கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்

  

பள்ளி மேலாண்மைக் குழு SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்ய பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்


காலிப்பணியிடங்களில் SMC மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


Teachers can be appointed through SMC in vacant posts from 02-06-2025 - Proceedings of the Chief Education Officer 


02.06.2025 முதல் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை SMC மூலமாக தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வமான பள்ளிக்கல்வி இயக்குநரின் (29.05.2025) குறுஞ்செய்தி மற்றும் முதன்மைக்கல்வி அலுவலரின் கடிதம்


      அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள / மகப்பேறு விடுப்பில் உள்ள / நீண்ட கால விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் இடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை 02-06-2025 முதல் நியமனம் செய்யலாம் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆணையிடப்பட்டுள்ளது. B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுநிலை பட்டம், BEd தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தரவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்


வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் - பள்ளிக் கல்வித் துறை அரசாணையில் உள்ள தகவல்கள்



அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


🛑இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும்.



🛑இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார்.


🛑இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்த பருவம், மாதம், வாரம், வகுப்பு வாரியாக உள்ள பொருண்மைகளுக்கான விவரங்களை மாநில கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் வடிவமைக்க வேண்டும்.


🛑மேலும், பள்ளிகளில் இந்த திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் வாயிலாக அமல்படுத்தவும் அனுமதி வழங்கக் கோரி தொடக்கக் கல்வித் துறை கருத்துரு வழங்கியது. 


🛑அதையேற்று அதற்கான அனுமதியை வழங்கி ஆணையிடுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 1 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவங்களிலும் என்னென்ன தலைப்புகளில் வாசிப்பது, கதை சொல்லுவது, விவாதிப்பது, கலந்துரையாடுவது என்பது குறித்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.


🛑அதில் தமிழ்நாடு அரசின் சின்னங்கள், நெகிழியைத் தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனை மரத்தின் சிறப்பு, தேசத் தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணிகள், எனக்குப் பிடித்த நண்பன் என பல்வேறு தலைப்புகள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை


துணைத் தேர்வுகள் - பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு


ஜுன்/ஜுலை 2025 மேல்நிலை இரண்டாமாண்டு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுகளுக்கு *விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (தட்கல் உட்பட) முடிந்த பின்னரே* SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டும். 


SUMMARY REPORT-இல் குறிப்பிடப்பட்ட தொகையினை IFHRMS E-Challan முறையில் இணையவழியில் செலுத்த வேண்டும். பின்னர் கீழ்க்கண்ட ஆவணங்களை *அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில்* ஒப்படைக்க வேண்டும்.


*ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள்:*

1.HM/Principal Covering Letter

2.Applications

3.Summary Report with HM/Principal Attestation

3.E-Challan Payment Success Copy with HM/Principal Attestation


*விண்ணப்பிக்க கடைசி நாள் (தட்கல்):*

+2 – 31.05.2025

+1 – 06.06.2025

10th – 06.06.2025


*SUMMARY REPORT பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்:*

+2 – 02.06.2025

+1 – 07.06.2025

10th – 07.06.2025


*மேற்கண்ட ஆவணங்கள் ஒப்படைக்க கடைசி நாள்:*

+2 – 03.06.2025

+1 – 09.06.2025

10th – 09.06.2025


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


முகக்கவசம் அணிவது அவசியம் - தமிழ்நாடு சுகாதாரத்துறை


நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.



பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


கொரோனா தொற்று பரவி வருவதால், மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினமும் பாதிக்கப்படுவோர் குறித்த தரவுகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். போதிய எண்ணிக்கையில் படுக்கை வசதிகளுடன் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.


நோய் பரவலை தடுப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.


கைகளை சுத்தமாக கழுவுதல், நெரிசல் மிக்க இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், இருமும்போதும், தும்மும்போதும், வாய், மூக்கு பகுதிகளை முழுமையாக மூடிக் கொள்ளுதல், தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.



4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்



 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


4 New Government Arts and Science Colleges to be inaugurated - Chief Minister M.K. Stalin's announcement


தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.


கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.


உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.


புதிய முயற்சிகளை ஊக்குவிக்க அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் - அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு

 

G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025


அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக ஆண்டுக்கு 380 ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதியளித்து அரசாணை (நிலை) எண்: 125, நாள் : 21-05-2025 வெளியீடு


Government Order G.O. (Ms) No. 125, Dated: 21-05-2025, issued on behalf of the government, authorizing the issuance of certificates of appreciation to 380 teachers per year for the new initiatives of teachers working in government schools.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

SLAS - 2025 Report Card வெளியீடு



SLAS - 2025 Report Card Tamilnadu - Class 3, 5 & 8 - State State Level Achievement Survey


 மாநில அடைவு ஆய்வுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

👇👇👇


https://slas.tnschools.gov.in/#/school-report 



>>> SLAS 2025 - State Report Card - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...