கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

 


ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழப்பு


* டெல்லி: சானக்யபுரியில் கேளிக்கை பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்ததில் பிரியங்கா (24) என்ற பெண் உயிரிழப்பு


* விரைவில் திருமணமாகவிருந்த நிலையில், வருங்கால கணவருடன் பூங்காவிற்கு சென்றபோது சோகம். போலீசார் விசாரணை


தென்மேற்கு டெல்லியின் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் (Amusement Park)ரோலர் கோஸ்டர் (Roller Coaster) சவாரி செய்த இளம்பெண் ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சாணக்கியபுரியைச் சேர்ந்தவர் பிரியங்கா (24 வயது). இவர் நொய்டாவின் செக்டார் 3-ல் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் நஜாப்கரைச் சேர்ந்த நிகில் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரியங்கா, நிகிலுடன் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு இருந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தனர். அப்போது திடீரென ரோலர் கோஸ்டரில் உள்ள சில கம்பிகள் உடைந்ததில் பிரியங்கா ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை நிகில் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


அங்கு பிரியங்கா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கபாஷேரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கேளிக்கை பூங்கா நிர்வாகம் பாதுகாப்பு தரங்களை சரியாக பின்பற்றவில்லை என்று பிரியங்காவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். கேளிக்கை பூங்கா நிர்வாகம் இது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 07-04-2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை மாவட்டத்தில் 07-04-2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


Local holiday announcement on 07-04-2025 in Pudukkottai district


புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு (ஏப்ரல் 07) புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.


இந்த விடுமுறையை ஈடுகட்ட வருகின்ற 19ஆம் தேதி (சனிக் கிழமை) வேலை நாள் என்றும் சனிக் கிழமையை வேலை நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 20ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை வேலை நாள் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.


ராமேஸ்வரம் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது



 பிரதமர் மோடி அவர்கள் இன்று திறந்து வைத்த ராமேஸ்வரம் பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது


Repairs underway on new vertical suspension bridge between Rameswaram and Pamban, inaugurated by Prime Minister Modi today


ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட நிலையில், மீண்டும் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டிருக்கிறது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமாகவும், இன்னொரு புறம் இறக்கமாகவும் இருப்பதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.




பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த புதிய பாம்பன் பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறந்து வைத்த ஒரு சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் தூக்கு பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். இலங்கை அனுராதபுரத்தில் இருந்து எம்ஐ17 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மண்டபம் வந்த பிரதமர் மோடி, அதன்பின் கார் மூலமாக ராமேஸ்வரம் வந்தார்.



இதனைத் தொடர்ந்து மண்டபம் - ராமேஸ்வரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிமீ தொலைவிலான  700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி அவர்கள்,  இன்று கொடியசைத்து திறந்து வைத்தார். 




2019ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, ரூ.700 கோடியில் கட்டப்பட்டு, 2024ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதன்பின் இன்று புதிய பாலத்தில் ரயில் பயணம் தொடங்கியது.


அதேபோல் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்தின் கீழ் இந்திய கடற்படை கப்பலும் பயணித்தது. இதற்காக செங்குத்து தூக்கு பாலம் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட செங்குத்து தூக்கு பாலம் கீழே இறக்க முடியாமல் பழுது ஏற்பட்டுள்ளது. தூக்கு பாலம் ஒருபுறம் ஏற்றமும், இன்னொரு பக்கம் இறக்கமுமாக இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழுது நீக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.


தமிழ்நாட்டின் பாக் ஜலசந்தியைக் கடந்து செல்லும் 2.07 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம், இந்தியாவின் பொறியியல் திறமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் ஒரு சான்றாக நிற்கும் என்று கூறப்பட்டது.


கடல் மேல் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தின் 72.5 மீட்டர் நீளமுள்ள பகுதியை தூக்கி, அதன் கீழ் கப்பல்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி 17 மீட்டர் உயரத்திற்கு தூக்கப்படும் வகையில் கட்டப்பட்டுள்ளது.


முதல்நாளே பழுதான புதிய பாம்பன் பாலம்:



இரண்டு ரயில் பாதைகளை தாங்கும் திறன் கொண்ட இந்தப் பாலத்தில் தற்போது ஒரு பாதையில் மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 80 கிமீ வேகம் வரை ரயில் வேகத்தை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து மற்றும் அதிக சுமைகளைக் கையாளும் வகையில் கட்டப்பட்டுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பில் உள்ள மண்டபம் பகுதியையும் இணைக்கிறது. இந்த நிலையில், ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த புதிய பாம்பன் பாலம், திறந்து வைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது.


பாலத்தின் ஒரு பக்கம் ஏற்றமாகவும் மறுபுறம் இறக்கமாகவும் உள்ளதால் பாலத்தை கீழே இறக்க முடியாமல் பொறியாளர்கள் தவித்துள்ளனர். இதனை சரி செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, பழுது சரிசெய்யப்பட்டு செங்குத்துப் பாலம் கீழே இறக்கப்பட்டது என தகவல்.


முன்னதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி 2024ஆம் ஆண்டு நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் பாலத்தை ஆய்வு செய்த பொழுது பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


101 தூண்களுடன் புதிய தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் வழியாக கப்பல் கடந்த செல்ல ஏதுவாக 27 மீட்டர் உயரத்தில் 77 மீட்டர் நீளத்தில் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து நவம்பர் 13, 14ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாலத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பாலம் கட்டுவதற்கான திட்டமிடும் பணியில் இருந்தே பெரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாக தனது அறிக்கையில் சவுத்ரி தெரிவித்து இருக்கிறார்.


ஆர்.டி.எஸ்.ஓ. எனப்படும் ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தரத்துக்கு ஏற்ப செங்குத்தாக உயரும் 77 மீட்டர் நீள தண்டவாளம் அமைக்கப்படாததை சுட்டிக்காட்டியுள்ள சவுத்ரி, தூக்குப்பாலம் அமைப்பதற்கான வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு விவரங்கள் ஆர்.டி.எஸ்.ஓவிடமே இல்லை என தெரிவித்துள்ளார். விசாரணையில் இதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பொறுப்பை உதறியிருக்கிறது ஆர்.டி.எஸ்.ஓ. தரமற்ற கட்டுமான பணிக்கான பளுவை தாங்கும் திறன் 36% குறைந்து விட்டதாக ஆணையர் கூறியிருக்கிறார். கட்டுமானத்துக்கு முன் தொழில்நுட்ப ஆலோசனை குழு அமைக்கும் நடைமுறைகளை பின்பற்றாமல், தான் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை ரயில்வே வாரியம் மீறியிருப்பதாக சவுத்ரி குற்றச்சாட்டி இருக்கிறார். பாலம் கட்டும் இடத்திற்கு சென்று வெல்டிங் தரத்தை தெற்கு ரயில்வேயின் கட்டுமான ஆய்வுக் குழு சோதனை செய்யவில்லை எனவும் புகார் கூறியிருக்கிறார். கடல் பாலம் கட்டுவதால் ஏற்படும் அரிப்பு சேதம் குறித்து கவனம் செலுத்ததால் பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே தூண்களில் அரிமானம் ஏற்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார். ரயில்வே வாரிய கட்டுமானப் பிரிவு அதிகாரி சுட்டிக்காட்டிய பிறகும் அரிமானத்தைத் தடுக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். புதிய ரயில் பாலம் தரக்குறைவாக இருப்பதைக் கண்டறிந்த பிறகும் பாலத்தில் தூக்கு இருக்கும் பகுதியில் மட்டும் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற இடங்களில் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் ரயில்களை இயக்க நிபந்தையுடன் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளார் ஏ.எம்.சவுத்ரி.


67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த நிறுவனத்தின் முதலாளி



தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 67 ஊழியர்களுக்கு வேறு இடங்களில் வேலை வாங்கிக் கொடுத்த முதலாளி


பெங்களூரு: Ok Credit என்ற நிறுவனத்தில் |இருந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு வேறு இடத்தில் வேலை வாங்கிக் கொடுக்கும் அந்நிறுவனத்தின் CEO ஹர்ஷ் போக்கர்னா


இதுவரை பணி நீக்கம் செய்த 70 பேரில், 67 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.


 “இது எங்களின் தவறு. இதற்கு நாங்களே பொறுப்பேற்கிறோம்” என ஹர்ஷ் கூறுகிறார்


அவரது பதிவு:


ஹர்ஷ் போகர்னா தலைமை நிர்வாக அதிகாரி @OkCredit | IIT கான்பூர் 


 "நாங்கள் 70 பேரை பணிநீக்கம் செய்தோம். இது எப்படி நடந்தது என்பது இங்கே... 

நாங்கள் அதிகமாக வேலை செய்து கொண்டிருந்தோம். மிக விரைவாக பணியமர்த்தினோம். இது எங்கள் தவறு. நாங்கள் அதை ஒப்புக் கொண்டோம். ஒரு நிறுவனராக நான் செய்த மிகக் கடினமான காரியங்களில் இதுவும் ஒன்று. 


ஆனால் நாங்கள் அதை சரியான வழியில் செய்ய முயற்சித்தோம். 70 பேரில் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேசினோம். என்ன தவறு நடந்தது, ஏன் இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும், அவர்களுக்கு எப்படி ஆதரவளிப்போம் என்பதை அவர்களிடம் கூறினோம். 


நாங்கள் அவர்களுக்கு 3 மாத அறிவிப்பு கொடுத்தோம். பரிந்துரைகள், அறிமுகங்கள், வேலை வாய்ப்புகள் - உதவக்கூடிய எதையும் வழங்க உதவினோம். அறிவிப்பு காலம் முடிவதற்கு முன்பே 67 பேர் பணியமர்த்தப்பட்டனர். இயலாத 3 பேருக்கு, 2 மாத கூடுதல் சம்பளம் வழங்கினோம். 


ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள் - இந்த ஆண்டு 120,000 க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் பலருக்கு அழைப்பு கூட வரவில்லை. சிலர் தடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இதை அறிந்தனர். சிலர் பகல் நேரத்தில் ஸ்லாக்கிலிருந்து நீக்கப்பட்டனர். அது மனிதாபிமானமற்றது. ஆம், பணிநீக்கங்கள் நடக்கின்றன. ஆனால் நீங்கள் அவற்றை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது உங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அனைத்தையும் கூறுகிறது. 


இந்த உரையாடல்களை நடத்துவது கடினம் என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் ஒரு நிறுவனரானபோது நாம் பதிவுசெய்தது இதுதான். 


நீங்கள் ஒருவரை வேலைக்கு அமர்த்தும்போது "குடும்பம்" என்று அழைத்தால், அவர்களை விடுவிக்கும்போதும் அவர்களை குடும்பமாக நடத்துங்கள்."




01-04-2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


01.04.2025ல் இருந்து IFHRMSல் புதிய Update


1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.


2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).


3. வங்கி கணக்கு எண் மாற்றம் செய்வதற்கு இனிமேல் கருவூலத்திற்கு செல்ல தேவையில்லை எப்பொழுதும் போன்ற DDO approval செய்தாலே போதுமானது.


4. புதிதாக பணியேற்றுள்ள பணியாளர்களுக்கு CPS நம்பர் புதிய IFHRMS number create செய்யும்பொழுது ஆட்டோமேட்டிக்காக generate ஆகும் இதில் basic pay zero என்றும் nominee details empty ஆகவும் இருக்கும் இதனை பின்னர் அப்டேட் செய்து கொள்ளலாம்.


5. Plus minus report சென்ற மாதம் வரை html file ஆக டவுன்லோட் ஆகியது இதில் *show all இன்று கொடுத்தோம் என்றால் மட்டுமே பில் குரூப்பில் உள்ள அனைத்து பணியாளர்களின் பெயரும் enable ஆகும்* இம்மாதத்தில் bill group வாரியாக plus minus report மற்றும் html பதிலாக pdf ஆக டவுன்லோட் ஆகும் என்று நம்புகிறோம்



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை



நம்பிக்கைதான் வாழ்க்கை - இன்று ஒரு சிறு கதை Today's Thought 


Hope is life - a short story today


💠💠💠💠💠💠💠💠💠💠💠💠💠


💠அமெரிக்காவைக் கண்டு பிடித்தவர் கொலம்பஸ். ஆனால், இவர் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டு பிடிக்கவே திட்டமிட்டார். எதிர்பாராதவிதமாக அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.


💠அட்லாண்டிக் பெருங்கடலில் நெடும்பயணம் மேற்கொண்டால் இந்தியாவை அடைந்து விடலாம் என்று நம்பிக்கை இவருக்கு ஏற்பட்டது. 


💠ஸ்பெயின் மன்னரின் உதவியோடு சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கப்பலில் பயணத்தைத் தொடங்கினார்.


💠பயணம் பல மாதங்கள் நீடித்தன. கொலம்பஸ் உடன் வந்தவர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள். 


💠அவர்களுக்கு தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றி விட்டது.


💠அவர்கள் கொலம்பஸிடம் வந்த வழியாகத் திரும்பிச் சென்று விடலாம் என்று வற்புறுத்தினார்கள். 


💠ஆனால் கொலம்பஸ் அவர்களின் சொற்களைக் காதில் வாங்கவே மறுத்து விட்டார். 


💠திரும்பிச் செல்லும் பேச்சுக்கே இடமில்லை என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.உடன் வந்தவர்கள் ஒன்று கூடி சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினார்கள்.


💠அதன்படி கொலம்பஸை கடலில் தள்ளிக் கொன்று விட்டு தாங்கள் அனைவரும் நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.


💠ஒருநாள் கொலம்பஸ் கப்பலின் மேற்பரப்பில் நம்பிக்கையுடன் ஏதாவது நிலப்பகுதி தெரிகிறதா என்று பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார்.


💠உடன் வந்தவர்களில் சிலர் அவருக்குப் பின்புறமாக மெல்ல வந்தார்கள். இன்னும் சற்று நேரத்தில் அவரைப் பிடித்துத் தள்ளப் போகிறார்கள்.


💠அச்சமயத்தில் கொலம்பஸ் ஆனந்தத்தில் கத்த ஆரம்பித்தார். காரணம் கடலின் மேற்பரப்பில் இலைகளும் சிறுசிறு கிளைகளும் மிதந்து கொண்டிருந்தன. 


💠அருகில் நிலப்பகுதி இருக்கிறது என்பது இதன் மூலம் புரிந்தது. தொடர்ந்து பயணித்து சில தினங்களில் ஒரு நிலப்பரப்பினை அடைந்தார்கள். கொலம்பஸ் எதிர்பார்த்தது போல அது இந்தியா அல்ல. அமெரிக்கா.


💠கொலம்பஸின் மனதில் இருந்த ஆழ்ந்த நம்பிக்கையே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது. கொலம்பஸின் அசைக்க முடியாத நம்பிக்கையே அவரின் பெயரை சரித்திரத்தில் பதிவாகக் காரணமானது.


*💠ஆம்,💠*


*💠மறுநாள் காலை நிச்சயம் எழுந்து விடுவோம் என்று நமக்கிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் ஒவ்வொரு இரவும் நிம்மதியாய் தூங்கச் செல்லுகிறோம்.*


*💠வீட்டிற்கு நிச்சயமாய் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நாம் தினம் தினம் வீட்டை விட்டுப் புறப்படுகிறோம்.*


*💠ஆக நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்றால் அது மிகையாகாது..*


*💠நம் மனம் ஆற்றல் மிக்கது. என்னால் எதையும் செய்ய முடியும் என்று நீங்கள் உங்களுக்குள் அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.*


*💠எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.*

*உறுதியாய் நம்புங்கள்..உங்கள் கனவெல்லாம்* *பலிக்கும்., வாழ்க்கையும் தேனாய் இனிக்கும்.....*


*💠 நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்*



EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு

 

 

EMIS வலைதளத்தில் கல்வி உதவித் தொகை : மாணவர் விவரங்களை சரிபார்க்க கல்வித் துறை உத்தரவு


கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்' இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.


மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...