - எப்போது - எப்படி விண்ணப்பிப்பது?


ஒருங்கிணைந்த நிதி மற்று மனித வள மேலாண்மைத் திட்டத்தின் (IFHRMS) செயலியான Kalanjiyam Appன் வழியே விழா முன் பணத்திற்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வருகிறது. இனி தமிழ்நாட்டு அரசின் ஊதியம் பெறுவோர் இந்த App வழியே தங்களுக்கான விழா முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.



👉🏼 என்னென்ன விழாக்களுக்கு முன்பணம் பெறலாம்?


1. பக்ரித்

2. கிறிஸ்துமஸ்

3. தீபாவளி

4. ஈஸ்டர்

5. காந்தி ஜெயந்தி

6. புனித வெள்ளி

7. விடுதலை நாள்

8. கிருஷ்ண ஜெயந்தி

9. மே தினம்

10. மிலாடி நபி

11. மொகரம்

12. ஓணம்

13. பொங்கல்

14. ரம்ஜான்

15. குடியரசு தினம்

16. தெலுங்கு வருடப் பிறப்பு

17. விஜயதசமி

18. விநாயகர் சதுர்த்தி


பட்டியலில் முதலாவதாக ஆயுதபூஜை தான் வரும். எனினும் அதற்கு விழா தேதி automatic enable option வரவில்லை. எனவே தற்போதைய நிலையில் அதற்கு விண்ணப்பிக்க இயலாது.



👉🏼 எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?


விழா நாளுக்குச் சரியாக 30 நாள்களுக்கு முன்னர் முதல் விண்ணப்பிக்கலாம். உதாரணமாக தீபாவளி 31.10.2024ம் தேதி எனில் 02.10.2024 முதல் விண்ணப்பிக்கலாம்.


மேலும், இறுதியாகப் பெற்ற விழா முன்பணத்தை முழுமையாகத் திருப்பி செலுத்திய பின்பே விண்ணப்பிக்க வேண்டும்.



👉🏼 எந்தத் தேதிவரை விண்ணப்பிக்கலாம்?


IFHRMSல் centralized payroll run செய்வதற்கு முன்பே பணம் வரவாகும்படி முன்தேதியிட்டு விண்ணப்பிப்பது நல்லது.


உதாரணமாக, மாதந்தோறும் 15 தேதிக்கு மேல் centralized payroll run செய்யப்படுமெனில், 14ஆம் தேதி பணம் வரவாகிவிட வேண்டும். Bill தயார் செய்து கருவூலத்தில் ஒப்படைக்க அலுவலகத்திற்கும் போதிய காலம் தேவை என்பதால், 8 - 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துவிடுவது நல்லது.



👉🏼 எத்தனை முறை விண்ணப்பிக்கலாம்?


IFHRMS மூலம் ஒரு நாள்காட்டி ஆண்டில் (January - December) ஒரு முறை மட்டுமே விழா முன்பணம்  அனுமதிக்கப்படும். பணம் வரவாகும் மாதத்தைத்தான் IFHRMS கணக்கில் எடுத்துக் கொள்ளும்.


உதாரணமாக, 2024 கிறிஸ்துமஸ்ஸிற்கு நீங்கள் விண்ணப்பித்தும் அலுவலக தாமதத்தால் 2025 ஜனவரி 1-ஆம் தேதி உங்களது கணக்கில் பணம் வரவானால் 2025 கிறிஸ்துமஸ்ஸிற்கு மீண்டும் விண்ணப்பித்தால் IFHRMS தானாகவே தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விடும். ஓராண்டில் ஒரு முறை மட்டுமே வாய்ப்பு.



👉🏼 எப்போது பிடித்தம் ஆரம்பமாகும்?


பணம் வரவான அந்த மாத ஊதியத்திலேயே தவணை தொடங்கப்பட்டு ரூ.1000/- பிடித்தம் செய்யப்பட்டுவிடும். தொடர்ச்சியாக 10 மாதங்கள் தவணை பிடித்தம் செய்யப்படும்.



👉🏼 எப்படி விண்ணப்பிப்பது?


Kalanjiyam Appல் Login செய்யவும்.


பின் Advance - Festival Advance - Apply என்ற வரிசையில் தேர்வு செய்யவும்.


அதன்பின், Festival Name என்பதில் தாங்கள் விண்ணப்பிக்கும் விழாவைத் தேர்வு செய்தால், Festival Date - Advance Amount - Recovery no. of Installment உள்ளிட்டவை தானாகவே தோன்றும்.


இறுதியாக, Submit செய்ய வேண்டும்.



👉🏼 விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைத்துவிடுமா?


ஒவ்வொரு நிதியாண்டிற்கும் முன்னதாக அவ்வாண்டிற்கான நிதிநிலை அறிக்கை (Budget) துறை வாரியான தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு அலுவலகத்திற்கும் கோரப்படும். விழா முன்பணத்தைப் பொறுத்தவரை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி கோரி விண்ணப்பிக்கப்படும். கோரப்பட்ட நிதி பெரும்பாலும் கிடைத்துவிடும் என்பதால் விண்ணப்பித்த அனைவருக்கும் முன்பணம் கிடைக்க வாய்ப்புண்டு.


ஒருவேளை ஆண்டுத் தொடக்கத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமிருந்து அதன்பின் நிரம்பியிருப்பின் பெறப்பட்ட நிதி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லாது போகலாம். அத்தகைய நிலையில் இருக்கும் நிதியில் விண்ணப்பித்த வரிசைப்படி முன்னுரிமை அளிக்கப்படக்கூடும்.


*பின் குறிப்பு :

தற்போது Appல் விண்ணப்பித்தாலே போதுமா என்பதை 02.10.2024ற்குப் பின்னர் தங்களது அலுவலகத்தைக் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.  ஏனெனில் இதுதான் முதல்முறை என்பதால் அந்தத் தேதிக்குப் பின்புதான் அலுவலகங்களுக்கே முறையான & தெளிவான வழிகாட்டல் கிடைக்கப்படக்கூடும்.🙏


Scales of Justice - Life as Thought - Today's short story...

 


நியாயத் தராசு - எண்ணம் போல வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை....

⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️


ஒரு வீட்டு வாசலில்  

யாசகன் ஒருவன் தர்மம் கேட்டு நின்றிருந்தான்.


அம்மா... 

தாயே... 

ஏதாவது

தர்மம் பண்ணுங்கம்மா !


அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து பார்த்தாள்..


அங்கே

வீதியில் விளையாடிக்

கொண்டு இருந்த, 

தனது ஐந்து வயது மகளை அழைத்து, 


அவளது கைகளால் அரிசியை,

அள்ளி கொடுத்து,


யாசகனின் பாத்திரத்தில் 

இட சொன்னாள்.


பெற்று 

கொண்ட யாசகனும், பக்கத்து 

வீட்டுக்கு சென்று பிச்சை கேட்க சென்றான்.


அந்த பெண்மணியும் விளையாடி கொண்டிருந்த தனது மகளை கூப்பிட்டு, 


அவளது கையால் அரிசியை அள்ளி யாசகனுக்கு பிச்சை அளிக்க சொன்னாள்.


காலங்கள் உருண்டோடின..


இரண்டு பெண்மணிகளுக்கும் வயது முதிர்ந்து போனது.


இரு சிறுமிகளும் வளர்ந்து பெரியவர்களாகினர்...


அவரவர்கள் தம் தாய் காட்டிய வழியில் தர்மங்களும் தொடர்ந்தன...


ஒரு நாள், அந்த முதிய பெண்மணிகள் இருவருமே இறந்து வானுலகம் சென்றனர்.


அங்கே, 

அந்த முதல் வீட்டு பெண்மணிக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது..


மற்றவளுக்கோ அதற்கு கீழான இடமே கிடைத்தது.


உடனே, அவள்... இறைவனிடம் பதறிக் கதறியே முறையிட்டாள். 


இருவருமே, ஒரே மாதிரி தானே, தானம் செய்தோம், 


எனக்கு மட்டும் இங்கே ஏனிந்த பாரபட்சம்,

ஏற்ற இறக்கம் என்று வாதிட்டாள்.


அதற்கு இறைவனோ...


முதலாமவளோ, தனக்கு பிறகும், தன் குழந்தையும், இந்த தானத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், 


குழந்தையின் கையில் அரிசியைக் கொடுத்து தானம் செய்ய சொன்னாள்.


ஆனால்,

நீயோ... 

உன் கைகளால் எடுத்தால், 

அரிசி நிறையவே  செலவாகும் என்ற எண்ணத்திலே, 


உன் குழந்தையின் கையால், 

எடுத்து தானமிடச் செய்தாய்...


இருவரது

செயலும் 

ஒன்றே..


எனினும்  எண்ணங்கள வெவ்வேறு என்றார்.


எனவே,

எந்த செயலை செய்தாலும், 


மேலான எண்ணங்களோடு

செய்யும் செயல்களே


நம் வாழ்க்கைக்கும் தொழிலுக்கும்,

ஆத்ம

திருப்திக்கும், 

மனநிறைவான உணர்வுக்கும் 

வழிகாட்டும்.


சுயலாபத்துக்காக செய்யும் செயல்களை விட, 


பொது நலத்துக்காக செய்யும் செயல்களே வலிமை வாய்ந்தவை, 

மேலானவை,


அதுவே இறைவனின் நியாயத் தராசில் எப்போதும் உயர்ந்தே நிற்கும்..


சிந்தைக்கு இனியோர்க்குச் சிறக்கட்டும் இந்நாள் 🙏

Classes 1, 2, 3 - Learning Outcomes - Ennum Ezhuthum - Term 2...

 

 வகுப்புகள் 1, 2, 3 - கற்றல் விளைவுகள் - எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம்...


Standard 1, 2, 3 - Learning Outcomes - Ennum Ezhuthum - Term 2...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...

Electrician துணை கொண்டு பள்ளிகள் EMIS Websiteல் Entry செய்ய வேண்டிய வினாக்கள்...  *அவசர செய்தி: அனைத்து Block civil coordinators (BRTE) கவனத...